Untitled Document
April 1, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
Vaughan தமிழ்ப் பாரம்பரிய விழாவில், கனடாவின் எதிர்கால பிரதமர்-Pierre Poilievre உறுதி! Top News
[Friday 2025-01-24 07:00]

January 18, 2025 Vaughan தமிழ் மரபுத்திங்கள் மற்றும்தைப் பொங்கல் விழா என்பன முன்னைய ஆண்டுகளைவிடமிகப்பெரிய வெற்றியாகவும் தமிழர் பண்பாட்டைச்சிறப்பிக்கும் நிகழ்வாகவும் இடம்பெற்றிருந்தது. Vaughan தமிழ் பண்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில், இந்நிகழ்வு 1,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களையும் அரசியல்பிரமுகர்களையும் கலாச்சார ஆர்வலர்களையும் வர்த்தகநிதியாளர்களையும் ஒருங்கே கொண்டுவந்தது. இந்த ஆண்டு, City of Vaughanமும், York District School Boardம்இணைந்து இந்நிகழ்வை ஆதரித்து ஒருங்கிணைந்தனர். விழாவின் வெற்றியை உறுதி செய்ய Vaughan நகரத்தின்பல ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர். அவர்களின்அர்ப்பணிப்பு மற்றும் ஒழுங்கமைப்பின் மூலம், நிகழ்வு மிகவும்சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் Conservative கட்சித் தலைவரும் கனடாவின்எதிர்கால பிரதமர் வேட்பாளருமான Pierre Poilievre சிறப்புஉரையாற்றினார். அவர் தனது உரையில், இலங்கையில்நடந்த தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களுக்குநீதியைப் பெற்றுத் தர உறுதியளித்தார். குறிப்பாக, ராஜபக்சகுடும்பத்தினர் உள்ளிட்ட போர்க்குற்றவாளிகள் அவரதுஆட்சிக்காலத்தில் தண்டிக்கப்படுவார்கள் என்றுஉறுதிபூண்டார். "என் ஆட்சி காலத்தில் நீதியுடன்நடவடிக்கை எடுக்கப்படும்," என அவர் உறுதிப்படுத்த, அரங்கமே கரகோசத்தால் நிறைந்தது.

தமிழர் சமூகத்துடன் Conservative கட்சியின் நீண்டநாள்உறவை நினைவுபடுத்திய அவர், "தமிழர்இனப்படுகொலைக்கு காரணமானவர்கள்தண்டிக்கப்படுவார்கள். நீதியின் ஜோதியை ஏற்றுவேன்," எனஅவர் உறுதியளித்தார். வோன் தமிழ்ச் சங்கத் தலைவர் கண்ணன் குமாரசாமி சமூகஒற்றுமை மற்றும் பொறுப்புகளின் முக்கியத்துவத்தைவலியுறுத்தினார்.

"நமது அமைப்பு நூற்றுக்கணக்கான குடும்பங்களுடன்வலுவாக வளர்ந்துள்ளது. எமது மக்கள்; மாகாண, மத்தியஅரசுகளிடமும், மற்ற தமிழ் அமைப்புகளிடமிருந்தும் பெரும்எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர். நமதுபாரம்பரியத்தையும் கனடிய பாரம்பரியத்தையும் இணைக்கும்பாலமாக செயல்படுவோம்," எனத் தலைமை உரையில்கண்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்பேசுகையில், "நம்முடைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். எவ்வளவு காலம் சொந்த நாடு, சுதந்திரம்இல்லாமல், நம் கலாச்சாரம் அழியக்கூடும்?" என்றுசமூகத்தை சிந்திக்கவைத்தார்.

எமது வோன் தமிழ் அமைப்பின் தலைவர், இந்த ஆண்டுநிகழ்த்திய வரலாற்றுச் சாதனையை நினைவுகூர்ந்தார்: "2025 ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று, Mayor Steven Del Duca மற்றும் வோன் நகரசபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நகர மன்றத்தில் தமிழ் மரபுத்திங்கள் கொடியை வானளாவஏற்றினோம். இது பெருமையுடன் நினைவில் நிறுத்தக்கூடியஒரு வரலாற்றுத் தருணமாகும்."

தமிழர் பண்பாட்டு சிறப்புகளை உணர்த்தும் இந்நிகழ்வில்; தமிழர் பாரம்பரியக் கலைகள் வடிவிலான பரதநாட்டியம், கோலாட்டம், நாடகம், இசை, மங்கள வாத்திய கானங்கள், நகைச்சுவை விருந்து உள்ளிட்ட பல்வேறு மேடைநிகழ்ச்சிகள் மிகவும் மெய்மறக்கச் செய்தன. பொங்கல், வடை, சுண்டல் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய உணவுகள்; அனைவரின் மனதையும் கவர்ந்தன. கோலங்கள் மற்றும்திருவிழா அலங்காரங்களால் மண்டபம் பாரம்பரிய தமிழ்மண்ணின் வாசனையை நினைவூட்டியது.

விழாவின் நிகழ்ச்சி நிரலின் தமிழ் தொகுப்பை வித்தியானந்திநேர்த்தியுடன் வழங்க, ஆங்கில தொகுப்பை ரவீனா சிறப்பாகவழங்கினார்கள். மேலும், நிர்வாகக் குழு, வணிகஆதரவாளர்கள, தன்னார்வத் தொண்டர்கள் மற்றும்கலைஞர்கள் அனைவரும் அசத்தலான செயல்பாட்டைவழங்கி, விழாவை மகத்தான வெற்றியாக மாற்றினர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா