Untitled Document
November 24, 2024 [GMT]
கனடிய தமிழர் பேரவை மேல் பாலியல் குற்றச்ச்சாட்டு! பதிலளிக்க மறுப்பது ஏன்?
[Tuesday 2018-11-06 08:00]

என்னதான் நடக்கிறது கனடிய தமிழர் பேரவையில்? கனடாவில் 2001 இறுதியில் மக்களுக்காக வன்னியில் இருந்த தமிழ் ஈழ தலைமையின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டு காலங்களாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கனடிய பொது வெளியில் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பே கனடிய தமிழர் பேரவை

ஒரு இமாலய முட்டாள்தனம் Top News
[Tuesday 2024-01-02 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளில் கால் இழுப்பதற்கு உலகத் தமிழர் பேரவை அரசாங்கத்திற்கு இன்னுமொரு காரணத்தை வழங்கியுள்ளது.


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


ஈழ தமிழர்களுக்கான நீதி வேண்டி கனேடியர்களின் நெடுநடைப் பயணம்: Top News
[Thursday 2020-09-17 20:00]

நான்கு கனேடிய தமிழர்கள் நீண்ட நெடுந்தூரம் நீதிக்கான நடை பயணத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்காக Auguest 31, 2020 இல் Brampton நகரில் இருந்து ஒட்டாவா நோக்கி ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஆதரவாக September 7 ஆம் நாள் Montreal இலிருந்து மூன்று தமிழ் கனேடியர்கள் ஒட்டாவா நோக்கி தமது நடை பயணத்தை தொடங்கினர். கடினமான பாதையில் கால்கள் வீங்க பாதங்கள் வேக அவர்களின் நீதிக்கான நடை பயணம் தொடர்ந்தது. மக்களின் ஆதரவு வழி நெடுக இருந்தது. கனேடிய பூர்வீக குடிமக்கள் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.


தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?
[Thursday 2020-03-19 18:00]

தலைமைப் பதவிக்காக கட்சி உறுப்பினர்களை பலியாக்கும், தம்மை அரசியலுக்கு அழைத்து வந்த தலைவர்களின் உணவிலே விசம் வைக்கும் அரசியல்வாதிகளை தமிழக திரைப்படங்களிலும் தமிழக அரசியலிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் உன்னதமான ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த மண்ணில் அத்தகைய அதிர்ச்சிகரமான முயற்சிகள் நடப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? மனதை நடுங்க வைக்கும் மிக கேவலமான அரசியல் சூழ்ச்சிகள் இந் நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெறுவது மக்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றியதுதான் இந்தப் பத்தி.


ராக்கிங் : தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து!...
[Monday 2020-02-17 07:00]

பல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பேராசிரியர் ரவீந்திரநாத் இருந்த காலத்தில் ராக்கிங் தொடர்பாக ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் அதில் கலந்து கொண்டு ராக்கிங்கை எப்படி நிறுத்தலாம் என்பது குறித்து சிந்தித்தார்கள். அதன் போது ஒரு மூன்றாம் வருட மாணவன் எழுந்து ஆசிரியர்களை பார்த்து பின்வருமாறு கேட்டிருக்கிறார் “உங்களுடைய காலத்தில் ராக்கிங் செய்யாத யாராவது ஒருவர் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று. அங்கு கூடியிருந்த ஆசிரியர்களில் ஓர் இளம் விரிவுரையாளரைத் தவிர வேறு யாருமே அந்த மாணவருக்கு பதில் சொல்லக் கூடியதாக இருக்கவில்லை. ஏன் பதில் சொல்ல முடியவில்லை? ஏனெனில் ராக்கிங் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் ஓர் உப பண்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு பண்பாடாக இருப்பதனால்தான் இன்று வரையிலும் அதை சட்டத்தின் மூலம் மட்டும் கையாள்வது கடினமாக இருக்கிறது. ஜனநாயகம் ஒரு பெரும் பண்பாடாக செழிப்பாக வளர்த்தெடுக்கப்படாத ஒரு சமூகத்தில் ராக்கிங் ஓர் உப பண்பாடாக தொடர்ந்தும் நிலைத்திருக்கும். எமது கல்விப் புலத்தில் பல்கலைக்கழகங்களில் மட்டும் அல்ல தொழில்நுட்ப கல்லூரிகள் பாடசாலைகள் முதலாக பெரும்பாலான வளைந்தோருக்கான கல்விப் பரப்புகளில் அதுவோர் உப பண்பாடாகப் பேணப்ப்படுகிறது. எனவே ராகிங்கை கட்டுப்படுத்துவது என்பது தனிய ஒரு சட்ட விவகாரம் மட்டும் அல்ல. அதற்கும் அப்பால் அது ஒரு பண்பாட்டு விவகாரம்.


தமிழ் மரபுத் திங்கள் உருவான வரலாறு - (கனடா) Tamil heritage month Canada Top News
[Wednesday 2020-01-01 07:00]

கனடா நாடானது குடிவரவாளரின் நாடாகும். பல நாடுகளில் இருந்து வருகை தந்து, எமக்கு முன்னர் இங்கு குடியேறிய பல இனக்குழுக்கள் கனடாவின் பெரும்பான்மைப் பண்பாட்டோடு இணைந்து, தமது அடையாளத்தையும் இழக்காமல், இருப்பைத் தக்க வைத்துள்ளன. அதே வேளையில் தமது மரபுகளையும் பேணி முன்னெடுக்கின்றன. அவ்வகையில் நாமும் நமது அடையாள இருப்புக்கான, எமது மரபுகளையும் பேண வேண்டும்.


அதிகாரத்தில் கோத்தபாய ராஜபக்சே: அகதிகளாக சென்ற தமிழர்கள் அச்சப்படுகிறார்களா? Top News
[Sunday 2019-12-08 16:00]

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு போர் நிறைவுறும் போது சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த நிலை, ஒரு பெரும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கியது. பாதுகாப்பான வாழ்விடம் தேடிய ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி படகு வழியே வெளியேறினார்கள். நாடுகடத்தப்படும் நிலையை கருத்தில் கொள்ளாமல் இன்றும் அவ்வாறான முயற்சிகள் நடக்கின்றன. அந்தோணிபிள்ளை தர்ஷன் அவ்வாறு முயற்சித்தவர்களில் ஒருவர். 2012ம் ஆண்டு 21 நாட்கள் கடல் பயணத்தை மேற்கொண்டு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை அடைந்தவர், 6 மாத காலம் குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார். “15 நாட்கள் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டிருந்தேன், அதன் பிறகு டார்வின் மற்றும் குவின்ஸ்லாந்தில் உள்ள தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டேன்,” என எஸ்பிஎஸ் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டாக பணியாற்றிய நிலையில், இவரின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மேல் முறையீடு செய்த நிலையில், இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு திரும்பும் முடிவினை எடுத்துள்ளார் தர்ஷன்.


மீண்டும் அரங்கேறும் கூட்டமைப்பின் வரலாற்று தவறு: -அகரன்
[Friday 2019-10-25 18:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகாலத்தில் செய்த வரலாற்று தவறையே இப்போது செய்ய முனைகிறது அதாவது 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்க செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேசம் எமது விடயத்தில் தலையிடும் எமக்கான தீர்வு கிடைக்கப்பெறும் சர்வதேச ரீதியில்தான் எமது பிரச்சினையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் வாய்கிழிய பேசும் சம்பந்தன் அவர்கள் தான் பேரம் பேசி எமக்கான தீர்வை பெறவேண்டிய சந்தர்பங்கள் எல்லாவற்றையும் கோட்டைவிட்டுவிட்டு அரசை சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பாதுகாத்து வருகிறார்.


திரிசங்கு நிலைமை: - பி.மாணிக்கவாசகம்
[Thursday 2019-10-10 12:00]

பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைளைத் தீர்மானிப்பவையாக அமையும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.


தேர்தலில் சிங்களவர்கள் சாதி அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் - எழுத்தாளர் குசால் பெரேரா! Top News
[Thursday 2019-10-03 08:00]

தமிழர்களுடைய அரசியலில் ஒரு குறிப்பிட்ட சாதியே ஏகபோக அதிகாரத்தை செலுத்தி வருவதாக சில சிங்கள ஊடகவியலாளர்கள் எழுதுகிறார்கள். முன்னாள் சன்டே ஒப்சேவர் ஏட்டின் ஆசிரியர் எச் எல் டி மகிந்தபாலா (1990-1994) தமிழ்த் தேசியத்தை கொச்சைப் படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர். தமிழ்ச் சமுதாயம் சாதிச் சேற்றில் மூழ்கிக் கிடக்கிறது என ஓயாது ஓழியாது புலம்புவர். எடுத்துக்காட்டாக அவர் Vile Vellala violence stamped on the Tiger flag (Posted on September 24th, 2011) (புலிக் கொடியில் முத்திரையிடப்பட்ட மோசமான வெள்ளாள வன்முறை (செப்டம்பர் 24, 2011 அன்று பதிவிடப்பட்டது)என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருந்தார். மற்ற எல்லா காரணிகளுக்கும் மேலாக யாழ்ப்பாணத்தின் கலாச்சாரத்தை அதன் அனைத்து பரிமாணங்களிலும் வரையறுக்கும் ஒரே ஒரு காரணி மட்டுமே உள்ளது, அது சாதி. சாதி இல்லாத யாழ்ப்பாணம் இல்லை. கடுமையான சாதி அமைப்புக்கு வெளியே ஒரு தீபகற்ப கலாச்சாரமும் இல்லை. யூலியட் இல்லாமல் ரோமியோ இருக்க முடியாதோ அதைப் போல சாதி இல்லாத யாழ்ப்பாணத்தை நினைத்துப் பார்க்க முடியாதது. அல்லது பனம்கொட்டை இல்லாத குடாநாடு. யாழ்ப்பாணத்தின் சாதி கலாச்சாரம் முதன்மையாக மரபுவழி இந்துக்களின் மிகப் பெரிய வழிபாட்டு நபர்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. ”ஆறுமுக பிள்ளை (1822 -1879), பின்னர் ஆறுமுக நாவலர் (சொற்பொழிவாளர்) என்று மாறியது. யாழ்ப்பாண சமுதாயத்தின் படிநிலைகளை மறுசீரமைப்பதன் மூலம் அவர் ஒரு புதிய சாதிக் கட்டமைப்பை உருவாக்கி ஒருங்கிணைத்தார் (Lanka Guardian - July 4, 2011).


மறக்காமல் சொல்லுவோம்!
[Tuesday 2019-09-24 17:00]

போர், போராட்டம் என்ற சொற்கள் தமிழர்கள் மத்தியில் வெறுப்பான அல்லது விரும்பத்தகாத ஒன்றாக மாறிவிட்டது அல்ல மாற்றப்பட்டுவிட்டது. இதற்கான காரணத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஈழத்தில் நடந்த விடுதலைப் போராட்டம்தான் எம்மை இந்த வெறுப்புக்கு ஆளாக்கியது என்று எல்லோரும் சுலபமாக சொல்லிடுவர்.


சிந்தனையில் மாற்றம் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்.
[Saturday 2019-09-07 08:00]

இனப்பிரச்சினை நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் மத்தியில் அபிவிருத்தி பாதையில் தடைக்கல்லாக உள்நாட்டு அரசியல் அதிகாரம். ஜக்கிய தேசிய கட்சி சிறீலங்கா சுதந்திரக்கட்சி என்ற 02 பிரதான கட்சிகளுக்கு இடையே மாறி மாறி ஆட்சிக்கு வருவது ஜனநாயக நோக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் பொருளாதார அபிவிருத்திக்கு இது சாதகமாக இல்லை என்றே குறிப்பிடலாம்.


முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றிப் போற்றி பாடுபவர்கள் அவர்களது சந்தர்ப்பவாத அரசியலையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்! - நக்கீரன்
[Saturday 2019-06-15 09:00]

பார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார். கூண்டோடு முஸ்லிம்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகித் தங்கள் ஒற்றுமையை உலகறியச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமை தமிழர்களிடையே இல்லை. நெல்லிக்காய் மூட்டை போல் பிரிந்து கிடக்கிறார்கள்! இந்தமாதிரியான நுனிப்புல் விமரிசனம் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


முள்ளிவாய்க்கால் தமிழரின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் ஓர் எழுச்சி மிகு நாள்!! - -சிறிமதன்
[Friday 2019-05-17 16:00]

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு அழியாத வடு என்றே கூறவேண்டும் . இவ்வழிவிற்கு காரணமானவர்கள் ஒரு சிலர் அல்ல நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும், அனைத்து சமய அமைப்புகளும் சர்வதேசமுமே பொறுப்பேற்கவேண்டும். இலங்கையில் தமிழரின் அரசியல் வரலாற்றை எழுதும்போது முள்ளிவாய்க்காலுக்கு முன் முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்று எழுதப்படல்வேண்டும்.


குதிரை ஓடிய பின்னர் லாயத்தை இழுத்துப் பூட்டிய சனாதிபதி சிறிசேனா! - நக்கீரன்
[Friday 2019-04-26 20:00]

குதிரை ஓடிய பின்னர் லாயத்தை இழுத்துப் பூட்டிய கதை போல உயிர்த்த ஞாயிறு அன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கோட்டல்கள் மீது பயங்கரவாதிகள் மின்னாமல் முழங்காமல் மேற்கொண்ட பயங்கரவாதக்குதலைத் தொடர்ந்தி சிறிலங்கா சனாதிபதி சிறிசேனா பொலிஸ் மா அதிபரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு கேட்டிருக்கிறார்.


தமிழர்களை மீண்டும் கையறு நிலைக்குள் தள்ளிய ஜெனீவா:
[Friday 2019-03-29 18:00]

இந்­த­முறை நிலைமை முற்றாகவே மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீடு தான். வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் உரையில், தாம் திருத்­தங்­களைச் செய்­த­தாக ஜனா­தி­ப­தியே கூறியிருக்­கிறார். அவ்­வாறு ஜனா­தி­ப­தி­யினால் செய்­யப்­பட்ட திருத்­தங்களில் முக்­கி­ய­மா­ன­தாக, படையினர் மீதான போர்க்­குற்­றச்­சாட்டு நிரா­கரிப்பும், கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றைக்­கான எதிர்ப்பும் அமைந்­தி­ருக்­கி­றது


04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்? சார்மினி சேரசிங்கி
[Tuesday 2019-01-29 20:00]

சிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர் மங்கள சமரவீராவுக்கு எழுதும் பகிரங்க மடல்

அன்புள்ள அமைச்சர் மங்கள சமரவீர அவர்கட்கு,

உங்களை மாண்புமிகு அமைச்சர் என விளிக்கப் படாததையிட்டு கவலைப்பட மாட்டீர்கள் என நம்புகிறேன். காரணம் உங்களைத் தெரிந்த என் போன்றவர்களுக்கு நீங்கள் ஏற்கனவே மாண்புமிகு என்பதால் அது பற்றி நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.


2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தமிழ்த்தேசியத்தின் சுயமரியாதை: உயிர்ப்போடு வெளிப்படுத்திய மாவீரர் நிகழ்வுகள்! Top News
[Wednesday 2018-11-28 19:00]

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் சூழலிலும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமது இறைமை சுயநிர்ணய உரிமை தன்னாட்சி போன்றவற்றுக்கான அங்கீகாரத்துக்குமான ஏக்கங்களோடு ஈழத் தமிழர்கள் கொள்கை மாறாமல் இருக்கின்றனர் என்பதை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் எடுத்துக் கூறியுள்ளனர். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தடைகள், அச்சுறுத்தல்கள் போன்ற துன்பங்களைத் தான்டி திட்டதிட்டபடி மாவீரர் நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொண்டனர்


தமிழன்னையின் புனித நாளாம் மாவீரர் நாளில் உலகத் தமிழராய் எழுச்சி கொள்வோம்:
[Friday 2018-11-23 17:00]

உங்கள் அழைப்பாக இதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் வைக்கும் சிறு நெருப்பு உலகளாவிய பெருநெருப்பாகட்டும்.

இந்தப் பூமிப்பந்தில் ஒரு பண்டைய இனம், மூத்த மொழியின் சொந்தக்காரர், பண்பாட்டு விழுமியங்களின் அடித்தளம், நாகரீகத்தின் பிறப்பிடம், வாழ்வியலின் கல்விக்கூடம், இயற்கை வைத்தியத்தின் இதயநாதம் எனப் பழங்கதைகள் பேசியே எம் காலம் கரைந்த வேளை தான், உலகலாவி வீழ்ந்துகிடந்த, இன்றும் வீழ்ந்து கிடக்கும், தமிழினத்தின் உந்து சக்தியாக, ஊக்க மருந்தாக, 1000 வருடங்களின் பின், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய ஒழுக்க மரபுகளின் நெறிப்படுத்தலில் - நாட்டுப்பற்று, வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகிய உயரிய பண்புகளைத் தாங்கி, தமிழன்னையிம் மூத்த மைந்தன் எங்கள் கரிகாலனின் தலைமையில், வீழ்ந்து கிடந்த தமிழினத்தை தூக்கி நிறுத்த, பிறப்பெடுத்தவர்கள் தான், தமிழ் அன்னையின் தவப்புதல்வர்கள், எங்கள் மாவீரர்கள்.


விடுதலையும், சுய நிர்ணய உரிமையும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகள். [ பகுதி ஒன்று ]
[Sunday 2018-03-04 16:00]

தேசிய இனங்களின் பண்பாட்டு கூறுகள், பழக்க வழக்கங்கள், விளையாட்டுக்கள், வழிபாட்டு முறைகளின் பின்னே அந்த இனக் குழு மங்களின் தொன்மமும் மரபும் தொடர்ந்து பேணப்படுவது மட்டுமல்ல இன அழிப்பிற்கு எதிரான தொடர் பொறிமுறைகள் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கும்.

 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா