Untitled Document
November 21, 2024 [GMT]
 
வியாழன் கோளின் துல்லியமான புகைப்படத்தை வெளியிட்ட நாசா! Top News
[Tuesday 2022-08-23 16:00]

சூரியக் குடும்பத்தின் பெரிய கோளான வியாழன் கோளின் துல்லியமான புகைப்படத்தை வெப் விண்வெளி தொலை நோக்கி கருவி எடுத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது.


திடீரென பிளாஸ்டிக் போல் மாறிய பிரித்தானிய பெண்ணின் தோல்!
[Monday 2022-08-22 17:00]

பிரித்தானியாவில், 30 நிமிடம் வெயிலில் உறங்கிய 25 வயது பெண்ணின் நெற்றியில் தோல் பிளாஸ்டிக் போன்று காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிரித்தானியாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான சிரின் முராத் (Sirin Murad) பல்கேரியாவில் விடுமுறையில் இருந்தபோது, ​​21 டிகிரி செல்சியஸ் சூரிய ஒளியில் சன்ஸ்கிரீன் இல்லாமல் தூங்கியதாக கூறினார்.


குளித்து முடித்த தண்ணீரை குடிக்கும் வினோத தம்பதி!
[Sunday 2022-08-21 16:00]

இத்தாலிய தம்பதி ஒன்று தண்ணீருக்கான மாதக் கட்டணமாக வெறும் 8 பவுண்டுகள் மட்டுமே செலவிடுவதாக கூறி, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளனர். வடகிழக்கு இத்தாலியரான 28 வயதான அன்னா மாசிலோ மற்றும் 29 வயதான கணவர் டியோகோ ஆகியோரே தங்களது புதிய வாழ்க்கை முறையால் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.


திடீரென உலகம் முழுவதும் பிரபலமாகும் ‘quiet quitting’!
[Saturday 2022-08-20 16:00]

உலகம் முழுவதும் ‘quiet quitting’ என்னும் விடயம் பிரபலமாகி வருகிறது. தங்களுக்குத் தெரியாமலே தாங்கள் quiet quittingஐப் பின்பற்றி வருவது இப்போதுதான் தங்களுக்குப் புரிந்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள். உலக நாடுகள் பலவற்றில் ‘quiet quitting’ என்னும் விடயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.


சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசய சங்கு: எங்கு தெரியுமா?
[Wednesday 2022-08-17 17:00]

பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக ஆண்டு தோறும் கொண்டாடி வரும் நிலையில், இந்த நாளில் அதிசயம் ஒன்றும் ஆண்டு தோறும் அரங்கேறகின்றதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கப்போவதை கணித்த பாபா வங்கா!
[Tuesday 2022-08-16 16:00]

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா இன்னும் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதையும் கணித்துள்ளது தெரிய வந்துள்ளது. பாபா வங்கா இதுவரை கணித்துள்ள பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையின் பெரும்பகுதி இந்த ஆண்டு அதிக மழை மற்றும் வெள்ளத்தை சந்திக்கும் என்றார், அதுபோன்றே நடந்துள்ளது.


தன்னையே வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் ஜப்பான் இளைஞர்!
[Monday 2022-08-15 16:00]

ஜப்பானில் இளைஞர் ஒருவர் தன்னையே வாடகைக்கு விட்டு அதிகளவில் பணம் சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோவை சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ. கல்லூரி படிப்பை நிறைவு செய்த அவர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். அந்த நிறுவனங்களில் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டில் எவ்வித முதலீடும் இல்லாமல் புதிய தொழிலை தொடங்கினார்.


ஒரே ஒரு வதந்தியால் வெறிச்சோடிய நகரம்!
[Saturday 2022-08-13 16:00]

ஒரு வதந்தியை நம்பி நகரத்தையே விட்டு மக்கள் வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா வாசிகளின் விருப்பமான இடத்தில் ஒன்று ஐரோப்பா. இவை இதமான காலநிலை, பழங்கால கட்டிடங்கள், எழில்கொஞ்சும் கடற்கரைகள் என உலக சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்த்துவருகின்றன. இங்கே வரும் பயணிகளை திகைப்பில் ஆழ்த்தக்கூடியவை இங்குள்ள கைவிடப்பட்ட நகரங்கள். இப்படி ஐரோப்பா முழுவதும் பல நகரங்கள் இருக்கின்றன.


70 வயதில் குழந்தை பெற்றெடுத்த மூதாட்டி!
[Friday 2022-08-12 16:00]

இந்தியாவின் ராஜஸ்தானில் 70 வயதேயான பாட்டி ஒருவர் IVF மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்தானின் Jhunjhunu கிராமத்தை சேர்ந்தவர்கள் Gopichand- Chandrawati தம்பதியினர். Gopichand ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், திருமணமாகி 54 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பேறு கிடைக்கவில்லை. Gopichand தன்னுடைய குடும்பத்தில் ஒரே ஆண்மகன் என்பதால் அடுத்த தலைமுறை வாரிசுக்காக காத்திருந்துள்ளனர்.


இறந்த பன்றி ஒன்றை உயிரோடு எழுப்பி விஞ்ஞானிகள் சாதனை!
[Monday 2022-08-08 17:00]

இறந்த பன்றி ஒன்றை உயிரோடு எழுப்பி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞான குழு ஒன்று பன்றிகளை வைத்து 2019-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அதாவது செயற்கை முறையில் பன்றிகளுக்கு மாரடைப்பை தூண்டி அவற்றி இயக்கத்தை நிறுத்தியுள்ளது.


அமெரிக்காவில் கண்டறியப்பட்ட விசித்திர ஒட்டுண்ணி!
[Saturday 2022-08-06 16:00]

இங்கிலாந்து நாட்டின் சபோல்க் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் அடங்கிய பெட்டியில் ஒரு மீனின் வாய் விசித்திரமுடன் காணப்பட்டு உள்ளது. அதனை ஆய்வு செய்ததில், அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. அந்த மீனின் வாயில் நாக்கு இருப்பதற்கு பதிலாக ஒட்டுண்ணி ஒன்று ஜம்மென்று அமர்ந்திருந்தது. சிமோதோவா எக்சிகுவா அல்லது நாக்கை உண்ணும் பேன் என விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ஒட்டுண்ணியானது, முதலில் மீனின் சுவாச பகுதி வழியே வாய் பகுதிக்குள் நுழைந்து உள்ளது. அதன்பின்னர் மீனின் நாக்கை மெல்ல உண்ண தொடங்கி உள்ளது.


உலகின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்த 242 அடி நீள 'டோர்டா' சாண்ட்விச்!
[Thursday 2022-08-04 16:00]

242 அடி நீள டோர்டா சாண்ட்விச்சை மெக்சிகோ நாட்டு சமையல் கலை நிபுணர்கள் தயாரித்துள்ளனர். மெக்சிகோவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான டோர்டா சாண்ட்விச் பிரெட், இறைச்சி, காய்கறிகள் மற்றும் பல்வேறு வகை சாஸ்-களால் தயாரிக்கப்படுகிறது.


அவுஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய வினோத உயிரினம்! Top News
[Monday 2022-08-01 16:00]

ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கடலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கிறது. அந்த உயிரினத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. உலகத்தின் பல நாடுகளும் கடல்வழி பயணத்தின் மூலமாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் கடல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது.


அவுஸ்திரேலியாவில் மீன் பிடிக்க சென்ற நபரை துரத்திய "நாய் மனிதன்": திடுக்கிடும் சம்பவம்!
[Saturday 2022-07-30 16:00]

அவுஸ்திரேலியர் ஒருவர் தான் மீன் பிடிக்கசென்றபோது பாதி மனித உடலும், பாதி நாய் உடலும் கொண்ட ஒரு உருவத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். தான் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது தன்னை ஒரு உருவம் தொடர்ந்து வருவதை கவனித்த ஜான் என்னும் அந்த அவுஸ்திரேலியர், அந்த உருவத்தை தனது மொபைலில் புகைப்படம் எடுத்துள்ளார்.


கனடாவில் தமிழருக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்!
[Monday 2022-07-25 17:00]

கனடாவில் தமிழர் ஒருவருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. அஜக்ஸ் நகரை சேர்ந்தவர் ஜீவகுமார் சிவபாதம் (54). இவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் டிராவில் (கனேடிய $500,000) (ரூ.13,90,25,573.10) பரிசு விழுந்துள்ளது.


98 வயதில் பட்டப்படிப்பை முடித்த முதியவர்!
[Friday 2022-07-22 18:00]

இத்தாலியில் வசித்து வந்த 98 வயதான பேட்டெர்னோ என்ற முதியவர் முதுகலை படம் பெற்று சாதனா படைத்துள்ளார். இவர் தனது இளமை காலத்தில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி கடற்படை, ரயில்வே ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.


ஊழியர்களை நின்றபடி தூங்க சொல்லும் வினோத நிறுவனம்!
[Wednesday 2022-07-20 19:00]

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று முக்கியமான கையெடுப்பு ஒன்றை முன்னெடுத்து உள்ளது அதாவது அலுவலக வேலைக்கிடையே தூக்கம் வந்தால் அந்த ஊழியர்கள் நின்றபடியே வசதியாக தூங்கலாம் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய ஊழியர்கள் ஸ்ட்ரெஸ் இல்லாமல் வேலை செய்வதற்கு முக்கியமான ஏற்பாட்டை அந்த ஜப்பான் நிறுவனம் செய்திருக்கிறது.


ஆழ்கடலில் கண்டறியப்பட்ட அரியவகை உயிரினம்! Top News
[Sunday 2022-07-17 19:00]

பசிபிக் பெருங்கடலில் விசித்திர விலங்கு ஒன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. பசிபிப் பெருங்கடலில் முதன்முதலாக ஒரு அரியவகை உயிரினம் கண்டறியப்பட்டிருக்கிறது. ஒரு காலனித்துவ சினிடேரியன் வகையைச் சேர்ந்த சோலும்பெல்லுலா கடல்பென் அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடமாற்றிய சீனா!
[Friday 2022-07-15 17:00]

கிழக்கு சீனாவில் இருக்கும் ஷாங்காய் நகரம் அந்நாட்டில் பொருளாதார தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. இந்த நகரத்தில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. 3,800 தொன் எடை கொண்ட இந்த கட்டிடத்தை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.


"உருகாத ஐஸ்கிரீம்" - அசத்திய சீன நிறுவனம்!
[Thursday 2022-07-14 16:00]

ஐஸ்கிரீம் என்றால் பலருக்கும் அதீத பிரியம் இருக்கும். ஆனால், அந்த ஐஸ்கிரீமை உருகி முடிப்பதற்குள் சாப்பிடுவது தான் மிகப்பெரிய டாஸ்க் ஆன ஒன்று. ஐஸ்கிரீம் என்றாலே, சில நிமிடங்களில் உருகி விடும் என்பது தான் ஒரு விதி போல உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் சீனாவில் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ஐஸ்கிரீம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.


கனேடிய தம்பதியை கோடீஸ்வரர்களாக்கிய மூக்கு கண்ணாடி!
[Thursday 2022-07-14 08:00]

கனடாவில் கணவன் மூக்கு கண்ணாடி அணிந்ததால் தம்பதி பெரும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் மைக்கேல் ஸ்ட்ரேஞ். இவர் மனைவி ஜெனிபர். இவர்கள் லொட்டோ மேக்ஸ் லொட்டரி டிக்கெட் வாங்கியிருந்த நிலையில் அதில் பரிசு விழுந்ததா என்பதை தெரிந்து கொள்ள லொட்டரி சீட்டை மைக்கேல் சரிபார்த்துள்ளார்.


யாருமே கண்டிராத பிரபஞ்சத்தின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா! Top News
[Wednesday 2022-07-13 16:00]

உலகமே கண்டிராத புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை காட்டு விதமாக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. நட்சத்திர துகள்களால் நிறைந்து காணப்படும் இப்புகைப்படம் பிரபஞ்சம் குறித்து இதுவரை கிடைத்துள்ள புகைப்படங்களிலேயே மிகவும் ஆழமானது என்பதாகும்.


அமெரிக்காவில் தீக்கிரையான 2000 ஆண்டுகள் பழமையான பெரிய மரங்கள்!
[Monday 2022-07-11 16:00]

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோசெமிட்டி தேசிய பூங்காவில் ஏற்பட்ட பெருந்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அருகாமையிலுள்ள சமூகங்கள் மற்றும் முகாம் மைதானங்கள் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு கட்டாய வெளியேற்ற உத்தவுகள் விடப்பட்டுள்ளன, மட்டுமின்றி அருகிலுள்ள பிரதானசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த பெருந்தீயால் இதுவரை காயங்கள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் மரிபோசா க்ரோவ் என்ற பகுதியை தீப்பிழம்புகள் நெருங்கும் ஆபத்தான நிலை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக கடல் பகுதியில் புதிய வகை மீன்கள் கண்டுபிடிப்பு!
[Friday 2022-07-08 17:00]

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய மின் மரபணு வள பணியகம் ஆகியவை தமிழகத்தில் 2 புதிய வகை கடல் மீன்களை அடையாளம் கண்டுள்ளது. ஒன்று சென்னை பட்டினப்பாக்கம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து செல்லும் மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அதற்கு 'டுசுமிரியா மொடகண்டை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மற்றொரு மீன் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்லும் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது.


அமெரிக்காவில் 61 வயது மூதாட்டியை கரம்பிடித்த 24 வயது இளைஞன்!
[Sunday 2022-07-03 18:00]

அமெரிக்காவில் 61 வயது பெண்ணிற்கும், 24 வயது இளைஞனுக்கும் திருமணம் நடந்த நிலையில் குழந்தை தொடர்பில் தம்பதி முக்கிய முடிவு எடுத்துள்ளனர். Quran McCain (24) என்பவரும் McGregor (61) என்ற பெண்ணும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலம் தங்கள் கனவு குழந்தையை பெற்று கொள்ள திட்டமிட்டுள்ளனர்.


மக்களிடையே பிரபலமாகும் கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட 'பீர்'!
[Friday 2022-07-01 16:00]

சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட 'பீர்' மதுபான பிரியர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் அண்டை நாடான மலேசியாவில் இருந்து குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் கழிவு நீரை புற ஊதா கதிரியக்கத்தில் சுத்திகரித்து 'நியூவாட்டர்' என்ற பெயரில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.


எலுமிச்சை பழத்தால் கோடீஸ்வரியான அமெரிக்க இளம்பெண்!
[Thursday 2022-06-30 16:00]

எலுமிச்சை பழங்களால் 17 வயது பெண் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 17 வயது மிகைலா உல்மர்(Mikaila Ulmer). இவரின் சொத்து மதிப்பு 5 மில்லியன் டொலர்கள் (ரூ 1,81,35,67,500.00) வரை இருக்கும். இவ்வளவு பணத்தையும் எலுமிச்சை பழங்கள் மற்றும் தேனீக்கள் தான் இவருக்கு கொடுத்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மீ அண்ட் தி பீஸ் லெமனேட் என்ற நிறுவனத்தின் தலைவராக மிகைலா உல்மர்(Mikaila Ulmer) உள்ளார்.


13 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஒற்றை மீன்!
[Wednesday 2022-06-29 08:00]

மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூரிலுள்ள திகா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 55 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான டெலிய போலா மீன் 13 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்களில் பல வகைகள் உண்டு, பெரும்பாலும் மீன்கள் புரதச் சத்து மிகுந்த உணவு ஆகும், உணவுக்காக பிடிக்கப்படும் மீன்கள் ஒருபுறம் என்றால் மருந்து மற்றும் மருத்துவ ஆராய்ச்சி போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மீன்களும் தனி ரகம்.


பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவர இனம்!
[Sunday 2022-06-26 17:00]

உத்தரகாண்ட் மாநில வனத்துறை மேற்கு இமயமலைப் பகுதியில் அரிய வகை தாவரத்தை கண்டுபிடித்துள்ளது. மேற்கு இமயமலைப் பகுதியில் முதன்முறையாக 'யூட்ரிகுலேரியா பர்செல்லாட்டா' என்ற தாவர இனம் உத்தரகாண்ட் வனத்துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இதே போல, இதுவரை வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த சுமார் 20 தாவர இனங்கள் உத்தரகாண்ட் வனத்துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.


மணமகள் தேவை: சுவரொட்டியால் பிரபலமான இளைஞர்!
[Thursday 2022-06-23 18:00]

தமிழகத்தின் மதுரையில் இளைஞர் ஒருவர் மணமகள் தேவை என வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய நிகழ்வு நடந்துள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரை சேர்ந்த சுதர்சன்-சந்திரா தம்பதியின் மகன் ஜெகன். 27 வயது பட்டதாரி இளைஞரான இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால், விரைவில் திருமணம் ஆக ஜெகன் நூதனமுறையை கையில் எடுத்துள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா