Untitled Document
June 4, 2025 [GMT]
 
அல்லு அர்ஜுனை மேடையில் அசிங்கப்படுத்திய நயன்தாரா!
[Wednesday 2025-04-09 19:00]

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இந்திய அளவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். அவரது படங்கள் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றன. அடுத்து அவர் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.600 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறதாம்.

மணிரத்னம் சினிமா துறை பற்றி சொன்ன விஷயம்!
[Wednesday 2025-06-04 07:00]

இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி இருக்கும் தக் லைப் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் நடிகை தீபிகா படுகோன் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் தான் ஷூட்டிங் வருவேன் என கூறியதால் தான் இயக்குனர் சந்தீப் ரெட்டி அவரை நீக்கிவிட்டதாக தகவல் பரவியது.


மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!
[Wednesday 2025-06-04 07:00]

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு என்ன பிரச்சனை நன்றாக சம்பாதிப்பார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு உள்ளது. ஆனால் எல்லா பிரபலங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைவது இல்லை, சினிமாவில் சாதித்தாலும் சொந்த வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் தவிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நிழல்கள் படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கியவர் ராஜசேகர்.


"மன்னிப்பு கேட்க முடியாது" - கமல் அதிரடி!
[Tuesday 2025-06-03 19:00]

நடிகர் கமல்ஹாசனின் தக் லைப் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் நிலையில் கர்நாடகாவில் அதற்கு தடை போடப்பட்டு இருக்கிறது. தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கமல் கூறியதற்கு மன்னிப்பு கேட்டால் தான் தக் வெளியிட விடுவோம் என சில அமைப்புகள் அங்கே போராட்டம் நடத்தின. தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


கூலி படத்தை மாபெரும் விலைக்கு வாங்க காத்திருக்கும் நிறுவனங்கள்!
[Tuesday 2025-06-03 19:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஷோபின் ஷபீர், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அப்பாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் நடிகர் விஜய் வைத்திருப்பது இவரை தானா?
[Tuesday 2025-06-03 19:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இது அவருடைய கடைசி படமாகும். இதன்பின், முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார். ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாணி தியோல், ப்ரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.


நடிகை சமந்தாவுடன் சுற்றும் புது காதலர்!
[Tuesday 2025-06-03 06:00]

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் காதலித்து வருவதாகவும் ஒன்றாக சேர்ந்து வாழ வீடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சில வாரங்களுக்கு முன்பு செய்தி வந்தது. அவருடன் இருக்கும் போட்டோக்களை சமந்தா தொடர்ந்த்து இன்ஸ்டாவில் வெளியிட அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


விஜய் டிவியில் அடுத்தடுத்து களமிறங்கும் 3 புதிய தொடர்கள்!
[Tuesday 2025-06-03 06:00]

சீரியல்கள் என்றால் சன் டிவி தான் ராஜா. ஆனால் இப்போது அவர்களையே திக்குமுக்காட வைக்கும் வகையில் விஜய், ஜீ தமிழ், கலைஞர் என பல தொலைக்காட்சிகளில் நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மக்களும் இப்போது எல்லா தொலைக்காட்சி சீரியல்களுக்கும் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


கர்நாடகாவில் குறையாத எதிர்ப்பு: நீதிமன்றத்திற்கு சென்ற கமல்!
[Monday 2025-06-02 18:00]

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கின.


தக் லைஃப் படத்திற்காக நடிகர் சிம்பு வாங்கிய சம்பளம்!
[Monday 2025-06-02 18:00]

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு முதன் முதலில் நடித்த திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மணி ரத்தினத்துடன் சிம்பு கூட்டணி அமைத்திருக்கும் படம் தக் லைஃப். இப்படத்தில் கமல் ஹாசனுடன் சிம்பு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.


"வடசென்னை 2": அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்!
[Monday 2025-06-02 18:00]

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பது வடசென்னை 2 படத்திற்காக தான். 2018ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என பலரும் நடித்திருந்தனர்.


மதயானைக் கூட்டம் இயக்குனர் திடீர் மரணம்!
[Monday 2025-06-02 06:00]

மதயானைக் கூட்டம் பட புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இன்று திடீர் மாராடைப்பால் மரணம் அடைந்தது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ராவனக்கோட்டம் என்ற படத்தை இரண்டு வருடங்களுக்கு முன் இயக்கி இருந்தார். அதில் சாந்தனு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


"எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க" - தனுஷ் மேடையில் ஆவேச பேச்சு!
[Monday 2025-06-02 06:00]

நடிகர் தனுஷ் பற்றி அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வருகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் பாடகி சுசித்ரா கூறிய ஒரு குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு நடிகர் தனுஷ் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்து இருக்கிறார். எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க. என்ன negativity வேணும்னாலும் spread பண்ணுங்க. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்பு என்னைப்பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க.


"தக் லைஃப்" படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா வாங்கிய சம்பளம்!
[Sunday 2025-06-01 17:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் இப்படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


"இது தான் என் கடைசி படம்" - ஷாக் கொடுத்த அமீர் கான்!
[Sunday 2025-06-01 17:00]

நடிகர் அமீர் கான் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது கடந்த சில காலமாக நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. அடுத்து அவர் நடித்து இருக்கும் Sitaare Zameen Par வரும் ஜூன் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அது நல்ல வசூலை ஈட்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா?
[Sunday 2025-06-01 17:00]

இந்தியாவின் பணக்கார நடிகர் என்றால் அது ஷாருக்கான் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தென்னிந்தியாவில் பணக்கார நடிகர் யார் என்றால் அது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 3.572 கோடி என கூறப்படுகிறது. அந்த ஹீரோ வேறு யாருமில்லை டோலிவுட் கிங் நாகார்ஜுனாதான். தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.


மகனுக்காக ஒன்றிணைந்த தனுஷ் - ஐஸ்வர்யா!
[Sunday 2025-06-01 08:00]

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே விவாகரத்தை அறிவித்துவிட்டனர். அதற்கு பிறகு அவர்கள் தங்கள் மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்களை மட்டும் வெளியிட்டு வந்தனர். தனுஷ் தனது பட விழாக்களுக்கு மகன்களை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். அதே போல ஐஸ்வர்யாவும் அவர்களை பல நிகழ்ச்சிகளுக்கு கூட்டி சென்றார்.


கையில் ஆஸ்கார் விருதுடன் மகாராஜா இயக்குனர்: வீட்டுக்கே அழைத்த ஹாலிவுட் பிரபலம்!
[Sunday 2025-06-01 08:00]

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் ஆனது. அது மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வசூலை குவித்தது. இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும் கிடைத்தது.


'தக் லைப்' கர்நாடகாவில் தடை!
[Saturday 2025-05-31 17:00]

நடிகர் கமல்ஹாசன் கன்னடம் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக அரசியல்வாதிகள் பலரும் கூறிய நிலையில், 'மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது' என கமல் உறுதியாக கூறிவிட்டார். 'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' என தான் அவர் பேசியது தான் பிரச்சனைக்கு காரணம். "நான் எதுவும் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்பேன்" என அவர் உறுதியாக கூறிவிட்டார்.


நடிகைகள் என்றால் பொம்மையா? - கடுப்பான நடிகை நித்யா மேனன்!
[Saturday 2025-05-31 17:00]

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து சினிமாவில் கலக்கியவர் நடிகை நித்யா மேனன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாயகியாக கலக்கிய நடிகைகளின் லிஸ்டில் இவரும் ஒருவர். 180 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தனுஷின் திருச்சிற்றம்பலம் என்ற படத்திற்காக சிறந்த நாயகிக்கான விருது எல்லாம் பெற்றார்.


சிம்பு உடனான காதல் திருமணம் உண்மையா? - பிரபல நடிகை பதில்!
[Saturday 2025-05-31 17:00]

சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு என்ட்ரி கொடுத்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கலக்குபவர் தான் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் ஜுன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கான புரொமோஷனும் சூடு பிடிக்க நடந்து வருகிறது.


ஆர்த்தி பிரச்சனைக்கு நடுவில் ரவி மோகன் தொடங்கும் புது விஷயம்!
[Saturday 2025-05-31 07:00]

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி ஆகியோரின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இரண்டு தரப்பும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். அது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நீதிமன்றம் அறிக்கை வெளியிட தற்போது தடை போட்டிருக்கிறது. அதனால் தற்போது இருவரும் அமைதி காத்து வருகின்றனர்.


மன்னிப்பு கேட்க முடியாது என கூறிய கமல்: ஆதரவாக வந்த நடிகர் சங்கம்!
[Saturday 2025-05-31 07:00]

நடிகர் கமல் சமீபத்தில் தக் லைப் படத்தின் விழாவில் பேசும்போது 'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' என கூறி இருந்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் பற்றி பேசும்போது அவர் அதை கூறினார். கமல் பேசியதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு எழுந்து இருக்கிறது. முதலமைச்சர் சித்தராமையா உட்பட பலரும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.


சந்திரமுகி படத்திற்கு முதலில் தேர்வானது ரஜினி இல்லையா?
[Friday 2025-05-30 18:00]

நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் சந்திரமுகி. கடந்த 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழில் மட்டுமில்லாது தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பி.வாசு அவர்கள் இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, வினீத் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.


லப்பர் பந்து கதையை ஹிந்தியில் ரீமேக் செய்யும் டாப் ஹீரோ!
[Friday 2025-05-30 18:00]

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடித்து இருந்த படம் லப்பர் பந்து. இந்த படத்தில் தினேஷ் ஜோடியாக ஸ்வாசிகா நடித்து இருந்தார். அவரது ரோலுக்கு பெரிய முக்கியத்துவம் கதையில் இருந்தது. அந்த படம் மூலமாக பெரிய புகழை பெற்று இருக்கும் ஸ்வாசிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சூர்யா - RJ பாலாஜி கூட்டணியில் உருவாகும் படத்திலும் அவர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.


வசூலில் பட்டையை கிளப்பிய மாமன் திரைப்படம்!
[Friday 2025-05-30 18:00]

சூரி கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளிவந்த திரைப்படம் மாமன். இப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


படுதோல்வியடைந்த விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம்!
[Friday 2025-05-30 08:00]

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஏஸ். இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என்கிற திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் மீண்டும் ஏஸ் திரைப்படத்திற்காக இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி அவரே இப்படத்தை தயாரித்துள்ளனர்.


10 வருடம் மேல் ஆகியும் குழந்தை இல்லாதது ஏன்? - சாந்தனு, கிகி பதிலடி!
[Friday 2025-05-30 08:00]

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முகம் காட்டி பிரபலமானவர் பாக்யராஜ். வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பாக்யராஜ் மகன் சாந்தனு. பின் நாயகனாக சக்கரகட்டி திரைப்படத்தில் அறிமுகமாக படம் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. பின் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சாந்தனுக்கான பெரிய வெற்றிப்படம் இன்னும் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.


பிரபல பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்!
[Thursday 2025-05-29 18:00]

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ராஜேஷ் இன்று திடீரென காலாமானார். திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ் சினிமாவில் 70களில் புகழ்பெற்று விளங்கியவர் தான் நடிகர் ராஜேஷ். அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். பின்பு கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், தனிகாட்டு ராஜா, பயணங்கள் முடிவதில்லை, தாய் வீடு, சிறை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததுடன், ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.


கமல் உடனான முத்தக்காட்சி சர்ச்சை: நடிகை அபிராமி கொடுத்த பதில்!
[Thursday 2025-05-29 18:00]

தமிழ் சினிமாவில் 37 வருடத்திற்கு பின் கமல் - மணிரத்னம் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமலுடன், த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். தமிழை தாண்டி இப்படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் வரும் ஜுன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.


ஜனநாயகன் படம் குறித்து விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு!
[Thursday 2025-05-29 18:00]

நடிகர் விஜய் தற்போது அரசியலில் முழுமையாக இறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்துவிட்டார். இதன்பின் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே என விஜய் எடுத்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்தது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்னும் பேட்ச் ஒர்க் மட்டுமே மீதமுள்ளது என கூறப்படுகிறது.

Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா