Untitled Document
September 18, 2024 [GMT]
 
55 வயதை கடந்த ஜூஹி சாவ்லா இளமை தோற்றத்தின் ரகசியம் என்ன தெரியுமா?
[Wednesday 2024-09-04 19:00]

இந்தி சினிமாவில் தனது சிறந்த நடிப்பு மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் ஜூஹி சாவ்லா. தற்போது, 55 வயதை கடந்த ஜூஹி இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டி போடும் வகையில் இளமையாகவும், அழகாகவும் காணப்படுகிறார். இவரின் இந்த இளமை தோற்றத்தின் ரகசியத்தை கீழே பார்க்கலாம்.


"ஆடை இல்லாமல் பேட்டி எடுப்பீங்களா?" - சர்ச்சையை கிளப்பிய கவின் பட நடிகை!
[Wednesday 2024-09-04 19:00]

சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு கிடைக்கும் அளவிற்கு வரவேற்பு என்பது மிக எளிதாக நடிகைகளாக வரும் பெண்களுக்கு கிடைப்பது கிடையாது. ஏனெனில் நடிகர்களை விடவும் பெண்களுக்கான போட்டி என்பது சினிமாவில் அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் மாடலிங் துறையில் இருப்பவர்களுக்குதான் சினிமாவில் நடிப்பதற்கான முன்னுரிமை கிடைக்கிறது. அதையும் தாண்டி இப்பொழுது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்துவிடுகின்றனர்.


அட்டகாசமாக வந்தது விஜய்யின் கோட் படத்தின் முதல் விமர்சனம்!
[Wednesday 2024-09-04 19:00]

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்கள், புதுமுக கலைஞர்களின் படங்கள் என வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த படங்களும் அழுத்தமான கதைக்களத்தை கொண்டு இருக்க பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வந்தது. இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் விஜய்யின் கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.


"பாலியல் புகார்: நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன்" - நிவின் பாலி விளக்கம்!
[Wednesday 2024-09-04 06:00]

நடிகர் நிவின் பாலி மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களை ஒருவர். அவர் பிரேமம், நேரம் போன்ற படங்களின் மூலமாக தமிழிலும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். தற்போது மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நிவின் பாலி பட வாய்ப்பு தருவதாக வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் புகார் கூறி இருக்கிறார்.


பாடகி சுசித்ரா மீது வழக்கு தொடர்ந்த நடிகை ரீமா கல்லிங்கல்!
[Wednesday 2024-09-04 06:00]

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பல முன்னணி நடிகர்கள் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். சுசி லீக்ஸ் புகழ் பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் பற்றி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை கூறி இருந்தார்.


வெறித்தனமான வசூல் வேட்டையில் "கோட்"!
[Tuesday 2024-09-03 18:00]

எஸ்ஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள தளபதி விஜய்யின் GOAT திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி பிரமாண்டமான முறையில் வெளியாகிறது. உங்களவில் 6000 ஸ்க்ரீன்களில் இப்படம் வெளிவருகிறது என சொல்லப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே 1100 ஸ்க்ரீன்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பெண்கள் தான் ஆண்களை கெடுக்கிறார்கள்: சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி!
[Tuesday 2024-09-03 18:00]

சில நாட்களுக்கு முன் மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் தாக்கம் தான் இப்போது தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான பேச்சாக உள்ளது. இதுகுறித்து பலர் பேச மறுத்தாலும் 80களில் முன்னணி நாயகிகளாக வலம் வந்த ராதிகா, குஷ்பு ரோகிணி, லட்சுமி ராமகிருஷ்ணன் என பல நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். நடிகை ராதிகா, கேரவனில் தனக்கு நடந்த விஷயத்தை பற்றி கூற அதுவும் பரபரப்பாக பேசப்பட்டது.


5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த வடிவேலு: நீதிமன்றம் மூலம் அவகாசம் கேட்ட சிங்கமுத்து!
[Tuesday 2024-09-03 18:00]

பிரபல யூடியூப் சேனல்களில் நடிகர் வடிவெலுவை பற்றி நடிகர் சிங்கமுத்து தவறாக பரப்பிய செய்திகளுக்கு வடிவேலு ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். யூடியூப் சேனல்களில் நடிகர் வடிவெலுவை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசிய நடிகர் சிங்கமுத்து ரூ.5 கோடி நஷ்டஈடு தனக்கு தர உத்தரவிடக் கோரி நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக, நடிகர் சிங்கமுத்து 2 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.


சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக வந்த கவின்!
[Tuesday 2024-09-03 06:00]

கங்குவா ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10ம் தேதி ரஜினியின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட காரணத்தால் தற்போது கங்குவா பின்வாங்கி இருக்கிறது. அந்த படத்தின் புது ரிலீஸ் தேதி என்ன என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருப்பதால், கங்குவா தீபாவளி ரேஸில் குதிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.


இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம்!
[Tuesday 2024-09-03 06:00]

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு, 2013-ம் ஆண்டு ராஜா ராணி என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, இவர் தமிழில் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கி சினிமாவில் பிரபலமானார். இதை தொடர்ந்து, இந்தியில் அட்லீ ஜவான் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் நல்ல வரவேற்பை ரசிகர் மத்தியில் பெற்று வசூலில் சாதனை படைத்தது.


இதயத்தில் ஆயிரம் வாழைத்தார்களை ஏற்றிவிட்டார்: மாரி செல்வராஜ்-க்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து!
[Monday 2024-09-02 19:00]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி வாழை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கேரவனில் இருந்த ரகசிய கமெரா: பரபரப்பை கிளப்பிய ராதிகா சரத்குமார்!
[Monday 2024-09-02 19:00]

படப்பிடிப்பின் போது கேரவனில் ரகசிய கமெரா வைத்திருந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரள சினிமாவில் பல்வேறு பரபரப்பான விடயங்கள் நடந்துள்ளன. இந்த அறிக்கையில், கேரள நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ள வன்புணர்வு கொடுமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.


கேரளா ஹேமா கமிட்டி அறிக்கை: பரபரப்பான நிலையில் ரஜினிகாந்த் சொன்னது என்ன?
[Monday 2024-09-02 19:00]

கேரளா ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரள சினிமாவில் பல்வேறு பரபரப்பான விடயங்கள் நடந்துள்ளன. இந்த அறிக்கையில், கேரள நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ள வன்புணர்வு கொடுமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். செய்தித்தாள்கள், ஊடகம் ஆகியவற்றிலும் இதுபற்றி பேசப்பட்டு வருகிறது.


சினிமா துறையை உலுக்கிய பாலியல் குற்றச்சாட்டுகள்: மெளனம் கலைத்த மம்முட்டி!
[Monday 2024-09-02 06:00]

மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.


ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கோட்!
[Sunday 2024-09-01 18:00]

தளபதி விஜய்யின் நடிப்பில் பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளார். பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த GOAT திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் நான்காவது பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


பாலியல் சர்ச்சை பற்றிய கேள்வியால் நடிகர் ஜீவா வாக்குவாதம்!
[Sunday 2024-09-01 18:00]

தற்போது மலையாள சினிமாவை புரட்டி போட்டிருக்கிறது ஹேமா கமிட்டி ரிப்போர்ட். நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்த விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது பல நடிகைகள் தைரியமாக பாலியல் புகார் அளித்து இருப்பதால் பல முன்னணி பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர்.


குடிப்பழக்கத்தால் நடுத்தெருவிற்கு வந்த 5 தமிழ் நடிகைகள்!
[Sunday 2024-09-01 18:00]

மது பழக்கம் என்பது எப்பொழுதுமே உயிருக்கு கேடான ஒரு விஷயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக பலரையும் பின்னடைய செய்து விடுகிறது. மது பழக்கம் என்பது ஏழை எளியவர்களில் துவங்கி பணக்காரர்கள் வரை அனைவரிடமும் ஒரு வியாதி போல பரவி இருக்கும் விஷயமாக இருக்கிறது. அனுதினமும் ஏழைகள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த மது பணக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக நடிகைகள் பலர் இதற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கின்றனர். அப்படியான சில நடிகைகளை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.


கோட் படத்தின் முழு பட்ஜெட் எவ்வளவு? - முழு விவரம் கூறிய தயாரிப்பாளர்!
[Sunday 2024-09-01 06:00]

தமிழ் சினிமா ரசிகர்கள் செப்டம்பர் 5திற்காக மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் என்ன எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நடிகர் விஜய் நடித்துள்ள கோட் (The Greatest Of All Time) படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய் வெளியாகப்போகும் கடைசி படத்திற்கு முந்தைய படம் இது.


மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Sunday 2024-09-01 06:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒரு பாடல் மட்டும் எடுக்கவேண்டியது பாக்கி என சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.


தமிழ் சினிமா நடிகர் சங்கம் எடுத்த புது முடிவு!
[Saturday 2024-08-31 16:00]

தொலைக்காட்சி மற்றும் மேடை நடிகர்களுக்கான சங்கம் தான் நடிகர் சங்கம். நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை கேட்டு அதற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கும், அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும், மேலும் சினிமாவில் இருக்கும் நடிகை, நடிகர்களுக்கு என்னென்ன தேவை உள்ளதோ அதை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட சங்கம் தான் நடிகர் சங்கம். பல உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவரை கொண்ட இந்த சங்கம், குழுவின் தலைவரைத் தீர்மானிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.


அண்ணன் சூர்யாவுக்கு குரல் கொடுத்த தம்பி கார்த்தி!
[Saturday 2024-08-31 16:00]

அண்ணன் மற்றும் தம்பி என இருவரும் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்தனி ரசிகர் கூட்டத்தை தன் நடிப்பு திறமையாலும் உழைப்பாலும் சம்பாதித்தவர்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் பாசத்தை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்திற்கு டப் செய்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் மாற்றான். இந்த படம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.


8 நாட்களில் வாழை படம் செய்துள்ள வசூல்!
[Saturday 2024-08-31 16:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் வாழை. இதுவரை இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய மூன்று படங்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவதாக வெளிவந்த வாழை படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.


நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி மனைவி யார் தெரியுமா?
[Saturday 2024-08-31 07:00]

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து 3 தலைமுறைகளுக்கு மேலாக தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் காமெடியனாக நடித்து பிறகு சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் வில்லனாக நடித்து எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் வரை பலருடன் நடித்து பிரபலமானார். அதுமட்டுமின்றி, குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார்.


மாப்பிள்ளை உடையில் நாக சைதன்யா ஊர்வலம்: ரகசிய திருமணமா?
[Saturday 2024-08-31 07:00]

நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், தற்போது நாக சைதன்யா தனது புது காதலி சோபிதாவை கரம்பிடிக்க இருக்கிறார். அவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் திருமணம் எப்போது என அறிவிக்காமல் இருக்கின்றனர்.


இந்தியாவிலேயே பணக்கார நடிகர் இவர்தான்!
[Friday 2024-08-30 18:00]

சினிமா துறையில் நடிகர்கள் சம்பளம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் பல நூறு கோடிகள் சம்பளமாக வாங்குவது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மூலமாகவும் பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள். தற்போது Hurun India என்ற நிறுவனம் இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் நடிகர் ஷாருக்கான் பெயரும் இடம்பெற்று இருக்கிறது.


பாலிவுட்டில் நுழையும் இயக்குனர் பா. ரஞ்சித்!
[Friday 2024-08-30 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் தங்கலான். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்த தங்கலான் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியில் செப்டம்பர் 6 -ம் தேதி வெளியாக உள்ளது.


சொந்தமாக தனி தீவு வைத்திருக்கும் பிரபல நடிகை!
[Friday 2024-08-30 18:00]

சொந்தமாக வீடு, சொந்த கார் வைத்திருக்க வேண்டும் என பல கனவுகள் மக்களிடம் உள்ளது. சாதாரண மக்களை தாண்டி பிரபலங்களுக்கு நிறைய கனவுகள் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சொந்தமாக நிலம் வைத்திருப்பதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில் பாலிவுட் பிரபலங்கள் 3 பேர் தனியாக தீவு சொந்தமாக வைத்துள்ளனர்.


நடிகராக பெரிய சம்பளம் வாங்கும் மிஷ்கின்!
[Friday 2024-08-30 06:00]

சித்திரம் பேசுதடி தொடங்கி பிசாசு, துப்பறிவாளன் உட்பட பல நல்ல வரவேற்பை பெற்ற படங்களை கொடுத்தவர் மிஷ்கின். இயக்குனர் என்பதை தாண்டி சமீப காலமாக மிஷ்கின் நடிகராக ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மிரட்டல் வில்லனாகவும் அவர் நடித்து வருகிறார்.


அஜித்தின் தீண்டாமை பிரச்சனை உண்மையா? - உண்மையை உடைத்த பிரபலம்!
[Friday 2024-08-30 06:00]

நடிகர் அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் டாப் பிரபலம். இவர் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களை மாற்றி மாற்றி நடித்து வந்தார். துணிவு படம் தொடர்ந்து அடுத்து விடாமுயற்சி படம் தான் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் குறித்து ஒரு சர்ச்சை பரபரப்பாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதுகுறித்து பலரும், நிறைய கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் பட்டியல்!
[Thursday 2024-08-29 19:00]

வாழ்க்கையில் இசையை விரும்பாத மனிதர்கள் இங்கு மிகவும் குறைவு தான். அந்த இசையை தன் வாழக்கையோடு இணைத்து மாபெரும் வெற்றி பெற்ற இசையமைப்பாளராக அன்று வலம் வந்தவர் இளையராஜா. இவருடைய இசையை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தற்போது பல இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவை தனது இசை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த நிலையில், அதிக சம்பளம் வாங்கி வரும் இசையமைப்பாளர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா