Untitled Document
September 18, 2024 [GMT]
 
நடிகை மதுமிதாவிற்கு சினிமாவில் வாய்ப்பு குறைய என்ன காரணம்?
[Thursday 2024-08-29 19:00]

தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வெளியான படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த படத்தில் சந்தானம்-உதயநிதி காமெடியை அடுத்து மதுமிதாவின் காமெடி காட்சிகளும் செம ஹிட்டடித்தது. அப்படத்தின் மூலம் ஜாங்கிரி மதுமிதா என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட இவர் தொடர்ந்து நிறைய படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்தார்.


"செருப்பால் அடிங்க" - விஷால் பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
[Thursday 2024-08-29 19:00]

சினிமா என்றாலே பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் உள்ள துறை என்பது ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிகமாக பதிவாகி இருக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்தே சினிமாவுக்கு செல்லும் நடிகைகளை பொதுமக்கள் மதிப்பது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் சினிமாவிற்கு செல்லும் நடிகைகள் கண்டிப்பாக கற்புடன் இருக்க மாட்டார்கள் என்பது பொது மக்களின் எண்ணமாக இருக்கிறது. அதனால்தான் ஜெயலலிதா மாதிரியான நடிகைகள் கூட அப்பொழுது மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றவர்களாக இருந்தனர்.


"வாழை கதை என்னுடையது, மாரி செல்வராஜ் திருடிவிட்டார்" - பிரபல எழுத்தாளர் புகார்!
[Thursday 2024-08-29 06:00]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்தவர்களும் நல்ல விமர்சனம் கூறி வருகிறார்கள். மேலும் நல்ல வசூலும் படத்திற்கு குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாழை கதை தன்னுடையது என பிரபல எழுத்தாளர் ஒருவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.


முன்னணி நடிகர் படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி!
[Thursday 2024-08-29 06:00]

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜுன் மாதம் வெளியான படம் மகாராஜா. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று ரூ. 107 கோடி வரை வசூல் செய்தது. இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதிக்கு ராம் சரணுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மகாராஜா படத்தை காரணமாக கூறி அந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.


நடிப்பதையே சுத்தமாக நிறுத்தியது ஏன்? - சிவகுமார் விளக்கம்!
[Wednesday 2024-08-28 18:00]

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய பலரை இப்போதும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்போதும் பட வாய்ப்புகள் கிடைக்க நல்ல நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அப்படி 80களில் சிறந்த நடிகராக, அழகிய முருகராக என நடித்து முன்னணி நாயகனாக அவரது காலத்தில் வலம் வந்தவர் தான் சிவகுமார். இவரது பெயரை சொன்னதும் படங்களை தாண்டி அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி நியாபகம் வருவார்கள். அதன்பிறகு சிவகுமார் அவர்களை செல்பி எடுக்கும் போது அவர் செய்த சம்பவங்கள் தான்.


விடுதலை 2ம் பாகம் ரிலீஸ் எப்போது? - வெளிவந்த தகவல்!
[Wednesday 2024-08-28 18:00]

வெற்றிமாறன் படம் எப்போதுமே மக்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும். அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை, இதில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்திற்காக கிட்டத்தட்ட 2 முதல் 3 ஆண்டுகள் உழைத்துள்ளார். இதனால் மற்ற படங்களில் நடிக்காமல் முழுக்க முழுக்க விடுதலை படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்.


சம்பத் ராம் சென்ற கார் பயங்கர விபத்தில் சிக்கியது: பிரபலத்தின் தற்போதைய நிலை!
[Wednesday 2024-08-28 18:00]

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் சம்பத் ராம். எத்தனை மனிதர்கள் என்கிற சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் சப் இன்ஸ்பெக்டர் ரோலில் நடித்து பிரபலமானார்.


கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகை!
[Wednesday 2024-08-28 06:00]

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.


மகனை படத்தில் அறிமுகப்படுத்தும் தனுஷ்!
[Wednesday 2024-08-28 06:00]

நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் எல்லோரையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கி இருந்த ராயன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அடுத்து அவர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.


தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!
[Tuesday 2024-08-27 18:00]

தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ், கோமாளி, நட்பே துணை ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா பிக்பாஸ் ஷிவானி!
[Tuesday 2024-08-27 18:00]

சின்னத்திரையில் பிரபல ஹீரோயினாக இருந்து அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டவர் ஷிவானி நாராயணன். அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கிளாமர் டான்ஸ் வீடியோக்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதுதான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடையாகவும் காரணாமாக அமைந்தது.


G.O.A.T படத்திற்காக அதிகாலை 4 மணி காட்சி!
[Tuesday 2024-08-27 18:00]

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் G.O.A.T. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவரவுள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் குறித்து தகவல் வெளியானது.


பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வருகிறாரா சிவாங்கி?
[Tuesday 2024-08-27 06:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்காக முதற்கட்ட பணிகளை விஜய் டிவி செய்துவருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. போட்டியாளர்க வர பிரபலங்களை தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருகிறதாம். அதற்கான நேர்காணல் நடப்பதாகவும் அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.


விஜயகாந்த் இறப்புக்கு போன் செய்து கூட துக்கம் விசாரிக்காத அஜித்: பிரபலம் அதிர்ச்சி பேட்டி!
[Tuesday 2024-08-27 06:00]

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து அதன் பின் அரசியலில் குதித்து அதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அதன் பின் அவர் உடல்நலக்குறைவாக சில வருடங்கள் இருந்த நிலையில் 2023 டிசம்பர் 23ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் ரஜினி, விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்கள்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் மகன்!
[Monday 2024-08-26 17:00]

தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது ஒரு நடிகன் கேப்டன் விஜயகாந்த். சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து அதில் பயணித்தவர் அரசியல் வந்து மக்களுக்காக போராட வேண்டும் என்று நினைத்தார், அதேபோல் அரசியல் களத்திலும் இறங்கினார். தனது பயணத்தை தொடங்கிய வேகத்தில் எதிர்க்கட்சி என்ற அளவிற்கு உயர்ந்த அவரது தேமுதிக கட்சி முன்னேறிய வேகத்தில் சரிவையும் சந்தித்தது.


தனுஷ் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்!
[Monday 2024-08-26 17:00]

நடிகை பிரியங்கா மோகன் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் தான் பிரியங்கா மோகன். இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


3 நாட்களில் வாழை திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2024-08-26 08:00]

கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் வாழை. தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர் வெற்றிகளுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.


நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் புகார்!
[Monday 2024-08-26 08:00]

சமீபத்தில் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள சினிமாவை புரட்டி போட்டிருக்கிறது. மலையாள சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாக அதிர்ச்சி தகவல்கள் பலவும் வெளிவந்தது. நடிகர் சித்திக் மீது இளம் நடிகை ரேவதி சம்பத் புகார் கூறிய நிலையில் அவர் AMMA என்னும் மலையாள நடிகர் சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


நடிகை ஷ்ரத்தா கபூரின் காதலை நிராகரித்த பிரபல வாரிசு நடிகர்!
[Sunday 2024-08-25 18:00]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஸ்ட்ரீ 2. இதனுடைய முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த ஸ்ட்ரீ 2 திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.


50 வயதில் இவ்ளோ கவர்ச்சியா? - நீச்சல் உடையில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி! Top News
[Sunday 2024-08-25 18:00]

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. அவர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் உடன் காதலில் பல் வருடங்களாக இருந்து வந்தார். ஆனால் அவர்கள் தற்போது பிரேக் அப் செய்துவிட்டனர் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. மலைக்காவுக்கு முந்தைய திருமணத்தில் பிறந்த மகனுக்கே தற்போது 21 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தனுஷின் பொறுமையை சோதிக்கும் சிவகார்த்திகேயன்!
[Sunday 2024-08-25 18:00]

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக திகழும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் இருவருக்குமே அதிக அளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர்கள் படங்களை விரும்பிப் பார்த்து மாஸ் வெற்றியும் தந்து விடுவார்கள்.


திடீரென விஜய் வீட்டிற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த்!
[Sunday 2024-08-25 06:00]

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் டாப்பில் இருப்பவர். படத்துக்கு படம் மார்க்கெட், சம்பளம், ரசிகர்கள் கூட்டம் என உயர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் அவர் இந்த நேரத்தில் சினிமா போதும் நான் மக்களுக்காக உழைக்க முடிவு செய்துள்ளேன் என்று அரசியலில் கால் பதித்துள்ளார்.


தேசிய விருதில் இருந்து சார்பட்டா பரம்பரை நிராகரிக்கப்பட்டது: காரணத்தை கூறிய பா. ரஞ்சித்!
[Sunday 2024-08-25 06:00]

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இதை தொடர்ந்து, 2021- ல் ஓ.டி.டி மூலம் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தான் சார்பட்டா பரம்பரை. இதன் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்திலும் ஹீரோவாக ஆர்யாவே நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது.


டிமாண்டி காலனி 2 வெற்றயை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அருள்நிதி!
[Saturday 2024-08-24 18:00]

வித்தியாசமான ஹாரர் மட்டும் கிரைம் கதைகளில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர் தான் அருள்நிதி. இவர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஹாரர் படம், ‘டிமான்ட்டி காலனி' மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் அஜய் ஞானமுத்துவிற்கு நல்ல கம்பேக்காக அமைந்தது.


தங்கலான் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
[Saturday 2024-08-24 18:00]

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விக்ரம். இவர் தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது மட்டுமின்றி, அதற்கான கடின உழைப்பையும் போடுகிறார். அப்படி விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தங்கலான். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்த இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.


பாதுகாப்பின்றி நடந்த படப்பிடிப்பு: மஞ்சு வாரியரிடம் இழப்பீடு கேட்ட நடிகை!
[Saturday 2024-08-24 18:00]

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தமிழில் அசுரன், துணிவு, போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் மஞ்சு வாரியர். அசுரன் படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினையும் பெற்றார். அதனைத்தொடர்ந்து, இவர் தற்போது விடுதலை 2 மற்றும் மிஸ்டர் எக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். நேற்று இவர் நடிப்பில் ஃபுட்டேஜ் என்ற திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


விஜய் சேதுபதி ஜோடியாகும் நித்யா மேனன்!
[Saturday 2024-08-24 06:00]

வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.


பா.ரஞ்சித்தின் அடுத்த படம்: முன்னணி ஹீரோவுடன் கூட்டணி!
[Saturday 2024-08-24 06:00]

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தங்கலான் கலவையான விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்று வருகிறது. தங்கலான் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும் விக்ரம் ஏற்கனவே படவிழாவில் தெரிவித்து இருக்கிறார். பா.ரஞ்சித் அடுத்து இயக்க இருக்கும் படம் பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் தயாரிக்க போவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்து இருக்கிறார்.


அமரர் ஊர்தியில் திரையரங்கிற்கு வந்த கருணாஸ்!
[Friday 2024-08-23 18:00]

சிவா கிலாரி தயாரிப்பில், விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை’. இப்படத்தில் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பிரியங்கா இரண்டாவது கல்யாணம்: மாப்பிள்ளை இவரா?
[Friday 2024-08-23 18:00]

நடிகர் சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் வி.ஜேவாக இருந்து தற்சமயம் அதிக பிரபலம் அடைந்தவராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் மா கா பா ஆனந்த் போலவே இவரும் மிக பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதிகபட்சம் பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அடிப்படையிலேயே மிகவும் நகைச்சுவையாக இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றன. அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அதிகபட்சமான நிகழ்ச்சிகளை பிரியங்காதான் தொகுத்து வழங்கி வருகிறார்.

Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா