Untitled Document
April 1, 2025 [GMT]
 
றைட் 4 சிலோன் சைக்கிள் சவாரி யாழ். மானிப்பாய் கிறீன் மருத்துவதனையில் இன்று மதியம் நிறைவுபெற்றது! Top News
[Sunday 2023-03-05 21:00]

இந்த பயணம் கடந்த 1ம் திகதி மட்டக்களப்பு அறுகம் குடாவில் ஆரம்பித்து, அடுத்த நாள் திருகோணமலையை சென்றடைந்து, 3ம் திகதி முல்லைத்தீவினை வந்தடைந்து, இன்றையதினம் யாழ்ப்பாணம் - கிறீன் மருத்துவமனையை வந்தடைந்தது. மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையினை தரமுயர்த்தும் நோக்குடன் றைட் 4 சிலோன் சைக்கிள் சவாரி கடந்த ஒன்பது ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது.


கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி! Top News
[Sunday 2023-03-05 21:00]

யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி 3-3-2023 அன்று பாடசாலை முதல்வர் திரு க.தவசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தனராக பிரபல தொழிலதிபரும்,சமூக சேவகரும் கோண்டாவில் இராஜேஸ்வரி திருமண மண்டப உரிமையாளருமான திரு.செ.திருமாறன் கலந்து சிறப்பித்திருந்தார்.


யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி! Top News
[Sunday 2023-03-05 07:00]

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது. மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. கல்லூரியின் பதில் அதிபர் திருமதி தி.வதனி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலி. மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு பிராந்திய தொற்றுநோய் தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் வி. விஜிதரன் (பழைய மாணவன்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை கணித ஆசிரியர் செல்வி சி.மார்க்கண்டு, பழைய மாணவன் செ.சுகுமாரன் அவர்களும் கலந்துகொண்டனர்.


கச்சதீவை நோக்கி படையெடுக்கும் மக்கள்! Top News
[Sunday 2023-03-05 07:00]

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு அந்தோணியார் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது. (03.03.2023) அன்றைய தினம் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


13 நாளாக (01/03/2023) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது! Top News
[Friday 2023-03-03 06:00]

கடந்த 17/02/2023 பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தின் முன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் நெதர்லாந்தில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் சந்திப்புக்களை மேற்கொண்டு எமது கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளித்திருந்தது. சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ தனி அரசே நிரந்தர தீர்வு என்பதனையும் கோரிக்கைகளாக முன்னிறுத்தியவாறு தொடருகின்ற இப்போராட்டம் பிரித்தானியா, நெதர்லாந்து,பெல்சியம், லக்சாம்பூர்க் , யேர்மனி , பிரான்சு ஆகிய நாடுகளில் பல முக்கிய அரசியற் சந்திப்புக்களை நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.


சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் சங்க மீனவர்களின் வலைகளை நாசம் செய்த இந்திய இழுவைப் படகுகள்! Top News
[Friday 2023-03-03 06:00]

யாழ்ப்பாணம் - சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் சங்கத்தின் மூன்று மீனவர்களின் வலைகளை இந்திய இழுவைப் படகுகள் நாசம் செய்துள்ளனர். மூவருக்கு சொந்தமான 12 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளன.


நயினாதீவு ஆலய திருவிழா! Top News
[Friday 2023-03-03 06:00]

யாழ். நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப்பெருமான் ஆலய மகோற்சவத்தின் பூந்தொட்டித் திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. இவ் ஆலயத்தில் வீரபத்திரப்பெருமானின் கொடியேற்ற மகோற்சவம் 26.02.2023 அன்று மிக பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.


சர்வதேச கடற்புல்தின நிகழ்வு! Top News
[Thursday 2023-03-02 06:00]

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் வலிகாமம் கல்வி வலயத்தில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்கழும், சான்றிதழும் சர்வதேச கடற்புல் தினமாகிய நேற்று வழங்கப்பட்டது.


யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்! Top News
[Wednesday 2023-03-01 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் மாணவர்களின் மொழிவளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டு வருகிறது.


11 நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை அண்மிக்கின்றது! Top News
[Wednesday 2023-03-01 06:00]

27/02/2023 அன்று காலை எர்ச்தைன் நகரசபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த மனிதநேய அறவழிப் போராட்டம் பிரான்சுக் காவல் துறையின் வழிகாட்டலுடன் ஏர்செய்ன், பேன்பெட், கொல்மார் போன்ற மாநகரசபைகளிலும் முக்கிய அரசியற் சந்திப்புக்கள் மேற்கொண்டு தொடர்ந்து முலூசு மாநகரை நோக்கி பயணிக்கிறது.


வடக்கு மாகாண ரீதியாக இடம்பெற்ற உள்ளூர் உற்பத்திகளின் விற்பனை கண்காட்சி! Top News
[Wednesday 2023-03-01 06:00]

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆளுநர் செயலக வழிகாட்டலில் உள்ளூர் உற்பத்திகளின் விற்பனைக் கண்காட்சி நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதன்போது வடக்கின் 5 மாவட்டங்களில் உள்ள சிறு முயற்சியாளர்களின் உற்பத்திகள் விற்பனை மற்றும் கண்காட்சி என்பன இடம்பெற்றிருந்தன.


அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி! Top News
[Wednesday 2023-03-01 06:00]

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் எஸ்.ஜே.அனுரா அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் இளைப்பாறிய அதிபர் சபாரத்தினசிங்கி அவர்கள் பிரதம அதிதியாகவும், கௌரவ விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவர் திரவகயராசா அவர்களும் கலந்துகொண்டனர்.


சிறப்புற இடம்பெற்ற மல்லாவி மத்தியகல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள்! Top News
[Monday 2023-02-27 21:00]

மல்லாவி மத்திய கல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் மிக விமரிசையாக இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மத்தியகல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் பாடசாலை அதிபர் ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்றது.


26வது தடவையாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்! Top News
[Monday 2023-02-27 20:00]

நேற்று 10ம் (26/02/2023) நாளாக சில்றிக்காம் மாநகர சபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்து சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணை வேண்டுமெனவும் அதற்கு சர்வதேச குமுகம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் 10ம் நாளாக தொடரும் அறவழிப் போராட்டம்.


குருந்தூர் மலையில் பதற்றம்! Top News
[Monday 2023-02-27 20:00]

குருந்தூர் மலையில் தற்பொழுது வேலைப்பாடுகள் நடைபெறுவதாக கிடைத்த தகவல்களையடுத்து திடீர் விஜயமொன்றினை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்டனர். முற்றுமுழுதான இராணுவப் பிரசன்னத்துடன் குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் காணப்பட்டதுடன், குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான கட்டில்களும், தீயில் சுடப்பட்டுக்கொண்டிருக்கின்ற குளத்துமீன்களும், ஏற்கனவே வத்தலாக்கப்பட்ட கருவாடுகளும் காணப்பட்டது.


முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவர்களுக்கான புத்தகப்பை பாதணிகள் வழங்கி வைப்பு! Top News
[Monday 2023-02-27 06:00]

முல்லைத்தீவு /உடையார் கட்டு மகா வித்தியாலயத்தில் 157 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வானது 26/02/2023 நேற்றைய தினம் பாடசாலையின் அதிபர் திரு. விநாசித்தம்பி ஸ்ரீதரன் தலைமையின் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.


வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த "பொன் அணிகளின் போர்" ஆரம்பம்! Top News
[Monday 2023-02-27 06:00]

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பக்றிஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் நேற்றைய தினம் யாழ்ப்பாணக் கல்லூரியின் மைதானத்தில் ஆரம்பமாகியது.


9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது! Top News
[Monday 2023-02-27 06:00]

கடுமையான புறச்சூழலில் பெரும் சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்த அறவழிப்போராட்டம் 26 தடவையாக பயணிக்கின்றது. சிறிலங்கா பேரினவாத அரசிற்கு சர்வதேசம் நெருக்கடிகளை உருவாக்கும் வண்ணம் தமிழீழ மக்களின் தொடர் அறவழிப்போராட்டங்களும் உயர்மட்ட அரசியற் சந்திப்புக்களும் அமையப்பெற்று வருகின்றன.


பொன் அணிகளின் போர் - 106 ஆவது துடுப்பாட்ட போட்டி! Top News
[Monday 2023-02-27 06:00]

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்குமிடையிலான 106 ஆவது துடுப்பாட்ட போட்டி நேற்று காலை ஆரம்பானது. தொடர்சியாக இரண்டு நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.


புதிதாக வந்த புத்தர் மெதுவாகக் கிளம்பினார்! Top News
[Monday 2023-02-27 06:00]

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் நின்ற இராணுவத்தினரே அதனை அமைத்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்து செல்லப்பட்டது.


நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அருங்காட்சியகம் திறப்பு! Top News
[Thursday 2023-02-23 20:00]

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அருங்காட்சியகம் இன்று ஆலய அருகாமையில் உள்ள மணி மண்டபவத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தலைவர் ஸ்ரீ நாகராஜ சண்முகம் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.


ஆசிரியர் கலாசாலையில் தாய்மொழி நாள்! Top News
[Thursday 2023-02-23 20:00]

கலாசாலையில் தாய்மொழி நாள் - உலகலாவிய ரீதியாக கொண்டாடப்படும் உலகத்தாய் மொழி நாளினை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை எற்பாட்டில் உலகத் தாய்மொழி நாள் நிகழ்வுகள் இன்று, கோப்பாய் கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது.


சாரணிய ஸ்தாபகர் பேடன் பவல் பிரபு அவர்களின் 166வது பிறந்த தின நிகழ்வு! Top News
[Thursday 2023-02-23 20:00]

சாரணிய ஸ்தாபகர் பேடன் பவல் பிரபு அவர்களின் 166வது பிறந்த தின நிகழ்வுகள் இன்று யாழ் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் அதிபர் ப.கண்டீபன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபரும் சாரண மாவட்ட ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டார்.


யாழில் கட்சியின் பெயரை மாற்றிய சஜித்? - மக்களும் நீண்ட நேரம் காத்திருப்பு! Top News
[Thursday 2023-02-23 20:00]

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - கொம்பனிப்புலம் பகுதியிலும் அவரது பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டுவிழா! Top News
[Tuesday 2023-02-21 06:00]

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியினரால் இன்றைய தினம் சம்பிரதாயபபூர்வமாக வெகு விமர்சையாக கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம் தலைமையில் ஆரம்பித்து நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக காலை 9மணியளவில் வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை கொண்டாடும் முகமாக 200 வது ஆண்டு பொறிக்கப்பட்ட குதப்பியினை தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வெட்டிவைத்தார்.


தேசிய ஒத்துழைப்பு வழங்ககூடிய நாடு தேவை - அநுரகுமார திஸாநாயக்க! Top News
[Sunday 2023-02-19 07:00]

தேசிய ஒத்துழைப்பு வழங்ககூடிய நாடு தேவை. இனவாதம் என்பதே இந்த ஆட்சியாளரின் ஒரே வழி என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் எற்பாட்டில் யாழ் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடான சந்திப்பு இன்று 17.02.2023 று யாழ். டீம்பர் மண்டவத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துதெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,


கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் முன்பள்ளிகளின் மாதாந்த முழுநிலா நாள் நிகழ்வு! Top News
[Sunday 2023-02-19 07:00]

அனைத்துலக மருத்துவநல அமைப்பு, மற்றும் றட்ணம் பவுண்டேசன் அனுசரணையில் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயம், ஆரம்ப முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவின் " முழு நிலா நாள் " றங்கன் முன்பள்ளிக் கொத்தணியில் முன்றலில் அண்மையில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.


திறன் வகுப்பறை திறப்பு நிகழ்வு! Top News
[Sunday 2023-02-19 07:00]

யா / பன்னாலை சேர் கனகசபை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில், நவீன கல்வி கற்பிக்கும் சாதனங்களக விளங்கும் திறன் வகுப்பறை பன்னாலை கிராமத்தை சார்ந்தவரும், பல ஆண்டுகளாக இலண்டன் நாட்டில் வசிப்பவருமாகிய திரு வயிரமுத்து இரத்தினம் லோகநாதன் அவர்களுடையதும், மற்றும் ரட்ணம் அறக்கட்டளை International Medical Health Organisation (IMHO) USA , Ramluxmi Charitable Foundation UK ஆகிய ஸ்தாபனங்களின் அனுசரணையுடன் உத்தியோகபூர்வமாக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.


யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற 75வது சுதந்திர தின நிகழ்வு! Top News
[Thursday 2023-02-16 20:00]

யாழ். இந்திய உதவித் தூதரகத்தின் இந்திய கலாச்சார பேராலயத்தின் எற்பாட்டில், இந்தியாவின் 75ஆவது சுதந்திரதினத்தினை முன்னிட்டு இந்தியாவின் கர்நாடக இசைக்கலைஞர் கலாநிதி அருந்ததி பகதீஸ்வரர் தலைமையிலான கர்நாடக இசைநிகழ்வு நேற்று மாலை யாழ் மத்திய கலாச்சார நிலையத்தின் சரஸ்வதி மண்டவத்தில் இடம்பெற்றது.


சிவன் ஆன்மீக சபையின் எற்பாட்டில் சிவராத்திரி பாதயாத்திரை! Top News
[Monday 2023-02-13 21:00]

யாழ். மாவட்ட சிவன் ஆன்மீக சபையின் எற்பாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று (12.02.2023) திருக்கேதீஸ்வர பாதயாத்திரை, செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்று நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரநாதரை நோக்கி அடியாா்கள் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா