Untitled Document
September 19, 2024 [GMT]
இலங்கையின் ஆரோக்கியமான ராவா உப்புமா எப்படி செய்யலாம்?
[Tuesday 2024-08-20 18:00]

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் பழமையானவை மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானவை. நம் முன்னோரின் ஒரு கொள்கை உண்டு ' உணவே மருந்து, மருந்தே உணவு '. இந்த உணவுகளில் ஆரோக்கியமான மூலிகைகள், நறுமணப் பொருட்கள், முளைகள், காய்கறிகள் கொண்டவை. நாகரிக அடிப்படையில், பெருநிறுவனங்களால் நாம் இந்த உணவுகளை மறந்து விட்டோம். இதில் மிக சில உணவுகளை மட்டும் நாம் பண்டிகை அன்று செய்கிறோம். இந்த உணவுகள் பர்கர் பிட்சா போன்ற துரித உணவுகளை விட மிக சுவையானவை.


சிவப்பு நிற பழத்தில் இவ்வளவு சத்துக்களா?
[Monday 2024-08-19 18:00]

சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள் நமக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அதிகமான சத்துக்களைக் கொண்ட மாதுளையில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளதுடன், புற்றுநோய் மற்றும் இதய நோய் ஆகியவற்றினை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்று கூறப்படுகின்றது.


ஒருபோதும் வெறுவயிற்றில் உண்ண கூடாத உணவுகள்!
[Sunday 2024-08-18 16:00]

கலை உணவென்பது நமது உடலுக்கு தேவைப்படும் ஒரு உணவாகும். நாம் அதிகாலையில் உணவு உண்பது தான் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கியம் தருகிறது. ஆனால் இது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். நாம் இரவு முழுக்க உறக்கத்தில் இருக்கும் போது வயிறு வெறுமையாக இருக்கும். இந்த நேரத்தில் வயிற்றில் வாயுக்கள் நிரம்பி இருக்கும். இதகால் நாம் அதிகாலையில் சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஆனால் சிலர் உண்ணும் உணவுகள் அவர்களுக்கு நோயை உண்டாக்கும்.


ஆந்திரா பாணியில் காரசாரமான சிக்கன் 65 செய்வது எப்படி?
[Saturday 2024-08-17 16:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்ப பட்டியலில் சிக்கன் மிக முக்கிய இடத்தை பெற்றுக்கொள்ளும். குறிப்பாக சிக்கன் 65 என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் அட்டகாசமான சுவையில் ஆந்திரா பாணியில் காரசாரமான சிக்கன் 65 எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


தென்னிந்தியாவில் பிரபலமான காலை உணவு என்னென்ன தெரியுமா?
[Thursday 2024-08-15 16:00]

தென்னிந்தியாவில் காலை உணவாக இருக்கும் பிரபலமான உணவு வகைகளை தற்போது தெரிந்து கொள்வோம். பொதுவாக காலை நேர உணவு என்பது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் புதிதாக தொடங்கியிருக்கும் அன்றைய நாள் முழுவதும் நாம் ஆரோக்கியத்துடன், உற்சாகத்துடனும் இருப்பதற்கு காலை உணவு முக்கியமாக இருக்கின்றது. மேலும் காலையில் சாப்பிடும் போது சத்தான சாப்பாட்டை சாப்பிட வேண்டும். சத்து இல்லாத சாப்பாட்டை வயிறு நிறைய சாப்பிட்டால் உடம்பிற்கு எந்தவொரு சக்தியும் கிடைக்காது.


வேகமாக எடையை குறைக்கும் முருங்கைக்காய் சூப்!
[Wednesday 2024-08-14 18:00]

பொதுவாக காய்கறிகள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. அந்த வரிசையில் ஒன்று தான் முருங்கை. இதன் இலைகள், விதைகள், பூக்கள், பட்டை, வேர்கள் மற்றும் முருங்கைக்காய் என அனைத்தும் சாப்பிடுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. முருங்கையில் மற்றைய காய்கறிகளை விட ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவ்வளவு ஆரோக்கியம் கொண்ட முருங்கையில் சூப் செய்து குடிக்கலாம்.


நரம்பு தளர்ச்சிக்கு மருந்தாகும் பிரண்டை சூப்!
[Tuesday 2024-08-13 18:00]

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பிரண்டை, இந்தியா மற்றும் இலங்கையில் அதிகம் காணப்படுகின்றனது. வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய பிரண்டையின் வேர் மற்றும் தண்டு பெரும்பாலும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, இ, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு , ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது. இது பல்வேறு நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இதை தினமும் ஒரு தடவை சூப் வைத்து குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.


வெறும் பத்தே நிமிடத்தில் நரைமுடியை கறுப்பாக்க வேண்டுமா?
[Monday 2024-08-12 18:00]

முடி நரைப்பது வயதின் காரணமாக உண்டாகும். ஆனால் தற்போது இளம் வயதுடையோருக்கே இப்போது முடி நரைக்கிறது. இதற்கு காரணம் உடலில் வைட்டமின்கள் குறைவாக இருத்தல் அதிலும் முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும். அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். ஆனால் இது உருவாகியவுடன் உணவு உண்பதில் எந்த பயனும் இல்லை.


ஆரோக்கியமான பொலிவான கூந்தல் வேணுமா? - இந்த ஒரு பொருள் போதும்!
[Sunday 2024-08-11 18:00]

பலருக்கும் தலைமுடி என்றால் மிகவும் பிடிக்கும் எல்லோரும் தங்களது தலைமுடி மிகவும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் மனிதன் தன்னை வேலை செய்ய ஊக்கப்படுத்தி அவசரமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறான். இதனால் உண்டாகும் தூசு மாசு காரணமாக தலைமுடி மொத்தமாக சேதமடைகின்றது. இது மட்டுமல்லாமல் பொடுகு அழுக்கு போன்றவற்றால் முடி உதிர்வதும் கூடுதலாக இருக்கிறது. இவ்வாறு சேதமடையும் தலைமுடியினை எவ்வாறு உதிராமல் பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


காலை வெறும் வயிற்றில் என்னென்ன சாப்பிடனும் தெரியுமா?
[Saturday 2024-08-10 18:00]

காலை வெறும் வயிற்றில் என்னென்ன பொருட்களை சாப்பிட எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். பொதுவாக காலையில் நாம் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் பொருட்கள் அன்றைய நாளில் உங்களை அதிக சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவுகின்றது. மேலும் நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடும் சில இயற்கை மருத்துவ பொருட்கள் பல உடல் உபாதைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றது.


மூட்டு வலியால் அவதியா? தினம் ஒரு முடக்கத்தான் தோசை செய்யலாமே!
[Friday 2024-08-09 17:00]

முடக்கத்தான் கீரை, வாத நோய்களுக்கு நல்ல தீர்வா இருக்கும். முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் இருக்கிறது. இதை உணவில் தொடர்ந்து சேர்த்துட்டு வந்தா மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக உதவும். முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமா இருக்கின்றது. நாம் தினமும் காலை உணவு செய்யும் போது இந்த கீரையில் செய்தால் உடல் ஆரோக்கியத்தில் இது மிகவும் நன்மை தரும்.


சளி, இருமலை அடியோட விரட்டும் தூதுவளை சூப்!
[Thursday 2024-08-08 18:00]

மருத்துவ குணமிக்க மூலிகை பொருள்கள் அனைத்து வயதினருக்கும் எப்போதும் பக்கபலமாக இருக்கும். இதை மருந்தாக நோய் வந்த பிறகு எடுத்துகொள்ளாமல் அவ்வபோது உணவில் சேர்த்து வருவதுதான் நோய் வருவதற்கு முன்னர் காப்பது என அர்த்தம். நம்மில் அனைவருக்கும் சளி இருமல் போன்ற தொற்றுக்கள் ஏற்படுவது வழக்கம். இந்த தொற்று வராமல் தடுக்க சிறந்த ஒரு இலை தூதுவளை இலை தான் இதை தினமும் சூப் வைத்து குடிப்பதால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும்.


குழந்தைகள் தினமும் பால் குடித்தால் இந்த பிரச்சனைகள் வருமா?
[Wednesday 2024-08-07 18:00]

குழந்தை தாயிடம் ஒன்று முதல் இரண்டு வயது வரை தாயிடமோ அல்லது செயற்கை பாலோ அருத்துவது முக்கியம். பால் ஒரு நிறையுணவாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி12, கால்சியம் மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதில் இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் யோகா!
[Tuesday 2024-08-06 18:00]

"யோகா என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்." ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். உடலின் உயர் ரத்த அழுத்தத்தில் யோகாசனம் எந்த அளவில் பங்கு வகிக்கிறது என்பதே இந்த பதிவில் பார்க்க போகிறோம்.


ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முடக்கத்தான் சூப்!
[Monday 2024-08-05 18:00]

முடக்கத்தான் கீரை தொன்று தொட்டு வீட்டு வைத்தியம் மற்றும் ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய மூலிகையாக காணப்படுகின்றது. இது மூட்டுவலி, மூட்டுவீக்கம் மற்றும் ருமட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுப்பதில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. கால்களில் ஏற்படும் இறுக்கத்தன்மை மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு இந்தியர்களால் முடக்கத்தான் கீரை பராம்பரியமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்றுவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?
[Friday 2024-08-02 16:00]

இன்று பலரும் இதய நோய் பிரச்சனையில் அவதிப்படும் நிலையில், இத்தகைய நோயாளிகளுக்கு இதயம் திடீரென செயல்படாமல் நின்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றனர். உணவில் சரியாக கவனம் எடுத்துக் கொள்வது இல்லை. காலநிலை மாற்றம், உணவு மாற்றம் இவை அனைத்தும் மனிதர்களின் உடல்நலப்பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றது.


நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய் பொரியல்!
[Thursday 2024-08-01 18:00]

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்து. மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க வெண்டைக்காய் பெரிதும் துணைப்புரிகின்றது. இருப்பினும் அதன் வளவளப்பு தன்மை காரணமாக பெரும்பாலானவர்கள் அதனை விரும்புவது கிடையாது. வளவளப்பு தன்மை கொஞ்சமும் இல்லாமல் அட்டகாசமான சுவையில் வெண்டைக்காய் பொரியல் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


நாள்பட்ட சளியை வேரறுக்கும் மிளகு குழம்பு!
[Wednesday 2024-07-31 18:00]

பொதுவாகவே மிளகில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. செரிமான கோளாறு உள்ளவர்கள் மிளகு சாப்பிட்டால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கொடுக்கும். மேலும் மிளகு ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி ஏற்படும் நோய்களை தடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.ஆஸ்துமா, மூட்டு வலி மற்றும் நாள்பட்ட சளி இருமலை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகை கொண்டு எவ்வாறு குழம்பு அட்டகாசமான சுவையில் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


இரவில் பாதங்களில் எண்ணெய் மசாஜ் செய்தால் உடலில் நடக்கும் மாற்றம்!
[Tuesday 2024-07-30 17:00]

தேங்காய் எண்ணெய்யில் பல சிறந்த நன்மைகள் இருக்கின்றன.இதிலிருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை தோல் தொற்றுக்கள், அரிப்பு மற்றும் வலியை அகற்ற உதவுகிறது. இந்த பண்புகள் இந்த பண்புகள் சருமத்தில் உள்ள இறந்த மற்றும் அழுக்கு செல்களை நீக்கி பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. குதிகால் வெடிப்பு, வறண்ட சருமம் உள்ளிட்ட பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெய் உதவுகிறது.


நாவூறும் சுவையில் செட்டிநாடு காளான் செய்வது எப்படி?
[Sunday 2024-07-28 18:00]

செட்டிநாடு ஸ்டைலில் காளான் ரெசிபி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சைவப்பிரியர்களின் பட்டியலில் அதிகமாக தேடப்படும் உணவு காளான் ஆகும். காளானில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளது. காளானை ஒரே மாதிரியாக சமைத்து சாப்பிடும் நபர்கள் செட்டிநாடு ஸ்டைலில் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.


இறந்தவர்கள் கனவில் வந்தால் இவ்வளவு ஆபத்துக்களா?
[Saturday 2024-07-27 17:00]

கனவு என்பது பொதுவாக எல்லாருக்கும் வரக்கூடிய ஒன்று. கனவுகள் வராதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஏன் இந்த கனவு வருகின்றது என்பதில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். சில வேளைகளில் கனவுக்குரிய விளக்கம் தெரியாமல் குழம்பி போய் இருப்பார்கள். இப்படி வரும் கனவுகள் எமக்கு ஏதோவொரு விடயத்தை உணர்த்துவதற்காகவும் அல்லது எம்மிடம் யாராவது முக்கியமான விஷயம் ஒன்றை கூற முனைவதற்காகவும் வருகின்றன என்பது ஐதீகம்.


படுக்கைக்கு போவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?
[Friday 2024-07-26 18:00]

பொதுவாக உடல் இயக்கத்திற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் குடிக்கும் பழக்கம் நல்லது தான். ஆனால் அதை எந்த நேரத்தில குடிக்க வேண்டும் என்ற வரையறை உள்ளது. இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என மருத்துவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் அப்படி என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.


வீடே மணக்கும் கிராமத்து கருவாட்டு குழம்பு!
[Thursday 2024-07-25 18:00]

கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு எவ்வாறு செய்வது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முக்கியமாக இருக்கும் உணவு கருவாடு ஆகும். அதிலும் கிராம புறங்களில் வைக்கப்படும் கருவாடு குழம்பை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. நல்லெண்ணெய் ஊற்றி சமைக்கப்படும் கருவாடு குழம்பிற்கு ருசி தனி தான். தற்போது கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு எவ்வாறு வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.


யாரெல்லாம் நாவல்பழம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
[Wednesday 2024-07-24 18:00]

பொதுவாக அநேகமானவர்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் நாவல்பழம். இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நாவல்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நாவல்பழத்தில் பழம் மட்டுமல்ல அதன் இலைகள், பட்டைகள், விதை போன்றவையும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.


இஞ்சி டீ யாருக்கு விஷமாக மாறும்? பலரும் அறியாத உண்மை!
[Monday 2024-07-22 18:00]

மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட இஞ்சி டீ-யை யாரெல்லாம் பருகினால் விஷமாக மாறும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சமையலிலும், மருத்துவ துறையிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியை பலரும் டீ போட்டு அருந்தி வருகின்றனர். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் காணப்படுவதுடன், ஜீரணம், சளி, இருமல் இவற்றிற்கும் நிவாரணம் அளிக்க உதவுகின்றது.


தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு!
[Sunday 2024-07-21 17:00]

பொதுவாக பெண்கள் தற்போது அதிகமான கூந்தல் உதிர்வு, பொடுகு மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளால் அவஸ்தைபடுகிறார்கள். இதனை உணவுகள் பயன்பாடு , சிகிச்சை முறைகள் மற்றும் மூலிகை எண்ணெய்கள் பாவணை மூலம் கட்டுபடுத்த முடியும். அந்தவகையில் தலைமுடி பிரச்சினைகளை எளிய முறையில் குறைக்ககூடிய ஒரு மூலிகை எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.


தர்பூசணி தோலில் இப்படியொரு பலனா?
[Saturday 2024-07-20 19:00]

பொதுவாக நாம் அனைவருமே பழங்கள், காய்கறிகளை தோல் நீக்கி தான் சாப்பிடுவோம். மீதமுள்ள அந்த தோலினை தூர போட்டு விடுவோம். அல்லது வெட்டியவுடனே குப்பையில் போட்டு விடுவோம். மாறாக உண்மையாக சொல்லப்போனால் நாம் தூர போடும் அந்த தோலில் அதிகமான நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில், தர்ப்பூசணி பழம் சாப்பிட்டால் அதன் தோலை தூக்கி போட்டு விடுவோம். நாம் தூக்கி போடும் தர்ப்பூசணி தோலை வைத்து முகத்திற்கு பொலிவு கொடுக்கலாம். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.


எலும்புகளை உறுதியாக்கும் பிரண்டை துவையல்!
[Friday 2024-07-19 18:00]

பொதுவாக பிரண்டை இதயத்திற்கும், எலும்பு தொடர்பான நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கிறது. அத்துடன் பிரண்டையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பற்களுக்கும் தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது. இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் செரிமானம் சீராக நடக்கும். அந்த வகையில் உடல் கொழுப்பைக் கரைத்து சிலிம்மாக மாற்றும் பிரண்டையில் எப்படி துவையல் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா