|
|
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரமான உணவுகளை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
[Sunday 2024-06-16 08:00]
|
இன்று பெரும்பாலான மக்கள் காரமான உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ள நிலையில், இதனை யாரெல்லாம் தடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் காரம் அதிகமாகவே இருக்கும். மேலும் இந்திய மசாலாப் பொருட்களுக்கு எப்பொழுதும் தனி இடமும் உண்டு. குறிப்பாக தமிழகம், ஆந்திரா போன்ற பகுதிகளில் காரம் அதிகமாக உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. காரமான உணவுகள் அதிகம் சாப்பிட்டு வந்தால், பல உடல் நலப்பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
|
|
|
நுரையீரலை இயற்கையாக சுத்தப்படுத்தும் மூலிகைகள்!
[Saturday 2024-06-15 17:00]
|
பொதுவாக தற்போது இருக்கும் நவீன மயமாக்கலினால் காற்று மாசுபடுதல் மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் பூமியில் வாழும் விலங்குகளின் சுவாசம் பாதிக்கப்படுகின்றது. தொடர்ந்து மாசுப்பட்ட காற்றை மனிதர்கள் சுவாசிப்பதன் மூலம் அதிகமான நுரையீரல் கோளாறுகள் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
|
|
|
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கீரை பக்கோடா!
[Friday 2024-06-14 18:00]
|
பொதுவாகவே கீரை என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் சுவை சற்று கசப்புத்தன்மை கலந்ததாக இருப்பது தான். நாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தசோகைக்கு சிறந்த தெரிவாக இருக்கும். மூல நோய் உள்ளவர்கள் கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நோய் குணமாகும். மேலும் நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
|
|
|
கொரியன் பெண்களைப் போன்று கண்ணாடி முகம் வேண்டுமா?
[Thursday 2024-06-13 18:00]
|
கொரியன் நாட்டு பெண்களைப் போன்று கண்ணாடி முகத்தினை பெறுவதற்கு அரிசி மாவு எவ்வாறு உதவுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம். அரிசி கழுவிய நீர் சருமத்தை பாதுகாக்கும் என்று கேள்விப்பட்ட நமக்கு, தற்போது அரிசி மாவும் சருமத்தில் அற்புதங்களை செய்யும் என்பது தெரியவந்துள்ளது.
|
|
|
நாள்பட்ட சளிக்கு உடனடி நிவாரணம் தரும் கொய்யா இலை!
[Wednesday 2024-06-12 18:00]
|
பண்டைய காலம் தொட்டு இருமல் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாக கொய்யா இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொய்யா பழத்தை விட கொய்யா இலையில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் சளி, இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என ஆயுள் வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
|
|
|
ஓமத்தை வடிக்கட்டி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
[Tuesday 2024-06-11 18:00]
|
பொதுவாக சிலருக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் குடிப்பது வழக்கம். இந்த பழக்கத்தை மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். ஏனெனின் இரவு முழுவதும் வயிற்றிலுள்ள அனைத்து உணவுகளும் சமிபாடடைந்து வெறும் வயிற்றில் இருக்கும் பொழுது தண்ணீர் குடித்தால் வயிற்றிலுள்ள அனைத்து கழிவுகளும் மலம் வழியாக வெளியேறும். இது மலச்சிக்கல் பிரச்சினையும் தடுக்கின்றது.
|
|
|
உதட்டில் பீட்ரூட் துண்டு தேய்த்தால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2024-06-10 18:00]
|
சமைத்து சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டை நமது சரும அழகிற்கும் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும். சிலருக்கு உதடுகள் வறண்டுபோய் காணப்படும். கருமை நிறத்தில் காணப்படும். சில உதடுகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக காணப்படும். இந்த குறைகளை நிவர்த்தி செய்ய தான் வீட்டில் இலகுவாக கிடைக்கக்கூடிய பீட்ரூட் பயன்படுத்தலாம்.
|
|
|
சருமத்தை பளிச்சிடவைக்கும் தக்காளி!
[Sunday 2024-06-09 16:00]
|
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் முகத்தை எப்போதும் பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகமாக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கின்றனர். இருப்பினும் சூழல் மாசு மற்றும் அதிக வெயில் போன்ற காரணங்களினால் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும் நிலை ஏற்படுகின்றது.
|
|
|
அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா?
[Saturday 2024-06-08 18:00]
|
காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன.இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தெரிவாக இருக்கும். காளான்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுவதால் இது செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் மலச்சிக்கலையும் தடுக்க உதவுகின்றது. மேலும் புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.
|
|
|
வயதிற்கு மூத்த பெண்களை ஆண்கள் விரும்ப காரணம் என்ன?
[Friday 2024-06-07 18:00]
|
சில ஆண்கள் தன்னை விட வயதில் மூத்த பெண்கள் மீது காதல் கொள்வதற்கான காரணத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். குறிப்பிட்ட சில ஆண்கள் சில பெண்கள் மீது ஈர்ப்பாக இருப்பார்கள். இளம் ஆண்கள் தங்களுக்கு சமமான வயதுடைய பெண்கள் அல்லது தங்களை விட வயது குறைவான பெண்களிடம் எதிர்பார்க்கும் சில விஷயங்களை, மூத்த பெண்களிடம் காண முடிகிறது.
|
|
|
பெருங்குடல் அழற்சிக்கு உடனடி நிவாரணம் தரும் தேங்காய் பால்!
[Thursday 2024-06-06 18:00]
|
பொதுவாக விலங்குகளிலிருந்து பெரும் பாலை விட தாவரங்களிலிருந்து பெறும் பால் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாக இருக்கும். அந்த வகையில் தேங்காயை உடைத்து அதனை துருவி பிழிந்தால் தேங்காய் பால் வரும். இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. தேங்காய்ப் பாலில் வைட்டமின்கள் சி, இ, கே, பி1, பி2, பி3, , பி5, பி6 மற்றும் கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகளும் உள்ளன.
|
|
|
வயது முதிர்ந்த காலத்தில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இதை சாப்பிடுங்க!
[Wednesday 2024-06-05 18:00]
|
இறைச்சி வகைகளில் இல்லாத சத்துக்கள் கூட விலங்குகளின் ஈரலில் காணப்படுகின்றது. இதை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மட்டன் ஈரலில் புரதம்,கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், செலினியம் , வைட்டமின் A, B, B6, B9m C, D, D3, கரோட்டினாய்டுகள் இப்படி ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
|
|
|
உடலுக்கு ஆரோக்கியம் தரும் தயிர் சேமியா!
[Tuesday 2024-06-04 18:00]
|
பொதுவாக சேமியாவை வைத்து பாயாசம் மற்றும் இனிப்பு பண்டங்கள் பல வகை செய்வது வழக்கம். இதே போல தயிரை வைத்தும் பல ரெசிபிகளை செய்யலாம். ஆனால் இன்றைய பதிவில் தயிர் சேமியா எப்படி செய்யலாம் என்பதை பார்கலாம். தயிர் சேமியா மூன்று முறையில் மக்கள் செய்து சுவைக்கிறார்கள். அதில் ஒரு ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.
|
|
|
தொடர்ச்சியாக பயன்படுத்தினால் ஏசி வெடிக்குமா?
[Monday 2024-06-03 18:00]
|
பொதுவாகவே, கோடை காலத்தில் ஏசியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக ஏசியை பயன்படுத்தும் பட்சத்தில் ஒரு சில இடங்களில் அது வெடித்து பெரும் தீவிபத்து ஏற்படுகிறது. இவ்வாறு ஏசி வெடிப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், இதனை எவ்வாறு தவிர்க்கலாம் எனவும் இந்த பதிவில் பார்க்கலாம்.
|
|
|
மனிதர்களை ஏன் நாய்கள் நாவால் வருடுகிறது தெரியுமா?
[Sunday 2024-06-02 19:00]
|
பொதுவாக நம் வாழ் நாளில் நிச்சயம் ஒரு நாயை சரி கொஞ்சி மகிழ்ந்திருப்போம். அதே போல் நாயும் நம்மை நாவால் கொஞ்சி விளையாடியிருக்கும். இதன்படி, விளையாடும் பொழுது நாய்கள் மனிதர்களை கொஞ்சும், முத்தம் கொடுக்கும், நாவால் எம்மை நக்கும். இப்படி செய்வதற்கு ஒரு அறிவியல் காரணம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பில் பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் காணலாம்.
|
|
|
மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும் பீட்ரூட் ரசம்!
[Saturday 2024-06-01 16:00]
|
பொதுவாக பீட்ரூட்டை கோடைக்காலங்களில் சாப்பிடுவதை விட குளிர்காலங்களில் சாப்பிடுவது சிறந்தது. சிலருக்கு தவறான வாழ்க்கை முறை காரணமாக அல்சர் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் 3 நாட்கள் பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் குணமாகும்.
|
|
|
நாளொன்றுக்கு எத்தனை முறை காபி குடிக்கலாம்?
[Friday 2024-05-31 18:00]
|
பொதுவாக காலை எழுந்தவுடன் பெரும்பாலானவர்கள் டீ அல்லது காபி குடிப்பார்கள். இப்படி காபி குடித்தால் தான் அவர்களுக்கு அன்றைய நாள் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக நம்புகிறார்கள். இவ்வாறு நாம் தினமும் எடுத்து கொள்ளும் காபிக்கு இதய ஆரோக்கியத்தை அதிகரித்து மனச்சோர்வை குறைக்கும் ஆற்றல் உள்ளது. உடலுக்கு தேவையான நன்மையை கொடுத்தாலும் அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது ஆரோக்கிய தீங்கை விளைவிக்கும். நீங்கள் காபி குடிப்பதற்காக பயன்படுத்தும் கப்பின் அளவில் தான் காபியின் எண்ணிக்கை இருக்கின்றது.
|
|
|
குழந்தை பெற்றுக்கொள்ள சரியான வயது எது?
[Thursday 2024-05-30 18:00]
|
பொதுவாகவே திருமணத்துக்கு பின்னர் நீங்கள் குழந்தையைப் பெறத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இது சரியான நேரமா, அல்லது நீங்கள் காத்திருக்க வேண்டுமா அல்லது தாமதமாகிவிட்டதா என்று நீங்கள் குழப்பத்தில் இருக்கலாம். கர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் உண்மையில் நபருக்கு நபர் வேறுபடுகிறது. குழந்தையை வரவேற்க நீங்கள் உடல்ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும், நிதிரீதியாகவும் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
|
|
|
வீட்டில் மண் பானைகளில் தண்ணீர் வைக்க என்ன காரணம்?
[Wednesday 2024-05-29 18:00]
|
பொதுவாக கோடைக்காலம் ஆரம்பித்து விட்டால் வீடுகளில் மண் பானைகளில் தண்ணீர் வைக்க ஆரம்பி விடுகிறார்கள். வெயிலில் நடந்து களைத்து போய் வீட்டிற்குள் வருபவர்கள் அதில் தான் முதலில் தண்ணீர் குடிப்பார்கள். இப்படி வைக்கப்படும் தண்ணீரை குடிப்பதால் சளி, இருமல் பேச்சிற்கே இடம் இருக்காது. மாறாக குளிரூட்டிகளில் வைக்கப்படும் தண்ணீர் போத்தல்களால் இந்த நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
|
|
|
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தக்காளி பூரி!
[Tuesday 2024-05-28 18:00]
|
பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு தான் பூரி. தினமும் காலையில் இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா..? சற்று வித்தியாசமான, அதே சமயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான காலை உணவை தயாரிக்கலாம். அனைவருமே வித விதமான பூரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து அல்டிமேட் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பூரி செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
|
|
|
மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் உணவுகள்!
[Monday 2024-05-27 19:00]
|
பொதுவாகவே உடலின் அனைத்து செயல்களும் மூளை வழங்கும் சமிஞ்சைகளுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது. மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உடலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மூளையின் செயற்பாடுகள் சீராக இருக்கும் போது உடலின் இயக்கமும் சீராக இருக்கும். நாம் அன்றாடம் அறியாமையால் செய்கின்ற பல செயற்பாடுகள் மூளையின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு குறிப்பிட்ட சில உணவுகள் மூளையின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதுடன் அறிவாற்றல் குறைபாடு, நினைவாற்றல் இழப்பு மற்றும் நரம்பியல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடியது. அந்த வகையில் மூளையின் ஆரோக்கியத்தில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
|
|
|
இரவில் சாப்பிடக்கூடாத காய்கறிகள் எவை தெரியுமா?
[Sunday 2024-05-26 18:00]
|
இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத காய்கறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உணவுகளில் ஒன்று தான் காய்கறிகள். உடம்பை ஆரோக்கியமாகவும், நோய்கள் வராமலும் தடுக்கின்றது. ஆனால் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத காய்கறிகளும் உள்ளது. இவை ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குமாம்.
|
|
|
வயிற்றுப்புண்ணால் சிரமப்படுறிங்களா? மருத்துவரின் புதிய விளக்கம்!
[Saturday 2024-05-25 18:00]
|
இன்றைய மக்களின் உணவுப்பழக்கவழக்கத்தால் பல நோய்களுக்கு உள்ளாகும் நிலையில் அனேக மக்கள் பாதிக்கப்பட கூடிய வயிற்றுப்புண்ணிற்கான மருத்துவ விளக்கத்தை பார்கலாம். நாம் அடிக்கடி குடிக்கும் காபி மற்றும் அதிக காரம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும் போது இது குடல் புண்ணிற்கு வழி வகுக்கிறது.
|
|
|
நீரிழிவு நோயாளிகளின் சிறந்த காலை உணவு என்னனு தெரியுமா?
[Friday 2024-05-24 18:00]
|
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவுகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அனைத்து வயதினருக்கும் இந்நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குறித்த நோய் மரபணு ரீதியாக இருந்தாலும், மோசமான வாழ்க்கை முறையின் காரணமாகவே அதிகரித்து வருகின்றது.
|
|
|
ஆண்கள் தப்பி தவறியும் இந்த மீனை சாப்பிடாதீங்க: ஆபத்து நிச்சயம்!
[Thursday 2024-05-23 18:00]
|
தற்போதைய சூழ்நிலையில் சைவ பிரியர்களை விட அசைவ பிரியர்களே அதிகமாக வாழ்கிறார்கள். இவர்கள் ஆடு, மாடு, கோழி, மீன், முட்டை உள்ளிட்டவைகளை வித விதமாக சமைத்து சாப்பிடுகிறார். மாறாக சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ளவர்கள் கரப்பான் பூச்சி, பூரான் இப்படியான பூச்சிகளையும் சாப்பிடுகிறார்கள். இந்த உணவுகளில் மீன் மாத்திரமே இயற்கையாக கடலிலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடியது. மற்றவைகள் அனைத்தும் பண்ணைகள், வீடுகள் என மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன.
|
|
|
முகத்தை சூரிய ஒளியில் இருந்து காப்பாற்ற வேண்டுமா?
[Wednesday 2024-05-22 18:00]
|
ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளிவிதைகளை சருமத்தின் ஆரோக்கியத்திற்காக எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பெண்கள் எப்போதும் தங்களின் சருமத்தை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு இயற்கை தீர்வுகளே போதுமானது.
|
|
|
கிருமி நாசினியாக செயற்படும் கோகம் பழம் பற்றி தெரியுமா?
[Tuesday 2024-05-21 18:00]
|
கோகம் பழத்தில் பக்டீரியாவை எதிர்த்து போராடும் பண்பு அதிகமாகவே உள்ளது. கோகம் பழத்திலிருக்கும் இந்த பண்பு கிருமி நாசினியாகவும் செயற்படுவதாக கூறப்படுகிறது. சாப்பிடும் பொழுது ஒரு வகையான குளிர்ச்சி மற்றும் புளிப்பு கலந்த சுவையை உணர்த்தும். பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன.
|
|
|
ஆரோக்கியமான முறையில் தயிர் சாதம் செய்வது எப்படி?
[Monday 2024-05-20 18:00]
|
என்னதான் நாம் வெரைடி வெரைடியாக உணவுகளை வாங்கி உண்டாலும் எமது பாரம்பரிய உணவை போல ஒரு சுவை வேறெதுவும் இல்லை. தயிர் சாதத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் இந்த ரெசிபி பிடிக்கும். நாம் எப்போதும் போல் செய்யும் சாதாரண தயிர் சாதத்தை விட இன்று நாம் கொடுக்கப்போகும் தயிர்சாதம் ரெசிபி மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
|
|
|
|