Untitled Document
September 19, 2024 [GMT]
ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!
[Tuesday 2015-12-29 17:00]

ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தின், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகருக்கு இயக்கப்படும், ஹவுரா-அம்ரிட்சர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த 14 வயது சிறுமி, தான் புக் செய்திருந்த பெட்டியில் ஏறுவதற்கு பதிலாக தெரியாமல், ராணுவத்தினருக்காக புக் செய்யப்பட்ட கோச்சில் ஏறியுள்ளார். இதைப்பார்த்த ராணுவத்தினர் சிலர், அந்த சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். சிறுமி பாத்ரூம் சென்றபோது, அங்கு வைத்து இருவர் பலாத்காரம் செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம், மதுபூர் ரயில் நிலையத்தில் வைத்து, மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை, சமூக சேவகர்கள் சிலர் மீட்டு காவல் நிலையம் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சையளித்த பிறகு,


குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்தால் 10 வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் மக்கள் வாழ முடியாது: ஆய்வில் தகவல்
[Tuesday 2015-12-29 17:00]

குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே அதிகம் குடியேறி வருகிறார்கள். காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே. எனவே, புதிய குடியிருப்புகள் போர்வெல் நீரையே நம்பியுள்ளன.


2016ஆம் ஆண்டு யாருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: ஜெ.க்கு விஜயகாந்த் பதிலடி
[Tuesday 2015-12-29 16:00]

2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யாருக்கு பாடம் புகட்டுவது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் மழை நிவாரணம் வழங்கக் கோரி நேற்று தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேருந்து நிழற்குடையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க விஜயகாந்த் தமது கட்சியினருக்கு உத்தரவிட்டார். இதனால் அந்த படத்தை தேமுதிகவினர் கிழித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர், தேமுதிகவினர் பேனர், கொடிகளை எரித்தனர். இந்தப் போராட்டம் தமிழகம், புதுவையிலும் வெடித்தது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், விஜயகாந்த் கொடும்பாவியை எரிக்க வேண்டாம்; 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த்துக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என கூறியிருந்தார்.


சி.பி.ஐக்கு நான் பயப்படப்போவதில்லை,எந்த விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன்: அரவிந்த் கேஜ்ரிவால்
[Tuesday 2015-12-29 09:00]

சி.பி.ஐக்கு நான் பயப்படப்போவதில்லை. எந்த விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று தில்லி முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது மேலும் கூறியதாவது: -வியாபம் ஊழல் விவகாரத்தை திசை திருப்ப என் அலுவலகத்தை சோதனை நடத்தியுள்ளனர். நான் எந்த தவறும் செய்ய வில்லை. நாங்கள் போராட விரும்ப வில்லை. தில்லியில் மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறோம். நீங்கள் எனக்கு பணம், நிலம் எதுவும் தரவேண்டும் என்று நான் பிரதமரை சந்தித்து கூறினேன். நானும் துணை முதல்வர் மணீஷும் பிரதமரை நேரில் சந்தித்து நாங்கள் உங்கள் குழந்தைகள் போல் எங்களுக்கு வழிகாட்டுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் அமைதியாக இருந்தார் என தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேனரை அகற்றிய விவகாரம்: விஜயகாந்த் வீடு,அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
[Tuesday 2015-12-29 09:00]

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேனரை தேமுதிகவினர் அகற்றிய விவகாரம் தமிழகம் முழுவதும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து ன்னையில் உள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியா ஈரானுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி
[Tuesday 2015-12-29 09:00]

இந்தியா ஈரானுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் தில்லியில் நடக்கும் இருதரப்பு கூட்டு ஆணைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஈரான் நாட்டின் பொருளாதார விவகார மற்றும் நிதியமைச்சர் டாக்டர் அலி டாயிபின்யா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், வர்த்தகம், முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, இணைப்பு, துறைமுக அபிவிருத்தி உட்பட, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.


மும்பையில் இன்று அதிகாலை இரட்டை அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து!
[Tuesday 2015-12-29 08:00]

மும்பை அருகே உள்ள பிவண்டியில் இன்று அதிகாலை இரட்டை அடுக்கு மாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய 12 பேரில் 10 பேர் காப்பாற்றப்பட்டனர். மேலும் 2 பேர் இடர்பாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர். அவர்களை காபாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.


வாழ்க்கையில் நான் பெற்ற வெற்றிகள் தோல்விகளில் கற்றுக்கொண்டதன் மூலம் உருவானவை: மைக்ரோசாப்ட்டின் தலைமை செயல் அதிகாரி
[Monday 2015-12-28 22:00]

ஆந்திரவை பூர்வீகமாக கொண்டவரும் மைக்ரோசாப்ட்டின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியுருமான சத்ய நாதெல்லா இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவு சார்ந்த பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சத்ய நாதெல்லாவும் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவும் இன்று கையெழுத்திட்டனர். பின்னர் டி-ஹப் என்று அழைக்கப்படும் மென்பொருள் தொழில் பூங்கா கூட்டத்தில் பேசிய சத்ய நாதெல்லா பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


அன்புமணிக்கு போட்டி சகாயமா?
[Monday 2015-12-28 21:00]

தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சியை சகாயம் ஐஏஎஸ் மட்டுமே கொடுக்க முடியும். அவர் கண்டிப்பாக அரசியலில் இறங்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் சென்னையில் மிகப் பெரிய பேரணி ஒன்று நடந்தது. மக்கள் நலக் கூட்டணி, நேர்மையான ஆட்சியை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால், சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், சகாயம் குறித்த சமீபத்திய பரபரப்பிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியில்,


டெல்லி அருகே குர்கானில் கல்லூரி மாணவியை காருக்குள் இழுத்துப்போட்டு கடத்திய கும்பல்: - பட்டப்பகலில் துணிகரம்
[Monday 2015-12-28 21:00]

டெல்லி அருகே குர்கானில் இன்று பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டார். டிஎஸ்டி கல்லூரியில் படிக்கும் அந்த மாணவி, இன்று காலை கல்லூரியின் வாசல் அருகே வந்துகொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல், திடீரென அந்த பெண்ணை காருக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டு கடத்திச் சென்றது. அந்தப் பெண் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகினது. இதை வைத்து, மாணவியை கடத்தச் சென்ற வெள்ளை நிற கார் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, காரில் 4 பேர் வந்ததாகவும், கார் நம்பர் பிளேட்டை சேறு பூசி மறைத்திருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.


உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான்: - ராஜ்நாத் சிங்!
[Monday 2015-12-28 21:00]

உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். தேசிய புலனாய்வு அமைப்பின் லக்னோ கிளைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது: பயங்கரவாதம், தீவிராவதம் மற்றும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளோம். இது தொடருமானால் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை பெற முடியும். தேசிய புலனாய்வு அமைப்பு சிக்கல்கள் நிறைந்த குற்ற வழக்குகள், பயங்கராவதம், தீவிரவாதம் மற்றும் மவோயிஸ்ட் குறித்த வழக்குகளில் உலக அளவில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தின் பங்கு மிகுந்த சாவல்கள் நிறைந்ததாக உள்ளது.


தமிழக அரசியலில் மக்கள் நலக் கூட்டியக்கம் மிகப் பெரிய புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்: - வைகோ
[Monday 2015-12-28 21:00]

அரியலூரில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல் வரவேற்று பேசினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:

NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா