Untitled Document
September 19, 2024 [GMT]
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பாகிய நாம் அனைவருக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
[Friday 2016-01-01 20:00]

புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் கடந்த ஆண்டு தமிழர்களுக்கு நல்ல ஆண்டாக தோன்றினாலும் அவ் ஆண்டு உண்மையில் துயர் நிறைந்த ஆண்டே ஆகும். எமது இனம் அழிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு மூலம் நீதி கிடைக்கும் என்று நினைத்திருந்தபோது, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது ஏதோ தமிழர்களுக்கு கிடைத்த மாற்றமெனெ கருதி வெளிநாடுகள் நடந்து கொண்டதுவும், அதனை நம்ப வைத்து ஏமாற்றிய சில தமிழ்த் தலைமைகளின் தவறான முடிவும் இறுதில் நீதியை புதைத்த ஆண்டாக அமைந்துவிட்டது. இலங்கையில் இறுதியாக நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரின் பலம் உடைந்துபோய்விடக்கூடாது என நினைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு சரிசமமாக வாக்கினை போடாமல் தனி ஒரு கட்சிக்கு அதிகமாக வாக்கினை போட்டமையும், அதனை தமக்கு சாதகமாக பாவித்த ஒருசில தமிழ்த் தலைமைகள் மக்களை தவறாக வழி நடத்துவதற்கும், சர்வாதிகாரப்போக்கில் போவதற்கும் காரணமாக அமைந்ததோடு அவர்கள் இன்று அரசின் கைப்பொமையாக மாறி எமது இலட்சியத்தை, தியாகங்களை விலைபேசும் சக்தியாக மாறியதும் கடந்த ஆண்டின் துயரமான நிகழ்வாகிவிட்டது.


மைத்திரியின் அமைச்சரை ஆசீர்வதித்த மகிந்த! Top News
[Friday 2016-01-01 20:00]

அமைச்சர் விஜித விஜேமுனி சொய்சாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலையில் கைவைத்து புது வருட ஆசீர்வாதம் வழங்கியுள்ளார். இன்று அதிகாலை புதுவருடம் பிறக்கும் போது குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் குடும்பம், அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, விஜித் விஜேமுனி சொய்சா உட்பட பலர் கதிர்காம தேவாலயத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.


2016 சிறுவர்களையும், பெண்களையும் பாதுகாக்கும் ஆண்டாக மலர வேண்டும்! Top News -யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி
[Friday 2016-01-01 20:00]

பிறந்துள்ள 2016ஆம் ஆண்டு மாணவ, மாணவிகளை பாதுகாக்கின்ற ஆண்டாகவும், சிறுவர்களையும், பெண்களையும் பாதுகாக்கும் ஆண்டாக மலர வேண்டும். அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க நீதித்துறை எப்போதும் துணை நிற்கும் என யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.


"வட்டுக்கோட்டை தீர்மானம்" வலுவூட்டல் ஆண்டாக 2016 பிரகடனம்! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
[Friday 2016-01-01 20:00]

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் "வட்டுக்கோட்டை தீர்மானம்" நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக வரும் 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. "இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதபலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்தப்படுகின்றது.


மன்னார் ஆயர் தெரிவுக்கு நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை!
[Friday 2016-01-01 20:00]

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரை தெரிவு செய்வதற்காக நால்வரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்ல தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் திடீர் சுகவீனமுற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலதிக சிகிச்சைக்காக சிங்கபூரிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மூன்று மாதங்களாக சிங்கபூரில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை அண்மையில் மீண்டும் மன்னாரிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.


எந்த சவாலையும் சமாளிக்க இராணுவம் தயார்! - இராணுவ தளபதி
[Friday 2016-01-01 20:00]

எந்த சவாலையும் சமாளிக்க இராணுவம் தயாராகவே உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு இராணுவ தலைமையகத்தில் புதுவருடத்தை முன்னிட்டு படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் இறைமை மற்றும் ஒற்றுமை என்ற விடயத்தில் முழு பொறுப்பும் தமதுடையது என்பது இராணுவத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரிந்த விடயம்.


யுக்ரெய்னுக்குள் பிரவேசிக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் கைது!
[Friday 2016-01-01 19:00]

யுக்ரெய்னுக்குள் பிரவேசிக்க முயன்ற நான்கு இலங்கையர்களை, ரோமானிய எல்லைக்காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக ரொமேனிய எல்லைக்காவல் படையினர் தெரிவித்துள்ளனர். ரொமேனியாவில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள், யுக்ரெய்னுக்குள் செல்வதை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்கள் நால்வரும் டிஷ்ஸா ஆற்றின் ஊடாக யுக்ரேய்னுக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளனர்.


ஹட்டனில் சந்திரசேகரன் நினைவு நிகழ்வு! - மாவை சேனாதிராஜாவும் பங்கேற்பு Top News
[Friday 2016-01-01 19:00]

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 6ஆவது சிரார்த்த தினம் இன்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார்.


இபோச பஸ்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்! Top News
[Friday 2016-01-01 19:00]

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியபணியாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பருத்தித்துறையிலிருந்து


யாழ்.குடாநாடு கடலில் மூழ்கும் ஆபத்து! - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
[Friday 2016-01-01 09:00]

யாழ். குடாநாடு கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளதெனவும், யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் கடல்நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் நேரிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை தொடர்பில் தெளிவுபடுத்திய வட மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், யாழ்ப்பாண மக்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்வார்களாயின் மேற்கண்ட அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.


தையிட்டியிலும் இராணுவத்தின் வதைமுகாம்!
[Friday 2016-01-01 09:00]

உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்கம்பிகளினால் வேயப்பட்டுள்ளது. இதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்கு சென்று திரும்பியோர் தெரிவித்தனர்.


புதிய ஆண்டில் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும்! - பிரதமர் வி.உருத்ரகுமாரன்
[Friday 2016-01-01 09:00]

புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


முஸ்லிம் காங்கிரசுடனான கூட்டமைப்பின் பேச்சுக்கு செல்லாதது ஏன்? - கைதடியில் சித்தார்த்தன் விளக்கம் Top News
[Friday 2016-01-01 08:00]

யாழ். கைதடி வடக்கு அம்பிகா முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் - 2015 கைதடி மாதர் அபிவிருத்திச் சங்க முன்றலில் நேற்று நடைபெற்றது. கைதடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவர் திருமதி செ.கேதாரகௌரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


ஜனாதிபதி மைத்திரியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
[Friday 2016-01-01 08:00]

ஒற்றுமை மற்றும் அதனூடாக வலுவடையும் கூட்டு ஒத்துழைப்பினையும் சகவாழ்வினையும் பாதுகாப்பதே புத்தாண்டில் எமது இலட்சியங்களாக அமைதல் வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;


திங்கட்கிழமை கொழும்பு வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்!
[Friday 2016-01-01 08:00]

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவாகர அமைச்சு தெரிவித்துள்ளது. 4ஆம் திகதி இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர், எதிர்வரும் 6 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார். இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


தனக்கு சுவரொட்டி ஒட்டியவர்களுக்கே முதலில் வேலைவாய்ப்பு வழங்குவாராம் அமைச்சர் நவீன்!
[Friday 2016-01-01 08:00]

தனக்காக சுவரொட்டி ஒட்டி வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு முதலில் வேலைவாய்ப்பு வழங்குவேன் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


2016 புதுவருடம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும்! - பிரதமர் ரணில் வாழ்த்து
[Friday 2016-01-01 08:00]

அழுத்தம் மற்றும் அடக்குமுறையுணர்வின்றி சுதந்திரமான ஒரு சூழலில் புது வருடத்தை வரவேற்கக் கிடைத்தமையானது நாம் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றியாகுமென பிரதமர் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில்தெரிவித்துள்ளார்.


கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!
[Friday 2016-01-01 08:00]

தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. வரவுசெலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய இந்தக் கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.


வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட 42 ஆயிரம் குடும்பங்கள்!
[Friday 2016-01-01 08:00]

வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட 42 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றிருப்பதனால் மற்றவர்களில் தங்கி வாழ வேண்டிய நிலையில் சமூக சீரழிவுக்கு ஆளாகக் கூடிய ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக வடமாகாண சுகாதாரத்துறை மற்றும் பெண்கள், சிறார்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.


பிரபாகரன் ஒருவரே தேசியத் தலைவர்! - சி.வி.கே.சிவஞானம்
[Thursday 2015-12-31 19:00]

தேசியத் தலைவர் ஒருவரே, அவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. இவருக்கு முன்பும் ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. இவருக்குப் பின்னர் இனியொரு தேசிய தலைவர் உருவாகப் போவதில்லை என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


பிரகீத் கடத்தல் குறித்த செய்தியை வெளியிட்ட பெண் ஊடகவியலாளரிடம் விசாரணை!
[Thursday 2015-12-31 19:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பாக செய்தி வெளியிட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிங்கள பத்திரிகையொன்றின் ஊடகவியலாளரான விஜயானி எதிரிசிங்கவிடம், குறித்த செய்தியை வழங்கிய புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் இரகசியமான தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


ஒப்பந்த கொலைகாரர்களை படையினர் என கருத முடியாது! - சமன் ரத்னபிரிய
[Thursday 2015-12-31 19:00]

அரசியல்வாதிகளது ஒப்பந்த கொலைகாரர்களை படையினர் என கருத முடியாது என பிரஜை அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்த கொலையாளிகளை படையினர் எனக் கருதுவது உண்மையான படையினருக்கு செய்யும் அவமதிப்பு. படையினரில் பெரும்பாலானவர்கள் உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக சேவையாற்றினர்.


மகிந்த மீது வசைமாரி பொழிந்த தயாசிறி ஜெயசேகர!
[Thursday 2015-12-31 19:00]

யுத்த வெற்றியின் பின்னர் மஹிந்த அரசாங்கம் நாட்டில் பிரிவினைவாதத்தினை அச்சமின்றி பரப்பியதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம்சுமத்தினார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்-


வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கிய நிதியில் 83 வீதம் செலவிடப்பட்டது!
[Thursday 2015-12-31 19:00]

வடமாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2015ம் ஆண்டுக்கான குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் 738 செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு 83 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் கவனயீனம் மற்றும் நிதி ஆணைக்குழு அனுமதியை உரிய காலத்திற்குள் வழங்காமை போன்ற காரணங்களினால் 2015ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கப்பட்ட செயற்றிட்டங்களுக்கு பயன்படுத்தாமல் வேறு செயற்றிட்டங்களுக்கு பயன்படுத்தி முடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


அத்துமீறிய 29 இந்திய மீனவர்கள் நாயாறு கடலில் கைது! Top News
[Thursday 2015-12-31 19:00]

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 29 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை - நாயாறு பகுதியிலிருந்து 7 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். அத்துடன் மீனவர்கள் பயணித்த மூன்று படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் மீனவர்கள் திருகோணமலை கடற்படைத் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்பட்டு கடற்படையினரால் திருகோணமலை துறைமுகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


மலர்கின்ற புதுவருடம் எம் அனைவருக்கும் நம்பிக்கையையும் சமாதானத்தையும் கொண்டுவருவதாக இருக்கட்டும்:
[Thursday 2015-12-31 19:00]

தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்ற உரிமையும், சுயமரியாதையும், கௌரவமும் மீண்டும் கிடைப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோம். எமது மக்கள் எதிர்நோக்கியுள்ள அனைத்து விடையங்களுக்கும் அவர்களுக்கு சாதகமான பதிலை பெற்றுக்கொடுப்பதற்கு பற்றுறுதியுடன் செயற்படுவோம் என்று உறுதி ஏற்போம். காணாமல் போகச்செய்யப்பட்ட விடையங்களில் உண்மை நிலைவரத்தையும், அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலையையும் கொண்டு வருவதாக புதிய வருடம் அமையட்டும். பண்மைத்துவ ஜனநாயகத்தை ஏற்று அனைவருக்கும் சம உரிமையுடைய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கும், யாரும் யாரினுடைய தோள் மீதும் சவாரி செய்யாத நிலையை தோற்றுவிப்பதற்கும் சபதம் ஏற்போம்.


வலி. வடக்கு காணிகள் விடுவிப்பை வரவேற்கிறது கூட்டமைப்பு!
[Thursday 2015-12-31 19:00]

வலி.வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த 700 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-


அவுஸ்ரேலியாவில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த பொறியியலாளர் ரயில் மோதி மரணம்!
[Thursday 2015-12-31 19:00]

கொழும்பு- பம்பலப்பிட்டியில் நேற்றுக் காலை ரயில் மோதி பருத்தித்துறை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலோலி மேற்கு, துலாவெட்டி வீதி முதலாம் கட்டை பருத்தித்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை வாசீகன் (வயது-27) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞர் அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராக கடமையாற்றி வந்தவர் என்றும், விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொழும்பு வந்திருந்தார் என்றும் தெரிய வருகிறது.

Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா