Untitled Document
September 19, 2024 [GMT]
மகிந்தவும் மைத்திரியும் சந்திப்பு! Top News
[Thursday 2015-12-31 19:00]

அரசியல் எதிரிகளாக மாறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நீண்டகால நாட்களுக்குப் பின்னர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இதன்போது ராஜபக்ஷ குடும்பத்தை கடுமையாக விமர்சிக்கும் அமைச்சர் ராஜித சேனாரட்னவும் உடனிருந்தார்.


விபத்து மரணங்களில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் சாதனை! - ஒரு வருடத்தில் 22 பேர் பலி
[Thursday 2015-12-31 18:00]

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையப் பகுதிகளில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய போக்குவரத்துப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


களனியில் பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு- இருவர் படுகாயம்!
[Thursday 2015-12-31 18:00]

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்களை துரத்திச் சென்ற போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு கண்டி வீதியில், பேலியகொடை, புலுகஹ சந்தியில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


வாழ்
[Thursday 2015-12-31 12:00]

வவு


போருக்குப் பின்னரும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு! - கேள்வி எழுப்பும் சர்வதேச ஊடகம்.
[Thursday 2015-12-31 08:00]

போர் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்தும் இலங்கை அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் அதிகளவான நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளமை, பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்தும் அதன் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக த டிப்ளொமெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இறுதிப் போருக்காக இலங்கை அரசாங்கம் பாதுகாப்புக்காக 175 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருந்தது. அது 2011ல் 194 பில்லியன்களாக அதிகரித்தது. 2013ம் ஆண்டு 235 பில்லியன் ரூபாய்களாக இருந்த அந்த ஒதுக்கீடு 2016ம் ஆண்டுக்காக 307 பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


பேராசிரியர் சிற்றம்பலம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தமிழரசுக் கட்சியின் யாழ். கிளை கோரிக்கை!
[Thursday 2015-12-31 08:00]

தமிழ் மக்கள் பேரவையில் பங்கெடுத்துள்ள தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சி.க.சிற்றம்பலம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட கிளை, கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சி.க.சிற்றம்பலம் தமிழ் மக்கள் அவையில் அங்கத்துவம் பெற்றிருந்த நிலையில் தாம் தமிழரசுக் கட்சியின் சார்பில் கலந்து கொண்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தமிழ் மக்கள் அவை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.


குற்றச்சாட்டு உறுதியானால் ஹிருணிகா மீது நடவடிக்கை! - பாரபட்சமில்லை என்கிறது அரசாங்கம்
[Thursday 2015-12-31 08:00]

ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டாரென சந்தேகிக்கப்படும் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு நல்லாட்சி அரசாங்கம் எவ்வித பாதுகாப்பும் வழங்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.


எந்த அமைச்சைத் தந்தாலும் அரசாங்கத்துடன் இணையமாட்டேன்! - என்கிறார் ரம்புக்வெல
[Thursday 2015-12-31 08:00]

தேசிய அரசாங்கத்தில் என்னால் ஒருபோதும் இணைந்து கொள்ள முடியாது. எனக்கு மிகப் பெரிய அமைச்சுப் பதவியொன்றை வழங்க அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதனை பொறுப்பேற்க நான் தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய நாடுகள் குறித்தும் போர்க்குற்ற விசாரணையில் சாட்சியம் அளிக்கத் திட்டம்!
[Thursday 2015-12-31 08:00]

போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் சாட்சியமளிக்க தீர்மானித்துள்ளதாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின் பின்னர் விடுதலைப் புலிகளிடமிருந்து சுமார் 3500 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன. எனினும் குறித்த ஆயுதங்களை வழங்கிய நாடுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.


இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் நிராகரிப்பு!
[Thursday 2015-12-31 07:00]

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு பாலத்தை அமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.


இந்திய மண்ணில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இரண்டு நாள் மாநாடு காண பாண்டிச்சேரி மாநகரம் விழாக்கோலம் பூணுகிறது:
[Thursday 2015-12-31 07:00]

கடந்த பல வருடங்களாக


அரசியலமைப்பு மாற்றத்துக்கு 11 சர்வஜன வாக்கெடுப்புகள் தேவையில்லை! - ஜயம்பதி விக்கிரமரட்ண
[Thursday 2015-12-31 07:00]

அரசியலமைப்பின் சரத்துக்களை மீறாமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இதில் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு புறம்பாக எந்தவொரு மாற்றத்தையும் அரசாங்கம் முன்னெடுக்காதென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அரசியலமைப்பு நிபுணரான முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் திருத்தம் செய்யப்படவுள்ள 11 சரத்துக்களுக்காக 11 தடவைகள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இம்முறை தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில்! - மைத்திரி, ரணில் பங்கேற்கின்றனர்
[Thursday 2015-12-31 07:00]

இம்முறை யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதம அதிதியாக கலந்து கொள்வர். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பொங்கல் விழா நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை மறுப்பு!
[Thursday 2015-12-31 07:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.குறித்த அதிகாரிகளுக்கு பிணை வழங்குமாறு நேற்று கோரப்பட்டது. எனினும், இந்த பிணை மனுவினை நீதவான் நிராகரித்துள்ளார்.


அந்தரங்கப் படங்களை வைத்து பெண்ணை மிரட்டியவர் பருத்தித்துறையில் கைது!
[Thursday 2015-12-31 07:00]

பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்துக் கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை மிரட்டிய ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பருத்தித்துறையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் தனது அந்தரங்கப் படங்களை 'வைபர்' மூலம் அதே பகுதியில் வசிக்கும் ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார்.


வட மாகாணசபை கலைக்கப்படவுள்ளதான செய்தி சிறப்புரிமை மீறல்! - அவைத் தலைவர் சிவஞானம்
[Wednesday 2015-12-30 20:00]

வடமாகாண சபை கலைப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி, பரபரப்புக்காக வெளியிடப்பட்ட செய்தியாகும். இது சபையின் சிறப்புரிமையை மீறும் விடயம். இது தொடர்பில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் கோரிக்கை விடுத்தார்.


கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு எரிச்சலூட்டினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது! - முதலமைச்சர்
[Wednesday 2015-12-30 20:00]

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் இரா.சம்பந்தனுக்கு தெளிவுபடுத்தினேன். அதற்குப் பின்னர் மக்கள் பேரவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என சம்பந்தன் என்னிடம் கூறினார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு இது எரிச்சலூட்டினால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நிலையான சமாதானம், புரிந்துணர்வை நிலைநாட்ட அனைவரும் முன்வரவேண்டும்! - சம்பந்தனின் புத்தாண்டு செய்தி
[Wednesday 2015-12-30 20:00]

நிலையான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நிலைநாட்ட இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். அவர் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி நியதிச்சட்டம் வடக்கு மாகாண சபையில் ஒருமனதாக நிறைவேறியது! Top News
[Wednesday 2015-12-30 20:00]

வடமாகாண கல்வி அமைச்சின் கல்வி நியதிச்சட்டம் மாகாணசபையின் விசேட அமர்வில் எதிர்ப்புக்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, குறித்த நியதிச்சட்டம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஆங்கில மொழியில் வழங்கப்பட்டமை தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


மகிந்தவின் புதிய கட்சியில் இணைவாராம் நாமல்!
[Wednesday 2015-12-30 19:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் தானும் அதில் இணைந்து கொள்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராக வந்திருந்த நாமலிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


அரசியலமைப்பு திருத்த யோசனைகளை கூட்டாக முன்வைக்க முஸ்லிம் காங்கிரஸ், கூட்டமைப்பு இணக்கம்! Top News
[Wednesday 2015-12-30 19:00]

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒருமித்த கருத்துகளை முன்வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அச்சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Wednesday 2015-12-30 19:00]

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோரை எதிர்வரும் 13ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட இடங்களில் அகற்றப்படாத மிதிவெடிகள்! Top News
[Wednesday 2015-12-30 19:00]

இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதிகளின் சில இடங்களில் மிதிவெடி அகற்றப்படாமல் உள்ளது. அப்பகுதிகளில் மிதிவெடி அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளும் வலிகாமம் கிழக்கு வளலாய் பகுதியில் 233 ஏக்கர் காணிகளும் இராணுவத்தினரால் நேற்று திடீரென விடுவிக்கப்பட்டன.


வீடுகளின் ஓடுகள், கூரைகளை அகற்றி விட்டு வெறும் நிலத்தை ஒப்படைத்த படையினர்! Top News
[Wednesday 2015-12-30 19:00]

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக கடந்த 25 வருடங்களாகவிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடுகளின் ஓடுகள், நிலைகள் என்பன அகற்றப்பட்டு அவை உயர்பாதுகாப்பு வலய வேலிக்குள் அமைந்துள்ள வீடுகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வலிகாமம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள 701.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து அதனை மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.


தலைவர் என்ற பதம் ஆண் பாலா, பெண் பாலா? - வடக்கு மாகாணசபையில் விவாதம்
[Wednesday 2015-12-30 19:00]

அனந்தி சசிதரனும் வடமாகாண சபை அவைத்தலைவர் ஆகலாம் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் இன்று நடைபெற்ற போது, கல்வி நியதிச் சட்டத்தின் திருத்தம் சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தாதியின் கையைப் பிடித்து இழுத்து சேட்டை விட்ட இளைஞர் கைது!
[Wednesday 2015-12-30 19:00]

ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த 28 வயது இளைஞன் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன், வீதியில் நின்று கொண்டு பல நாட்களாக தாதி பெண்ணை நக்கலடித்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமைபணிக்குச் செல்லும் போது, தாதியின் பின்னால் வந்த இளைஞன் அவரின் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.


104 வயதில் காலமானார் சதாசிவம் ஐயா! Top News
[Wednesday 2015-12-30 19:00]

வவுனியா சதாசிவம் ஐயா வாழ்வியல் சாதனையாளராக 104 வயது வரை வாழ்ந்து இறைபதம் அடைந்தார். வவுனியா மாவட்டத்தின் மூத்த பிரஜையாகிய சதாசிவம் ஐயா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் வேலாயுதம் சதாசிவம் நேற்று குருமண்காட்டில் உள்ள தமது குறிஞ்சி இல்லத்தில் இறைபதம் அடைந்தார். இறைவனடி சேர்ந்தபோது, அவருக்கு வயது 104.


வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிப்பு - பொங்கலுக்கு முன் மீள்குடியமர்வாம்!
[Wednesday 2015-12-30 08:00]

வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் என்பவற்றிலேயே இந்த 700 ஏக்கர் காணிகளையும் உரியவர்களிடம் கையளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா