Untitled Document
September 19, 2024 [GMT]
ஒலிம்பிக்கில் கவனம் ஈர்த்துவரும் இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண்!
[Friday 2024-08-02 16:00]

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் ஈர்த்துவருகிறார், இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண் ஒருவர். 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில், நேற்று வரலாறு படைத்துள்ளது மலேசிய பெண்கள் இரட்டையர் அணி. ஒலிம்பிக்கில், பெண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் மலேசிய அணி இதுதான். தீனா முரளிதரன் (Thinaah Muralitharan) மற்றும் பியர்லி டேன் (Pearly Tan) என்னும் இருவரைக் கொண்ட அணிதான் அது.


திடீரென அமேசான் காட்டைவிட்டு கூட்டமாக வெளியே வந்த ஆதிவாசிகள்: பின்னணியில் அதிரவைக்கும் உண்மை!
[Friday 2024-08-02 16:00]

சமீபத்தில், அமேசான் காட்டின் உள்பகுதியில் வாழும், அதிகம் வெளியில் தலைகாட்டாத ஆதிவாசிகள் கூட்டத்தைச் சேர்ந்த சிலர், திடீரென காட்டைவிட்டு வெளியில் வந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. உண்மையில், அந்தக் காட்சிகள் அதிரவைக்கும் ஒரு உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளன. அமேசான் காடுகளில், உள் பகுதியில் வாழ்ந்துவரும் ஆதிவாசிகள் இனம் ஒன்று Mashco Piro என அழைக்கப்படுகிறது. உண்மையில், அவர்களுடைய இனத்தின் பெயர் Nomole அல்லது Cujareño என்பதாகும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.


இஸ்ரேல் விமான சேவைகளை ரத்து செய்த முன்னணி விமான நிறுவனங்கள்!
[Friday 2024-08-02 16:00]

இஸ்ரேல் நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்து செய்யத் தொடங்கியுள்ளன. ஈரானில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் கொல்லப்பட்ட நிலையில், பழி தீர்ப்பது உறுதி என்றே ஈரான் சூளுரைத்துள்ளது. மட்டுமின்றி, ஜூலை 13ம் திகதி ஹமாஸ் படைகளின் ராணுவப் பிரிவு தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.


கேரளா மண்சரிவில் உயிரிழந்தோருக்கு அமெரிக்க அதிபர் இரங்கல்!
[Friday 2024-08-02 16:00]

இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள துடன் 3,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


ரஷ்யா-கிழக்கு நாடுகள் மிகப்பெரிய இடையே கைதிகள் பரிமாற்றம்!
[Friday 2024-08-02 08:00]

ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 24 பிணைக் கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளனர். ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையில் பனிப்போர் காலத்திற்கு பிறகான மிகப்பெரிய பிணைக் கைதிகள் பரிமாற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 24 கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.


லண்டன் கத்திக்குத்து சம்பவம்: 17 வயது குற்றவாளியின் பெயர் வெளியானது!
[Friday 2024-08-02 08:00]

பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய 17 வயது டீனேஜ் சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் Southport பகுதியில் நடந்த கொடூர கத்திக்குத்து சம்பவத்தில், சிறுவர்களுக்கான கோடைகால முகாமில் கலந்து கொண்ட 6 வயது Bebe King, 7 வயது Elsie Dot Stancombe மற்றும் 9 வயது Alice Dasilva Aguiar ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய 17 வயது டீனேஜ் சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


பிரித்தானியாவில் 34 வயது பெண் நாய் தாக்குதலில் உயிரிழப்பு!
[Friday 2024-08-02 08:00]

34 வயது பெண் ஒருவர் நாய் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Essex பகுதியில் 34 வயது பெண் ஒருவர் நாய் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் அவசர சேவைகள் அழைப்பின் பேரில் Southend-யின் Retort Close பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.


டிரம்ப் கேள்வியால் வெடித்த சர்ச்சை!
[Thursday 2024-08-01 18:00]

கமலா ஹரிஸ் கறுப்பினத்தவரா இந்தியரா என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ள விவகாரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கறுப்பின பத்திரிகையாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.


ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் குவிந்த மக்கள் கூட்டம்!
[Thursday 2024-08-01 18:00]

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி தெரிவித்துள்ளனர். ஹமாஸ்தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் உடலிற்கான பிரார்த்தனைகளிற்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயதொல்லா அலி கமேனி தலைமை தாங்குகின்றார்.


ஜேர்மனியில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்!
[Thursday 2024-08-01 18:00]

ஜேர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவருகிறது. அதனால், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியில் ஜூன் மாதத்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 82,000ஆக இருந்தது. அதுவே, ஜூலை மாதத்தில் 2.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பெடரல் வேலைவாய்ப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.


காலாவதியான வதிவிட விசா: ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள சலுகை!
[Thursday 2024-08-01 18:00]

ஐக்கிய அரபு அமீரகத்தில் காலாவதியான வதிவிட விசா வைத்திருப்போருக்கு இரண்டு மாத சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான வதிவிட விசா வைத்திருப்போர் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் அல்லது அபராதம் ஏதுமின்றி விசாவை புதுப்பித்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள்.


சீனாவில் தலைதூக்கியுள்ள விசித்திரமான வியாபாரம்!
[Thursday 2024-08-01 06:00]

சீனாவில் இளம் பெண்கள் வித்தியாசமான வணிக முறையை கையில் எடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன தெருக்களில் தற்போது புதிய மற்றும் சர்ச்சைக்குரிய புதிய வணிகம் ஒன்று தலைதூக்கியுள்ளது. தற்போது, சீன தெருக்களில் நீங்கள் நடந்து செல்லும் போது இளம் பெண்கள் விலைப்பட்டியலுடன் அமர்ந்து இருப்பதை பார்க்க முடியும்.


கைப்பற்றப்பட்ட 86% காசா பகுதி: இஸ்ரேல் உத்தரவு தொடர்பில் ஐ.நா முக்கிய தகவல்!
[Thursday 2024-08-01 06:00]

கைப்பற்றப்பட்ட 86 சதவீத காசா பகுதி தற்போது இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவின் கீழ் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்க உள்ளது. காசாவின் பெரும்பாலான உள்கட்டமைப்புகளை இஸ்ரேலிய ராணுவம் முற்றிலுமாக சிதைத்துள்ளது.


பிரித்தானியாவில் மர்மமான தீ விபத்து: 8 வயது சிறுமி மற்றும் 31 வயது பெண் உயிரிழப்பு!
[Thursday 2024-08-01 06:00]

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட மர்மமான தீவிபத்தில் 8 வயது சிறுமி மற்றும் 31 வயது பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவின் Huddersfield என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 வயது பெண் மற்றும் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


விண்வெளியில் 50 நாட்களுக்கு மேலாக சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ்: நடப்பது என்ன?
[Wednesday 2024-07-31 18:00]

கடந்த ஜூன் மாதம் 5-ம் திகதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு எப்போது திரும்புவார்கள் என்ற தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அவர்களது ஒரு வார கால விண்வெளி பயணம் தற்போது சுமார் 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது.


கனடாவில் இந்த பால் பானம் தொடர்பில் எச்சரிக்கை!
[Wednesday 2024-07-31 18:00]

கனடாவில் தாவரங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பால் பானம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய பொதுச்சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறித்த பால்பான வகைகளில் லிஸ்ட்டிரியா எனப்படும் ஒருவகை பாக்டீரியா காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலிய நகரில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை!
[Wednesday 2024-07-31 18:00]

ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் இப்போது 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள பல அரசியல் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வயதை 16 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். இந்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது.


"இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்" - ஈரானில் ஒலித்த கோக்ஷம்!
[Wednesday 2024-07-31 18:00]

இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்’ [Death to Israel, Death to என்ற முழக்கங்களுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியாக மசூத், பதவியேற்றுக்கொண்டார். ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மே 17 ஆம் திகதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28 நடந்தது.


கொல்லப்பட்ட மூன்று சிறுமிகள்: போர்க்களமான பிரித்தானியா!
[Wednesday 2024-07-31 06:00]

பிரித்தானியாவின் Southport பகுதியில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட குடியிருப்பு வளாகம் அருகே அமைந்துள்ள மசூதிக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஏற்பட்டுள்ளனர். பொலிஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், திரளான மக்கள் அதிகாரிகளுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து வெளியான அதிர்ச்சியூட்டும் காணொளி காட்சிகளில் பொலிஸ் வேன்கள் மீது போத்தல்கள் மற்றும் செங்கல்கள் வீசப்பட்டுள்ளது பதிவாகியுள்ளது.


கடுமையான போட்டி நிலவும் 6 மாகாணங்களில் புயலாக மாறும் கமலா ஹாரிஸ்!
[Wednesday 2024-07-31 06:00]

தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன் விலகியதன் பின்னர், கடும் போட்டி நிலவும் 7ல் 6 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் புயலாக மாறியுள்ளதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ப்ளூம்பெர்க் செய்திகள் முன்னெடுத்த ஆய்வுகளிலேயே கமலா ஹாரிஸின் ஆதரவு கரம் ஓங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஐரோப்பிய நாடொன்றின் விசா திட்டம்: ரஷ்ய உளவாளிகளுக்கு வாய்ப்பாக அமையும் என அச்சம்!
[Wednesday 2024-07-31 06:00]

ரஷ்ய மற்றும் பெலாரஸ் குடிமக்களுக்கான விசா கட்டுப்பாடுகளை ஹங்கேரி தளர்த்துவதால், உளவு பார்க்கப்படும் இக்கட்டான நிலைக்கு ஐரோப்பா தள்ளப்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியின் குறித்த திட்டம் தொடர்பில் ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான கவலையை எழுப்பியுள்ளது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலுக்கு EPP-ன் Manfred Weber எழுதிய கடிதம் ஒன்றில்,


காசாவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படவுள்ள பாரிய அபாயம்!
[Tuesday 2024-07-30 17:00]

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகின்றனர்.


எடை கூடியதால் உயிரிழந்த நாய்: உரிமையாளருக்கு சிறை!
[Tuesday 2024-07-30 17:00]

நியூசிலாந்தில் தன் செல்ல நாய்க்கு வரம்பில்லாமல் உணவளித்ததால், பெண் ஒருவருக்கு இரண்டு மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த பெண் அவருடைய நாய்க்கு வரம்பில்லாமல் உணவளித்ததால், அந்த நாய் எடை அதிகமாகி உயிரிழந்துள்ளது. உயிரிழக்கும் போது நாயின் எடை 53 கிலோ இருந்ததாக கூறப்படுகிறது.


எரிபொருள் ஏற்றிச்சென்ற கப்பலை கைப்பற்றிய ஈரானிய புரட்சிப் படை!
[Tuesday 2024-07-30 17:00]

சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிப் படையினர் 1.5 மில்லியன் லீட்டர் எரிபொருள் ஏற்றி சென்ற கப்பல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் அந்த கப்பலை பாரசீக வளைகுடாவில் தங்கள் காவலில் எடுத்துக் கொண்டனர். மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவின் கொடியின் கீழ் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.


ஒலிம்பிக் போட்டியை நிறுத்த சதி? பிரான்சில் தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கம்!
[Tuesday 2024-07-30 17:00]

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த சனிக்கிழமை முதல் நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.


லெபனானை அடுத்து இன்னொரு நாட்டுடன் பகை வளர்க்கும் இஸ்ரேல்!
[Tuesday 2024-07-30 06:00]

நேட்டோ அமைப்பில் இருந்து துருக்கியை வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் திங்களன்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர். துருக்கிய ஜனாதிபதி எர்டோகனின் மிரட்டல், மற்றும் அவரது ஆபத்தான வாக்கு வன்மம் ஆகியவை இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சரை கோபம் கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


சிறார் முகாமில் நடந்த கொடூர சம்பவம்: இளவரசி கேட் உருக்கமான பதிவு!
[Tuesday 2024-07-30 06:00]

பிரித்தானியாவின் Southport பகுதியில் இரு சிறார்கள் மரணமடைய காரணமான கொடூர சம்பவம் குறித்து இளவரசி கேட் மற்றும் வில்லியம் தம்பதி உருக்கமாக பதிவிட்டுள்ளனர். Merseyside பகுதியில் நடத்தப்பட்ட சிறார்களுக்கான கோடைகால முகாமில் நடந்த தாக்குதலில் 6 சிறார்கள் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவத்தில் 17 வயது சிறுவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.


பிரித்தானியாவை நடுங்கவைத்த வாள்வெட்டு சம்பவம்!
[Tuesday 2024-07-30 06:00]

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடத்தப்பட்ட கோடைகால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்து இளைஞர் ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் தற்போது இரு சிறார்கள் கொல்லப்பட்டுள்லதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் தப்பிய 6 சிறார்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூன்று இளைஞர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா