Untitled Document
September 19, 2024 [GMT]
ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட கனேடிய விளையாட்டு வீரர்கள் பலருக்கு உடல்நல பாதிப்பு!
[Thursday 2024-08-08 18:00]

ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட கனேடிய விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொண்ட பல வீரர் வீரங்கனைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட்டுள்ளன.


தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் தோல்வியடைந்தால்..! - ஜோ பைடன் எச்சரிக்கை!
[Thursday 2024-08-08 18:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் தோல்வியடைந்தால் கமலா ஹாரிஸ்க்கு அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். CBS செய்தி தொலைக்காட்சிக்கு அதிபர் ஜோ பைடன் பேட்டியளித்தபோது , "ட்ரம்ப் கூறியதில் அர்த்தம் உள்ளது. அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தால் அமெரிக்காவே ரத்த களறியாகும் என்று தெரிவித்தார்.


பங்களாதேஷ் வன்முறை: 20 அவாமி லீக் தலைவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு!
[Thursday 2024-08-08 18:00]

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் 20 அவாமி லீக் தலைவர்கள் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 29 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அடுத்தடுத்த நில அதிர்வுகளால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
[Thursday 2024-08-08 18:00]

ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் சுனாமி எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது. இன்று ஜப்பானில் 6.9, மற்றும் 7.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுளது. இதனையடுத்து அங்கு சுமானி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


கலவரங்களுக்கு எதிராக அணிதிரண்ட பிரித்தானிய மக்கள்!
[Thursday 2024-08-08 06:00]

பிரித்தானியா முழுவதும் வன்முறை போராட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் அணி திரண்டுள்ளனர். பிரித்தானியா முழுவதும் கடந்த ஒரு வார காலமாக வன்முறை மற்றும் கலவரங்கள் வெடித்து வந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் உள்ள வன்முறை போராட்டங்களுக்கு எதிரான பொதுமக்கள் அணி திரண்டுள்ளனர்.


26 ஆண்டுகள் அழுக்கு கூடாரத்தில் அடிமையாக்கப்பட்ட பிரித்தானியர்: அவருக்கு கிடைத்துள்ள இழப்பீடு!
[Thursday 2024-08-08 06:00]

26 ஆண்டுகளாக அழுக்கு கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பிரித்தானியர் ஒருவருக்கு சுமார் ரூ.3.75 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக மனிதர் ஒருவர் கொடூரமான நவீன அடிமைத்தன கொடுமைகளை அனுபவித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட 'பாதிக்கப்பட்டவர் A' என்ற அந்த நபர், லின்கன்ஷயரில்(Lincolnshire) ரூனி என்ற குடும்பத்தால்(The Rooney family) பிடித்து வைக்கப்பட்டு கொடூரமாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.


பிரித்தானியாவிற்கு பயணிக்க வேண்டாம்: எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகளின் முழு பட்டியல்!
[Thursday 2024-08-08 06:00]

பிரித்தானியாவில் நடந்து வரும் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. நைஜீரியா, மலேசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளன.


பங்களாதேஷில் பயங்கரம்: மேம்பாலத்தில் தொங்கவிடப்பட்ட சடலங்கள்!
[Wednesday 2024-08-07 18:00]

பங்களாதேஷில் அராஜகத்தின் மத்தியில், பிரதான வீதியில் உள்ள மேம்பாலத்தில் தொங்கவிட்டுள்ள பலரது சடலங்களைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் தற்போது நாடாளுமன்றத்தை கலைத்துள்ள போதிலும் , எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முன்வர மறுத்துவிட்டன. புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை இராணுவம் நாட்டை ஆட்சி செய்கிறது.


கனடிய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எதிர்க்கட்சி விமர்சனம்!
[Wednesday 2024-08-07 18:00]

கனடிய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் வெளியிட்டுள்ளன. அண்மையில் கனடாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த இருவரும் எவ்வாறு கனடாவில் குடியேறினர் என கான்சர்வேட்டிவ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.


ரஸ்யாவிற்குள் ஊடுருவி உக்ரைன் படையினர் தாக்குதல்!
[Wednesday 2024-08-07 18:00]

ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனிய படையினர் எல்லையை கடந்து வந்து ரஸ்யாவிற்குள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என ரஸ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த 300 பேர் எல்லை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுவதுடன், இவர்கள் 10 கிலோமீற்றர் வரை ஊடுருவி வந்ததாக ரஸ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கனடாவில் இடம் பெற்று வரும் டாக்ஸி மோசடி குறித்து எச்சரிக்கை!
[Wednesday 2024-08-07 18:00]

கனடாவின் ரொறன்ரோவில் இடம் பெற்று வரும் மோசடி சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் சில பகுதிகளில் டாக்ஸி கொடுக்கல் வாங்கல்களின் மோது மோசடிகள் இடம் பெற்று வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஆறு சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோ பொலிஸார் இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


6000 சிறப்பு பொலிஸார், 500 சிறைச்சாலைகள்: கலவரங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு அதிரடி!
[Wednesday 2024-08-07 06:00]

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கலவரங்களைக் கட்டுப்படுத்த 6000 சிறப்பு பொலிஸாரை தயார் நிலையில் அரசு களமிறக்கியுள்ளது. பிரித்தானியாவின் Southport பகுதியில் நடந்த கொடூர சம்பவத்தில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. திங்கட்கிழமை தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத்தில் கலவரக்காரர்கள் செங்கற்கள் மற்றும் பட்டாசுகளை தூக்கி எறிந்து தாக்கியதில் பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர், அத்துடன் இதில் ஈடுபட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.


இத்தாலியில் 2700 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு!
[Wednesday 2024-08-07 06:00]

இத்தாலியின் டஸ்கனி(Tuscany) மாநிலத்தில் உள்ள சாஸ்ஸோ பின்சுடோ நெக்ரோபோலிஸில்(Sasso Pinzuto necropolis) 2700 ஆண்டுகள் பழமையான வழிபாட்டு கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வகையில் மிகப்பெரிய வழிபாட்டு கோயில் இதுவாகும். இதுவரை பொருட்களின் அடிப்படையில் மட்டுமே கருதுகோளாக இருந்த எட்ருஸ்கன்(Etruscan cult) வழிபாட்டு கட்டமைப்புகளுக்கு இது உறுதியான சான்றாகும்.


இஸ்ரேலுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்!
[Wednesday 2024-08-07 06:00]

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாஹ் அமைப்பு நடத்திய ட்ரோன் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் இடையிலான போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே-வை (Ismail Haniyeh) இஸ்ரேலிய ராணுவம் கொலை செய்தது.


ஈரானை தோற்கடிக்க தயாராகும் இஸ்ரேல்: போர் உருவாகும் அபாயம்!
[Tuesday 2024-08-06 18:00]

இஸ்ரேல் நாடு ஆக்டோபஸின் கால்களை அல்ல, ஈரான் என்னும் பாம்பின் தலையை வெட்டி வீசத் தயாராவதாக மத்திய கிழக்கு நாடுகள் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவரான Ismail Haniyeh என்பவர் கொல்லப்பட்ட நிலையில், அதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகக் கருதப்படுகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் தன்னை பெரும் சக்தியாக காட்டிக்கொண்டிருந்த ஈரானுக்கு, டெஹ்ரானுக்கருகிலேயே Ismail Haniyeh கொல்லப்பட்ட விடயம் தன்மானப் பிரச்சினையாகியுள்ளது.


கனடாவில் சிறுவர் உணவு வகை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Tuesday 2024-08-06 18:00]

கனடாவின் முன்னணி சிறுவர் தானிய உணவு பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் பிரதான உற்பத்திகள் இரண்டை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு கனடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. கெர்பர் பண்டக்குரியை கொண்ட ஓட் பனானா மற்றும் மேங்கோ பேபி சீரியல் உணவு வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மூளையில் சிப்: 2வது நோயாளி உடல் நிலையில் முன்னேற்றம்!
[Tuesday 2024-08-06 18:00]

மூளையில் சிப் பொருத்தப்பட்ட இரண்டாவது நோயாளியின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருப்பதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். 400 எலெக்ரோடுகளும் சிறந்த செயல்பாட்டில் உள்ளதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலன் மஸ்க் கூறியுள்ளார்.


14 வயதில் விமானம் செலுத்திய கனடிய சிறுமி!
[Tuesday 2024-08-06 18:00]

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனியாக விமானத்தை செலுத்தி அனைவரதும் பாராட்டை பெற்றுள்ளார். 14 வயதான அனாயா சொஹைல் என்ற சிறுமியே இவ்வாறு விமானத்தை தனியாக இயக்கி வானில் பறந்துள்ளார். சிறு வயது முதலே விமானத்தை செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் தமக்கு இருந்ததாக அனாயா தெரிவிக்கின்றார்.


குடும்ப விசாவிற்கான புதிய குறைந்தபட்ச ஆண்டு வருமான விதியை கைவிட்ட ஸ்டார்மர் அரசு!
[Tuesday 2024-08-06 06:00]

குடும்ப விசாவிற்கான புதிய குறைந்தபட்ச ஆண்டு வருமான விதியை ஸ்டார்மர் அரசு கைவிட்டது. பிரித்தானிய பிரஜைகள் மற்றும் நிரந்தர குடியாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வர, இனி வருடத்திற்கு குறைந்தபட்சம் 38,700 pounds (ரூ. 1.48கோடி) சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை.


கனடா குடிவரவு கொள்கையில் மாற்றம்: பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு எளிதில் நிரந்தர குடியுரிமை!
[Tuesday 2024-08-06 06:00]

கனடா அதன் குடிவரவு கொள்கையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் semi-skilled workers எனப்படும் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை எளிதில் கிடைக்கும் என கூறப்படுகிறது. கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் (IRCC) குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் (IRPA) மாற்றம் செய்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.


கலவர பூமியான பிரித்தானியா: அவரச கூட்டத்தில் பிரதமர் ஸ்டார்மர் எடுத்த முடிவுகள்!
[Tuesday 2024-08-06 06:00]

பிரித்தானியாவில் வெடித்துள்ள கலவரங்களுக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அவரச COBRA கூட்டத்தை கூட்டினார். COBRA (Cabinet Office Briefing Room A) என்பது நாட்டின் அவசர சூழ்நிலைகளைப் பரிசீலிப்பதற்காக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் செயலாளர்கள் ஒன்றுகூடும் அவசரக்கட்டமைப்பாகும். இந்த கூட்டம், நாடு முழுவதும் பரவியுள்ள வலதுசாரி வன்முறைகளுக்கு எதிரான சவால்களை சமாளிக்கவும், நாட்டில் ஏற்பட்ட முக்கிய பிரச்சனைகளை துரிதமாக தீர்க்கும் நோக்கத்துடன் அழைக்கப்பட்டது.


அமெரிக்காவில் இருந்து வந்த ரஷ்ய உளவு தம்பதியை வரவேற்ற புடின்!
[Monday 2024-08-05 18:00]

அமெரிக்காவில் இருந்து விடுவிக்கப்பட்ட ரஷ்ய உளவு தம்பதியை ரஷ்ய அதிபர் புடின் வரவேற்க சென்றுள்ளார். மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவர்களை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அமெரிக்கா, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.


இங்கிலாந்தின் பிரபல கிரிகெட் வீரர் கிரகாம் தோர்ப் மரணம்!
[Monday 2024-08-05 18:00]

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்றுவிப்பாளரான கிரகாம் தோர்ப் (Graham Thorpe) தனது 55 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் சபை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


பதவி இராஜினாமா: நாட்டைவிட்டு தப்பியோடும் பங்களாதேக்ஷ் பிரதமர்!
[Monday 2024-08-05 18:00]

பங்களாதேக்ஷ் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பிரதமர் ஷேக்ஹசீனா இந்தியாவிற்கு சென்றுகொண்டிருக்கின்றார். இந்தியாவின் அகர்தலா நகரத்திற்கு அவர் சென்றுகொண்டிருக்கின்றார் என பிபிசி தெரிவித்துள்ளது. பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.


எவ்வேளையிலும் இஸ்ரேல் மிது தாக்குதல் நடக்கலாம்: அமெரிக்கா எச்சரிக்கை!
[Monday 2024-08-05 18:00]

எவ்வேளையிலும் ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் வெளிநாட்டு அமைச்சர்களிடம் பிளிங்கென் இதனை தெரிவித்துள்ளார்.


உக்ரைன் வந்தடைந்த F-16 போர் விமானங்கள்: ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி!
[Monday 2024-08-05 06:00]

உக்ரைன் F-16 போர் விமானங்களை பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உக்ரைன் விமானிகள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு F-16 போர் விமானங்களை நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.


கலவரக்காரர்களை குறிவைத்த பொலிஸார்: வீடு வீடாக சென்று நடக்கும் கைது நடவடிக்கை!
[Monday 2024-08-05 06:00]

பிரித்தானியா முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ள நிலையில், பொலிஸார் வீடு வீடாக சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து வருகின்றனர். Southport பகுதியில் ஜூலை 29ம் திகதி Axel Rudakubana என்ற 17 வயது சிறுவன் நடத்திய வன்முறை தாக்குதலுக்கு பிறகு ஒட்டுமொத்த பிரித்தானியாவிலும் கலவரங்கள் வெடித்துள்ளது.


கலவரக்காரர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடும் எச்சரிக்கை!
[Monday 2024-08-05 06:00]

வன்முறை சம்பவங்களில் கலந்து கொண்டதற்காக நீங்கள் நிச்சயம் வருத்தப்படுவீர்கள் என்று கலவரக்காரர்களை பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறார்களுக்கான கோடைகால முகாமில் Axel Rudakubana என்ற 17 வயது பதின்பருவ சிறுவன் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்ததில் இருந்து நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா