Untitled Document
November 21, 2024 [GMT]
 
வடமராட்சியில் ஆழிப்பேரலை நினைவேந்தல்! Top News
[Monday 2022-12-26 18:00]

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.


இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தில் சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள்! Top News
[Monday 2022-12-26 18:00]

நத்தார் தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் (25) இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தில் சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 16வது கெமுனு இராணுவப் படையினரால் குறித்த நிகழ்வு ஏற்படாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது 100 சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


நத்தாரை முன்னிட்டு இராணுவத்தினரால் சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைப்பு! Top News
[Monday 2022-12-26 06:00]

நத்தார் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரால் 50 சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கையின் 11வது காலாட்படை படைப்பிரிவு இராணுவத்தினர் மற்றும் 513வது படைப்பிரிவு இராணுவத்தினர் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.


மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவு திறந்து வைக்கப்பட்டது! Top News
[Monday 2022-12-26 06:00]

கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவு திறந்து வைக்கப்பட்டது. 2023 ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழ்ப்பாணம் மணிக்கு கூட்டு கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன..


சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலைவிழா! Top News
[Monday 2022-12-26 06:00]

சங்கானை இந்து இளைஞர் மன்றத்தினர் நடத்திய மாபெரும் கலைவிழா நேற்றைய தினம் (25) மன்றத்தின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. மன்றத்தின் தலைவர் யோ.பிரசாந்தன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர்.


சுழிபுரத்தில் சிவா பைரா உதவும் கரங்களின் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது! Top News
[Monday 2022-12-26 06:00]

யாழ். சுழிபுரத்தில் சிவா பைரா உதவும் கரங்களின் புதிய கிளை அலுவலகம் வைபவ ரீதியாக (24.12 2022 ) அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது சிவலிங்கம் தவமணி ஆகியோரின் நினைவாக, சுழிபுரம் வாழ் 40 குடும்பங்களுக்கு 4000 ருபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.


வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை தேவாலய பாலன் பிறப்பு! Top News
[Sunday 2022-12-25 16:00]

உலகவாழ் எங்கும் அனுஸ்டிக்கப்படும் நத்தார் யேசுப்பாலன் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் யாழ். மாவட்டத்தில் பெரும்பாலான தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றன. அந்தவகையில் யேசுபாலன் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு கூட்டுத்திருப்பலி வரலாற்று சிறப்பு மிக்க யாழ். மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையிலான அருட்சகோதர்களினால் நடாத்திவைக்கப்பட்டது.


யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் எம்.ஜி.ஆர் நிகழ்வு! Top News
[Sunday 2022-12-25 08:00]

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் (24) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, அமரர் யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் துணைவியார் இலட்சுமி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.


இலங்கை சாரணிய சங்கம் மாணவர்கள் துவிச்சக்கரவண்டி பவனி! Top News
[Saturday 2022-12-24 08:00]

இலங்கை சாரணிய சங்கம் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு 110 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இலங்கையில் இருக்கின்ற 37 சாரணிய மாவட்டங்களில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டி பவனி ஆரம்பமானது. நேற்று யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதியில் துவிச்சக்கர பவனி ஆரம்பமாகி யாழ். ஆரியகுளம் வீதி ஊடாக சென்று, பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை வீதி ஊடாக சென்று வைத்தீஸ்வரா பாடசாலையில் நிறைவு பெற்றது.


இந்திய துணைத் தூதுவர் கலந்துகொண்ட மாபெரும் நிகழ்வு! Top News
[Saturday 2022-12-24 08:00]

யாழ். வட்டு இந்துக் கல்லூரியும் சங்கானைக் கல்விக்கோட்டமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் இருநூறாவது பிறந்ததின நிகழ்வு நேற்றைய தினம் (23.12.2022) பி.ப 02.00 மணியளவில், யாழ். வட்டு இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப்புலவர் அரங்கத்தில் நடைபெற்றது. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் அதிபர் அ.ஆனந்தராஜா அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீமன் ராகேஷ் நட்ராஜ் அவர்கள் கலந்துகொண்டார்.


வரணி மத்தி கல்லூரிக்கு வன்னி ஹோப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரண்டு மலசலகூட தொகுதிகள்! Top News
[Friday 2022-12-23 18:00]

யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட் வரணி மத்தி கல்லூரிக்கு வன்னி ஹோப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரண்டு மலசலகூட தொகுதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்திற்கான நிதி அனுசரணையை திரு விந்திரன் வெங்கடாசலம், ராதா சந்திரன் மற்றும் ரேணுகா சிவபாலன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.


விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் வருடாந்த பரிசளிப்பு விழா 2022! Top News
[Thursday 2022-12-22 18:00]

அவுஸ்திரேலியா மெல்பேர்னில் 40 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பதில் முன்னணி வகிக்கும் விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் நரே வொரென் வளாகம் தனது வருடாந்த பரிசளிப்பு விழாவை Holt பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18/12/22) கொண்டாடப்பட்டது.


வலிகாமம் கிழக்கு பிரதேச நூலக விழா சிறப்புற நடைபெற்றது! Top News
[Thursday 2022-12-22 18:00]

வலிகாமம் கிழக்கு பிரதேச சபயின் புத்தூர் நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியில் நுலகர் திருமதி கர்சனமாலா உதயகுமாரன் தலைமயில் நேற்று புதன் கிழமை (21) சிறப்புற நடைபெற்றன. தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுலகர் சிவபாக்கியநாதன் கேதீஸ்வரன், சபையின் செயலாளர் இராமலிங்கம் பகீரதன், சோமாஸ்கந்தா கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலதரப்பட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


சமுதாய கல்வி செயற்திட்டம் நடைபெற்றது! Top News
[Thursday 2022-12-22 18:00]

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீட மாணவர் ஒன்றியத்தினால் சமுதாய கல்வி செயற்திட்டம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் - கோண்டாவில் முத்து தம்பி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. வணிக பீட பீடாதிபதி பேராசிரியர் நிமலதாசனின் தலைமையில், யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வி.பிரவீன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.


நெடுந்தீவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! Top News
[Thursday 2022-12-22 06:00]

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர்.


விக்டோரியா கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு! Top News
[Thursday 2022-12-22 06:00]

யாழ். சுழிபுரம் விக்கி கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்றையதினம் கல்லூரியின் பொது மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரியின் அரசியல் விஞ்ஞான ஆசிரியர் திருமதி தாரணி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


வடமாகாணத்திற்கான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது! Top News
[Wednesday 2022-12-21 07:00]

மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகசேவை அமைச்சின் கீழ் வரும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வடமாகாணத்திற்கான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களும் மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.ரத்நாயக்க அவர்களும் அதிதிகளாக கலந்துகொண்டு பயிற்சி நிலையத்தினை திறந்துவைத்தனர்.


கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நன்கொடை! Top News
[Wednesday 2022-12-21 07:00]

கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான, உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய், வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர். கனேடிய தமிழ் காங்கிரஸினர் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது. இலங்கையின், மோசமான நிதிச் சரிவால் உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன.


வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 2022ஆம் ஆண்டிற்கான நத்தார் இன்னிசை வழிபாடு! Top News
[Wednesday 2022-12-21 07:00]

நேற்றுமுன்தினம் தென்னிந்திய திருச்சபையின் வட்டுக்கோட்டை பேராலயத்தில் இடம்பெற்றது. இதன் பொழுது மாணவர்களினால் விசேட நத்தார் இன்னிசை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் போதகர்கள், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரியின் புதிய வலைப்பந்தாட்ட மைதான திறப்புவிழா நடைபெற்றது! Top News
[Wednesday 2022-12-21 07:00]

20-12-2022 - திறப்புவிழா - 2021ம் ஆண்டு, நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மைதானம் அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவியை வகித்த காலகட்டத்தில் அவரது வேண்டுகோளிற்கு இணங்க இந்த மைதானத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டது.


மிருசுவில் படுகொலை நினைவேந்தல்! Top News
[Wednesday 2022-12-21 07:00]

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைதினம் அனுஷ்டிக்கப்பட்டது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் காலை 10.30 மணிக்கு அஞ்சிலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டி - முதலிடத்தை கிளிநொச்சி பெற்றுள்ளது! Top News
[Tuesday 2022-12-20 06:00]

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில், கிளிநொச்சி மாவட்ட செயலகம் இரண்டாவது தடவையாக முதலிடத்தை பெற்றுள்ளது. தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டிக்கான மதிப்பீட்டுத் தேர்வு கள விஜயத்திற்கான சாதகமான மதிப்பெண்ணை கிளிநொச்சி மாவட்ட செயலகம் பெற்ற நிலையில், கடந்த 25ஆம் திகதியன்று நேரடியாக கள விஜயம் இடம்பெற்றது.


ஈழத்து சிதம்பரம் போராட்டம்! Top News
[Sunday 2022-12-18 21:00]

காரைநகர் ஈழத்துச் சிதம்பர திருவம்பாவை உற்சவத்தினை வழமைபோல் சிறப்பாக நடாத்தக் கோரி காரைநகரில் இன்றையதினம் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் நிறைவில் ஆலய ஆதீன கர்த்தாவிடம் மகஜரை கையளிப்பதற்கு அவரை அழைத்தவேளை அவர் அங்கு இல்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் அங்கு முரண்பாடு தோன்றியது. பின்னர் மகஜர் ஆலய வாயிலில் வைக்கப்பட்டது.


யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள்! Top News
[Saturday 2022-12-17 08:00]

மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள் இடம்பெற்றன. அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ். வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் தேவஸ்தானத்திலும் திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவம் இடம்பெற்றது.


பாடசாலை முறைமைக்குள் நேயமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கி சுற்றாடல் முகாமைத்தும்! Top News
[Friday 2022-12-16 06:00]

சுற்றாடல் நேயமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கி சுற்றாடல் முகாமைத்துவத்தில் முன்னோடிகளாக மாற்றுகின்ற முயற்சியாகக் கல்வி அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் ஒருங்கிணைந்து சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தை நாடுபூராகவும் உள்ள பாடசாலை முறைமைக்குள் அமுலாக்கி வருகின்றது. இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள் சுற்றாடல் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு ஜனாதிபதி பதக்கத்தினைப் பெற்றுக் கொள்வர். இப் பதக்கம் ஜனாதிபதி அவர்களால் நேரடியாக வழங்கப்படுகின்ற உயரிய பதக்கமாகும்.


யாழ். பல்கலைக்கழகம் - இலங்கை வங்கி உடன்படிக்கை! Top News
[Friday 2022-12-16 06:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் வழங்கப்படும் தொழில் நிர்வாகமானி, வணிகமானி ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளிலும் முன்னணி பெறும் மாணவர்களுக்கு வருடாந்தப் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை வங்கியினால் “இலங்கை வங்கி விருது” வழங்கப்படவுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு, டிசம்பர் 15ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.


யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ தொழிற் சந்தை நிகழ்வு! Top News
[Thursday 2022-12-15 06:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று புதன்கிழமை கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் நடைபெற்றது.


ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆவது ஆண்டு ஜனதின நிறைவு மாநாடு! Top News
[Thursday 2022-12-15 06:00]

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ். மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆவது ஆண்டு ஜனதின நிறைவு மாநாடும், ஜனதின குருபூஜைதின நிகழ்வு நேற்று நல்லூர் நாவலர் மணிமண்டபவத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் ய.அநிருத்தனன் தலைமையில் இடம்பெற்றது.


சங்கானை பிரதேச செயலகத்தில் மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு! Top News
[Wednesday 2022-12-14 06:00]

சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (13-12-2022) சங்கானை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண செயற்பாட்டு மையம் மற்றும் மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களம் ஆகியன இணைந்து இந்த மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தன.


வடக்கு மாகாண ஆளுநர் சத்துணவு திட்டத்தை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்! Top News
[Wednesday 2022-12-14 06:00]

யாழ். செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்து வைத்தார். புலம் பெயர்ந்தவர்களின் ஒருங்கிணைந்த அமைப்பின் விஸ்வநாதன் தலைமையில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த திட்டத்துக்கான 10இலட்சம் ரூபாநிதியுதவி காசோலைகள் வழங்கப்பட்டது.

Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா