Untitled Document
November 22, 2024 [GMT]
 
சென்னையில் இருந்து விமானம் வந்தது! Top News
[Tuesday 2022-12-13 06:00]

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதற்கமைய, சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.


கொழும்பு மாநகர சபை, மானிப்பாய் பிரதேச சபைக்கு வாகனங்கள் கையளிக்கும் நிகழ்வு! Top News
[Tuesday 2022-12-13 06:00]

தென்பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் மானிப்பாய் பிரதேசசபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த வருட இறுதியில் கொழும்பு மாநகரசபைக்கான நட்புறவு பயணத்தினை மேற்கொண்டனர். அதன் விளைவாக இவ்வருட ஆரம்பத்தில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க அவர்கள் தலைமையில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் யாழிற்கு விஜயத்தினை மேற்கொண்டனர்.


பாரதியாரின் பிறந்ததின நிகழ்வு! Top News
[Sunday 2022-12-11 16:00]

யாழ். இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில், இந்தியாவின் எட்டையப் புரத்தில் பிறந்த மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு இன்று யாழ் அரசடிவீதியில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.


29ஆவது ஆண்டில் வெற்றிநடை போடும் தமிழ்த்திறன்- யேர்மனி! Top News
[Sunday 2022-12-11 16:00]

தமிழ்க் கல்விக் கழகத்தால் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியானது, தமது பிள்ளைகளின் மொழித்திறனை வளப்படுத்தும் ஆற்றல்மிக்க களமாகவே கருதுகின்றார்கள் பெற்றோர்கள். அதனாலேயே தமிழாலயங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தமிழ்த்திறன் போட்டியானது நல்விருப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.


சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி கருத்து!
[Sunday 2022-12-11 06:00]

சட்டத்தரணிகள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் சாதாரண மக்களுக்கு மனித உரிமை என்றால் என்ன? மனித உரிமை மீறப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி திருமதி.ரொபின்ஷா நக்கீரன் தெரிவித்தார். சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி" என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தினமானது இன்றையதினம் யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்றது. இதன்போது கருத்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை கருத்தரங்கு! Top News
[Sunday 2022-12-11 06:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடாத்தும் போதைப் பொருள் பாவனை அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நேற்றையதினம் (09), பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நடைபெற்றது.


யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு! Top News
[Sunday 2022-12-11 06:00]

மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரின் ஏற்பாட்டில் பால் நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்திட்டத்தின் நிறைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மகளீர் அபிவிருத்தி நிலையத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் விசேட நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


அசாதாரண காலநிலை காரணமாக பல இலட்சம் பெறுமதியான கால்நடைகள் உயிரிழப்பு! Top News
[Friday 2022-12-09 18:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது. கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் பலியாகியதுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றார்.


தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்ட அடிக்கலானது நாட்டப்பட்டது! Top News
[Friday 2022-12-09 06:00]

யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் அவர்களின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட நகரக் குளம் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கலானது (07/12/2022) அன்று நாட்டப்பட்டது.


கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் 05/12/2022 அன்று ஒளிவிழா! Top News
[Thursday 2022-12-08 06:00]

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் நேற்றுமுன்தினம் (05) ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது மாலை 05.00 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றிருந்தது.


நாவற்குழி நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை! Top News
[Thursday 2022-12-08 06:00]

சிவ பூமி அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் நாவற்குழி நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. நீண்ட காலமாக குறித்த இடத்தில் சிவன் சிலை இருந்த போதிலும் சிவ பூமி அறக்கட்டளையினரால் செயலாளர் நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும்.


மூன்றாவது தேசிய சுற்றுப்புற காற்று தரக்கண்காணிப்பு நிலையம் யாழ் மாவட்டத்தில் திறப்பு வைப்பு! Top News
[Thursday 2022-12-08 06:00]

இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதி உதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் உள்ள பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட மூன்றாவது தேசியசுற்றுப்புற காற்று தரக்கண்காணிப்பு நிலையம் இன்று சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜெயசிங்க, மற்றும் யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அவர்களினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.


வன்னி கோப் நிறுவனத்தினால் வீடு வழங்கி வைப்பு! Top News
[Wednesday 2022-12-07 06:00]

இராசையா குடும்பத்தின் நிதி அனுசரணையில், வன்னி கோப் நிறுவனத்தினால் கட்டப்பட்ட வீடானது சம்பிரதாயபூர்வமாக பயனாளிகளிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் வசிக்கும் பொருண்மியம் குன்றிய, ஆறு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்திற்கு இவ்வாறு வீடு வழங்கி வைக்கப்பட்டது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு! Top News
[Wednesday 2022-12-07 06:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்று 05 ஆம் திகதி, திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது. “ஆராய்ச்சியினூடான ஞானம் - Wisdom through Research” என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மநாட்டில் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் பிரயோக சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Institute of Applied Health Research , University of Birmingham) சேர்ந்த சுகாதார தரவு அறிவியல் மற்றும் பொது சுகாதாரப் (Professor in Health Data Science and Public Health) பேராசிரியர் கிருஸ்ணராஜா நிரந்தரகுமார் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு முதன்மை உரையாற்றினார்.


யாழ்ப்பாணம் உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் 25வது ஆண்டு நிறைவு தினம்! Top News
[Tuesday 2022-12-06 18:00]

யாழ்ப்பாணம் உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் 25வது ஆண்டு நிறைவு தினம் யாழ். மத்தியகல்லூரிய் தந்தை செல்வா கலையரங்கில் 2022.12.04 அன்று காலை 9மணியளவில் இடம்பெற்றது. இதன் பொழுது 25வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியினரால் மாணவர்களிடையே 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலை கலாச்சார விளையாட்டு போட்டிகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றதோடு 25ஆவது ஆண்டு நினைவு மலரும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.


வன்னி கோப் நிறுவன கட்டடத் திறப்பும் உதவி வழங்கலும்! Top News
[Monday 2022-12-05 17:00]

வன்னி கோப் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் இலங்கைக்கான அலுவலகம் நேற்று ஞாயிறு காலை 9.30 மணியளவில் கலட்டி, யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவன செயலாளர் வைத்திய கலாநிதி மாலதி வரன் பிரதம விருந்தினராக பங்கேற்கின்றார்.


சட்டம் மற்றும் மனித உரிமை தொடர்பான செயலமர்வு! Top News
[Monday 2022-12-05 17:00]

சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு ஒன்று இன்றையதினம் முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிறுவனத்தினால் குறித்த செயலமர்வு நடாத்தப்பட்டது. இதன் வளவாளராக சட்டத்தரணி கார்த்திகா அவர்கள் கலந்துகொண்டார்.


கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டி! Top News
[Saturday 2022-12-03 07:00]

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டி முந்தைய தினம்(01) காலை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்ரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுநிலை சங்கீதத் துறை ஆசிரியர் சிவகுமார் சக்திதேவி கலந்துகொண்டார்.


தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டன! Top News
[Saturday 2022-12-03 07:00]

நேற்றையதினம் சந்நிதியான் ஆச்சிரமத்தால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு 8 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டன. மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு (புற்றுநோய்க்கான) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு 800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்களை வைத்திய அத்தியட்சகரிடம், கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.


தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022- யேர்மனி ,டோட்முண்ட்! Top News
[Thursday 2022-12-01 06:00]

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00 மணியிலிருந்து மக்கள் வருகை ஆரம்பித்திருந்தது. கொறோனா விஷக்கிருமியின் தாக்கம் காரணமாக யேர்மனியில் கடந்த இரண்டு வருடங்களாக மாநிலரீதியாக மாவீரர் நாள் நடைபெற்றது யாவரும் அறிந்ததே.


டொரோண்டோவில் "FINDER" திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வு! Top News
[Wednesday 2022-11-30 06:00]

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால் பாதிக்கும் கனடாவின் "ஆரபி Production" அன்பர்கள் நண்பர்கள் கலைஞர்கள் திரைத்துறையினர் பாராட்டு . ஈழ தேசத்தில் பல திரை படைப்புகள் மூலம் அறியப்பட்ட ஆரபி Production ராஜீவ் சுப்பிரமணியம் அவர்கள் தென்னிந்திய தமிழ் சினிமாவில் "FINDER" என்கிற திரைப்படதினூடாக தயாரிப்பாளராக கால் பதிக்கிறார்.


ஸ்ராஸ்பூர்க் மாநகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு! Top News
[Wednesday 2022-11-30 06:00]

27.11.2022 அன்று ஸ்ராஸ்பூர்க் மாநகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய, அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதான ஈகைச்சுடரினை லெப்டினன் எழிலன் அவர்களின் சகோதரர் திரு.பாலசிங்கம் தயாளன் அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் விளக்குகளை ஏற்றினர்.


தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா மாபெரும் நடைபவனி! Top News
[Wednesday 2022-11-30 06:00]

யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்றைய தினம் (29) பிற்பகல் 3 மணியளவில் மாபெரும் நடைபவனி இடம்பெற்றது. குறித்த நடைபவனியானது துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பமாகி குருநகர் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்திற்கு முன்னால் நிறைவுற்றது.


சேர். பொன். இராமநாதன் குருபூசை! Top News
[Wednesday 2022-11-30 06:00]

சைவப் பெரும் வள்ளலார் சேர். பொன் இராமநாதனின் 92 வது குருபூஜை தினம் நேற்று 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குருபூசை தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.


சங்கிலிய மன்னனின் குடும்பப்படம் திறந்து வைக்கப்பட்டது! Top News
[Tuesday 2022-11-29 18:00]

யாழ்பாணத்தை ஆண்ட இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் குடும்பப்படம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் இன்றையதினம் காலை 7.30மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சங்கிலியனின் குடும்ப படத்தினை கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் திரைநீக்கம் செய்து வைத்தார்.


சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு! Top News
[Tuesday 2022-11-29 18:00]

தேசிய ரீதியில் சாதனை படைத்து வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேசத்திற்கு பெருமை தேடித் தந்த, மாகாஜனாக் கல்லூரி வீரங்கனைகளுக்கு இன்றையதினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி 20 வயதிற்கு உட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி தேசிய மட்டத்தில் வெற்றி வாகை சூடி சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.


அரசபாளையத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் 2022! Top News
[Monday 2022-11-28 18:00]

தமிழீழப் போரில் இன்னுயிர் ஈந்த வீரவேங்கைகளுக்கு அரசபாளையத்தில் மாவீரர் நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெருந்திரளான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர். தமிழீழ விடுதலையை நெஞ்சில் ஏந்தி களமாடிய வீரர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றி பேராசிரியர் செயராமன் அவர்கள் மாவீரர்களின் ஈகங்கள், வீர களமுனைச் செய்திகள், ஈழ வரலாற்றில் தமிழினத்தின் எழுச்சிகள் பற்றி விரிவான உரை ஆற்றி, மாண்ட விடுதலை வீரர்களை தமிழர்களின் நெஞ்சில் படமாகச் செதுக்கினார்.


கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கான மாவீரர் நாள் நிகழ்வு கொடிகாமம் நகர மத்தியில் இடம்பெற்றது! Top News
[Monday 2022-11-28 18:00]

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கான மாவீரர் நாள் நிகழ்வு கொடிகாமம் நகர மத்தியில் இடம்பெற்றது.


யாழ். மாநகர சபையின் எற்பாட்டில் மாவீரர் தின நினைவேந்தல்! Top News
[Monday 2022-11-28 18:00]

யாழ். மாநகர சபையின் எற்பாட்டில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக தியாங்களை செய்தவர்களுக்கான மாவீரர் தின நினைவேந்தல் நேற்று 27ம் திகதி நவம்பர் யாழ். நல்லூர் தியாக திலீபன் நினைவேந்தல்விடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது. இதில் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், தலைமையில் பிரதான ஈகைசுடர் எற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து மாவீரர்களின் உறவினர்கள், குடும்பத்தினர்கள் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுமக்கள் பலரும் பங்குயெடுத்தனர்.


கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல்! Top News
[Monday 2022-11-28 18:00]

மாவீரா் நாளான நேற்று முதல் கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினா் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்திருந்தனா்.

Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா