Untitled Document
November 26, 2024 [GMT]
 
பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தலுக்கான பிரவேச நிகழ்வு இன்று! Top News
[Thursday 2022-08-04 22:00]

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தலுக்கான பிரவேச நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது. பாலிநகர் மக வித்தியாலயத்தின் அதிபர் திரு ஸ்ரீ கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு நிகழ்வும் , நவீன கற்றல் கற்பித்தலுக்கான திறப்புவிழாவும் இடம்பெற்றிருந்தன.


ஆகஸ்ட் 19 முதல் புலம்பெயர் தேசமெங்கும் "மேதகு 2" திரைப்படம் வெளியாகிறது! Top News Top News
[Saturday 2022-07-30 07:00]

தமிழின தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் அதனூடு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றையும் சொல்லிய திரைப்படமான மேதகு 1 கடந்த ஆண்டு வெளிவந்து மக்களிடம் பெருவரவேற்பைப் பெற்றது அதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 19 முதல் திகதி புலம்பெயர் தேசமெங்கும் மேதகு 2 திரைப்படம் வெளியாகிறது, அத்துடன் www.tamilsott.com என்ற இணையத்திலும் மேதகு திரைப்படத்தைப் பார்வையிடலாம்.


மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி தென்மாநிலம் முன்சன் 23.7.2022! Top News
[Tuesday 2022-07-26 22:00]

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் கொறோனா விசக்கிரிமிகளின் தாக்கத்தின் பின்பு இந்தவருடம் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் யேர்மனியின் தென்மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து முன்சன் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் சென்ற சனிக்கிழமை 23.7.2022 அன்று மிகச்சிறப்பாக தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்பட்டது.


கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம்! உலகத் தமிழர்களை நோக்கி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அழைப்பு! Top News Top News
[Tuesday 2022-07-26 08:00]

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்‌சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது.


யேர்மன் தலைநகரில் கண்காட்சிப்படுத்தப்பட்ட கறுப்பு யூலையின் இனப்படுகொலைகள்! Top News
[Monday 2022-07-25 08:00]

யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு நகரமத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர் கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பேர்லின் நகரத்தில் (23.07.2022) அன்று சனிக்கிழமை நகரமத்தியில் கண்காட்சி நடாத்தப்பட்டது.


பிரிட்டனில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவெழுச்சிநாள் 2022! Top News
[Monday 2022-07-25 08:00]

சிங்கள பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை களவாவரம் நடந்து இன்றுடன் 39 வருடங்கள் நிறைவாகின்றது, இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை.


அகிலத்தை அதிரவைத்த FeTNA-வெற்னா மாநாட்டில் ஈழவர் குரல்கள்! Top News
[Friday 2022-07-22 06:00]

வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA , அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் இலாப நோக்கற்ற அமைப்பாகும். பதிவு செய்யப்பட்ட இச் சங்கமானது முதலில் ஐந்து தமிழ் அமைப்புகளால் 1987 இல் நிறுவப்பட்டது. அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 மேற்பட்ட தமிழ் அமைப்புகளை அது உள்வாங்கி, அவற்றையும் அதில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆண்டுதோறும் வட அமெரிக்காவின் வெவ்வேறு மாநகரங்களில் ஜூலை மாதத்தில் பிரமாண்டமான தமிழ் மாநாடுகளை நடத்தி வருகின்றது. இதற்காக உலகமடங்கிலுமிருந்து துறைசார் ஆளுமைகள் விசேடவிருந்தினர்களாக அழைக்கப் படுகின்றார்கள். தமிழ் எழுத்தாளர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள்,எனப் பல ஆளுமைகளின் சங்கமம் இது.


சிங்களவர்களுக்கு அவர் ஊழல்வாதி, ஆனால் தமிழர்களுக்கான இனப்படுகொலையாளி! பிரான்சில் கோத்தாவுக்கு எதிராக கவனயீர்ப்பு! Top News Top News
[Friday 2022-07-22 06:00]

உலகலாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கோத்தபாய இராஜபக்சவை சிங்கப்பூர் அரசு கைது செய்யக் கோரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் தலைநகர் பரிசில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. கோத்தபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள் தெரிவிக்கின்றது. தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.


சிங்கப்பூர் கோத்தாவை கைது செய்யுமா? - அமெரிக்காவிலும் கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட தமிழர்கள்! Top News Top News
[Wednesday 2022-07-20 06:00]

சிங்கள மக்களுக்கு அவர் ஊழல்வாதி, ஆனால் தமிழர்களுக்கு அவர் இனப்படுகொலையாளி என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இருக்கின்ற சிங்கப்பூர் தூதரகத்தின் முன் அணிதிரண்ட தமிழர்கள், கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து, நீதியின் முன் நிறுத்து என குரல் எழுப்பினர்.


கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்! நீதியின் முன் நிறுத்து! Top News Top News
[Tuesday 2022-07-19 18:00]

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழனப்படுகொலையாளியுமான கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர். தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதியுமாகிய பேரா.இராமசாமி அவர்களது தலைமையில் அணிதிரண்ட தமிழர்கள், இனப்படுகொலையினை சிங்கப்பூர் வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தினை எழுப்பினர்.


கோத்தாவை விடாது துரத்தும் தமிழர்கள் ! கைது செய் - நீதியின் முன் நிறுத்து! லண்டனில் அணிதிரண்ட தமிழர்கள்! Top News Top News
[Tuesday 2022-07-19 18:00]

தலைநகர் லண்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் அணிதிரண்ட தமிழர்கள், சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழனப்படுகொலையாளியுமான கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து, நீதியின் முன் நிறுத்து என குரல் எழுப்பினர். போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் அவர்கள் ஐ.நா உறுப்பு நாடுகளை நோக்கி முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார்.


மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி, சார்லான்ட் – 17.07.2022! Top News
[Monday 2022-07-18 08:00]

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம்தோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி இந்தவருடம் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. மாவீரர் வெற்றிக் கிண்ணப் போட்டியானது வருடம் தோறும் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை மாநில ரீதியாக ஒருங்கிணைத்து நடாத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை 16.7.2022 அன்று யேர்மனி சார்லான் மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து நடாத்தப்பட்டது. சார்லான்ட் மாநிலத்தில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட தழிழாலங்கள் சிறப்பாகப் பங்காற்றி மாவீரர்களின் தியாகங்களை மனதில் நிலைநாட்டிக் கொண்டனர்.


கோத்தாவை கைது செய்! சட்டத்தின் முன் நிறுத்து! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்! Top News
[Monday 2022-07-18 08:00]

தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர் போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார்.


கோட்டாபய இராசபக்சாவை இன்று ஊழ்வினை தேடி வந்து பிறந்த நாட்டை விட்டே துரத்திவிட்டது! Top News
[Friday 2022-07-15 16:00]

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர், அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது. இந்தப் பொன்மொழி புத்தர் உடையது. புத்தர் காலத்துக்குப் பின்னரும் ஒருவன் காலை செய்யும் தீவினை அவனை மாலை வந்து சூழும் என்ற வாழ்வியல் உண்மையை தமிழ்ப் புலவர்கள் தமிழ் அறநெறியாளர்கள் வற்புறுத்தி வந்துள்ளார்கள். அறக் கோட்பாட்டை வற்புறுத்தும் இலக்கியங்களை பதிணெண் கீழ்க் கணக்கு நூல்களில் தொகுத்துள்ளார்கள். இவை சங்கம் மருவிய காலப் பகுதியில் இயற்றப்பட்டவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறநூல்கள். இவை தமிழர்களது அக்காலப் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துக் கூறுகின்றன.


தமிழர் விளையாட்டு விழா- யேர்மனி 2022! Top News
[Thursday 2022-07-14 08:00]

யேர்மனியில் தமிழர் விளையாட்டு விழா கொரோனா விசக்கிரிமியின் தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் தடைப்பட்டிருந்தது. இந்த வருடம் டோட்முன்ட் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.


இலங்கையிலே நடந்தேறிய கொடூர தமிழ் இன அழிப்பை நடாத்தியவர்களின் நண்பர்களாக நின்றது உலகம்- பேராசிரியர் சிவ தயாளன்! Top News
[Thursday 2022-07-14 08:00]

மதிப்பார்ந்த பிரம்ரன் மாநகர பிதா மற்றும் அதன் நிர்வாகக் காப்பாளர்களே! பேரன்பிற்குரிய உறவுகளே உலக வரலாற்றின் மிக கொடிய இனவழிப்புகள் பலவற்றிற்கு ஆவணப்படுத்திய சாட்சியங்கள் உண்டு. சிலவற்றிற்கு அவ்வாறான சாட்சியங்களும் ஆவணங்களும் இருப்பதில்லை . ஆனால் இக்கொடூர வலி பொதுவானது. இவ்வாறான வலி மிகுந்த இன அழிப்பே தமிழ் இனப்படுகொலையேயாகும் . கடந்த பல தசாப்தங்களாக திட்டமிட்டு சிங்கள மேலாதிக்கம் தமிழினத்தைப் படுகொலை செய்து வருகின்றது. அதன் உச்சமாக முள்ளிவாய்க்காலின் இறுதிப்போரில் லட்சக்கணக்கான எம் உறவுகள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட நினைவுகளை நாம் கனத்த இதயத்துடன் சுமந்து நிற்கின்றோம். அதற்கான நினைவாலயத்தை அமைக்கும் பணிக்காக நாம் இங்கு கூடி நிற்கின்றோம். இவ்வாறு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேரழிவுத் தமிழின நினைவாலயத்தை கனடாவில் அமைக்கும் பெரும் பணியின் வழிகாட்டியும், அதன் முக்கிய ஆலோசகருமான பேராசிரியர் சிவ தயாளன் அவர்கள் தொடக்கப் பேருரையாற்றினார்.


திரை இயக்குனர் டி ராஜேந்தர், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் வி.உருத்திரமாரன் சந்திப்பு! Top News Top News
[Friday 2022-07-08 16:00]

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்த தமிழக பன்முக கலைஞரான திரைப்பட இயக்குனர், ஈழத்தமிழர் ஆதரவாளர் திரு.டி.ராஜேந்தர் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது குணமடைந்து ஒய்வெடுத்து வருகின்றார்.


நியூயோர்க்கில் கண்காட்சியாக இனப்படுகொலை சினைவுச் சின்னம்! Top News
[Thursday 2022-07-07 13:00]

கனடா பிரம்டன் மாநகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நினைவுச்சின்னம் அமைய இருப்பதைப் பலரும் அறிந்திருப்பீர்கள். 2009ஆம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் சிங்கள பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இனப்படுகொலையின்போது லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்த தமிழ் உறவுகளின் நினைவையும் தியாகத்தையும் போற்றிப் பேணும் நோக்குடனும் பல்லின சமூகத்துக்கும் இனப்படுகொலை தொடர்பான செய்திகளைத் தெரியப்படுத்தும் இலக்குடனும் ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும் எனக் கருதிய தமிழ் சமூகத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவ்வேளை பிரம்டன் மாநகரம் அதற்கான இடத்தை நகரின் மையத்தில் தர முன்வந்திருந்தது.


தமிழகம்-இந்தியா : ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பும் தொல்.திருமாவளவனின் பதிலுரையும்! Top News
[Tuesday 2022-07-05 21:00]

ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் இந்தியா காத்திரமான பங்கினையாற்றுவதற்கு தமிழகம் உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்ற ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பதிலுரைத்துள்ளார். வட அமெரிக்க தமிழ்ச்சங்களின் பேரவையின் 35வது தமிழ் பெருவிழாவில், ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் தமிழகம் எத்தகைய பங்களிப்பினை செய்ய வேண்டும் எனும் தொனிப்பொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.


தமிழக மக்களின் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு மக்களுக்கு! Top News
[Tuesday 2022-07-05 21:00]

தமிழக அரசின் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் துணுக்காய பிரதேச செயலகத்திற்குட்பட்ட 572 குடும்பங்களுக்கும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட 417 குடும்பங்களுக்கும் இன்று பகிர்ந்தளிக்கபட்டிருந்தது. இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கு அவை நேற்று மாலை பகிர்ந்தளிக்கப்பட்டிருன்தது.


உரிமைக்காக எழு தமிழா! Top News
[Tuesday 2022-06-28 19:00]

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம் விடுதலை அடையும் வரை எழுவோம் என்ற முழக்கத்தோடு இன்று (27.06.2022) பெல்ஜியம் - புறுக்செல் நகர ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் கொட்டும் மழையிலும் மக்கள் ஒன்றுகூடி இனவெழுச்சியுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.


ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம்! Top News
[Tuesday 2022-06-28 08:00]

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்ற முழக்கத்துடன் ,பெல்சியம் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் எழுச்சியுடன் தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது! Top News Top News
[Sunday 2022-06-26 08:00]

இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய சிறப்பான நாள். முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு, அழித்துச் சிதைக்கப்பட்ட லட்சோப லட்சம் ஈழ்த்தமிழருக்கான நினைவுத் தூபியின் மாதிரிவடிவத்தை பிறம்ரன் பெருநகர் இன்று உத்தியோக பூர்வமாகப் பிரகடனப் படுத்திய பொன்னாள். இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே தமிழ் இனப்படுகொலைக்கான நினைவாலயத்தை கனடா பிரம்ரன் மாநகரசபை உருவாக்க முன் வந்தமை மிகுந்த மன மகிழ்வைத் தருகின்றது. கனடாவின் புகழ் பூத்த பூங்காவான செங்கூசி பூங்காவில் பிராம்ரன் நகரசபை இந்த நினைவாலயம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கி தமிழ் மக்களுக்கு தந்துள்ளது: கோடை காலத்தில் லட்சோப இலட்சம் மக்கள் கூடுகின்ற அழகிய பூங்கா இது.


கரும்புள்ளியான் கிராம அலுவலருக்கு மக்கள் கௌரவிப்பு! Top News
[Thursday 2022-06-16 21:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் கிராம மக்களால் கிராம அலுவலர் கௌரவிக்கப்பட்டார். இன்று காலை கிராம மக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு கரும்புள்ளியான் கிராம பொது நோக்கு மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. மக்களால் வீதிவழியாக நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டார் நிகழ்வின் கதாநாயகனான கிராம அலுவலர் . மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச மட்ட கிராம அமைப்பினர் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2021-2022! Top News
[Monday 2022-06-06 06:00]

ஓரிரு மாதங்களாக எமது அன்றாட வாழ்க்கை மீண்டும் ஒரு சுமுகமான நிலைக்கு மாறியமை நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி.


பொன் சிவகுமாரனின் 48 வது நினைவேந்தல் பிரதேச சபையினால் அனுஷ்டிப்பு! Top News
[Monday 2022-06-06 06:00]

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்;சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்;சலி செலுத்தப்பட்டது. அஞ்;சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார்.


“சிறிலங்காவில் சீன ஆதிக்கத்துடன் தமிழ் இனப்படுகொலை தீவிரமடைகிறது” - பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும்! Top News Top News
[Sunday 2022-05-29 08:00]

பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), 13வது ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 18 மே 2022 அன்று லண்டனில் உள்ள ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) கூடியது, கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வன்முறைச் சுழற்சிகளின் வரலாற்றையும் அதற்கான காரணிகளையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விடயங்கள் குறித்த “சிறிலங்காவில் சீன ஆதிக்கத்துடன் தமிழ் இனப்படுகொலை தீவிரமடைகிறது” எனும் தலைப்பிலான கண்காட்சியை ஏற்பாடு செய்தது.


நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது! Top News
[Tuesday 2022-05-24 06:00]

நாட்டுப்பற்றாளர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா

பிறப்பிடம்: ஆத்தியடி பருத்தித்துறை, தமிழீழம்.

வதிவிடம்: ஸ்வெபிஸ் ஹால் (Schwäbisch Hall-Germany)

நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள், பிள்ளைகள் மாவீரர் கப்டன் மொறிஸ்,மாவீரர் கப்டன் மயூரன், மாவீரர் பிரேமராஜன் மாஸ்டர், பேரனான மாவீரர் லெப்டினன்.


தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் 18.05.2022 கவனயீர்ப்பு! Top News
[Friday 2022-05-20 11:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவுநாள் 18.05.2022 புதன் கிழமை, ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் 100க் கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.


யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்! Top News
[Friday 2022-05-20 08:00]

கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் . வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப் போனது. 13 ஆண்டுகள் இதயம் கனக்க நாம் மெல்ல மெல்ல எழுகின்றோம். எம் உறவுகள் சிந்திய இரத்தம் எம் கண்களில் வழிய சிவந்த விழிகளோடு நாம் நியாயம் கேட்கப் புறப்படுவோம்.கொத்துக் கொத்தாய் குண்டுகள், செத்து செத்து விழுந்தனர் எம் சொந்தங்கள்.

Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா