Untitled Document
November 26, 2024 [GMT]
 
தீபவொளியின் தீபாவளி நாளினை கொண்டாடும் இந்துமக்கள்! Top News
[Monday 2022-10-24 08:00]

இன்று அதிகாலையில் இருந்து ஆலய சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களிலும் தீபாவளிபூஜை வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இவ் வழிபாட்டினை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் சிறப்பான ஆராதனைகள் காலை 06.00 மணிக்கு இடம்பெற்றன.


வட்டு இந்துவின் நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும்! Top News
[Sunday 2022-10-23 17:00]

யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும் இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் திறந்தவெளி முத்து அரங்கில் நடைபெற்றது. தேசியக்கொடி மற்றும் கல்லூரிக் கொடி ஏற்றிவைத்து நிகழ்வு ஆரம்பமானது. அதன்பின்னர் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து மேற்கத்தேய (band) இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.


துணுக்காய் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா! Top News
[Wednesday 2022-10-19 18:00]

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாடு பெருவிழா இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் விருந்தினர்கள் பிரதேச மக்களால் பாண்பாட்டு நடனங்கள் மற்றும் வாத்தியங்கள் முழங்க மண்டபத்திற்கு வெகு விமர்சையாக அழைத்து வரப்பட்டனர்.


முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்ற வாணி விழா! Top News
[Wednesday 2022-10-05 21:00]

முல்லைத்தீவு மாவட்ட செயலக 2022ம் ஆண்டுக்கான வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிக்கழகத்தினால் ஏற்பாட்டில் இன்று (05) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ( காணி) எஸ். குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் கலந்து சிறப்பித்தார்.


மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா! Top News
[Sunday 2022-10-02 08:00]

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா இன்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் செல்வி ந.ரஞ்சனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் பிரதேசத்தின் கலைஞர்களினால் மாநாட்டு மண்டபத்திற்கு விமரிசையாக அழைத்து வரப்பட்டனர்.


ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு Top News Top News
[Tuesday 2022-09-27 20:00]

ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 26-09-2022 அன்று, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்பு ஈகைச் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.


உடையார் கட்டு நகரில் மக்கள் ஒன்றுதிரண்டு திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி! Top News
[Monday 2022-09-26 20:00]

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு உடையார் கட்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் மக்களின் நின்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.


மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் விற்பனை சந்தை! Top News
[Monday 2022-09-26 20:00]

உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் விற்பனைச் சந்தை இன்று திங்கள் கிழமை (26) மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த பிரதேச விற்பனைச் சந்தையின் ஆரம்ப நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் சம்பிராதயபூர்வமாக நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.


தியாக தீபம் திலீபனுக்கு மல்லாவியில் அஞ்சலி! Top News
[Friday 2022-09-23 18:00]

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனி, மல்லாவி பகுதியை வந்தடைந்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டிலே கடந்த எட்டு நாட்களாக தமிழர் தாயகமெங்கும் பவனி வரும் தியாக தீபம் லெப்டினட் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்றைய தினம் மல்லாவி நகரை வந்தடைந்தது.


தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்!
[Monday 2022-09-19 21:00]

'பார்த்தீபன் இன்னமும் பசியோடு இருக்கின்றான்...' என்ற உணர்வினை நெஞ்சினில் தாங்கியவாறு தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களை நினைவிருத்தி விளையாட்டு வீரர்கள் பலர் பிரித்தானியாவில் ஆடுகளங்கண்டனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு துறை அமைச்சினால் 7வது தடவையாக முன்னெடுக்கப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டியில் பிரித்தானியாவின் பல கழகங்கள், குழுக்கள் பங்கெடுத்து வெற்றிகளை தமதாக்கி கொண்டனர்.


"சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது" - சீமான் அறிக்கை!
[Friday 2022-09-16 21:00]

நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறுமாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பலவற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். ‘நீதிமன்றங்கள், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்’ என்கிற அவரது வாதம் ஏற்கப்படவேண்டிய ஒன்றுதான். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிற நீதிமன்றங்கள் எந்தத் தவறும் இழைத்துவிடக்கூடாது என்கிற நோக்கம் மிகச்சரியானது.


தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று மல்லாவியில் அனுஸ்டிப்பு! Top News
[Friday 2022-09-16 06:00]

பாரத தேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தன் வாழ்வை தமிழரின் விடுதலைக்காக ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும். தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் இடம்பெறுகிறது.


மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நிறுவன ஊழியர்களுக்கெதிரான அச்சுறுத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! Top News
[Friday 2022-09-16 06:00]

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட தரப்புகள் மீது அரச புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளினாலும் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து அவசர விவாதம் நடத்தக் கோரி, தமிழர் உரிமைக் குழுமம் (TRG) மற்றும் சர்வதேச சமூகங்களின் அமைப்பு (ICO) ஆகியன ஐ.நா பாதுகாப்புச் சபையை வலியுறுத்துகின்றன! Top News
[Wednesday 2022-09-14 20:00]

மார்க்கம் கனடா – இன்றைய தினம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 51வது வழமையான கூட்டத்தொடரின், நிகழ்ச்சி நிரற் பிரிவு 2ன் கீழ் வரும் பொது விவாதத்தில், மனித உரிமைகள் உயர் ஆணையரின், வாய்மொழி மேல் விளக்கம் (Oral Update) தொடர்பில் காணொளி மூல உள்ளீடொன்றினைச் சர்வதேச சமூகங்களின் அமைப்பு சார்பாகத் தமிழர் உரிமைக் குழுமம் செய்தது.


ஐ.நாவில் சிறிலங்கா எதிர் (நா) தமிழீழ அரசாங்கம் !! இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் !! - ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு! Top News
[Monday 2022-09-12 21:00]

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்.


துன்னாலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியுடன் நிறைவு! Top News
[Monday 2022-09-12 18:00]

யாழ் துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கரவெட்டி பங்குத்தந்தை ஐஸ்ரின் அவர்களால் ஆலய வாசலிலே மெழுகு திரிகள் ஆசீர்வதிக்கப்பட்டு பவனியாக ஆலயத்தினுள் வந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிறிலங்கா பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்க சர்வதேச குமுகம் முன் வரவேண்டும் ICC! Top News
[Monday 2022-09-12 18:00]

சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணை வேண்டும், ICC அதற்கு சர்வதேச குமுகம் ஒத்துழைக்க வேண்டும் எனும் மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் கருத்துக்கு வலுச்சேர்க்க தொடரும் 10ம் நாள் அறவழிப் போராட்டம்.


காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்! Top News
[Friday 2022-09-02 06:00]

சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30 செவ்வாயன்றுஇலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.


அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் லண்டனில் நடைபெற்ற கவயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! Top News
[Wednesday 2022-08-31 21:00]

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரி தாயகத்தில் இடம்பெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக லண்டனில் ஒன்றுகூடிய தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசினால் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டமானது உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெற்றது.


வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே ? பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன்! Top News
[Wednesday 2022-08-31 21:00]

தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்ற வாசகத்தினை தாங்கியவாறு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியுடன் பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன் பலரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளான். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான நேற்று (ஓகஸ்ற்-30 செவ்வாயன்று) இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தலைநகர் பரிஸ் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.


மல்லாவி நகரில் பண்டாரவன்னியன் 219ஆவது வெற்றி நாள் நிகழ்வுகள்! Top News
[Friday 2022-08-26 06:00]

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 219 ஆம் ஆண்டு வெற்றிநாள் 25.08.2022இன்று முல்லைத்தீவு மல்லாவி நகரில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.


இன்று எமது தொடர் போராட்டத்தின் 2009 வது நாள். இந்த 2009 (ஆண்டு) எண்ணிக்கை நமது துணிச்சலான வரலாற்றின் முடிவாகும்! Top News Top News
[Wednesday 2022-08-24 07:00]

இந்த 2009 இனப்போரில் 146,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், 90,000 பெண்கள் விதவைகள் ஆனார்கள், 50,000 குழந்தைகள் ஆதரவற்றோர் ஆனார்கள், 25,000 தமிழர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம். எனவே இன்று இரண்டு வழிகளில் எமக்கு ஒரு சோகமான நாள், ஒன்று நமது துணிச்சலான 2009 வரலாற்றின் முடிவு, மற்றது நமது ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை எதிர்பார்த்து தொடர்ந்து போராடி வருவது.


செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு: யேர்மனி கம்பேர்க், சோலிங்கன் நகரங்களில்..! Top News
[Monday 2022-08-22 20:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர். குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.


மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் அறுவடை விழா! Top News
[Thursday 2022-08-18 16:00]

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் இயற்கையான முறையில் செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய அறுவடை விழா இன்று(17) மாலை 3.00மணிக்கு இடம்பெற்றது. மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ந.ரஞ்சனா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.


உலக உணவு திட்டத்தினால் உதவித்தொகைகள் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச பிரிவுகளில் வழங்கி வைப்பு! Top News
[Wednesday 2022-08-17 21:00]

உலக உணவு திட்டத்தினால் உதவித்தொகைகள் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச பிரிவுகளில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், மாற்று வலுவுள்ளோர்கள் என 256 பயனாளிகள் உள்வாங்கப்பட்டு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் முதற்கட்டமாக பயனாளிகளுக்கு 15000 ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டிருந்ததுடன் மூன்று மாதகாலங்களுக்கு இவ் உதவித்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா! Top News
[Wednesday 2022-08-17 21:00]

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. உதவி பிரதேச செயலாளர் திரு .ம.ஜெபமயூரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் கௌரவ விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். சம் நேரத்தில் திருவள்ளுவர் தோற்றத்துடன் நிகழ்விற்கு வருகை தந்திருந்த பள்ளி சிறுவன் பல்லக்கில் தூக்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்கு விருந்தினர்களுடன் அழைத்து வரப்பட்டனர்.


யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Wednesday 2022-08-17 21:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர். குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.


மாந்தை கிழக்கும் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Tuesday 2022-08-09 08:00]

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அலுவலக தேவைக்கு வைக்கப்பட்டிருந்த எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் எடுத்துச்சென்று பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கிலும் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


செட்டிகுளத்தில் அறநெறி ஆசிரியகள் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு! Top News
[Sunday 2022-08-07 21:00]

வவுனியா செட்டிகுளம் மாணிக்கபண்ணை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத மாணிக்க ஈஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அலங்கார உற்சவ காலத்தில் கலைநிகழ்வுகளை வழங்கிய அறநெறி மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(07.08.2022) காலை ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.


மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்! Top News Top News
[Saturday 2022-08-06 20:00]

மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் காண்பிக்கப்படும் மேதகு திரைப்படக் காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. இதற்கான முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். "Methagu" is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence.

Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா