Untitled Document
September 19, 2024 [GMT]
புத்தகத் திருவிழாவில் வயநாடு நிவாரண உண்டியல்!
[Monday 2024-08-05 06:00]

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7 வது புத்தகத் திருவிழா மாமன்னர் கல்லூரி விளையாட்டு திடலில் நடந்து வருகிறது. நக்கீரன் உட்பட ஏராளமான பதிப்பகங்களின் புத்தகங்கள் லட்சக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. தினசரி மாலை நேரங்களில் சிறப்பு அழைப்பாளர்களின் நிகழ்ச்சிகள், சிறுவர்களை கவரும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


பைக் டாக்ஸி ஓட்டுநர்களை குறிவைக்கும் புது மோசடி!
[Monday 2024-08-05 06:00]

ரேபிட்டோ, ஓலா உள்ளிட்ட ஆன்லைன் வாகன சேவைகளில் பைக் டாக்ஸி ஓட்டுபவர்களை குறிவைத்து ஒரு கும்பல் நூதனமாக பணம் பறித்து வருவதாக பைக் டாக்சி ஓட்டுநர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வெளியான வீடியோவில், ''எல்லோருக்கும் ஒரு முக்கியமான விஷயம். ஒரு பெரிய ஸ்கேம் நடந்திருக்கிறது. ஏதோ ஒரு லொகேஷனுக்கு வண்டியை புக் பண்ணிட்டு அங்கு சென்ற பிறகு என்னுடைய சிஸ்டர் வராங்க அவர்களை இந்த இடத்தில் ட்ராப் பண்ணனும் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்திற்கு போவதற்கு முன்னாடி நான் ஜி-பேயில் உங்களுக்கு 3000 ரூபாய் அனுப்பி வைக்கிறேன். அவர்களிடம் ஜி-பே கிடையாது, கார்டும் கிடையாது. நீங்க அவங்கள அங்க இறக்கி விட்டுட்டு ஏடிஎம்ல காசு எடுத்து கொடுத்துடுங்க என்று கேட்கிறார்கள்.


கோவில் சுவர் இடிந்து 9 சிறார்கள் உயிரிழப்பு: மோடி இரங்கல்!
[Monday 2024-08-05 06:00]

மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து ஒன்பது சிறார்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் ஹர்தவுல் பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் பலர் சிக்கிக் கொண்ட நிலையில் இதுவரை 9 சிறார்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


சிதைந்த நிலையில் சிறுமியின் உடல்: அடையாளம் தெரியாமல் 4 குடும்பத்தினர் உரிமை கேட்டு வரும் சோகம்!
[Friday 2024-08-02 16:00]

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த சிறுமியின் உடலை பார்த்து 4 குடும்பத்தினர் உரிமை கேட்டு வரும் சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300-க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


"கோடி ரூபாய் கொடுத்தாலும் ராகுல் காந்தி தைத்த செருப்பை கொடுக்க மாட்டேன்" - காலணி தைக்கும் தொழிலாளி!
[Friday 2024-08-02 16:00]

ராகுல் காந்தி தைத்த செருப்பை அதிக விலைக்கு கேட்டும் அதனை காலணி தைக்கும் தொழிலாளி விற்க மறுத்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சுல்தான்பூரில் வசிக்கும் காலணி தைக்கும் தொழிலாளி ராம் சைத். இவர், ஏழ்மையின் காரணமாக தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு தகவல் தெரிவித்திருந்தார்.


வயநாட்டில் நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது? - ISRO வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள்!
[Friday 2024-08-02 16:00]

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து ISRO செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதிகனமழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேம்பாடி போன்ற இடங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்பட்ட நிலச்சரிவில் உயரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது.


பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு - புதையுண்டவர்களை தேடுவதற்கு கருவியின் உதவியை நாடும் மீட்பு குழுவினர்!
[Friday 2024-08-02 16:00]

கடும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன வயநாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலமான கேரளாவில் கனமழையால் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல குடும்பங்கள் உயிர் உடமை இன்றி தவித்து நின்கின்றனர். செவ்வாய்கிழமை அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் பலியாகியுள்ளனர்.


வயநாடு நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
[Friday 2024-08-02 08:00]

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் கடந்த ஜூலை 30 தேதி (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.


பலி எண்ணிக்கை 295 ஆக உயர்வு: வயநாடு விரைந்த ராகுல், பிரியங்கா காந்தி!
[Friday 2024-08-02 08:00]

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மலைகளின் பிரதேசமான கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 30ம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இதுவரை நிலச்சரிவில் 295 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


நீட் விவகாரம்: வாய் திறந்த சிபிஐ - தயாரான குற்றப்பத்திரிகை!
[Friday 2024-08-02 08:00]

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.


293 பேர் பலி: தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - முதல்வர் பினராயி விஜயன்!
[Thursday 2024-08-01 18:00]

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழு என பல்வேறு பிரிவு படைகள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மன அழுத்தத்துடன் இருக்கும் வயநாடு மக்கள்: மாவட்ட ஆட்சியரின் கோரிக்கை!
[Thursday 2024-08-01 18:00]

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று முன்தினம் (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு சூரல்மலா வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை மீட் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்னும் மூன்று நாட்களுக்கு கேரளாவில் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவில் பெரும் தாக்கத்தை வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த நிலச்சரிவில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


“மரபணு மாற்று விதைகளை அனுமதிக்காதே” - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
[Thursday 2024-08-01 18:00]

சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வேளாண் உற்பத்தி பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும், எம்எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும், மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக்கூடாது, வேளாண் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


ராகுல் காந்தி மது போதையில் நாடாளுமன்றம் வருகிறாரா? கங்கனா ரணாவத் சர்ச்சை பேச்சு!
[Thursday 2024-08-01 18:00]

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போதையில் நாடாளுமன்றம் வருகிறாரா என்று எம்பி கங்கனா ரணாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுகையில் இந்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.


வயநாடு நிலச்சரிவு: தொழிலதிபர் கௌதம் அதானி ரூ.5 கோடி நன்கொடை!
[Thursday 2024-08-01 06:00]

வயநாடு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள தொழிலதிபர் கௌதம் அதானி, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது, ​​குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருவதால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!
[Thursday 2024-08-01 06:00]

காவிரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு தொடர் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் 43 மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. நேற்று மாலை மேட்டூர் அணை நீர்மட்டம் 119.02 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்துள்ளது.


18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
[Thursday 2024-08-01 06:00]

தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் இரவு 10 மணி வரை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10:00 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் தர்மபுரி, திருச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


வயநாடு நிலச்சரிவு: களத்தில் இறங்கி உதவும் மலையாள சினிமா பிரபலங்கள்!
[Wednesday 2024-07-31 18:00]

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.


"கற்பனையில் கூட இப்படி நடந்திருக்காது" - மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உருக்கம்!
[Wednesday 2024-07-31 18:00]

வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க சென்ற கோயம்புத்தூர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது.


நிலச்சரிவில் சிக்காமல் மேற்கூரையில் அமர்ந்து குடும்பத்துடன் உயிர் தப்பிய வியாபாரி!
[Wednesday 2024-07-31 18:00]

வயநாடு பயங்கர நிலச்சரிவில் சிக்காமல் லொட்டரி வியாபாரி ஒருவர் தனது குடும்பத்துடன் உயிர் தப்பியுள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.


கேரள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தமிழர்கள் பலி: 150ஐத் தாண்டிய உயிரிழப்பு!
[Wednesday 2024-07-31 18:00]

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாநிலம் கேரளாவின் முக்கிய பகுதியான வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு தேசத்தையே உலுக்கியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பலியான நிலையில் தற்போது 163ஆக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


புரட்டிப்போட்ட நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 122-ஆக உயர்வு!
[Wednesday 2024-07-31 06:00]

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மூன்று நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் மாயமாகியுள்ள நிலையில், இதுவரையான பலி எண்ணிக்கை 122 என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து பெய்த பேய் மழையை அடுது மூன்று பகுதிகளில் எதிர்பாராத நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ராணுவமும் களமிறங்கியுள்ளனர்.


மதுவுக்கு அடிமையான மகன்: விரக்தியில் தாய் தற்கொலை!
[Wednesday 2024-07-31 06:00]

மதுவிற்கு அடிமையான மகனால் தாய் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது. ஈரோடு, ஈ.பி.பி. நகர், ஜனதா காலனியை சேர்ந்தவர் காவேரி (60). இவர் தனது கணவர் தேவராஜன் (67) மற்றும் மகன் துரைராஜ், மருமகன் தீபா, பேரன் ஆகியோருடன் வசித்து வந்தார். மகன் துரைராஜ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர் மதுவுக்கு அடிமையாகி, வருமானம் முழுவதையும் மது குடிக்கச் செலவு செய்து வந்தார். இதனால், தாய் காவேரி கடும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.


தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!
[Wednesday 2024-07-31 06:00]

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இங்கு, உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.


வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பொதுமக்களுக்கு ரத்தம் கொடுக்க தயார்: சீமான் அறிவிப்பு!
[Tuesday 2024-07-30 17:00]

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


போர்க்கால அடிப்படையில் கேரளாவுக்கு நிவாரண நடவடிக்கை வேண்டும் - த.வெ.க தலைவர் விஜய்!
[Tuesday 2024-07-30 17:00]

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட செய்தி அறிந்து வருத்தப்படுவதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவிற்கு தற்போது வரை 84 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவு சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது.


பேரழிவுக்கு ஆளான கேரள மாவட்டம்: 63 பேர் பலி - நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்!
[Tuesday 2024-07-30 17:00]

கேரளாவில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் வயநாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியான நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.


அதிகாலையிலேயே நெஞ்சை உலுக்கிய ரயில் விபத்து!
[Tuesday 2024-07-30 17:00]

ஜார்கண்டில் தடம் புரண்ட சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்திய மாநிலமான ஜார்கண்ட், சக்ராதர்பூர் அருகே சரக்கு ரயில் ஒன்று அதிகாலையிலேயே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரயிலின் இரு பெட்டிகள் கவிழ்ந்தன. அப்போது, அந்த வழியாக மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதியது. இதனால், விரைவு ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன.

NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா