Untitled Document
September 19, 2024 [GMT]
பாரிஸ் ஒலிம்பிக்: பதக்கத்தை தட்டிச் சென்ற நீரஜ் சோப்ரா!
[Friday 2024-08-09 07:00]

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.


அதிர்ச்சியை கொடுத்த சிறுமியின் வாக்குமூலம்: இன்ஸ்டா ரீல்ஸ் செய்ய அழைத்து சென்று நிகழ்த்தப்பட்ட கொடூரம்!
[Friday 2024-08-09 07:00]

இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுப்பதாக கூறி அழைத்துச் சென்று பள்ளி மாணவியை இளைஞன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோணம்காடு பகுதியில் வசித்து வந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் திடீரென மாயமானார்.


சட்டவிரோதமாக மலையேற்றம்: வெள்ளியங்கிரி மலையில் இளைஞர் மாயம்!
[Friday 2024-08-09 07:00]

கோவை மாவட்டத்தின் அடையாளங்களில், வெளியூர் மக்கள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது வெள்ளியங்கிரி மலை. ஏழு மலை, எழில் கொஞ்சும் இயற்கை என்று ஆன்மிகத்தைக் கடந்தும் வெள்ளியங்கிரி மலையை ரசிக்க பல காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. அவ்வளவு அழகைக் கொண்டுள்ள வெள்ளியங்கிரி மலையில் ஆபத்தும் நிறைந்து இருக்கிறது என்று எச்சரிக்கை செய்கின்றது வனத்துறை. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சோசியல் மீடியாக்கலில் வரும் டிராவல் வீடியோக்களை பார்த்து இளைஞர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு படையெடுத்து வருவது குறைந்தபாடில்லை.


'தனியொருவன்' தொடர்ந்த வழக்கு: ஓலா நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம்!
[Thursday 2024-08-08 18:00]

ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு கொடுக்குமாறு ஓலா நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.


'நீலகிரியில் நிலச்சரிவு அபாயமுள்ள இடங்கள்?' - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
[Thursday 2024-08-08 18:00]

கேரளாவில் பெய்த அதீத கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து பல நாட்களாக அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது.


திருச்சியில் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு!
[Thursday 2024-08-08 18:00]

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்துகின்றனர்.


பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை காண பிரான்ஸ் சென்றார் அமைச்சர் உதயநிதி!
[Thursday 2024-08-08 18:00]

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை காண தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் பாரீஸ் சென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் 33 -வது ஒலிம்பிக் போட்டியை காண இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு 10 மணிக்கு விமானம் மூலம் பாரீஸ் சென்றார்.


டெலிகிராமில் முதுநிலை நீட் வினாத்தாள் கசிவா?- தேசிய தேர்வு வாரியம் கொடுத்த விளக்கம்!
[Thursday 2024-08-08 06:00]

இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் எழுந்து, தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அதேநேரம் ஜூன் மாதம் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு சர்ச்சைகள் காரணமாக தேர்வுநாள் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.


பாலியல் தொல்லை: அரைகுறை ஆடையுடன் அடித்து இழுத்து வரப்பட்ட ஆசிரியர்!
[Thursday 2024-08-08 06:00]

விருத்தாசலம் அருகே தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தலைமை ஆசிரியரை கிராம மக்கள் அடித்து இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் செயல்படும் தனியார்ப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் பென்னிக்ஸ் என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக எழுந்த சர்ச்சை அடிப்படையில் கிராம மக்களும் பெற்றோர்களும் இணைந்து அவரை அடித்து இழுத்து வந்தனர்.


23 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!
[Thursday 2024-08-08 06:00]

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகப் பரவலாக மழை பொழிந்து வருகிறது.


கை, கால் வீக்கத்துடன் பரவும் புதுவித காய்ச்சல்: அச்சத்தில் ஆந்திர மக்கள்!
[Wednesday 2024-08-07 18:00]

ஆந்திர பிரதேச மாநிலத்தில் கை, கால் வீக்கத்துடன் புதுவித காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் புதுவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கை, கால்கள் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.


விமானங்களில் தேங்காய் எடுத்து செல்ல முடியாது: என்ன காரணம்?
[Wednesday 2024-08-07 18:00]

விமான பயணத்தின் போது தேங்காய் எடுத்து செல்ல ஏன் அனுமதியில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். விமானத்தில் நாம் பயணம் செய்யும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிலும், நாம் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு விமான நிறுவனங்கள் சில நிபந்தனைகளை விதித்துள்ளன. இதில் சில பொருட்கள் விமானத்தில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.


வளர்ப்பு கிளியால் நிலச்சரிவில் உயிர்தப்பிய குடும்பம்!
[Wednesday 2024-08-07 18:00]

வயநாடு நிலச்சரிவில் வளர்ப்பு கிளி எச்சரிக்கை கொடுத்ததால் குடும்பமே உயிர் தப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம்: அரசு ஊழியரின் சொத்தை பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்!
[Wednesday 2024-08-07 18:00]

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய மாநிலமான ஒடிசாவில் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய பிரதீப் குமார் ராத் என்ற அரசு ஊழியர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளார். இவர் கடந்த 1991 -ம் ஆண்டில் ரூ.2000 மாத சம்பளத்துடன் அரச பணியில் சேர்ந்துள்ளார். இதன் பின்னர் 2011 -ம் ஆண்டில் உதவி பொறியாளராக பணியாற்றியுள்ளார்.


பாஜக மாவட்டத் தலைவர் மீது தாக்குதல்: நகரத்தலைவர் மற்றும் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்!
[Wednesday 2024-08-07 06:00]

புதுக்கோட்டை மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் நகரத்தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ஜெகதீசன் நேற்று திங்கட்கிழமை மாலை அறந்தாங்கியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


ஐந்து நாட்களாக தேடியும் கிடைக்காத மீனவர்: நிவாரணம் அறிவித்த முதல்வர்!
[Wednesday 2024-08-07 06:00]

அண்மையில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சில மீனவர்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.


குளிர்சாதன பெட்டியை திறந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
[Wednesday 2024-08-07 06:00]

சென்னை ஆவடியில் குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை பரவலாக மழைக்கான வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.


வயநாடு மக்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவும் நீடா அம்பானி!
[Tuesday 2024-08-06 18:00]

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) உடனடி நிவாரணங்களை அறிவித்துள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


ஆனந்த் அம்பானி தேனிலவிற்கு சென்ற ஹோட்டலின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?
[Tuesday 2024-08-06 18:00]

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது மனைவியுடன் தேனிலவு சென்றுள்ள ஹோட்டலின் ஒரு நாள் வாடகை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, கடந்த ஜூலை 12 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. உலகின் மிக விலையுயர்ந்த திருமணத்தை நடத்தி ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்து கொண்டார்.


"அரசு மீது தான் கோபம் இருக்கனும்" - மானை எச்சரித்த காயத்ரி ரகுராம்!
[Tuesday 2024-08-06 18:00]

காவல்துறை அதிகாரிகளை சீமான் தரக்குறைவாக பேசிய நிலையில், அவர்களுக்கு மரியாதை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். நடைபெற்றது. தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இன்னும் சில ஆண்டுகளில் கடலில் மூழ்கப்போகும் சென்னை: வெளியான அதிர்ச்சி தகவல்!
[Tuesday 2024-08-06 18:00]

கடல் மட்டம் உயர்வதால் சென்னையின் பல பகுதி நீரில் மூழ்கும் என அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) தெரிவித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கடல் மட்டம் உயர்வதால், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, ஹல்டியா, பனாஜி, பூரி, உடுப்பி, பரதீப், யானம் போனடற 15 முக்கிய நகரங்களில் பாதிக்கப்படும் என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


வயநாட்டுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த தமிழக வெற்றிக் கழகத்தினர்!
[Tuesday 2024-08-06 06:00]

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வத்தலக்குண்டு தமிழக வெற்றிக் கழக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை லாரி மூலம் திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


கஸ்டடியில் இருந்த ரவுடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்- 3 போலீசார் சஸ்பெண்ட்!
[Tuesday 2024-08-06 06:00]

கடலூர் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரவுடி சூர்யா என்பவர் பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடினார். பின்னர் அவர் பட்டாக்கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் சென்ற பிரகாஷ் என்பவர் மீது கத்திபட்டு படுகாயம் அடைந்தார். ரவுடி சூர்யாவை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓடினார்.


நடுக்கடலில் மோதிக்கொண்ட இருதரப்பு மீனவர்கள்: மீண்டும் விவகாரமாகும் 'சுருக்கு வலை'!
[Tuesday 2024-08-06 06:00]

நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பழவேற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஆழ்கடல் பகுதியில் அத்துமீறி வந்து காரைக்கால், நாகை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு மூலம் சுருக்கு வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பழவேற்காடு பகுதி மீனவர்கள் எல்லை மீறி மீன் பிடித்த மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பினரும் நடுக்கடலில் மோதிக்கொண்டனர்.


மீண்டும் கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது புகார்!
[Monday 2024-08-05 18:00]

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில் கரூர் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பாடியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து பேசிய சீமான், "கள்ளச்சாராயத்தை விற்றவர்களை எல்லாம் கைது செய்யாமல் மேடையில் பாடியதற்காக கைது செய்கிறீர்கள். எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளீர்கள்? என்னை விடவா அவர் அதிகமாக பேசிவிட்டார்.


வயநாட்டை உலுக்கிய பாரிய நிலச்சரிவு: உயரும் பலி எண்ணிக்கை!
[Monday 2024-08-05 18:00]

வயநாட்டில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாதவர்களின் உடல் ஒரே இடத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர். இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கையானது 380 ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


யாத்திரை பக்தர்கள் 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!
[Monday 2024-08-05 18:00]

இந்திய மாநிலம் பீகாரில், காரில் பயணித்த கன்வார் யாத்திரை பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்வார் யாத்திரை என்பது வடமாநிலங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும். பீகார் மாநிலம் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில், பக்தர்கள் சிலர் ஜலஅபிஷேகத்திற்காக காரில் பயணித்தனர்.


மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை: வயநாட்டில் கண்கலங்க வைத்த சம்பவம்!
[Monday 2024-08-05 18:00]

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தனது மகளின் ஒரு கைக்கு மட்டும் இறுதிச்சடங்கு செய்த தந்தையின் துயரம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா