Untitled Document
September 19, 2024 [GMT]
ஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபர்: தடைப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா பணிகள்!
[Monday 2024-08-12 06:00]

பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன் நபர் ஒருவர் ஈபிள் கோபுரத்தின் மீது ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கின் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஒரு திடுக்கிடும் சம்பவம் நடந்தது. சட்டை இல்லாமல் நபர் ஒருவர் ஈபிள் டவரை ஏறிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.


முதல் முறையாக செவித்திறன் குறைபாடுடன் மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டம் வென்று பெண் சாதனை!
[Monday 2024-08-12 06:00]

முதல் செவித்திறன் குறைபாடுடைய பெண் மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணத்தில், மியா லெ ரூக்ஸ்(Mia le Roux) முதல் செவித்திறன் குறைபாடுடைய பெண்மணியாக மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டத்தை வென்றுள்ளார். அதிக சர்ச்சை மற்றும் இணைய துன்புறுத்தல் ஆகியவை நிறைந்த போட்டியின் பின்னர் இந்த வெற்றி கிடைத்துள்ளது.


ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற 2 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு!
[Monday 2024-08-12 06:00]

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற 2 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒரு துயரமான சம்பவத்தில் ஆங்கில கால்வாயை சிறிய படகு மூலம் கடக்க முயன்ற இரண்டு புலம்பெயர்ந்தவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நீரோட்ட பகுதியில் இந்த சிறிய படகின் துயரகரமான சம்பவம் அரங்கேறி இருப்பதாக பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.


பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டு நீங்கள் தூக்கிலிடப்படலாம் - எலான் மஸ்க் பதிவு!
[Sunday 2024-08-11 18:00]

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பிரித்தானியாவில் நடந்து வரும் கலவரம் குறித்து பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு வார காலமாக பிரித்தானியாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல நகரங்களில் கலவரங்கள் வெடித்ததால் அமைதியின்மை நிலவுகிறது. ஒன்லைன் வழியாக வெறுப்பினை தூண்டியதாக கைது செய்யப்பட்ட ஜோர்டான் பார்லர் என்ற நபர் சிறைப்படுத்தப்பட்டார்.


கனடாவின் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தில் புதிய சீர்திருத்தம்!
[Sunday 2024-08-11 18:00]

கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் புதிய சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடாவில் விவசாயம், மீன் மற்றும் கடல் உணவு பதப்படுத்தப்படும் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்ய புதிய தொழிலாளர் நெறிமுறையை கனேடிய அரசாங்கம் உருவாக்கவுள்ளது.


இன்றுடன் நிறைவடையும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்!
[Sunday 2024-08-11 18:00]

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. உத்தியோகப்பூர்வமான நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் சில போட்டிகள் 24 ஆம் திகதியும் இடம்பெற்றன.


திடீரென லண்டன் சென்று ஒரே நாளில் 15 உலக சாதனைகளை முறியடித்த நபர்!
[Sunday 2024-08-11 18:00]

திடீரென லண்டனில் உள்ள கின்னஸ் உலக சாதனைகளின் தலைமையகத்திற்குச் சென்று டேவிட் ரஷ் என்பவர் ஒரே நாளில் 15 உலக சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். அமெரிக்காவில் இடாஹோ மாகாணத்தை சேர்ந்த இவர் தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளுக்கு மேல் முறியடித்துள்ளார்.


குர்ஸ்க் பகுதியில் தொடரும் சண்டை: அதிபயங்கர வெற்றிட குண்டுகளை பயன்படுத்தும் ரஷ்யா!
[Sunday 2024-08-11 07:00]

போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகள் வெற்றிட குண்டுகளை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக உக்ரைனிய தரைப்படை மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட ஆயுதப் படை வீரர்கள் சர்வதேச எல்லையை கடந்து சுமார் 30 கிலோ மீட்டர் வரை ரஷ்ய நாட்டின் பரப்பளவுக்குள் உட்புகுந்துள்ளனர்.


சீனாவில் மிகப்பெரிய கப்பல் வெடிப்பு விபத்து!
[Sunday 2024-08-11 07:00]

சீன துறைமுகத்தில் மிகப்பெரிய கொள்கலன் கப்பலில் வெடிப்பு விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகவும் பரபரப்பான துறைமுகமான ஷாங்காயின் நிங்போ-ஜூஷானில்(Ningbo-Zhoushan Port) வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பெரிய கொள்கலன் கப்பலில் பயங்கரமான வெடிப்பு ஏற்பட்டது. வெளியாகியுள்ள வீடியோக்களில், கப்பலை ஒரு பெரிய நெருப்புப் பந்து சூழ்ந்த இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.


மாலத்தீவுக்கு இந்தியா உதவிக்கரம்!
[Sunday 2024-08-11 07:00]

குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மையில் மாலத்தீவு நாட்டிற்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டது. இது மாலத்தீவின் சுற்றுலா துறையில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே காரசார விவாதத்தை கிளப்பியது.


கனடாவில் போதைப்பொருளுடன் இலங்கை தமிழர் கைது!
[Saturday 2024-08-10 18:00]

கனடாவில் பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ப்ளூ வோட்டர் பாலத்தில் கிட்டத்தட்ட 120 கிலோகிராமுக்கு அதிகமான கொக்கைனுடன் இலங்கையர் கைது செய்யப்பட்டார். 42 வயதுடைய டிரக் சாரதியே வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.


பிரான்ஸில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு!
[Saturday 2024-08-10 18:00]

பிரான்ஸில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் தொடர்ச்சியாக பதிவாகி வரும் மோசமான காலநிலை காரணமாக கோதுமை விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1983 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ் இதுபோன்ற ஒரு நிலமைக்கு முகம் கொடுத்துள்ளது. 25.17 மில்லியன் தொன்களால் இந்த உற்பத்தி நடப்பு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது.


கனேடிய மாகாணமொன்றில் பதப்படுத்தப்பட்ட தேங்காயில் கிருமிகள்!
[Saturday 2024-08-10 18:00]

கனடாவில், கிர்ணி பழம் மற்றும் நொறுக்குத்தீனிகளில் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், சில குளிர் பானங்களில், லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமிகள் குறித்து செய்திகள் வெளியாகின. சமீபத்தில், கனடாவில் பானம் ஒன்றில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த பானத்தை அருந்திய 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 2 பேர் உயிரிழந்துள்ளார்கள்.


பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் பலி!
[Saturday 2024-08-10 18:00]

காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலையை இலக்குவைத்தே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.


பிரேசில் விமான விபத்தில் 62 பேர் உயிரிழப்பு: உள்ளூர் ஊடகம் வெளியிட்ட பரபரப்பு காட்சிகள்!
[Saturday 2024-08-10 06:00]

பயணிகள் விமானம் ஒன்று பிரேசிலில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரேசிலின் சாவ் பாலோவில் (Sao Paulo) பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. விபத்தின் போது விமானத்தில் 58 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் இருந்ததாக கூறப்படுகிறது.


பிரித்தானிய கலவரம் தொடர்பான சமூக ஊடக பதிவு: சிறைத்தண்டனை எதிர்கொள்ளும் முதல் நபர்!
[Saturday 2024-08-10 06:00]

சமூக ஊடகங்களை பயன்படுத்தி பிரித்தானியாவில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை ஊக்குவித்த குற்றத்திற்காக முதல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறார்களுக்கான கோடைகால முகாமில் Axel Rudakubana என்ற 17 வயது சிறுவன் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்ததில் இருந்து நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.


விண்வெளி குப்பையாக மாறிய சீன ராக்கெட்: 300 துண்டுகளாக வெடித்து சிதறல்!
[Saturday 2024-08-10 06:00]

சீன ராக்கெட் 300 துண்டுகளாக சிதறி விண்வெளி குப்பையாக மாறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மிகப்பெரிய இணைய சேவைக்கான திட்டமான 18 Qianfan செயற்கைகோள் தொகுப்பை ஏவிய லாங் மார்ச் 6ஏ ராக்கெட் வெடித்து சிதறியதில் 300-க்கும் அதிகமான விண்வெளி குப்பைகள் உருவாகியுள்ளது என்று அமெரிக்காவின் விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான (USSPACECOM) தெரிவித்துள்ளது.


கனடாவில் மாயமான தமிழர்: குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை!
[Friday 2024-08-09 17:00]

கனடாவின் பிரம்டனில் யோகராஜ் என்ற நபர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஒரு வார காலமாக குறித்த நபரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி க்ரிக் மற்றும் விட்டொப்பி வீதிகளுக்கு அருகாமையில் யோகராஜ் என்பவரை இறுதியாக பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.


விடுதலைப் புலிகளின் சுவிஸ் பொறுப்பாளர் நீக்கப்பட்டார்!
[Friday 2024-08-09 17:00]

அனைத்துலகத் தொடர்பகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கட்டமைப்புசார் பொறுப்பு நிலைகளிலிருந்தும் செயற்பாடுகளிலிருந்தும் விடுதலைப் புலிகளின் சுவிஸ் பொறுப்பாளர் வி. ரகுபதி நீக்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் உருவாகக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபுரீதியான நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி, சுவிஸ் கிளையின் துணைப்பொறுப்பாளர் வி.ரகுபதி அவர்கள், தேசியத் தலைவர் தொடர்பான உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரப்பிவருகிறார்.


ஒலிம்பிக்கில் கனடிய மகளிர் அணிக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்து விசாரணை!
[Friday 2024-08-09 17:00]

கனடிய மகளிர் கால்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டிகளில் எதிர் நோக்கிய சர்ச்சை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. கனடிய என்.டி.பி கட்சியினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி தொடரின் மகளிர் கால்பந்தாட்ட போட்டிகளின் போது ஏனைய வீராங்னைகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


வெறுப்பைத் தூண்டியதால் 10 நாட்களுக்கு எக்ஸ் முடக்கம்!
[Friday 2024-08-09 17:00]

வெனிசுவெலாவில் எக்ஸ் (X) வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு , டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன் என வெனிசுவெலா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்: நேரடி விவாதங்களுக்கு தயார் - டிரம்ப் அழைப்பு!
[Friday 2024-08-09 07:00]

பிரித்தானிய இளைஞரை காணவில்லை! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள குடும்பத்தினர் கமலா ஹாரிஸுடன் 3 விவாதங்களுக்கு தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களில் 3 விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


பிரித்தானிய இளைஞரை காணவில்லை: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள குடும்பத்தினர்!
[Friday 2024-08-09 07:00]

தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய பிரித்தானிய இளைஞர் காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விடுமுறையை முடித்துவிட்டு தாய்லாந்தில் இருந்து பிரித்தானியாவுக்கு திரும்பிய சைமன் ராபின்சன் (Simon Robinson) என்ற Lincolnshire பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் காணாமல் போயுள்ளார்.


தைவானில் தாம்பத்திய உறவுக்கு கட்டணம் வசூலித்த மனைவி: கணவர் எடுத்த அதிரடி முடிவு!
[Friday 2024-08-09 07:00]

தைவானில் மனைவி ஒருவர் தாம்பத்திய உறவுக்கு மற்றும் உரையாடலுக்கு கட்டணம் வசூலித்த நிலையில் வேதனையில் கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தைவானில் வசித்து வரும் ஹாவ்(Hao) என்பவருக்கும் சுவான்(Xuan) என்ற பெண்ணுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.


ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட கனேடிய விளையாட்டு வீரர்கள் பலருக்கு உடல்நல பாதிப்பு!
[Thursday 2024-08-08 18:00]

ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட கனேடிய விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொண்ட பல வீரர் வீரங்கனைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட்டுள்ளன.


தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் தோல்வியடைந்தால்..! - ஜோ பைடன் எச்சரிக்கை!
[Thursday 2024-08-08 18:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் தோல்வியடைந்தால் கமலா ஹாரிஸ்க்கு அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். CBS செய்தி தொலைக்காட்சிக்கு அதிபர் ஜோ பைடன் பேட்டியளித்தபோது , "ட்ரம்ப் கூறியதில் அர்த்தம் உள்ளது. அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தால் அமெரிக்காவே ரத்த களறியாகும் என்று தெரிவித்தார்.


பங்களாதேஷ் வன்முறை: 20 அவாமி லீக் தலைவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு!
[Thursday 2024-08-08 18:00]

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் 20 அவாமி லீக் தலைவர்கள் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 29 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அடுத்தடுத்த நில அதிர்வுகளால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
[Thursday 2024-08-08 18:00]

ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் சுனாமி எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது. இன்று ஜப்பானில் 6.9, மற்றும் 7.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுளது. இதனையடுத்து அங்கு சுமானி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா