Untitled Document
April 3, 2025 [GMT]
 
சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா நடித்த தனி ஒருவன், மாயா படங்கள்!
[Wednesday 2016-01-06 21:00]

தென்னிந்தியா சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. கடந்த வருடம் இவர் நடித்த நானும் ரவுடி தான், மாயா, தனி ஒருவன் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது.இந்நிலையில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடக்கவுள்ளது. இதில் கிருமி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கின்றது, ஆரஞ்சுமிட்டாய், பிசாசு ஆகிய படங்கள் பங்கேற்கின்றது.இது மட்டுமின்றி நயன்தாரா நடித்த தனி ஒருவன், மாயா ஆகிய படங்கள் கலந்துக்கொள்ளவிருக்கின்றது.


இன்று 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்!
[Wednesday 2016-01-06 12:00]

இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 49-வது பிறந்தநாள். இதனையொட்டி சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ரஹ்மானும் ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2016 முழுக்க சென்னையில்தான் இருப்பேன். இந்த வருஷம் கௌதம் மேனன் படமும், சூர்யா படமும் ரெடி. ஷங்கரின்


சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் பெண்ணாக அவதாரம் எடுக்கும் மதுமிதா!
[Wednesday 2016-01-06 08:00]

"புத்தன் இயேசு காந்தி" திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக நடிக்கிறார். வசுந்தராவும், அசோக்கும் பத்திரிகையாளர்களாக வருகிறார்கள். மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் செயற்பாட்டாளர் கேரக்டரில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக மதுமிதா, புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயை ரோல் மாடலாக ஏற்று அவரின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி நடித்து வருகிறார். இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்களை பார்த்து அந்தக் கேரக்டருக்குத் தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.


சுறுசுறுப்புடன் பணியாற்றுவதற்கும்,ஞாபக ஆற்றலோடு இடைவிடாமல் பேசுவதற்கும் யோகாவே காரணம்: சிவக்குமார்
[Wednesday 2016-01-06 08:00]

சிவக்குமார் கம்பராமாயணத்தை


வட இந்தியாவில் முதலிடம் பிடித்த விஜய்!
[Wednesday 2016-01-06 07:00]

விஜய்யின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என விஜய்க்கு ரசிகர்கள் பலம் காணப்படுகின்றது.இந்நிலையில் வட இந்தியா இணையத்தளம் ஒன்று தென்னிந்தியாவில் யார் மாஸ்? என்று ஒரு வாக்குப்பதிவு நடத்தியது. இதில் ரஜினிகாந்த், விஜய், அஜித், மகேஷ் பாபு ஆகியோரை தேந்தெடுத்து இருந்தனர்.இதில் விஜய் 34% வாக்குகளுடன் முதல் இடம் பிடித்தார். 31% வாக்குகளுடன் அஜித் இரண்டாம் இடத்திலும், அடுத்தடுத்த இடத்தில் ரஜினி, மகேஷ் பாபு உள்ளனர்.


கபாலியில் வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் நடிகர்!
[Wednesday 2016-01-06 07:00]

கபாலி படத்தில் சில நாட்களுக்கு முன் ஜெட்லீ தான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கின்றார் என கூறப்பட்டது. ஆனால், இதை இயக்குனரே தன் டுவிட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார்.இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் ஆங்லீ இயக்கிய The Wedding Banquet மற்றும் Eat Drink Man Woman ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் Winston Chao தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கின்றாராம்.இதுமட்டுமில்லாமல் மலேசியா நடிகர்கள் சிலரும் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ரஜினி, 2.O, கபாலி என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்து வருகிறார்.


விஷாலின்
[Tuesday 2016-01-05 19:00]

நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகும் இந்த மோதல் முடியவில்லை. பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ராதிகாவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்தது. தற்போது, விஷால் நடிப்பில் வெளியாகும் கதகளி படத்தின் டிரெயிலர் தொடர்பாக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் நடிகை ராதிகா. விஷால் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகவிருக்கும் படம், கதகளி. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் வெளியாக ஒரு காட்சியில், கதாநாயகி கேத்ரீன் தெரசாவிடம், காண்டம் இருக்கா என்று கேட்பார் விஷால். இதுகுறித்து ட்விட்டரில் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் ராதிகா.


எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சசிகுமார்
[Tuesday 2016-01-05 18:00]

சசிகுமார்


அனிருத்தை கழட்டி விட்ட தனுஷ்...!
[Tuesday 2016-01-05 09:00]

தனுஷ் அடுத்து கொடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை காக்கிசட்டை, எதிர் நீச்சல் இயக்குனர் துரை செந்தில் இயக்கவுள்ளார்.இவரின் கடந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர், மேலும், தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரும் கூட.இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக நேற்று நாம் தெரிவித்தோம், அதை நிரூபிக்கும் பொருட்டு கொடி படத்திற்கு அனிருத்தை கழட்டிவிட்டு, சந்தோஷ நாரயணனை இசையமைப்பாளராக கமிட் செய்து விட்டது படக்குழு.அனிருத் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாட்டில் பரபரப்பாக தன் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.


நான் வில்லனாக நடிக்க சம்மதித்ததாக வந்த தகவலில் உண்மை இல்லை!
[Tuesday 2016-01-05 09:00]

மணிரத்னம் டைரக்டு செய்த


13 வருடங்களாக சினிமாவில் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்! - திரிஷா
[Tuesday 2016-01-05 09:00]

திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்தி படத்திலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-


2015 ம் ஆண்டு வசூலில் சாதனை செய்த திரைப்படங்கள்!
[Tuesday 2016-01-05 09:00]

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் 204 படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் அனைத்து தரப்பினர்களுக்கும் லாபம் கொடுத்த படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம்.அந்த வகையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர், மிகவும் நம்பத்தகுந்த ஒருவரிடம் இருந்து கடந்த வருடம் தமிழ்நாடு தியேட்டர்களில் விற்கப்பட்ட டிக்கட்டுகளின் வசூலின் மூலம் செலவு போக, வினியோகஸ்தர்களுக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ கிடைத்த நிகர வருமானத்தின் அடிப்படையில் ஒரு லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக...


பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை: - டி.ராஜேந்தர்
[Monday 2016-01-04 22:00]

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார். பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்புவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறை அழைக்கும்போது நேரில் ஆஜராகி போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வருகின்ற 11ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.


கமலின் மகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்...!
[Monday 2016-01-04 22:00]

கமல்ஹாசன் உலக அளவில் அறியப்படும் சிறந்த நடிகராக இருக்கிறார். உலக நாயகன் என்று புகழப்படும் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் குறுகிய காலத்திலேயே இந்திய பட உலகின் முக்கிய நடிகையாக உயர்ந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசனை கடந்த சில வருடங்களாகவே அப்பா கமலுடன் படத்தில் இணைந்து நடிப்பீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டு வருகின்றனர். அதற்கு அவர், அப்பா மிகப் பெரிய நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.


பீப் பாடல் வழக்கில் சிம்புவுக்கு முன்ஜாமீன் தேவையில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி!
[Monday 2016-01-04 20:00]

நடிகர் சிம்பு பாடிய


தமிழ் சினிமாவின் சொத்து என மாதவனை புகழ்ந்த சூர்யா!
[Monday 2016-01-04 20:00]

மாதவன் நடிப்பில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் தமிழ் படம்


ஒருசிலர் என்னைக் கீழே தள்ளிவிட முயன்றாலும் அவற்றில் இருந்து மீண்டு வருவேன்: - நடிகர் சிம்பு
[Monday 2016-01-04 13:00]

"எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து எனது ரசிகர்களுக்கு பெருமை சேர்ப்பேன்" என்று நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார். பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்பு முன்ஜாமீன் கோரிய மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் " எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், ஒருசிலர் என்னைக் கீழே தள்ளிவிட முயன்றாலும் எனது ரசிகர்கள் பெருமை கொள்ளும் விதமாக அவற்றில் இருந்து மீண்டு வருவேன்". என்று நடிகர் சிம்பு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த புத்தாண்டில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.


ராம் இயக்கத்தில் மம்முட்டி,அஞ்சலி நடிக்கும் பேரன்பு!
[Monday 2016-01-04 12:00]

தேசிய விருது வென்ற இயக்குநர் ராம் தனது அடுத்த படத்திற்கு பேரன்பு என்று பெயரிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து அஞ்சலி நடிக்கிறார். ஜீவா நடித்த 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராம், அடுத்து இயக்கிய தங்க மீன்கள் படம் மூலம் தேசிய விருதைக் கைப்பற்றினார். இடையில் 2 வருடங்கள் எந்தப் படமும் இயக்காமல் இருந்த ராம் தற்போது பேரன்பு என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.


15 நாட்கள் அவகாசம் கேட்ட அனிருத்!
[Monday 2016-01-04 07:00]

அனிருத் தற்போது வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் பீப் சாங் சர்ச்சையில் சிக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.அனிருத் மற்றும் சிம்பு இருவரும் ஜனவரி 2ம் தேதி நேரில ஆஜராக வேண்டும் என்று முன்பே போலிஸார் கூறினர்.இந்நிலையில் அனிருத் தரப்பில், இன்னும் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். மேலும், அனிருத் இந்த பாடலை பாடவில்லை என சிம்புவே கூறிவிட்டார்.இதனால் சிம்பு கூறியதை சுட்டிக்காட்டி அனிருத்தின் வழக்கறிஞர் அவகாசம் கேட்டுள்ளார். அவகாசம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


வெளிநாட்டில் தன் காதலனுடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை ப்ரியா....!
[Monday 2016-01-04 07:00]

சின்னத்திரையில் தற்போது அதிக ரசிகர்களை கொண்டவர் ப்ரியா. இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் ஒருவரை காதலிப்பதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டது. ஆனால், அவர் யார் என்று இதுநாள் வரை பலருக்கும் தெரியாமல் இருந்தது.சமீபத்தில் புத்தாண்டை வெளிநாட்டில் உள்ள தன் காதலனுடன் கொண்டாடியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தான் நடிப்பேன்: - சமந்தா
[Monday 2016-01-04 07:00]

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழிலும் அப்படித்தான் என்றாலும், இவர் கொடுத்த ஹிட் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.கத்தி படம் மட்டுமே இவருக்கு ஹிட், ஆனால், அந்த படத்தில் இவருக்கு பெரிதாக நடிக்கும் வாய்ப்பே இல்லை. இந்நிலையில் இந்த வருடம் வந்த தங்கமகன், 10 எண்றதுக்குள்ள படமும் தோல்வியை தழுவியது.இதனால் அடுத்து 24, வடசென்னை இந்த படங்களை நம்பி தான் சமந்தா உள்ளாராம். மேலும், இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம்.


உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள
[Sunday 2016-01-03 00:00]

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம்


ரஜினியையும் அக்‌ஷய் குமாரையும் மோதவிட்ட ஷங்கர்!
[Saturday 2016-01-02 22:00]

ஷங்கர் இந்திய சினிமாவே வியக்கும் அளவிற்கு 2.O படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க அவருக்கு வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தின் ரஜினியும், அக்‌ஷய் குமாரும் மோதும் பிரமாண்ட சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டதாம்.இதற்காக பல ரோபோக்கள் சென்னை வந்து இறங்கியுள்ளது. இதில் அக்‌ஷய் குமாரும் ஒரு ரோபோட் தானாம்.சமீபத்தில் சிட்டியும், அக்‌ஷய் குமாரும் மோதுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.


சூர்யா, நிவின் பாலி, பிரபாஸ், என பல நடிகர்கள் நடிக்கும் ஆல்பத்தை தயாரிக்கவுள்ள விக்ரம்!
[Saturday 2016-01-02 22:00]

விக்ரம் நல்ல நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது இயக்குனர் அவதாரம் கூட எடுக்கவுள்ளார்.ஆனால், இவை படத்திற்கு அல்ல, சென்னையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு எழுந்தது குறித்து விக்ரம் ஒரு ஆல்பத்தை இயக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே.இந்த ஆல்பத்தில் சூர்யா, நிவின் பாலி, பிரபாஸ், புனீத் ராஜ்குமார், ஆர்யா, விஷால் ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம்.


சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் சிங்கம் 3 : - அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள படப்பிடிப்பு
[Saturday 2016-01-02 21:00]

சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் சிங்கம் 3-யின் படப்பிடிப்பு அடுத்தவாரம் ஆரம்பமாகிறது.


தயாரிப்பாளராக களமிறங்கும் அதர்வா...!
[Saturday 2016-01-02 09:00]

சில படங்களில் நடித்துவிட்டு, அதில் சம்பாதித்த பணத்தை திரும்பவும் சினிமாவிலேயே முதலீடு செய்யும் வழக்கம் ஒன்றும் புதியதல்ல. கமல், தனுஷ், விஷால், சூர்யா, சிம்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.இந்த பட்டியலில் இப்போது இணைந்திருப்பவர் அதர்வா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஈட்டி படம் நல்ல வசூல் செய்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர், இப்போது "KIICKASS Entertainments" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.தன்னை சினிமாவில் அறிமுகபடுத்திய இயக்குனர் பத்ரிவெங்கடேஷின் அடுத்த படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


தமிழ் ரசிகர்கள் மீது நான் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன்: - எமிஜாக்சன்
[Saturday 2016-01-02 09:00]

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில்


ஒரு நாளில் ஐந்து லட்சம் பேர் பார்த்த சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர்!
[Saturday 2016-01-02 08:00]

சிம்புவின் பீப் சாங் பிரச்சனை தற்போது தான் ஓரளவிற்கு அமைதியாகிவுள்ளது. இந்நிலையில் நேற்று இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.இந்த ட்ரைலர் 1 நாளில் 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அது மட்டுமின்றி 11,900 பேருக்கு மேல் லைக்ஸ் செய்துள்ளனர்.எப்போதும் விஜய், அஜித் படங்களுக்கு தான் இந்த அளவிற்கு ஒரு வரவேற்பு கிடைக்கும், இதன் மூலம் அவர்களுக்கு அடுத்த இடத்தில் சிம்பு வந்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.


தனுஷுடன் நடிக்க மறுத்த ஜீவா...
[Saturday 2016-01-02 08:00]

தனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் மட்டுமின்றி இன்னும் 2 முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளதாம்.இதில் நடிக்க விஜய் சேதுபதி, ஜீவாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. விஜய் சேதுபதி எப்படியும் சம்மதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஆனால், ஜீவா இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாரயணன் கமிட் ஆகியுள்ளனர்.


பார்க்க முத்தம் மாதிரி இருந்தாலும்,அவை போலி முத்தம்: கதகளி முத்தக்காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்
[Saturday 2016-01-02 08:00]

விஷால் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வரவிருக்கும் படம் கதகளி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரின் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரில் விஷால், கேத்ரினை முத்தமிடுவது போல் ஒரு காட்சி வருகிறது, இதுக்குறித்து சமீபத்தில் படத்தின் இயக்குனர் பாண்டிராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பாண்டிராஜ் கூறுகையில்

Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா