Untitled Document
April 1, 2025 [GMT]
 
எம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும்: - சரோஜாதேவி கோரிக்கை
[Thursday 2015-12-31 12:00]

தமிழ் பட உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர், சரோஜாதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர். இப்போது அவர் பெங்களூரில் வசித்து வருகிறார். சரோஜாதேவி பெங்களூரில் இருந்து போன் மூலம் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது...


முழு நேர சமூக சேவகியாக மாறி மக்களுக்கு உதவுவேன் என்கிறார் நடிகை சமந்தா!
[Thursday 2015-12-31 10:00]

சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் முழு நேர சமூக சேவகியாக மாறி மக்களுக்கு உதவுவேன் என்று நடிகை சமந்தா கூறினார். சமந்தா கைவசம் தமிழ், தெலுங்கில் 6 படங்கள் உள்ளன. விஜய் ஜோடியாக


நடிகர் சங்கத்தின் கணக்கு விவரங்களை சரத் குமார் இன்னும் தரவில்லை: நடிகர் சங்கம் குற்றம் சாட்டு
[Thursday 2015-12-31 09:00]

நடிகர் சங்கத்தின் கணக்கு விவரங்களை சரத் குமார் இன்னும் தரவில்லை என்று நடிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத் குமார் ஊடகங்களுக்குத் தந்த பேட்டியைப் படித்தோம். அதுபற்றி மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் சில விளக்கங்களைத் தரவேண்டியுள்ளது. நடிகர் சங்க செயல்பாட்டில் இரண்டுவிதமான கணக்குகளைப் பராமரித்துத் தரவேண்டியது கட்டாயமாகிறது.


2015 ம் ஆண்டு வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த படங்கள்..!
[Thursday 2015-12-31 08:00]

தமிழ் சினிமா தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் வரவேற்பு பெற்று வருகின்றது. அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகின்றது.அந்த வகையில் இந்த வருடம் ரஜினி படம் வரவில்லை, கமல் படங்கள் பெரிதும் வசூல் செய்யவில்லை. ஆனால், விக்ரம், அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது. அதன் விவரங்கள் இதோ... 1 ஐ - $9.1 M 2 வேதாளம் - $5+ M 3 என்னை அறிந்தால் - $4.55 M 4 மாஸ் - $3.82 M 5 புலி - $3.79 M இதில் வேதாளம் மலேசியாவில் மட்டும் ரூ 13 கோடி வரை வசூல் செய்தது சாதனையாக மலேசியா பாக்ஸ் ஆபிஸே அறிவித்திருந்தது.


2015ல் தமிழ் சினிமாவை கலக்கிய நாயகிகள்...!
[Thursday 2015-12-31 08:00]

தமிழ் சினிமா என்றாலே எப்போதும் நாயகர்கள் கையில் தான் உள்ளது. ஆனால், இந்த வருடம் ஹீரோயின்கள் சோலோவாக நடித்த சில படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த வருடத்தில் பிரபல நடிகைகளில் யார் அதிகப்படங்கள் நடித்தார்கள், அதில் ஹிட் படங்கள் எத்தனை என்பதன் விவரங்கள் இதோ..நயன்தாரா- நண்பேண்டா, மாசு, தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என இவர் 5 படங்களில் நடித்து முதலிடத்தில் உள்ளார். இதில் நண்பேண்டா சுமாராக ஓடினாலும், இதை தொடர்ந்து வந்த தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என தொடர் வெற்றிகளை கொடுத்துள்ளார்.


நடிகை பிரியங்கா சோப்ரா வெற்றிகரமான நடிகையாக வலம் வருவதற்கு நான்தான் காரணம்; - முலாயம் சிங் யாதவ்
[Thursday 2015-12-31 08:00]

தனது ஆசிர்வாதத்தால் மட்டுமே நடிகை பிரியங்கா சோப்ரா வெற்றிகரமான நடிகையாக வலம் வருவதாக சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் எடவாவில் ஆண்டுதோறும் சாய்பி என்ற திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். திரையுலகப் பிரபலங்கள் இதில் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு நடைபெற்ற விழாவில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டார்.


பீப் பாடல் சர்ச்சை விவகாரத்தை சிம்பு சட்டப்படி சந்திப்பார்: - டி.ராஜேந்தர் தெரிவிப்பு
[Wednesday 2015-12-30 23:00]

பீப் பாடல் சர்ச்சை விவகாரத்தை சிம்பு சட்டப்படி சந்திப்பார் என்று அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இணையதளத்தில் பீப் பாடல் வெளியிட்டதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு நேற்று காலை நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குனரு மான டி.ராஜேந்தர் வருகை தந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பின் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது...


இந்த ஆண்டில் இலங்கை மக்கள் கூகுளில் அதிகம் தேடிய நடிகர் விஜய்!
[Wednesday 2015-12-30 08:00]

இந்த ஆண்டில் இலங்கை மக்கள் அதிகம் தேடிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் கூகுளில் அதிகம் தேடியவர்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிடும். அதே போல இந்த வருடமும் கூகுள் நிறுவனம் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகளவில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் நடிகை கிம் கர்தாஷியன் முதலிடம் பெற்று இருக்கிறார். உலகில் உள்ள அதிகமான நாடுகளில் கிம் கர்தாஷியனை அவரது ரசிகர்கள் போட்டி போட்டு தேடியுள்ளனர்.


நடிகர் சங்கம் மற்றும் பீப் பாடல் விவகாரங்கள்: ஃபேஸ்புக்கில் முட்டிக்கொண்ட ராதிகாவும் ஒய்.ஜி. மகேந்திரனும்!
[Tuesday 2015-12-29 17:00]

நடிகர் சங்கம் மற்றும் பீப் பாடல் விவகாரங்கள் தொடர்பாக ஃபேஸ்புக்கில் நடிகை ராதிகாவும் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். நடிகர் சங்கம் தொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினார் ஒய்.ஜி. மகேந்திரா. அதில் அவர் கூறியதாவது: அதிகாரம் இல்லாதவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களைக் குறை சொல்வது, அரசியல் போல நடிகர் சங்கத்திலும் தொடர்கிறது. இப்போதுதான் நடிகர் சங்கத்துக்குத் தேர்வானவர்கள் ஒரு கூட்டம் நடத்தியுள்ளார்கள். உடனே அவர்களுக்கு எதிராக தேர்தலில் தோற்றவர்கள் எதிர்மறையாகப் பேசிவருகிறார்கள். பீப் பாடலின் ஆதரவாளர்கள், பாடல்களில் மோசமான வார்த்தைகள் இருக்கவேண்டும் என்கிறார்களா? நானும் தனிப்பட்ட முறையில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். ஆனால் அதைப் பாடலிலோ புத்தகத்திலோ பயன்படுத்தமாட்டேன்.


[Tuesday 2015-12-29 16:00]

சிவக்குமார்


பொங்கல் ரேசில் களமிறங்கும் திரைப்படங்கள்!
[Tuesday 2015-12-29 16:00]

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் பெரிய ரிலிஸ் என்றால் அது பொங்கலும், தீபாவளியும் தான்.பொங்கலில் ரிலீஸ் செய்தால் தான் பெரிய படங்கள் வசூல் வேட்டையாட எளிதில் வாய்ப்புள்ளது. அந்த வகையில் இம்முறை பொங்கலுக்கு 5 படங்கள் ரிலிஸ் என்று அறிவித்துள்ளனர்.விஷாலின் கதகளி, ஜெயம்ரவியின் மிருதன், பாலாவின் தாரை தப்பட்டை ஆகிய படங்களோடு நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த ரஜினிமுருகனும் களமிறங்குகிறது.அரண்மனை2 பொங்கல் ரேசில் இருந்து விலகி ஜனவரி 29ம் தேதி ரிலிசாகவுள்ளது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கெத்து களத்தில் குதித்துள்ளது.தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 750 திரையரங்கில் முக்கியமான 5 படங்கள் ரிலிசானால் அனைவரும் போட்ட பணத்தை ஒரு வாரத்தில் கடினமான சூழ்நிலைதான்.கடைசி நேரத்தில் எந்த படங்கள் பொங்கல் ரேசில் களமிறங்கும், பின்வாங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


நான் முழு நேரமும் சமூக சேவை செய்ய விரும்புகிறேன்: - சமந்தா
[Tuesday 2015-12-29 16:00]

சமந்தா தமிழில் விஜய்யுடன் 'தெறி', சூர்யாவுடன் '24', தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'பிரமோற்சவம்' என்று தமிழ்


மனிதநேய பணியில் நடிகர் சித்தார்த்!
[Tuesday 2015-12-29 16:00]

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இப்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெரிய பங்கு வகித்தவர்கள் நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி. இவர்களுடன் சென்னை மைக்ரோ என்று பெயரிடப்பட்ட இந்த குழுவில் பல தன்னார்வலர்கள் கை கோர்த்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்தனர்.அதன்படி தமிழகத்தில் மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் மக்களின் அடிப்படை தேவைக்கான பொருட்கள், பணம் வந்து குவிந்தது.இந்த அமைப்புக்கு வந்த நிதி மொத்தம் 3,39,18,793 ரூபாய். இந்த நிதியை தமிழகத்தில் சீரமைப்புக்காக இல்லங்களில் வசிப்போரின் மறுவாழ்வுக்காக பகிர்ந்து அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த்.இவர்களின் இந்த மனிதநேய பணி யில்நடிகர் சித்தார்த் தொடர வாழ்த்துக்கள்.


மலையாள படமான சார்லி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷின் தயாரிப்பு நிறுவனம்!
[Tuesday 2015-12-29 16:00]

ஓ காதல் கண்மணி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் மலையாளத்தில் சார்லி என்ற படத்தில் நடித்து வந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நான்கு நாட்களில் ரூ. 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வன்டர்பார் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.


ராம்கோபால் வர்மாவின் வீரப்பன் படத்துக்கு தடை கோரி நீதி மன்றில் வழக்கு!
[Tuesday 2015-12-29 11:00]

சேலம் மாவட்டம், சாமிநாயக்கன்பட்டியை அடுத்துள்ள பெருமாள்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பா.பன்னீர்செல்வி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- மலைவாழ்மக்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் காண பல உதவிகளை செய்து வருகிறேன். பெங்களூரை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர்


விவகாரம் கலந்த ஒரு புதிய அனுபவத்தை தரவுள்ள "மாலை நேரத்து மயக்கம்" திரைப்படம்!
[Tuesday 2015-12-29 09:00]

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் செல்வராகவன். இவரது 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்கள் என்றென்றும் இளைஞர்களின் பேவரைட் படங்கள்.இவரது படங்களில் பெண்களுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருக்கும். அதேபோல் நிஜவாழ்க்கையிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்.அந்த வகையில் செல்வராகவன் தனது கதை, திரைக்கதையில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள படம் தான் "மாலை நேரத்து மயக்கம்". இப்படம் ஒரு இளம் தம்பதிகளின் நுணுக்கமான வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் தம்பதிக்களுக்கு இடையிலான உறவு தொடர்பான பல விஷயங்களை கையாண்டு உள்ளனர். இது பற்றி இயக்குனரும் சரி, செல்வராகவன் சரி புது முயற்சிகளை தோளில் தட்டி வரவேற்க வேண்டும், அதை வேறு நோக்கத்தில் பார்க்க கூடாது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்கள். எது என்னவோ மாலை நேரத்து மயக்கம் அடுத்த ஆண்டின் தொடக்கமே விவகாரம் கலந்த ஒரு புதிய அனுபவத்தை தரப்போவது உறுதி.


[Monday 2015-12-28 22:00]

ஈரோட்டில் நடந்த கட்டிட பொருள் கண்காட்சியில் நடிகர் தாமுவின் பலகுரல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் தாமு பேசியதாவது:


குடும்ப வாழ்க்கை எனக்கு நன்றாக அமைந்தது: - மனம் திறந்த நதியா
[Monday 2015-12-28 22:00]

நடிகை நதியா தற்போது தெலுங்கில்


சமந்தாவை பாராட்டிய இளைய தளபதி விஜய்!
[Monday 2015-12-28 21:00]

விஜய் தனக்கு யாருடைய நடிப்பு பிடித்தாலும் ஈகோ பார்க்காமல் பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அந்த பாராட்டை பெற்றவர் சமந்தா தானாம்.தெறி படத்தின் படப்பிடிப்பில் சமந்தா ஒரு காட்சியில் நடிக்க அதை விஜய் கவனித்தாராம். இந்த காட்சியில் சமந்தாவின் நடிப்பை கண்டு அனைவரும் பாராட்டினார்களாம்.உடனே விஜய்யும் அவரிடம் கைக்கொடுத்து சூப்பர் கலக்கிட்டீங்க என்று பாராட்டி சென்றாராம்.


அல்போன்ஸ் இயக்கும் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ள அருண் விஜய்!
[Monday 2015-12-28 21:00]

ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் அல்போன்ஸ். இவர் அடுத்து என்ன படம் இயக்குவார் என்பது தான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும்.இந்நிலையில் இவர் அடுத்து தமிழ்-மலையாளம் என இரண்டு மொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம், இப்படத்தில் நாயகனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.இதுமட்டுமின்றி மோகன் லால் அல்லது மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களும் இதில் நடிப்பார்கள் என கூறப்படுகின்றது.


பொங்கல் தினத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைப்படம்!
[Monday 2015-12-28 21:00]

ரஜினிமுருகனால் தொடர்ந்து சிக்கலில் சிக்கி தவித்து வந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு, மும்பையைச் சேர்ந்த பென் மூவிஸ் நிறுவனம் தற்போது உதவி செய்ய முன்வந்திருக்கிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தினசரிகளின் விளம்பரங்களில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பென் மூவிஸ் நிறுவனத்தின் லோகோவும் பளிச்சிடுகிறது. ரஜினிமுருகன்1/5 ரஜினிமுருகன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றதால் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர் பொன்ராம் மற்றும் இசையமைப்பாளர் இமான் நால்வரும் இணைந்த ரஜினிமுருகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ரஜினிமுருகன் மீதுள்ள நம்பிக்கையால் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி இந்தப் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார்.


ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் காமெடியனாக நடிக்கவுள்ள வடிவேல்!
[Monday 2015-12-28 13:00]

வடிவேலு என்ற கலைஞனின் இடத்தை இன்று வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. இன்னும் அந்த இடம் காலியாக இருக்க, அவரோ நடிச்ச ஹீரோ தான் என்ற முடிவில் இருந்தார்.ஆனால், சமீபத்தில் வந்த செய்தி ஒன்று ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.ராகவா லாரன்ஸ் அடுத்து நாகா என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் வடிவேலு தான் காமெடியனாக நடிக்கவுள்ளாராம். ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கின்றது.

Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா