Untitled Document
June 6, 2025 [GMT]
 
வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதா?
[Friday 2025-06-06 07:00]

வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருவரும் கூட்டணி சேர்வதாக அறிவிக்கப்பட்ட படம் வாடிவாசல். அறிவிப்பு வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்த படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மட்டும் பேட்டிகளில் 'இந்த படம் இப்போது தொடங்கும்.. அப்போது தொடங்கும்' என தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் ஷூட்டிங் தொடங்கிய பாடில்லை.


'தக் லைப்' முதல் நாள் வசூல்!
[Friday 2025-06-06 07:00]

கமல் - மணிரத்னம் கூட்டணி நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து இருக்கும் படம் தக் லைப். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று படம் ரிலீஸ் ஆன நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களை படம் கவரவில்லை என்று தான் கமெண்ட் செய்து வருகின்றனர்.


நடிகர் கமல்ஹாசன் மகள் பெயரில் மோசடி!
[Thursday 2025-06-05 18:00]

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரது இரண்டு மகள்களும் நடிகைகளாக தான் இருக்கின்றனர். ஸ்ருதி ஹாசன் தற்போது பிசியாக படங்கள் நடித்து வருகிறார். கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் தனுஷ் உடன் ஷமிதாப், அஜித்துடன் விவேகம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தற்போது எந்த புது படங்களிலும் அவர் நடிக்கவில்லை.


வெற்றி பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா!
[Thursday 2025-06-05 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. தற்போது சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார்.


லோகேஷ் கனகராஜ் - அமீர் கான் கூட்டணியில் படம் உறுதியானது!
[Thursday 2025-06-05 18:00]

லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தினை இயக்கி வருகிறார். அந்த படம் ஷூட்டிங் முடிந்து இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு அவர் கைதி 2ம் பாகம் இயக்கப் போகிறார் என கூறப்படுகிறது.


கழுத்தில் மாலையுடன் ரவி மோகன் - கெனிஷா!
[Thursday 2025-06-05 07:00]

நடிகர் ஜெயம் ரவி சமீப காலத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் கொடுத்த்தார். தனது பெயரை ரவி மோகன் என அவர் மாற்றிய அவர், மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகவும் அறிவித்தார். விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் ரவி மோகன் தனது புது girl friend கெனிஷா உடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.


சுப்ரமணியபுரம் பட நடிகர் இலைக்கடை முருகன் மரணம்!
[Thursday 2025-06-05 07:00]

சசிக்குமார் இயக்கத்தில் வந்த சுப்ரமணியபுரம் படம் எவ்வளவு வரவேற்பை பெற்றது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போதும் பேசப்படும் படமாக அது இருந்து வருகிறது. அந்த படத்தில் மொக்கசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் இலைக்கடை முருகன். அவர் மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். கொம்பன், வேலாயுதம் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.


லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் பிரபல நடிகர்!
[Wednesday 2025-06-04 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார்.


திருமணத்திற்கு முன் அந்தமான் செல்லும் சாய் தன்ஷிகா!
[Wednesday 2025-06-04 18:00]

நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக இவர் நடித்த மதகஜராஜா படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தது.


சூர்யா 45 எப்படி இருக்கும்? - பிரபலம் உடைத்த ரகசியம்!
[Wednesday 2025-06-04 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. கங்குவா படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.


மணிரத்னம் சினிமா துறை பற்றி சொன்ன விஷயம்!
[Wednesday 2025-06-04 07:00]

இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி இருக்கும் தக் லைப் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் நடிகை தீபிகா படுகோன் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் தான் ஷூட்டிங் வருவேன் என கூறியதால் தான் இயக்குனர் சந்தீப் ரெட்டி அவரை நீக்கிவிட்டதாக தகவல் பரவியது.


மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!
[Wednesday 2025-06-04 07:00]

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு என்ன பிரச்சனை நன்றாக சம்பாதிப்பார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு உள்ளது. ஆனால் எல்லா பிரபலங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைவது இல்லை, சினிமாவில் சாதித்தாலும் சொந்த வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் தவிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நிழல்கள் படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கியவர் ராஜசேகர்.


"மன்னிப்பு கேட்க முடியாது" - கமல் அதிரடி!
[Tuesday 2025-06-03 19:00]

நடிகர் கமல்ஹாசனின் தக் லைப் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் நிலையில் கர்நாடகாவில் அதற்கு தடை போடப்பட்டு இருக்கிறது. தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கமல் கூறியதற்கு மன்னிப்பு கேட்டால் தான் தக் வெளியிட விடுவோம் என சில அமைப்புகள் அங்கே போராட்டம் நடத்தின. தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


கூலி படத்தை மாபெரும் விலைக்கு வாங்க காத்திருக்கும் நிறுவனங்கள்!
[Tuesday 2025-06-03 19:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஷோபின் ஷபீர், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அப்பாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் நடிகர் விஜய் வைத்திருப்பது இவரை தானா?
[Tuesday 2025-06-03 19:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இது அவருடைய கடைசி படமாகும். இதன்பின், முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார். ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாணி தியோல், ப்ரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.


நடிகை சமந்தாவுடன் சுற்றும் புது காதலர்!
[Tuesday 2025-06-03 06:00]

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் காதலித்து வருவதாகவும் ஒன்றாக சேர்ந்து வாழ வீடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சில வாரங்களுக்கு முன்பு செய்தி வந்தது. அவருடன் இருக்கும் போட்டோக்களை சமந்தா தொடர்ந்த்து இன்ஸ்டாவில் வெளியிட அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


விஜய் டிவியில் அடுத்தடுத்து களமிறங்கும் 3 புதிய தொடர்கள்!
[Tuesday 2025-06-03 06:00]

சீரியல்கள் என்றால் சன் டிவி தான் ராஜா. ஆனால் இப்போது அவர்களையே திக்குமுக்காட வைக்கும் வகையில் விஜய், ஜீ தமிழ், கலைஞர் என பல தொலைக்காட்சிகளில் நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மக்களும் இப்போது எல்லா தொலைக்காட்சி சீரியல்களுக்கும் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


கர்நாடகாவில் குறையாத எதிர்ப்பு: நீதிமன்றத்திற்கு சென்ற கமல்!
[Monday 2025-06-02 18:00]

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கின.


தக் லைஃப் படத்திற்காக நடிகர் சிம்பு வாங்கிய சம்பளம்!
[Monday 2025-06-02 18:00]

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு முதன் முதலில் நடித்த திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மணி ரத்தினத்துடன் சிம்பு கூட்டணி அமைத்திருக்கும் படம் தக் லைஃப். இப்படத்தில் கமல் ஹாசனுடன் சிம்பு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.


"வடசென்னை 2": அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்!
[Monday 2025-06-02 18:00]

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பது வடசென்னை 2 படத்திற்காக தான். 2018ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என பலரும் நடித்திருந்தனர்.


மதயானைக் கூட்டம் இயக்குனர் திடீர் மரணம்!
[Monday 2025-06-02 06:00]

மதயானைக் கூட்டம் பட புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இன்று திடீர் மாராடைப்பால் மரணம் அடைந்தது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ராவனக்கோட்டம் என்ற படத்தை இரண்டு வருடங்களுக்கு முன் இயக்கி இருந்தார். அதில் சாந்தனு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


"எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க" - தனுஷ் மேடையில் ஆவேச பேச்சு!
[Monday 2025-06-02 06:00]

நடிகர் தனுஷ் பற்றி அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வருகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் பாடகி சுசித்ரா கூறிய ஒரு குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு நடிகர் தனுஷ் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்து இருக்கிறார். எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க. என்ன negativity வேணும்னாலும் spread பண்ணுங்க. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்பு என்னைப்பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க.


"தக் லைஃப்" படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா வாங்கிய சம்பளம்!
[Sunday 2025-06-01 17:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் இப்படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


"இது தான் என் கடைசி படம்" - ஷாக் கொடுத்த அமீர் கான்!
[Sunday 2025-06-01 17:00]

நடிகர் அமீர் கான் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது கடந்த சில காலமாக நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. அடுத்து அவர் நடித்து இருக்கும் Sitaare Zameen Par வரும் ஜூன் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அது நல்ல வசூலை ஈட்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா?
[Sunday 2025-06-01 17:00]

இந்தியாவின் பணக்கார நடிகர் என்றால் அது ஷாருக்கான் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தென்னிந்தியாவில் பணக்கார நடிகர் யார் என்றால் அது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 3.572 கோடி என கூறப்படுகிறது. அந்த ஹீரோ வேறு யாருமில்லை டோலிவுட் கிங் நாகார்ஜுனாதான். தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.


மகனுக்காக ஒன்றிணைந்த தனுஷ் - ஐஸ்வர்யா!
[Sunday 2025-06-01 08:00]

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே விவாகரத்தை அறிவித்துவிட்டனர். அதற்கு பிறகு அவர்கள் தங்கள் மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்களை மட்டும் வெளியிட்டு வந்தனர். தனுஷ் தனது பட விழாக்களுக்கு மகன்களை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். அதே போல ஐஸ்வர்யாவும் அவர்களை பல நிகழ்ச்சிகளுக்கு கூட்டி சென்றார்.


கையில் ஆஸ்கார் விருதுடன் மகாராஜா இயக்குனர்: வீட்டுக்கே அழைத்த ஹாலிவுட் பிரபலம்!
[Sunday 2025-06-01 08:00]

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் ஆனது. அது மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வசூலை குவித்தது. இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும் கிடைத்தது.


'தக் லைப்' கர்நாடகாவில் தடை!
[Saturday 2025-05-31 17:00]

நடிகர் கமல்ஹாசன் கன்னடம் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக அரசியல்வாதிகள் பலரும் கூறிய நிலையில், 'மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது' என கமல் உறுதியாக கூறிவிட்டார். 'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' என தான் அவர் பேசியது தான் பிரச்சனைக்கு காரணம். "நான் எதுவும் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்பேன்" என அவர் உறுதியாக கூறிவிட்டார்.


நடிகைகள் என்றால் பொம்மையா? - கடுப்பான நடிகை நித்யா மேனன்!
[Saturday 2025-05-31 17:00]

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து சினிமாவில் கலக்கியவர் நடிகை நித்யா மேனன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாயகியாக கலக்கிய நடிகைகளின் லிஸ்டில் இவரும் ஒருவர். 180 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தனுஷின் திருச்சிற்றம்பலம் என்ற படத்திற்காக சிறந்த நாயகிக்கான விருது எல்லாம் பெற்றார்.


சிம்பு உடனான காதல் திருமணம் உண்மையா? - பிரபல நடிகை பதில்!
[Saturday 2025-05-31 17:00]

சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு என்ட்ரி கொடுத்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கலக்குபவர் தான் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் ஜுன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கான புரொமோஷனும் சூடு பிடிக்க நடந்து வருகிறது.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா