Untitled Document
November 22, 2024 [GMT]
 
நல்லூரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்ததினத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்த யாசகர்! Top News
[Sunday 2022-11-27 18:00]

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் முன்பாக யாசகம் பெறும் ஒருவர் இன்றைய தினம் (26) விடுதலைப்புலிகளின் தலைவர் 68வது பிறந்ததினத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தார். குறித்த யாசகர் குடும்பம் சரியான வறுமையில் இருக்கையிலும், தனது சொந்த செலவில் இனிப்புகளை வாங்கி ஆலயத்திற்கு வருகைவோருக்கு மன ஆனந்தத்தோடு கொடுத்து மகிழ்ந்திருந்தார்.


மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு - சாட்டி! Top News
[Saturday 2022-11-26 06:00]

தீவக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஊர்காவற்துறை மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (24) ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.


மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்! Top News
[Friday 2022-11-25 06:00]

மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கிராமப் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுகளையும் கிராமிய புத்தெழுச்சி மையங்களாக அரசாங்கம் அறிவித்து அதன் செயற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.


கஃபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் ஜனனி வேலைத்திட்டம்! Top News
[Friday 2022-11-25 06:00]

டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் முகமாக, கஃபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் ஜனனி வேலைத்திட்டம் இம்முறை வடமாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக யாழ். மாவட்டத்திற்கான செயலமர்வு யாழ். நூலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


யாழ். பல்கலையில் ஆவணப் படங்கள் திரையிடல்! Top News
[Thursday 2022-11-24 06:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் (22-11-2022) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட்டன. இந்த ஆவணப்பட விழாவில் சமூகத்தின் பல்வேறு விடயங்களைப் பற்றிப் பேசுகின்ற பதினான்கு ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.


மாவீரர் வாரத்தை முன்னிட்டு வீதி விளக்குகள் பொருத்தி வைப்பு! Top News
[Thursday 2022-11-24 06:00]

மாவீரர் தினத்தை முன்னிட்டு, வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட முதலிய கோவில் பகுதியில் இன்றையதினம் 20 மின் விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டுள்ளன.


மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் திரைநீக்கம்! Top News
[Tuesday 2022-11-22 18:00]

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக இன்று (21) மாலை முதல் வைக்கப்பட்டுள்ளது. 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் இன்று முதல் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


சாட்டி கடற்கரையில் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பம்! Top News
[Tuesday 2022-11-22 18:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், இன்றையதினம் சாட்டி கடற்கரையில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


மானிப்பாய் அந்தோனியார் தேவாலயத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டம்! Top News
[Monday 2022-11-21 18:00]

வடக்கில், குறிப்பாக யாழில் போதைவஸ்தின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் போதைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பன பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இளவாலை மறைக்கோட்ட பொது நிலையினர் கழகத்தினர் நேற்றைய தினம் (20) மானிப்பாய் அந்தோனியார் ஆலய வளாகத்தில் போதைக்கு எதிரான போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.


கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் நிதியுதவியுடன் மல்லாவி வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைப்பு! Top News
[Sunday 2022-11-20 17:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் 14-11-2022 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நன்மை கருதி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சுமார் ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் பெறுமதியில் இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்பன மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


அபுதாபியில் கட்டப்படும் இந்து ஆலயத்தை பார்வையிட்ட மறவன்புலவு சச்சிதானந்தம்! Top News
[Saturday 2022-11-19 19:00]

அபுதாபியில் கட்டப்படுகின்ற இந்துக் கோயிலை இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர்.


தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புத்தக விற்பனை கண்காட்சி! Top News
[Friday 2022-11-18 18:00]

தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில், தேசிய கல்வி நிறுவகத்தினால் அச்சிடப்பட்ட புத்தகக் கண்காட்சியும், புத்தக விற்பனை நிகழ்வும் இன்றையதினம் (18) யாழ். மத்திய கல்லூரி ரொமைன் மண்டபத்தில் நடைபெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றி வைத்து, இரண்டு நிமிட அக வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.


முப்படைகளின் தேவைக்கு மக்களது காணிகளை சுவீகரித்துக்கொள்வதற்கான எதிர்ப்பு! Top News
[Wednesday 2022-11-16 06:00]

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எற்பாட்டில், முப்படைகளின் தேவைக்கு மக்களது காணிகளை சுவீகரித்துக்கொள்வதற்கான எதிர்ப்பு கண்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.


மல்லாவி வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு! Top News
[Tuesday 2022-11-15 18:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் நேற்று (14-11-2022) வழங்கிவைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நன்மை கருதி விடுக்கபட்ட கோரிக்கைக்கு அமைவாக சுமார் ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் பயனடையகூடிய வகையில் இவ்விரு இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுளளன.


சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி! Top News
[Monday 2022-11-14 18:00]

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. இன்று (14) காலை 7.30 மணியளவில் ஆரம்பித்த பேரணி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படிச் சந்தியை அடைந்து, பிரதான வீதியை ஊடாக மாவட்ட செயலகத்தை அடைந்துள்ளது.


விமானத்தாக்குதல் நினைவேந்தல்! Top News
[Monday 2022-11-14 18:00]

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் விமானக்குண்டு தாக்குதலின் 29வது நினைவு தினம் இன்றையதினம் காலை நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு திருப்பலியும் அதனைத்தொடர்ந்து நினைவு அஞ்சலி நிகழ்வும் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.


இரவுபகலாக இப்பட்டத்திருவிழா செயற்பாடு! Top News
[Monday 2022-11-14 06:00]

வரலாற்று சிறப்பு மிக்க பட்டம் எற்றும் திருவிழாவினை முன்னிட்டு பட்டத்தினை கட்டி வர்ணகடதாசிகளால் அலங்கரிக்கும் செயற்பாடு இரவுபகலாக வடமராட்சி இளைஞசர்களால் இன்றில் இருந்து முன்னெடுக்க ப்பட்டுவருகின்றது. இப்பட்டத்திருவிழா என்பது பாரம்பரிய ஒருதிருவிழாவாக வடமராட்சி வாழ் மக்களிடம் இருந்துவருகின்றது.அந்த திருவிழா வருடாந்தம் இடம்பெறுகின்றது.


வட்டு மத்திய கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும்! Top News
[Saturday 2022-11-12 06:00]

வட்டு மத்திய கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் இன்றையதினம் கல்லூரியின் அதிபர் தலைமையில், கல்லூரியின் பொது மண்டபத்தில் நடைபெற்றது. மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது.


கொக்குவில் சந்தை வளாகத்தின் சந்தை கட்டிடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது! Top News
[Saturday 2022-11-12 06:00]

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கொக்குவில் சந்தை வளாகத்தின் சந்தை கட்டிடத்தொகுதி நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் பங்குபற்றுதலுடன் இன்று (11) காலை திறந்து வைக்கப்பட்டது.


தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி ஒன்று முந்தைய தினம் (10) முன்னெடுக்கப்பட்டது! Top News
[Saturday 2022-11-12 06:00]

வலி. மேற்கு பிரதேச சபை மற்றும் யாழ். சங்கானை சிவப்பிரகாச பாடசாலை சமூகம் ஆகியன இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்தன. சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, சங்கானை நகரம் வரை இடம்பெற்றது. இதன்போது போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது.


சென்ஜோன்ஸ் கல்லூரியின் 83 ஆம் அணியின் ஆதரவில் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு! Top News
[Friday 2022-11-11 06:00]

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் 83 ஆம் அணியின் ஆதரவில் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு இன்றையதினம் (09) யாழ். போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது. கட்டடத்தை பரியோவான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கதிர்காமர் தம்பி மாஸ்டர் திறந்து வைத்தார். நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பரியோவான் கல்லூரி முன்னாள் அதிபர் வணக்கத்துக்குரிய fr Rev FR N.J. Gnanaponraj உட்பட மருத்துவர்கள், தாதியர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 32 வது ஆண்டு விழா! Top News
[Friday 2022-11-11 06:00]

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 32 வது ஆண்டு விழாவும் விளையாட்டுப் போட்டியும், கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானம் மற்றும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் பிரதான மண்டபம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.


சங்கானை சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நூல் வெளியீடு! Top News
[Tuesday 2022-11-08 21:00]

சங்கானை சைவப்பிரகாச வித்தியாலயத்தின், அரசறிவியல் மன்றத்தினால் வெளியிடப்படும் "அதிகாரம்" நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு இன்றையதினம் (08) பாடசாலையின் பொது மண்டபத்தில் நடைபெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.


மன்னார் மாவட்டத்தின் இரண்டு மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு சுழற்சிமுறை கடன்! Top News
[Tuesday 2022-11-08 21:00]

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர் த.கதிர்காமநாதனின் நிதிப் பங்களிப்பில் மன்னார் மாவட்டத்தின் இரண்டு மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு சுழற்சிமுறை கடன் வழங்குவதற்கு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் ஆண்டான்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பெரியகுஞ்சுக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றிற்கு குறித்த நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Tuesday 2022-11-08 21:00]

இன்றையதினம் (08), விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யுமாறு கோரி புலோலி கமநல சேவைகள் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு தேவையான மண்ணெண்ணெய், செயற்கை உரம், கிருமிநாசினி மற்றும் உள்ளீட்டு பொருட்களை வழங்குமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


வலி. மேற்கு பிரதேச சபையில் நடைபெற்ற முழுநிலா கலைவிழா! Top News
[Monday 2022-11-07 18:00]

இன்றைய தினம் (07) வலி. தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், "முழுநிலா கலைவிழா" நிகழ்வு, வலி. தென்மேற்கு பிரதேச சபையின் கலாச்சார குழுத்தலைவர் க.ஜெசிந்தன் அவர்களது தலைமையில், வலி. தென்மேற்கு பிரதேச சபையின் பொதுநோக்கு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


குருநகர் சென் ஜேம்ஸ் கல்வி முன்னேற்ற கழக 25வது ஆண்டு நிறைவு! Top News
[Monday 2022-11-07 18:00]

குருநகர் சென் ஜேம்ஸ் கல்வி முன்னேற்ற கழக 25வது ஆண்டு நிறைவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்றையதினம் (06) குருநகர் கலாசாரமண்டத்தில் நடைபெற்றது. குருநகர் சென் ஜேம்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட செயலர் சுதர்ஷன் அவர்களும் சிறப்பு விருந்தினராக புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்.


ஏழாலை தமிழ்ப் பொதுப்பணிமன்றத்தின் 50 வது ஆண்டு நிறைவு விழா! Top News
[Monday 2022-11-07 06:00]

ஏழாலை தெற்கு தமிழ்ப் பொதுப்பணிமன்றத்தின் 50 வது ஆண்டு நிறைவு விழாவும் அமரர் சபாபதி நாகராசாவின் ஞாபகார்த்த பொன்விழாவும் ஏழாலை தெற்கு அமி.த.க பாடசாலையில் இடம்பெற்றது.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முல்லை இளைஞர் அணி நிர்வாகத் தெரிவு! Top News
[Monday 2022-11-07 06:00]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச இளைஞர் அணி நிர்வாகத் தெரிவு இன்றைய தினம் காலை 10:00மணிக்கு மல்லாவி கோவில் பொது மண்டபத்தில் துணுக்காய் பிரதேச சபையின் கௌரவ துணைத் தவிசாளர் சிவகுமார்(குட்டி) தலைமையில் நடைபெற்றது.


மாவீரர் துயிலுமில்லம் துப்பரவுப்பணி! Top News
[Saturday 2022-11-05 20:00]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்றையதினம் (04) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன .

Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா