Untitled Document
November 22, 2024 [GMT]
 
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்! Top News
[Saturday 2022-11-05 19:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற மாவீரர் துயிலும் இல்ல வளாக சிரமதான பணி துயிலும் இல்ல பணி குழுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணி அளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அக வணக்கம் செலுத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


நட்டாங்கண்டல் அ.த.க. பாடசாலையில் பாடசாலை மாணவர்களுக்கான பால் வழங்கும் திட்டம் ஆரம்பிப்பு! Top News
[Friday 2022-11-04 06:00]

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பாடசாலையில் இன்றையதினம் மாணவர்களுக்கான திரவ பால் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நலிவு சூழ்நிலையில் மாணவர்களிடையே போசாக்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


மடிக்கணினி வழங்கி வைப்பு! Top News
[Friday 2022-11-04 06:00]

மன்னார் சென்சேவியர் பாடசாலையில் கணித பிரிவில் தோற்றி மாவட்ட மட்டத்தில் 8 வது இடத்தினை பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவான பற்றிக் ஆனந்தகுமார் மெற்றில் பியூலா என்ற மாணவிக்கு மடிக்கணிணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


வலி. வடக்கில் காணி அபகரிப்புற்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Wednesday 2022-11-02 19:00]

தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்துள்ள நிலையில் அந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போர்ட்டக்காரர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்னால் வீதியில் அமர்ந்திருந்து வீதிமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் பிரதேச செயலக வளாகத்தினுள் நுழைந்து முற்றுகை போராட்டம் செய்தனர்.


இலங்கையின் முதலாவது கெமுனு படைப் பிரிவின் தமிழ் இராணுவ உத்தியோகத்தர் 90 வயதில் காலமானார்! Top News
[Wednesday 2022-11-02 06:00]

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கெமுனு இராணுவப் அணியின் முதலாவது படைப்பிரிவில் இணைந்து கொண்ட தமிழ் இராணுவ உத்தியோகத்தரான விஸ்வலிங்கம் என்பவர் தனது 90 வது வயதில் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். 1932 ஆம் ஆண்டு கைதடியில் பிறந்த விஸ்வலிங்கம் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கெமுனுப் படைப்பிரிவின் இணைந்து கொண்டார்.


பல்கலையில் அமையப்பெற்றுள்ள மாவீரர் நினைவுத்தூபி சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது! Top News
[Wednesday 2022-11-02 06:00]

மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ். பல்கலையில் அமையப்பெற்றுள்ள மாவீரர் நினைவுத்தூபி வளாகம், யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. இதனைதொடர்ந்து மாணவர்களால் மாவீரர் நினைவுத்தூபிக்கு ஆத்மார்த்த ரீதியாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதிகளவான மாணவர்கள் இந்த நினைவேந்தலில் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது.


ஈழத்தில் இருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும்! Top News
[Wednesday 2022-11-02 06:00]

ஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத் தொடங்கியிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகின்றது. அதனால் இங்கிருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் என தான் நம்புவதாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். தந்தை செல்வா கலையரங்கில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஈழத்து சினிமா கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வான ‘குவியம் விருதுகள் 2022’ இல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது! Top News
[Tuesday 2022-11-01 06:00]

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. அதன் போது, போதைப்பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதைப்பொருள் பாவனையில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.


நல்லூர் சூரசம்காரம்! Top News
[Monday 2022-10-31 18:00]

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் நல்லையம்பதி அலங்காரக்கந்தன் தேவஸ்தானத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று மாலை சூரசம்காரம் பக்திபூர்வாக இடம்பெற்றது. இவ் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான முருகன் ஆலயங்களிலும் மிக சிறப்பாக விரத உற்சவ அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.


கொட்டும் மழைக்கு மத்தியில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்! Top News
[Sunday 2022-10-30 20:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் தேதி இடம்பெற உள்ள நிலையில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணி குழுவினரால் துயிலும் இல்ல வளாகம் சிரமதானம் செய்கின்ற வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.


தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம்! Top News
[Sunday 2022-10-30 20:00]

நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினரால் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம் இன்றைய தினம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது . நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினரால் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம் இன்றைய தினம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் இணைத்தலைவர் முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் வெள்ளைப்பிரம்புதினம் நடைபெற்றது! Top News
[Sunday 2022-10-30 20:00]

வடமாகாண லயன்ஸ் கழகங்களும் யாழ். விழிப்புணர்வற்றோர் சங்கமும் இணந்து நடாத்திய வெள்ளைப்பிரம்புதினமும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குருநகர் சனசமூக நிலைய முன்றலில் ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் யாழ்மாவட்ட விழிப்புணர்வற்றோர் சங்க அலுவலகத்தில் நிறைவுபெற்று அங்கு விழுப்புணர்வற்றோர் சங்கத்தினரின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றது.


30வது தேசிய கரம் போட்டியில் 2ம் இடம் பெற்று கொக்குவில் இந்து சாதனை! Top News
[Sunday 2022-10-30 20:00]

தேசிய கரம் போட்டியில் 2ம் இடத்தினை பெற்று யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 30வது தேசிய கரம் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இன்றையதினம் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் பஞ்சலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன.


யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 30வது தேசிய கரம் போட்டிகளின் இறுதிப் போட்டிகள்! Top News
[Sunday 2022-10-30 20:00]

30வது தேசிய கரம் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் இன்றையதினம் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்றன. கடந்த 28.10.2022 அன்று ஆரம்பித்த இந்த போட்டியில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள 92 தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து 600 போட்டியாளர்கள் பங்குபற்றினர். 17 வயதுப் பிரிவு மற்றும் 20 வயதுப் பிரிவின் கீழ் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன.


சாதனை படைத்த யாழ்ப்பாண இளைஞன்! Top News
[Sunday 2022-10-30 16:00]

தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.


உலகில் அதிக மனித - யானை மோதல் உள்ள நாடாக இலங்கை! Top News
[Saturday 2022-10-29 19:00]

60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் யானைகளின் அச்சுறுத்தலால் மக்கள் பலியாகியதன் விளைவாக, உலகில் அதிக மனித - யானை மோதல் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது. அதற்கு தீர்வாக முன்னாள் சபாநாயகர் திரு. கரு ஜயசூரியவின் முயற்சியின் கீழ், ஹபரணை பிரதேசத்தில் மாதிரி வேலியாக, ரித்திகலவை அண்மித்த பண்டிவெவ கிராமத்தில் 4.4 கிலோமீற்றர் பரப்பளவில் சமூக அடிப்படையிலான மின்சார வேலி அமைக்கப்பட்டு நேற்று (29) மக்களிடம் கையளிக்கப்பட்டது.


சம்பியனாகியது தொண்டமனாறு கலையரசி அணி!
[Saturday 2022-10-29 19:00]

திருமகள் சன சமூக நிலைய 70வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, அமரர் நல்லையா சதீஸ்குமார் ஞாபகர்த்த, 23 வயதுக்குட்பட்ட யாழ். மாவட்ட ரீதியான கரப்பந்தாட்ட போட்டியில் சம்பியனாகியது தொண்டமனாறு கலையரசி அணி. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தொண்டைமனாறு கலையரசி அணி ஆவரங்கால் இந்து இளைஞன் அணியுடன் மோதியது.


சிறப்பாக இடம் பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா! Top News
[Saturday 2022-10-29 19:00]

வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா இன்று சனிக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரியில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது. காலை 8:30 மணியளவில் நெல்லியடி முருகன் ஆலயத்திலிருந்து பூசை வழிபாட்டுடன் தமிழர் பாரம்பரிய தப்பாட்டம், சிலம்பாட்டம், கும்மி, பறை இசை, கரகம், காவடி, மயிலாட்டம், ஆதிவாசிகள் ஆட்டம், பொம்மலாட்டம், ஒயிலாட்டம், காத்தான் கூத்து, அரிசந்திரா பாடல், கரவலை பாடல் உட்பட பல ஆட்டங்கள் பாட்டங்களுடன் அழைத்து வரப்பட்டனர்.


மாங்குளத்தில் சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் திறந்து வைப்பு! Top News
[Friday 2022-10-28 21:00]

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி ஆரோக்கிய உணவக திட்டத்தின் கீழ் A9 வீதி மாங்குளத்தில் அமையப்பெற்ற சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் இன்று(28) காலை 10.30மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த ஆரோக்கிய உணவகத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.


யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் தேசிய போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பம்! Top News
[Friday 2022-10-28 21:00]

யாழ். பல்கலைக் கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால், தேசிய ரீதியிலான மாணவர் வழிகாட்டல் போதைப்பொருள் விழிப்புணர்வு செயற்றிட்டமானது, இன்றையதினம் யாழ். அராலி சரஸ்வதி மஹா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாக குறித்த ஒன்றியத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,


யாழ். பல்கலைக்கழக ஆய்வு மாநாடு! Top News
[Friday 2022-10-28 21:00]

புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் (Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் ( JUICE – 2022) தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தினால் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு இன்று 28 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.


யாழில் தேசிய கரம் போட்டிகள் ஆரம்பம்! Top News
[Friday 2022-10-28 21:00]

33வது தேசிய கரம் போட்டிகள் இன்றையதினம் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது விருந்தினர்கள், மேற்கத்தேய இசை முழங்க அழைத்துவரப்பட்டு, தேசியக் கொடி, வடக்கு மாகாண கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வு ஆம்பமானது.


தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2020! Top News
[Friday 2022-10-28 21:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 151 நிறுவனங்கள் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளை சுவீகரித்துக் கொண்டன. விசேட திறமை மற்றும் திறமை விருதுகளை பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழாவானது இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.


மாணவர்களின் விபத்துகளை தடுப்பதற்கு வலி. மேற்கு பிரதேச சபையின் முன்மாதிரியான செயற்பாடு! Top News
[Friday 2022-10-28 21:00]

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் வீதி விபத்துகளை தவிர்ப்பதற்கு வலி. மேற்கு பிரதேச சபை முன்மாதிரியான செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்துள்ளது. அதாவது, பாடசாலைக்கு அருகில் பிரதான வீதிகள் காணப்படுகின்றமையால் அந்த வீதியால் நடந்து செல்லும் மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு வீதியில் வைப்பதற்கு கம்பங்களையும் அதற்கான பட்டிகளையும் வலி. மேற்கு பிரதேச சபை வழங்கியுள்ளது.


சித்த விசேட கட்டண சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டது! Top News
[Friday 2022-10-28 21:00]

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் கீழ் உருவாக்கப்பட்ட சித்த விசேட கட்டண சிகிச்சை பிரிவும், மருந்து விற்பனை நிலையமும் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு அச்சுவேலி - செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்திய சாலையில் இடம்பெற்றது.


தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் முதற்கட்ட போட்டிகள் ஆரம்பம்! Top News
[Thursday 2022-10-27 20:00]

அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் அனுசரணையுடன் YAN அமைப்பு இணைந்து முன்னெடுக்கும் "போதைக்கெதிரான பாதை" எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் மத்தியிலான விழிப்புணர்வு நடவடிக்கை நேற்றையதினம் (26) ஆரம்பமானது. இதன் முதற்கட்டமாக மாணவர்களுக்கான சித்திரப்போட்டி, சுலோகம் எழுதுதல் போன்ற போட்டிகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்றையதினம் (26) நடைபெற்றது. இப் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


சண்டிப்பாய் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின விழா! Top News
[Thursday 2022-10-27 20:00]

சண்டிப்பாய் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின விழா வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இரவீந்திரன் கலாச்சார மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.


கௌரி விரதம்! Top News
[Tuesday 2022-10-25 21:00]

சக்திப்பீடங்களில், ஐஸ்வரியங்களை அள்ளி அருளும் அம்மன் தெய்வத்தி ற்கான மிக முக்கிய விரதங்களில் ஒன்றான கேதாரகெளரி காப்பு உற்சவத்தினை முன்னிட்டு, இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களிலும் விஷேட அபிஷேகங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்றுள்ளன.


நல்லூர் கந்தசுவாமி ஆலய தீபாவளி வழிபாடு! Top News
[Tuesday 2022-10-25 18:00]

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில், தீபாவளி திருநாளான இன்று மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த மக்கள் வழிபாடுகளில் கலந்து சிறப்பித்திருந்தனர்.


தீபவொளியின் தீபாவளி நாளினை கொண்டாடும் இந்துமக்கள்! Top News
[Monday 2022-10-24 08:00]

இன்று அதிகாலையில் இருந்து ஆலய சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களிலும் தீபாவளிபூஜை வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இவ் வழிபாட்டினை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் சிறப்பான ஆராதனைகள் காலை 06.00 மணிக்கு இடம்பெற்றன.

NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா