Untitled Document
September 19, 2024 [GMT]
சிம்பு தேவன் இயக்கியுள்ள போட் படத்தின் முதல் விமர்சனம்!
[Wednesday 2024-07-24 18:00]

நகைச்சுவை என்பது சாரதானமான விஷயம் இல்லை. அதை திரையில் சரியாக வழங்கவில்லை என்றால் அதுவே சீரியஸான படமாக மாறிவிடும். அப்படி நகைச்சுவையில் அசத்தும் இயக்குனர்களில் ஒருவர் சிம்பு தேவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்கள் எப்போதும் பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது.


"பட வாய்ப்பு கேட்டு போன இடத்தில் நடந்த மோசமான அனுபவம்" - ஐஸ்வர்யா ராஜேஷ்!
[Wednesday 2024-07-24 18:00]

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.


வருடா வருடம் ரூ. 30 கோடி நன்கொடை கொடுக்கும் பிரபல நடிகர்!
[Wednesday 2024-07-24 18:00]

முன்னணி பிரபலங்களை தங்களது வாழ்க்கையின் முன் உதாரணமாக வைத்து வாழும் ரசிகர்கள் பலர் உள்ளார்கள். அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை பார்த்து ரசிகர்களும் வாழ்க்கையில் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அப்படி பெரும்பாலான பிரபலங்கள் மற்றவர்களுக்கு உதவுவதை தங்களது ரசிகர்களுக்கு அதிகம் செய்து காட்டியுள்ளனர். அப்படி ஒரு பிரபலம் வருடா வருடம் நன்கொடை கொடுக்கும் தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


விஜய் ஆண்டனி அவர் ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
[Wednesday 2024-07-24 06:00]

விஜய் ஆண்டனி கன்னியாகுமாரி மாவட்டத்தில் பிறந்து, தனது இளங்கலை பட்டத்தினை லயலோ கல்லூரியில் படித்து, பின்னர் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர். இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பே தொலைக்காட்சி தொடர்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இவர் பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அது மட்டுமின்றி விஜய் ஆண்டனி ஆத்திசூடி,டைலாமோ,நாக்கு முக்க பாடல்கள் மூலம் திரையுலகத்தில் பிரபலமானார்.


நாளை ரிலீஸ் ஆகும் அந்தகன் ஆந்தம் பாடல்: பாடிக்கொடுத்த முன்னணி ஹீரோ!
[Wednesday 2024-07-24 06:00]

நடிகர் பிரஷாந்த் நடிப்பில் அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அந்தகன் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் அந்தகன் படத்தின் பாடல் நாளை நடிகர் விஜய் வெளியிட இருப்பதாக நேற்று பிரஷாந்த் அறிவித்து இருந்தார்.


வைரலாகும் விடாமுயற்சி செல்பி!
[Tuesday 2024-07-23 06:00]

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பல ரிஸ்க் ஆன காட்சிகளை படக்குழு எடுத்துமுடித்து இருக்கிறது. அங்கு schedule முடிந்தபிறகு படக்குழு மொத்தமாக நின்று எடுத்துக்கொண்ட போட்டோவும் வெளியாகி இருந்தது.


தேடி வந்து உதவிய சிவகார்த்திகேயன்: ராசு மதுரவன் மனைவி நெகிழ்ச்சி!
[Tuesday 2024-07-23 06:00]

அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கியவர் ராசு மதுரவன். அவர் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார். ராசு மதுரவன் கடந்த 2013ல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் மனைவி பவானி வறுமையில் தத்தளிப்பதாக சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார்.


இயக்குனர் ராஜமௌலியை புகழ்ந்து பேசிய ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்!
[Monday 2024-07-22 18:00]

இந்திய சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து சென்ற இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ். ராஜமௌலி. நான் ஈ, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களின் மூலம் நம்மை வியந்து பார்க்க வைத்தார். ஆர்.ஆர்.ஆர் படம் உலகளவில் பிரபலமாகி அப்படத்தின் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்றது. அப்போது LA சென்றிருந்த இயக்குனர் ராஜமௌலி உலக புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அங்கு சந்தித்து பேசினார்.


டாப் ஸ்டாருக்காக ஒன்றிணைந்த விஜய், பிரபு தேவா, விஜய் சேதுபதி, அனிருத்!
[Monday 2024-07-22 18:00]

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களில் ஒருவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் வெளிவந்த அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன். இப்படத்தை நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


விஜய்யின் புலி படம் தோல்வி அடைந்ததற்கு இதுதான் காரணம்!
[Monday 2024-07-22 18:00]

நடிகர் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன். வடிவேலுவிற்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த பட பாணியில் விஜய்யை வைத்து புலி என்ற படத்தை இயக்கியிருந்தார் சிம்புதேவன். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.


சிம்பு பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்!
[Monday 2024-07-22 06:00]

சிம்பு ஜோடியாக வானம் படத்தில் நடித்தவர் ஜாஸ்மின் பாஸின். தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். அவர் படங்களில் நடித்தது குறைவு தான் என்றாலும் டிவி தொடர்கள், வெப் சீரிஸ், ஆல்பம் பாடல்கள் என பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஜூலை 17ம் தேதி அவர் டெல்லியில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் கலந்துகொண்டார். அப்போது கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கொண்ட பிறகு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு இருக்கிறது.


சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!
[Monday 2024-07-22 06:00]

அப்படி சூப்பர் சிங்கர் ஷோவில் பங்கேற்று பிரபலம் ஆனவர் பிரியா ஜெர்சன். கேரளாவை சேர்ந்த அவர் சூப்பர் சிங்கர் 9வது சீசனில் கலந்துகொண்டிருந்தார். டைட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் கிடைத்து இருந்தது.


பல கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் நட்சத்திரங்கள்!
[Sunday 2024-07-21 17:00]

சென்னையில் உள்ள பட்டினம்பாக்கத்தில் பிரமாண்டமாக இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நடிகர் விஜய் வீடு வாங்கியுள்ள விஷயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர் மட்டுமின்றி திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களாக இருக்கும் துல்கர் சல்மான், ஆர்யா, சாய் பல்லவி, நிக்கி கல்ராணி மற்றும் ரம்பா உள்ளிட்டோரும் அங்கே வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அரசியல் பயணம் குறித்து பேசிய நடிகர் பிரஷாந்த்!
[Sunday 2024-07-21 17:00]

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் பிரஷாந்த். இவரை ரசிகர்கள் டாப் ஸ்டார் என கொண்டாடி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அந்தகன், GOAT என தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அந்தகன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிரஷாந்த், GOAT திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.


தமிழகத்தில் மட்டும் இந்தியன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Sunday 2024-07-21 17:00]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி கடந்த 12ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா தயாரித்திருந்தது. இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி ஷங்கர், ஜெகன், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதே போல் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மாரிமுத்து, மனோபாலா உள்ளிட்டோரையும் பார்க்க முடிந்தது.


பிரம்மாண்டமாக நடக்கப்போகும் விஜய் டெலி அவார்ட்ஸ்!
[Sunday 2024-07-21 08:00]

எந்த மாதிரி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. இதில் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் தொடர்களும், இளைஞர்களை கவரும் வகையிலான தொடர்களும் உள்ளது.


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலக என்ன காரணம்?
[Sunday 2024-07-21 08:00]

பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு தொடர். அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்ட கூட்டுக் குடும்பம் எப்படி இருக்கும் என்பதை காட்டிய இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. பின் சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது, அதேவேகத்தில் அப்பா-மகன்களை வைத்து 2வது சீசன் தொடங்கப்பட்டது.


4வது திருமணத்துக்கு தயாரான வனிதா விஜயகுமார்!
[Saturday 2024-07-20 19:00]

வனிதா விஜயகுமார் விரைவில் 4 ஆவது திருமணம் செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் வனிதா விஜயகுமார். இதனை தொடர்ந்து பெரியளவில் படங்கள் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.


பெண்களுக்கு திருமணம் தேவையில்லை: பிரபல நடிகை சர்ச்சை பேச்சு!
[Saturday 2024-07-20 19:00]

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பாமா. இவர் தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’ உட்பட சில படங்களில்நடித்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு அருண் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கவுரி என்ற மகள் இருக்கிறார்.


எல்லைமீறிய கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்! Top News
[Saturday 2024-07-20 19:00]

தமிழ் சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகளுக்கு போட்டி என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இளம் நடிகைகள் புதிதாக அறிமுகமாகி கொண்டிருப்பதால் தொடர்ந்து மற்ற நடிகைகள் அவர்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமாகி வருகிறது. இன்னும் சிலர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வந்து பல வருடங்கள் ஆகியும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றனர். முக்கியமாக வாரிசு நடிகைகள் அவர்களது இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்று கூற வேண்டும்.


தனுஷ் உடன் மோதும் அமலா பால்!
[Saturday 2024-07-20 07:00]

நடிகர் தனுஷ் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் ராயன் படம் வரும் ஜூலை 26ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. மேலும் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. சமீபத்தில் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரது கொலை தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே போன்ற பகை - கொலை கதைக்களத்தில் ராயன் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.


விமர்சகர்கள் மீது வழக்கு பதிவு செய்த கல்கி 2898 AD படக்குழு!
[Saturday 2024-07-20 07:00]

நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 AD திரைப்படம் கடந்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி மற்றும் ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி படத்தில் சிறப்பு தோற்றத்தில் பல தெலுங்கு பிரபலங்கள் நடித்துள்ளனர்.


மனைவி நல்ல காதலியாக இருப்பதில்லை: டி இமான் வெளிப்படை!
[Friday 2024-07-19 18:00]

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் தான் டி இமான். இவர் விஜய்யின் தமிழன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த டீன்ஸ் படத்திற்கு இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


"அந்த சமயத்தில் நானும் விஜய்யும் உண்மையில் அழுதுவிட்டோம்" - குஷ்பு பேட்டி!
[Friday 2024-07-19 18:00]

விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படத்தை இயக்கியிருந்தார். மேலும் படத்தில் சரத்குமார், ரஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


தமன்னா பற்றிய சர்ச்சை கருத்து: விளக்கம் அளித்த பார்த்திபன்!
[Friday 2024-07-19 18:00]

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் நடிகராக வலம் வருபவர் தான் பார்த்திபன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "ஒரு படம் நல்லா ஓடுறதுக்கு மிகப்பெரிய வெற்றிகரமான காரணமாக தமன்னாவின் நடனம் அமைந்துவிடுகிறது" என்று தெரிவித்திருந்தார். ரஜினியின் ஜெயிலர், படத்தையும், சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தையும் தான் பார்த்திபன் மறைமுகமாக சொல்லுகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வந்தனர்.


நடிகை மீனா பற்றி பரவும் கிசுகிசு!
[Friday 2024-07-19 06:00]

நடிகை மீனா 90களில் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவருக்கு தற்போதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். மீனாவின் கணவர் வித்யாசாகர் இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அதற்கு பிறகு மீனா பற்றி பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.


திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜான்வி கபூர்!
[Friday 2024-07-19 06:00]

தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமா தலையில் வைத்து கொண்டாடிய நடிகை தான் ஸ்ரீதேவி. 80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கொடிகட்டி பறந்த இவர் இப்போது நம்முடன் இல்லை. டயட், பிட்னஸ் என இருந்த நடிகைக்கு நேர்ந்த மரணம் அனைவருக்கும் அதிர்ச்சி தான்.


"விவாகரத்துக்கு பின் வாழ்க்கை அப்படி ஆகிவிட்டது" - உருக்கமாக பேசிய சமந்தா!
[Thursday 2024-07-18 06:00]

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். மேலும் விவாகரத்துக்கு பிறகு சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா