Untitled Document
September 19, 2024 [GMT]
தரமான சம்பவம் செய்த இயக்குனர் மாரி செல்வராஜ்: பாராட்டிய பா.ரஞ்சித்!
[Tuesday 2024-08-20 18:00]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி நடித்துள்ள வாழை திரைப்படம் ஆகஸ்ட் - 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பா. ரஞ்சித் பேசிய விஷயம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. அப்போது அவர் பேசுகையில், பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைத்த பாராட்டு ஏன் கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களுக்கு கிடைப்பதில்லை. இது ஏன் என்பதற்கான கேள்வி எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.


விஜயகாந்த் வீட்டில் நடிகர் விஜய்: திடீர் சந்திப்பு எதற்காக?
[Tuesday 2024-08-20 06:00]

நடிகர் விஜய் நடிப்பில் GOAT படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் டிரைலரும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது. விஜய் இரண்டு ரோல்களில் நடித்திருப்பது, பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து இருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.


ஜான்வி கபூரை தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா குஷி கபூர்?
[Tuesday 2024-08-20 06:00]

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமா மக்களால் மறக்கவே முடியாத ஒரு பிரபலம். தமிழில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது இவரது மூக்கு மட்டும் கொஞ்சம் தட்டையாக எடுப்பாக இல்லை என கூறப்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மூக்கை மெல்லியதாகவும், கவர்ச்சியாகவும் மாற்றிக்கொண்டார்.


அஜித்துடன் அப்படி நடிக்க மாட்டேன்: கீர்த்தி சுரேஷ் உறுதி!
[Monday 2024-08-19 18:00]

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகுதாத்தா படம் கடந்த 15ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்ற நிலையில், நடிகர் அஜித் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ள விடயமொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படத்தில் தான்.


சென்சேஷனல் இயக்குனருடன் கைகோர்க்கும் சூரி!
[Monday 2024-08-19 18:00]

திரையுலகில் காமெடியாக மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டு, அதன்பின் மாஸ் ஹீரோவாக மாறுவது என்பது மிகவும் கடினமான விஷயம். அதை தனது கடின உழைப்பினால் சாத்தியப்படுத்தியுள்ளார் நடிகர் சூரி. புரோட்டா சூரி என அழைக்கப்பட்டு வந்த இவர், தற்போது ரசிகர்களால் விடுதலை ஹீரோ சூரி என கொண்டாடப்பட்டு வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை முதல் பாகம் இவருக்கு தமிழ் சினிமாவில் வேறொரு பரிணாமத்தை கொடுத்துள்ளது.


தங்கலான் 4 நாள் வசூல் விபரம்!
[Monday 2024-08-19 18:00]

கடந்த வாரம் ரிலீஸ் ஆன விக்ரமின் தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. போட்டிக்கு டிமான்ட்டி காலனி 2 மற்றும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி இருந்த நிலையிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது.


பாலிவுட்டில் நுழையும் லோகேஷ் கனகராஜ்!
[Monday 2024-08-19 06:00]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர். அவரது படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருவதால் அவருக்கு டாப் ஹீரோக்கள் படங்களை இயக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. விஜய்யின் லியோ படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி உடன் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் பணியாற்றி வருகிறார்.


பிரபல பிரெஞ்சு திரைப்பட நடிகர் அலைன் டெலோன் காலமானார்!
[Monday 2024-08-19 06:00]

பிரபல பிரெஞ்சு திரைப்பட நடிகர் அலைன் டெலோன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என அவரது குடும்பம் அறிவித்துள்ளது. ‘பர்பிள் நூன்’ மற்றும் ‘தி லியோபார்ட்’ போன்ற படங்களில் நடித்த பிரபல பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோன் 88 வயதில் காலமானார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மோகன்லால்!
[Sunday 2024-08-18 16:00]

மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் மோகன்லால். 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து கொண்டிருக்கும் இவர் அடுத்ததாக ராம், பரோஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், 64 வயதாகும் நடிகர் மோகன் லால் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி திரையுலகினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


மூன்று நாட்களில் டிமாண்டி காலனி 2 செய்த வசூல்!
[Sunday 2024-08-18 16:00]

இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அறிமுக இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டிமாண்டி காலனி. இப்படத்தில் கதாநாயகனாக அருள்நிதி நடித்திருந்தார். அறிமுக படமே இயக்குனர் அஜய் ஞானமுத்துவிற்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின் டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளிவந்துள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


வாடகை பாக்கி: யுவன் சங்கர் ராஜா மீது புகார்!
[Sunday 2024-08-18 16:00]

கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வாடகை ரூ.20 லட்சம் கொடுக்கவில்லை என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்தார். இந்த வாடகை வீட்டின் உரிமையாளர் அஜ்மத் பேகம் ஆவார்.


பாடகி பி.சுசீலா திடிரென மருத்துவமனையில் அனுமதி!
[Sunday 2024-08-18 07:00]

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் சுமார் 25 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி இருப்பவர் பி.சுசீலா. அவரது குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது பாடல்களை தற்போதும் ரசித்து கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.


நடிகை ஸ்ரேயா சரண் கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்! Top News
[Sunday 2024-08-18 07:00]

நடிகை ஸ்ரேயா சரண் தற்போது படங்களில் அதிகம் பார்க்க முடியவில்லை. 41 வயதாகும் அவர் தாராள கிளாமர் காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.


கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறாரா?
[Saturday 2024-08-17 16:00]

விஜய்யின் 68 படமான கோட் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, ஜெயராம் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.


தங்கலான் படத்திற்காக பா.ரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Saturday 2024-08-17 16:00]

பா.ரஞ்சித், தனது சினிமா பயணத்தில் எப்போதுமே ஒரு விஷயத்தை பற்றிய முக்கியமாக பேசக்கூடியவர். அவர் இயக்கும் படங்களும் ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்படும் படமாக அமையும். ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி வெற்றிக்கண்ட ரஞ்சித் இயக்கிய படம் தான் தங்கலான்.


வெற்றிநடைபோடும் விக்ரமின் தங்கலான் படத்தின் 2 நாள் வசூல்!
[Saturday 2024-08-17 16:00]

கோலார் தங்க வயலின் உண்மை வரலாற்றை கூறும் வகையில் அமைந்த படம் தங்கலான். சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளனர். அவர்கள் நடித்த கதாபாத்திரங்களுக்காக நிறைய உழைப்பு போட்டுள்ளனர்.


தங்கலான் 2ம் பாகம்: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விக்ரம்!
[Saturday 2024-08-17 07:00]

சமீபத்தில் ரிலீஸ் ஆன தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இருப்பினும் படத்தில் விக்ரமின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி ஒரு ரோலில் விக்ரம் தவிர வேறு எந்த ஹீரோவும் நடிக்கவே ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள், அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார் விக்ரம் என்றும் கூறி வருகின்றனர்.


வணங்கான் படத்திற்கு புது இசையமைப்பாளர்!
[Saturday 2024-08-17 07:00]

இயக்குனர் பாலாவின் அடுத்த படமான வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். ஆனால் முதல் செடியூல் ஷூட்டிங்கில் இருவருக்கும் சண்டை வந்ததால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சூர்யா அதன் பிறகும் படத்தில் இருந்தே விலகிக்கொண்டார்.


சேரன் வாக்குவாதம் செய்த பேருந்து: போலீசார் விதித்த பெரிய அபராதம்!
[Friday 2024-08-16 06:00]

இயக்குனர் சேரன் சமீபத்தில் தனது காரில் கடலூர் சென்றபோது அவர் பின்னால் வந்த தனியார் பேருந்து ஹார்ன் அடித்துக்கொண்டே வந்ததால் கடும்கோபம் ஆன சேரன் கீழே இறங்கி அந்த பேருந்து ஓட்டுநர் உடன் சண்டை போட்டிருக்கிறார். அந்த வீடியோ வெளியாகி சர்ச்சை ஆனது.


கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி, நேரம் அறிவிப்பு!
[Friday 2024-08-16 06:00]

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் GOAT படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வரும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் கூறி இருந்தார். அதன்படி தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


6 நாட்களில் அந்தகன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Thursday 2024-08-15 16:00]

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் பிரஷாந்த். இவர் நடிப்பில் 5 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் தான் அந்தகன். இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இதுவரை பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.


அந்த இயக்குனரை காதலிக்கிறாரா சமந்தா?
[Thursday 2024-08-15 16:00]

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், விவாகரத்து செய்ததும் அனைவரும் அறிந்ததே. அதின் பின்னர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நிலையில், இருவரும் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


முதல் நாள் தங்கலான் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?
[Thursday 2024-08-15 16:00]

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி நடிகர் விக்ரம் - இயக்குநர் பா. ரஞ்சித். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


தங்கலான் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Thursday 2024-08-15 08:00]

இன்று படு பிரம்மாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படங்களுக்குமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கும். கடைசியாக சார்பட்டா பரம்பரை படம் வெளியானது, அப்பட வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கியுள்ள படம் தங்கலான்.


என் அம்மாவுக்கு பிடிக்காத விஷயத்தை ஒருநாளும் செய்ய மாட்டேன்: ஜான்வி கபூர்!
[Thursday 2024-08-15 08:00]

தமிழ் சினிமா ரசிகர்களால் மயில் என கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீதேவி இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவரது படங்கள் மூலம் எப்போதும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார். நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018ம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தனது மகளுக்காக தேர்வு செய்ததே நடிகை ஸ்ரீதேவி தான்.


தங்கலான் பட புரொமோஷனுக்கு மாளவிகா மோகன்ன சிவப்பு நிற உடை மட்டுமே அணிந்தது ஏன்?
[Wednesday 2024-08-14 18:00]

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகியுள்ள ஒரு படம் தங்கலான். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அதாவது நாளை தங்கலான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் தங்கலான்!
[Wednesday 2024-08-14 18:00]

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி நடிகர் விக்ரம் - இயக்குநர் பா. ரஞ்சித். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழக உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதுவே இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டுகிறது. < /p>


நடிகர் சிவகார்திகேயன் சர்ச்சையாக பேசியது தனுஷை குத்திக்காட்டியதா?
[Wednesday 2024-08-14 18:00]

நடிகர் சிவகார்திகேயன் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஒரு நடிகர். அந்த வகையில் இவர் தற்போது ஒரு பேட்டியில் கூறிய விஷயம் வைரலாகி வருகின்றது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை தொடர்ந்து அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா