Untitled Document
September 19, 2024 [GMT]
சிறந்த கல்லூரிகள் பட்டியல் வெளியீடு: தேசிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் சாதனை!
[Monday 2024-08-12 18:00]

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் தரவரிசை கட்டமைப்பின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (பெங்களூரு) தேர்வு செய்யப்பட்டு தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.


கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீடு - ரஜினி, கமலுக்கு அழைப்பு!
[Monday 2024-08-12 18:00]

தி.மு.க.வின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகக் கலைஞரின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி, திரைத்துறை சார்பில் ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி எனப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.


விபத்தை போல் சித்தரித்து பணம் நகை பறிப்பு: இருவர் கைது!
[Monday 2024-08-12 18:00]

ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் கமல் வம்சி. இவர் வேலூரில் ஒரு பணிக்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் வேலையை முடித்துக்கொண்டு வேலூர் காட்பாடி வழியாக சித்தூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சுரேஷ், பிரசாந்த் ,ரோஹித் ஆகியோர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கமல் வம்சி வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.


நன்கு விளையாடாத மாணவர்களை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்!
[Monday 2024-08-12 06:00]

அரசு உதவி பெறும் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் பொது இடத்தில் மாணவர்களை காலால் எட்டி உதைத்து கடுமையாக தண்டிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


'உருளைக்கிழங்கு செல்லக்குட்டி' - ரகசிய வார்த்தையால் வசமாக சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்!
[Monday 2024-08-12 06:00]

லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் லஞ்சப் பணத்தை பெறுவதற்கு உருளைக்கிழங்கை 'கோட் வேர்ட்'-ஆக பயன்படுத்தியதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் பகுதியில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ராம் கிரிபால் விவசாயி ஒருவரிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியாகி வைரலானது.


'ஜெய்பீம் 'நிஜ நாயகிக்கு வீடுகட்டும் பணி - முதல்வருக்கு நன்றி தெரிவித்த ராஜ்கண்ணு மனைவி!
[Monday 2024-08-12 06:00]

கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம் முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு, இவருடைய மனைவி பார்வதி. இவர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். பார்வதியின் கணவர் ராஜாக்கண்ணுவை 1993 ஆம் ஆண்டு கம்மாபுரம் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் சென்று அடித்து சித்திரவதை செய்து அவரை கொலை செய்தனர். இதுமட்டுமல்லாது, முதனை கிராமத்தில் வசித்து வந்த பழங்குடி மக்கள் பலரையும் துன்புறுத்தியும் சித்திரவதையும் செய்து வந்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்த மார்க்சிஸ்ட் கட்சி, தொடர்ச்சியாக சட்டப் போராட்டம் நடத்தியது.


'காற்றோடு போனதா திமுக அரசின் அறிவிப்பு?' - அன்புமணி கேள்வி!
[Sunday 2024-08-11 18:00]

'பல ஆண்டுகளாக காத்திருக்கும் 80 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் எப்போது? காற்றோடு போனதா திமுக அரசின் அறிவிப்பு?' என பாமக தலைவர் அன்புமணி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கூடுதலாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து பல மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை. மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழக அரசு செய்யும் தாமதம் கண்டிக்கத்தக்கது.


ஏரிமலையில் துப்பாக்கி - எச்சரித்த வனத்துறை: தாமாக முன்வந்த கிராம மக்கள்!
[Sunday 2024-08-11 18:00]

தர்மபுரியில் பொதுமக்கள் பலர் உரிமம் இல்லாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஏரிமலை பகுதியில் பொதுமக்களில் பலர் உரிமம் இல்லாமல் வைத்திருந்த 13 துப்பாக்கிகளை தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.


10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
[Sunday 2024-08-11 18:00]

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வங்கதேச வன்முறை: நடிகர்கள் அடித்து கொலை!
[Sunday 2024-08-11 18:00]

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்து விடுதிகளையும் மாணவர்கள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


“கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்” - அமைச்சர் சக்கரபாணி!
[Sunday 2024-08-11 07:00]

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்துார் நத்தம் சட் டமன்ற தொகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை, சாணார்பட்டி மற்றும் நத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 1,352 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன் பாட்டிற்காக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
[Sunday 2024-08-11 07:00]

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.


7 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை: பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் வழக்கு!
[Sunday 2024-08-11 07:00]

சென்னை பாலவாக்கத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேல் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஜியாக இருக்கும்போதே இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகளைக் கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் காதர பாட்ஷா, சுப்பராஜ் ஆகியோர் சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நேரில் ஆய்வு!
[Saturday 2024-08-10 18:00]

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி இரவு கடும் மழை பெய்த நிலையில், 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் முண்டக்கை என்ற மலைக்கிராமத்தில் திடீரென நிலச்சரிவும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால் மூன்று கிராமத்தில் வசித்த மக்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது.


முறைகேடு செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளர்!
[Saturday 2024-08-10 18:00]

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சார்பதிவாளராக உள்ளவர் கவிதா. இவர் ஒரு புரோக்கரிடம் பத்திரப் பதிவு செய்ய லஞ்சமாக வாங்குவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சார்பதிவாளர் கவிதா லஞ்சமாக கேட்ட ஒரு குறிப்பிட்ட தொகையில், ஏற்கனவே ஒரு லட்சம் கொடுத்துவிட்டோம். 75 இதில் உள்ளது. அடுத்த முறையில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என புரோக்கர் சார்பதிவாளரிடம் சொல்வது பதிவாகியுள்ளது.


மருத்துவமனையில் இறந்து கிடந்த பெண் மருத்துவர்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
[Saturday 2024-08-10 18:00]

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், அரைநிர்வாணமாக சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண் மருத்துவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பேரிடரை சந்தித்த இமாச்சல பிரதேசம்: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
[Saturday 2024-08-10 18:00]

இந்திய மாநிலம் இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சூலை 31ஆம் திகதி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித் தீர்த்ததால் 3 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. 30 பேர் மாயமானதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து 6 பேர் பலியானதாக தெரிய வந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பலி எண்ணிக்கை நீண்டது.


ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கூலிப்படை: 5 பேர் கைது!
[Saturday 2024-08-10 06:00]

தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள், கூலிப்படையினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. இதனால் திருச்சி சாமிரவி உட்பட பல ரவுடிகள் தாங்களாகவே முன்வந்து ஆஜராகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருச்சி ரவுடி துரை கடந்த மாதம் புதுக்கோட்டையில் என்கவுன்டர் செய்யப்பட்டார். அடுத்த சில நாளில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சென்னையில் சுடப்பட்ட சம்பவமும் ரவுடிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் வழுக்கி விழுந்து கை, கால்கள் உடைந்து சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.


26 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
[Saturday 2024-08-10 06:00]

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகப் பரவலாக மழை பொழிந்து வருகிறது.


சிறையில் வைத்து கைது: போலீசாரிடம் ரவுடி நாகேந்திரன் வாக்குவாதம்!
[Saturday 2024-08-10 06:00]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தையான ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே ஏற்கனவே இருந்த மோதலில், அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு நேரில் அழைத்துப் பேசியதாகவும், ஆனால் அப்போது ஆம்ஸ்ட்ராங் எதற்கும் பிடி கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு!
[Friday 2024-08-09 17:00]

இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது. Barclays-Hurun India-வின் மிக மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் 2024 பட்டியலின்படி, அம்பானி குடும்பத்தின் மதிப்பு ரூ. 25.75 டிரில்லியன் (ரூ.25,750,000,000,000) ஆகும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 10 சதவீதம் ஆகும்.


தவெக கட்சியின் 3 விதமான கொடிகள் தயார்!
[Friday 2024-08-09 17:00]

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் 3 விதமான கொடிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.


வயநாட்டில் இன்று திடீர் நில அதிர்வு: மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!
[Friday 2024-08-09 17:00]

கேரளா வயநாட்டில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த கடந்த 30 ஆம் திகதி செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கற்பனையில் கூட நினைத்து பார்க்கமுடியாத வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


முகேஷ் அம்பானியின் வீட்டில் வேலைப் பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Friday 2024-08-09 17:00]

உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடானது பல சிறப்பம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மும்பையின் மையத்தில் இந்த ஆடம்பர வீடு காணப்படுகிறது. இது இந்தியாவின் விலையுயர்ந்த குடியிருப்பு சொத்து ஆகும். இது மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ள 27 மாடி குடியிருப்பாகும்.


பாரிஸ் ஒலிம்பிக்: பதக்கத்தை தட்டிச் சென்ற நீரஜ் சோப்ரா!
[Friday 2024-08-09 07:00]

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.


அதிர்ச்சியை கொடுத்த சிறுமியின் வாக்குமூலம்: இன்ஸ்டா ரீல்ஸ் செய்ய அழைத்து சென்று நிகழ்த்தப்பட்ட கொடூரம்!
[Friday 2024-08-09 07:00]

இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுப்பதாக கூறி அழைத்துச் சென்று பள்ளி மாணவியை இளைஞன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோணம்காடு பகுதியில் வசித்து வந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் திடீரென மாயமானார்.


சட்டவிரோதமாக மலையேற்றம்: வெள்ளியங்கிரி மலையில் இளைஞர் மாயம்!
[Friday 2024-08-09 07:00]

கோவை மாவட்டத்தின் அடையாளங்களில், வெளியூர் மக்கள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது வெள்ளியங்கிரி மலை. ஏழு மலை, எழில் கொஞ்சும் இயற்கை என்று ஆன்மிகத்தைக் கடந்தும் வெள்ளியங்கிரி மலையை ரசிக்க பல காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. அவ்வளவு அழகைக் கொண்டுள்ள வெள்ளியங்கிரி மலையில் ஆபத்தும் நிறைந்து இருக்கிறது என்று எச்சரிக்கை செய்கின்றது வனத்துறை. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சோசியல் மீடியாக்கலில் வரும் டிராவல் வீடியோக்களை பார்த்து இளைஞர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு படையெடுத்து வருவது குறைந்தபாடில்லை.


'தனியொருவன்' தொடர்ந்த வழக்கு: ஓலா நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம்!
[Thursday 2024-08-08 18:00]

ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு கொடுக்குமாறு ஓலா நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா