Untitled Document
September 19, 2024 [GMT]
‘முதல்வர் ஸ்டாலினுக்கு கோடான கோடி நன்றி’ - முருகன் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர்!
[Sunday 2024-08-25 06:00]

அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டைச் சேர்ந்த முருகபக்தர்களும் ஆதீனங்களும், இலங்கை ஆளுநர் அதோடு முக்கிய பிரமுகர்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுவிட்சர்லாந் நாட்டைச் சேர்ந்த வேலுப்பிள்ளையிடம் கேட்ட போது, ‘கடந்த 2014 ல் சுவிட்சர்லாந்தில் 2வது அனைத்துலக முருக பக்தர்கள் மாநாடு எனது தலைமையில் நடைபெற்றது.


பழனியை ஸ்தம்பிக்கவைத்த முத்தமிழ் முருகன் மாநாடு!
[Sunday 2024-08-25 06:00]

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் இருக்கும் பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (24-08-24) தொடங்கியது. இந்த மாநாடு, இரண்டு நாள் மிகவும் விமர்ச்சியாக நடக்க இருக்கிறது. முதல் நாளான, இன்று (24ம் தேதி) காலை 8 மணிக்கு 100 அடி உயரக் கம்பத்தில் மாநாட்டு கொடியை தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஏற்றினார்.


பெற்றோரின் வேண்டுதலை நிறைவேற்ற மலையேறிய புதுமாப்பிள்ளை மரணம்!
[Sunday 2024-08-25 06:00]

தமிழகத்தின் திருத்தணியைச் சேர்ந்த நபர் ஒருவர் திருமணமான 15 நாட்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த நரேஷ் என்ற நபர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுவாதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் 23ஆம் திகதி பெற்றோரின் வேண்டுதலை நிறைவேற்ற திருப்பதி சென்றுள்ளார். அங்கு நரேஷ் குடும்பத்துடன் மலையேறியுள்ளார்.


156 மருந்துகளுக்கு தடை விதித்த இந்தியா: பாதிக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்கள்!
[Saturday 2024-08-24 18:00]

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசாங்கம் 156 நிலையான கலவை (FDC) மருந்துகளை தடை செய்துள்ளது. இதில் பல்வேறு antibiotics, painkillers, மல்டிவைட்டமின்கள் மற்றும் காய்ச்சல் மற்றும் உயர் இரத்த அழுத்த சிகிச்சைக்கான மருந்துகள் அடங்கும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது.


விஜயின் கட்சி கொடிக்கு தொடரும் எதிர்ப்புகள்!
[Saturday 2024-08-24 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியில் உள்ள நிறமானது தங்கள் அமைப்பின் கொடியைப் போல் இருப்பதாக புகார் வந்துள்ளது. நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் போர் யானைகள் இருபுறமும், வாகை பூ நடுவிலும் உள்ளவாறு கட்சியின் கொடி உள்ளது.


1 மணி நேரமாக நெல்சனிடம் நடந்த விசாரணை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
[Saturday 2024-08-24 18:00]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் 1 மணி நேரமாக பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் திகதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆஜரான கூலிப்படையினர், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே கொலை செய்தோம் என்று தெரிவித்தனர்.


25 கிலோ தங்கம் அணிந்து திருமலை கோயிலுக்கு சென்ற புனே தொழிலதிபர்!
[Saturday 2024-08-24 18:00]

பொதுவாகவே அனைத்து மக்களும் தங்களின் பக்தியை பல முறையில் வெளிக்காட்டுவார்கள். சமீபத்தில் புனேவில் நடந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. தினமும் 75,000 முதல் 90,000 யாத்ரீகர்கள் வரும் கோயிலுக்கு ஜூலை மாத காணிக்கையாக ரூ. 125 கோடி கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். அந்த மாதத்தில், 22 லட்சத்திற்கும் அதிகமானோர் கோவிலுக்கு வருகை தந்தனர்.


தமிழக மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்!
[Saturday 2024-08-24 06:00]

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


முத்தமிழ் முருகன் மாநாடு: பணிகளை பார்வையிட்ட அமைச்சர்கள்!
[Saturday 2024-08-24 06:00]

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - 2024 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அதன்படி இந்த மாநாடு பழனி ஆண்டவர் கலைக் கல்லூரி மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறுகிறது அதை ஒட்டி கல்லூரி வளாகத்தில் ஐந்துக்கு மேற்பட்ட மிகப் பிரமாண்டமான செட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு சாமி சிலைகள் தத்ரூபமாகச் செய்யப்பட்டு அங்கங்கே வைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை பழனியில் இப்படி முருகனுக்காக ஒரு மாநாடு இதுவரை நடந்ததில்லை என்பதால் இந்த அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டைப் பார்க்கப் பொதுமக்களும் முருக பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டுப் பூரித்துப் போய் செல்கிறார்கள்.


பெண் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
[Saturday 2024-08-24 06:00]

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல்துறை சார்பில் இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று (23.08.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 158 காவலர்களுக்கு மத்திய அரசு பதக்கங்களும், 301 காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்களையும் வழங்கினார்.


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பழங்குடியின மாணவி கல்விக்கு நிதியுதவி!
[Friday 2024-08-23 18:00]

அமெரிக்க வாழ் இந்தியரான நந்திகா தேவராஜன் பழங்குடியினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பீட்ஸ் டு ட்ரீம்ஸ் என்ற பிரத்தியேக அமைப்பு ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் நந்திகா தேவராஜன் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் கிராமப்புற சமூகங்களில் உள்ள மாணவர்களுக்கு அவர் உருவாக்கிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு திறன்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாத கிராமப்புற பெண்களைத் தேடிச்சென்று கற்பித்து வருகிறார்.


“முழுமையான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!
[Friday 2024-08-23 18:00]

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் என்று கூறிய காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


“கர்நாடக அரசுக்கு தமிழக அரசின் ஒப்புதல் இன்றி அனுமதி வழங்கக்கூடாது” - அன்புமணி!
[Friday 2024-08-23 18:00]

மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடகம் மீண்டும் மனு அளித்துள்ளது; தமிழகத்தின் ஒப்புதலின்றி அனுமதி வழங்கக்கூடாது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கோரி மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு மீண்டும் விண்ணப்பித்திருக்கிறது. மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மீண்டும் அனுமதி கோரி கர்நாடக அரசு மனுத் தாக்கல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.


பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு அனுமதி இலவசம்!
[Friday 2024-08-23 18:00]

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அறநிலை துறை சார்பில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் இரண்டு நாட்களுக்கு வெகு விமர்ச்சியாக நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலைத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடத்திடத் தீர்மானிக்கப்பட்டது.


திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்: 7 பேர் பலி!
[Friday 2024-08-23 06:00]

இந்தியாவின் லடாக் பகுதியில் 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். லடாக்கின் லே மாவட்டத்தில் பேருந்து ஒன்று 27 பயணிகளுடன் சென்றது. அதில் பயணித்தவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அழைத்துச் செல்லப்பட்டனர். துர்புக் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.


“பாதுகாப்பு வாபஸ்” - வினேஷ் போகத் குற்றச்சாட்டு!
[Friday 2024-08-23 06:00]

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர்.


“கருவில் பாலினம் கண்டறிந்தால் குண்டர் சட்டம் பாயும்” - ஆட்சியர் கடும் எச்சரிக்கை!
[Friday 2024-08-23 06:00]

கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் பெண்களின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறும் சட்டவிரோத கும்பலின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் ஆண், பெண் பாலின விகிதம் குறைவாக இருப்பதால் இதனை ஈடு செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனையொட்டி இவரது அறிவுறுத்தலின்படி ஊரக நலப் பணிகள் இயக்குநர் சாந்தி தலைமையிலான குழுவினர் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறும் சட்டவிரோத கும்பல்கள் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


விஜயின் மனைவி, குழந்தைகள் ஏன் வரவில்லை? கொடி அறிமுக விழாவிற்கு தவிர்க்கப்பட்டார்களா?
[Thursday 2024-08-22 16:00]

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி அறிமுக விழாவில் விஜயின் மனைவி மற்றும் குழந்தைகள் வராதது குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.


உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!
[Thursday 2024-08-22 16:00]

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 9ஆம் தேதி (09.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.


அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை கண்டெடுப்பு!
[Thursday 2024-08-22 16:00]

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் எனறழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது. கடந்த இரண்டு கட்ட அகழாய்வில் 15 சூதுபவள கல்ணிகள் மணிகள் கிடைத்தன. செதுக்கு முறையில் சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப்பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.


தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்! Top News
[Thursday 2024-08-22 16:00]

தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.


குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன - ராகுல் காந்தி!
[Thursday 2024-08-22 06:00]

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 4 வயது பள்ளி சிறுமிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று (20.08.2024) பத்லாபூர் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அம்மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன், பத்லாபூர் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.


மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!
[Thursday 2024-08-22 06:00]

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி அருகே உள்ள அச்சுதபுரம் என்ற இடத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) உள்ளது. இங்கு மருந்து கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலி தான் இன்று (21.08.2024) மதியம் இங்குள்ள பாய்லர் தீடிரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.


கணவன் வீட்டு வாசலில் வைத்து மனைவியின் சடலத்தை எரித்த உறவினர்கள்!
[Thursday 2024-08-22 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது பொண்ணன்விடுதி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமையா மகள் புவனேஸ்வரி (வயது 24). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவரது அத்தை மகனான பழனிராஜனுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில் பழனிராஜன் நாகர்கோயில் அருகே நடத்தி வரும் குளிர்பான கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் பிறகுத் தனது காதலியான அதே ஊரைச் சேர்ந்த பிரபாவையும் அழைத்துச் சென்று நாகர்கோவிலில் குடும்பம் நடத்தத் தொடங்கியது புவனேஸ்வரிக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளதால் பழனிராஜன் ஊருக்கு வருவதைக் குறைத்துக் கொண்டார்.


தமிழக வெற்றி கழக கட்சி கொடி நாளை அறிமுகம்!
[Wednesday 2024-08-21 17:00]

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் நாளை அறிமுகம் செய்கிறார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.


45 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி!
[Wednesday 2024-08-21 17:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலந்து செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு பயணமாக போலந்து செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து இரண்டு நாள் பயணமாக போலந்து புறப்பட்டார்.


நடிகர் விஜய் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம்: அண்ணாமலை பேச்சு!
[Wednesday 2024-08-21 17:00]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பாஜகவின் மாமன் மச்சன் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம் என்று அண்ணாமலை பேசியுள்ளார். பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். தற்போது அந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி.


மனைவி தொல்லை தாங்க முடியவில்லை: வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை சுற்றி வளைத்த பொலிஸ்!
[Wednesday 2024-08-21 17:00]

மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை பொலிஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் முகேஷ் (28). இவர் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4 -ம் திகதி வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், இவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா