Untitled Document
September 19, 2024 [GMT]
இந்தியாவில் அதிகரிக்கும் கோல்டன் விசா மோகம்!
[Saturday 2024-08-17 07:00]

சர்வதேச முதலீடுகள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கியுள்ள கோல்டன் விசாக்களுக்கான மோகம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates) கோல்டன் விசாவை நாடும் இந்தியர்களின் எண்ணிக்கை நிதி மற்றும் தொழில் ரீதியாக வளர புதிய வாய்ப்புகளைத் தேடி அதிகரித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளத்தை விரித்து வருகிறது. இதற்காக தானாகவே வந்து கோல்டன் விசாக்களை வழங்குகிறது.


த.வெ.க. கட்சிக் கொடியில் இடம்பெறும் சின்னம் என்ன?
[Saturday 2024-08-17 07:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளைச் செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார்.


சிகாகோவில் தமிழர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
[Saturday 2024-08-17 07:00]

தமிழக அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரம்180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார்.


இந்தியாவில் ரூ.7,035 கோடி முதலீடு செய்துள்ள கனேடிய நிதி நிறுவனம்!
[Friday 2024-08-16 06:00]

கனேடிய நிதி நிறுவனமொன்று இந்தியாவில் முதல் காலாண்டில் ரூ. 7,035 கோடி முதலீடு செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், கனடாவின் முக்கிய நிதி நிறுவனமான கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியம் (CPPIB), கனடா ஓய்வூதிய திட்டத்தில் (CPP) இருந்து 838 மில்லியன் டொலர் (ரூ. 7,035 கோடி) மதிப்புள்ள பணத்தை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.


‘ராகுல் காந்திக்கு 5வது வரிசை’ - காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்!
[Friday 2024-08-16 06:00]

நாட்டின் 78வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் (முதலில் இருந்து 5வது வரிசை) அமர்ந்திருந்தார். ராகுல் காந்தி பின் வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.


ஆகஸ்ட் 27-இல் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்!
[Friday 2024-08-16 06:00]

தமிழக அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரம்180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.


இந்தியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி - பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு!
[Thursday 2024-08-15 16:00]

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நடைபெற்று வருவதாக சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா கனவு காண்கிறது என்றும், அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


குஷ்பு ஏன் பதவியை ராஜினாமா செய்தார்? - அவரே கொடுத்த விளக்கம்!
[Thursday 2024-08-15 16:00]

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து நடிகை குஷ்பு திடீரென ராஜினாமா செய்ததற்கு விளக்கம் அளித்துள்ளார். நடிகை குஷ்புவுக்கு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி நியமனம் செய்யப்பட்டார்.


ரூ.17,843 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் விரிசல்: கான்ட்ராக்டருக்கு ரூ.1 கோடி அபராதம்!
[Thursday 2024-08-15 16:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ தூரத்தில் அடல் சேது பாலம் என்ற கடல் பாலம் அமைக்கப்பட்டது.


தமிழ்நாட்டிற்கு வெறும் 1000 ரூபாய் தான்: ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய இந்திய அரசு!
[Thursday 2024-08-15 16:00]

தமிழ்நாட்டில் முக்கிய ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ரயில்வே பிங்க் புத்தகம் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுபெற்ற பின் இன்றைய தினம் ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகியுள்ளது.


'அகண்ட பாரதத்திற்காக நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும்' - செங்கோட்டையில் மோடி உரை!
[Thursday 2024-08-15 08:00]

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது.


78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்: தயார் நிலையில் செங்கோட்டை!
[Thursday 2024-08-15 08:00]

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது.


சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Thursday 2024-08-15 08:00]

யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சங்கருக்கு எதிராகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 16 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்கள்) பதிவு செய்யப்பட்டன. அதோடு இந்த கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் உள்ளிட்ட 5 பேர் மீது தேனி மாவட்ட பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்தியாவில் விற்கப்படும் சர்க்கரை, உப்பில் மைக்ரோபிளாஸ்டிக்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி!
[Wednesday 2024-08-14 18:00]

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சமையலில் சர்க்கரையும் உப்பும் சுவையை சேர்க்கக்கூடிய பொருட்களில் முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் கலந்திருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அண்ணாமலை லண்டன் செல்வது எப்போது?
[Wednesday 2024-08-14 18:00]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக ஆகஸ்ட் மாதம் லண்டன் பயணம் மேற்கொள்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஆகஸ்ட் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் ஆவார்.


இறுதியில் முடிவான விஜய் கட்சியின் அரசியல் மாநாடு நடைபெறும் இடம்!
[Wednesday 2024-08-14 18:00]

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.


நாயை குளிப்பாட்ட வெந்நீர் போட்டவருக்கு நேர்ந்த மரணம்!
[Wednesday 2024-08-14 18:00]

நாயை குளிப்பாட்ட வாட்டர் ஹீட்டரில் வெந்நீர் போடும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தெலங்கானா, கம்மம் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு. இவரது மனைவி துர்கா. இவர் தனது வளர்ப்பு நாயை குளிக்க வைப்பதற்காக வாட்டர் ஹீட்டர் கம்பியை பயன்படுத்தி வெந்நீர் போட்டுள்ளார்.


ரவுடியின் வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி: போலீசார் தீவிர விசாரணை!
[Wednesday 2024-08-14 06:00]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெ.பெரியாங்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அடிதடி மற்றும் கொலை என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழலில் தான் இவர் முத்தாண்டி குப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளார்.


பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி: காவல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
[Wednesday 2024-08-14 06:00]

நாட்டின் 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி (15.08.2024) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சுதந்திர தினத்தன்று தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனுமதி கோரி போலீசாரிடம் பாஜகவினர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மனு அளித்தனர்.


வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு: 3வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!
[Wednesday 2024-08-14 06:00]

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இத்தகைய சூழலில் தான் வினேஷ் போகத் அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து கடந்த 7 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவர் நியமனம்!
[Tuesday 2024-08-13 18:00]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கடந்த ஓராண்டுக் காலத்திற்கும் மேலாக காலியாக இருந்து வந்தது.


போலி ஜாதி சான்றிதழ் அளித்து தேர்தலில் போட்டி: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!
[Tuesday 2024-08-13 18:00]

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட வேலூர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மட்டும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2021-ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா என்பவர் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுத் தலைவராக ஆனார்.


பெண் மருத்துவர் கொலை வழக்கு: கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Tuesday 2024-08-13 18:00]

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலில் காயங்களுடன், அரை நிர்வாணமாகக் கிடந்த பயிற்சி மருத்துவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


30 ரூபாய்க்காக நண்பனை கொன்ற இளைஞர்!
[Tuesday 2024-08-13 18:00]

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் நண்பரை கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் சைஃப் ஜாஹித் அலி மற்றும் சக்கன் அலி. இவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் மும்பை நகருக்கு குடிபெயர்ந்து, அங்கு ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர்.


கருவின் பாலினம் கண்டறியும் கும்பல் கைது!
[Tuesday 2024-08-13 06:00]

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாகக் கருவின் பாலினத்தைக் கண்டறியும் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் தான் கருவின் பாலினம் கண்டறியும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி: மருத்துவர்கள் அதிரடி முடிவு!
[Tuesday 2024-08-13 06:00]

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலில் காயங்களுடன், அரை நிர்வாணமாகக் கிடத்தப் பயிற்சி மருத்துவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.


சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் புதிய வழக்கு!
[Tuesday 2024-08-13 06:00]

யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த மே மாதம் 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் இந்த கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் உள்ளிட்ட 5 பேர் மீது தேனி மாவட்ட பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


‘சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்’ - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
[Monday 2024-08-12 18:00]

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 3ஆம் தேதி (03.08.2024) முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை (14.08.2024) சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டன். இதனால் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 02.30 மணி வரையும், இரவு 10.00 மணி முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா