Untitled Document
September 19, 2024 [GMT]
பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த உமாகுமாரன்!
[Wednesday 2024-08-28 18:00]

இலங்கையில் இருந்து போர் காரணமாக புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையிலிருந்து உமா குமரன் நாடாளுமன்றிற்கு தெரிவாகி ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் உமா குமரன். இவருக்கு உலக வாழ் தமிழர்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இவரை பிபிசி தமிழ் நேரடி நேர்காணல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த காணொளியில் இலங்கை தொடர்பாக பல கேள்விகள் எழுப்பட்டது.


50,000 டன்கள் ஆயுதங்கள்: போரில் இஸ்ரேலுக்கு வாரி வழங்கிய அமெரிக்கா!
[Wednesday 2024-08-28 18:00]

இஸ்ரேலுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் 50,000 டன்கள் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து, இருப்பிரிவுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ போர் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.


பிரதமர் இல்லாத நேரத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்!
[Wednesday 2024-08-28 18:00]

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைவதில் பிரச்சினை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக, நாடாளுமன்றத்துக்குள் நுழையும் இடங்களில் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இன்று காலை, அந்த தானியங்கி அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.


பிரதமரின் முடிவை எதிர்த்து கனடா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்!
[Wednesday 2024-08-28 18:00]

செப்டம்பர் மாதம் முதல், குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக திங்களன்று அறிவித்தார் கனடா பிரதமர். அத்துடன், கல்வி அனுமதிகளையும் குறைக்க திட்டமிட்டுள்ளது கனடா அரசு. மேலும், 70,000 மாணவர்கள் நாடுகடத்தப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.


தேர்தல் குறுக்கீடு வழக்கு: டொனால்டு ட்ரம்புக்கு மீண்டும் நெருக்கடி!
[Wednesday 2024-08-28 06:00]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீதான தேர்தல் குறுக்கீடு விவகாரத்தில் தற்போது மீண்டும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2020 ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க முயற்சி முன்னெடுத்ததாக குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் தற்போது டிரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டார்.


அடுத்த கட்டத்திற்கு நகரும் உக்ரைன்: ஜோ பைடனிடம் திட்டம் ஒன்றை முன்வைக்கும் ஜெலென்ஸ்கி!
[Wednesday 2024-08-28 06:00]

பேச்சுவார்த்தைகளால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் திட்டமொன்றை முன்வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்புடைய திட்டத்தை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புள்ள இருவரிடமும் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுக்குள் ஊடுருவலை முன்னெடுத்து மூன்று வாரங்களாகியுள்ள நிலையில், தங்களின் திட்டத்தின் ஒரு பகுதி அந்த ஊடுருவல் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


ஜேர்மனியில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்!
[Wednesday 2024-08-28 06:00]

ஜேர்மனியில் Moers நகரில், கடந்து செல்பவர்களை கத்தியால் தாக்கிய நபரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில், காயம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் Solingen பகுதியில், உள்ளூர் விழா ஒன்றில் மிக மோசமான தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தற்போது Moers நகரில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.


கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்: இசை நிகழ்ச்சியில் முட்டைவீச்சு!
[Tuesday 2024-08-27 18:00]

கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்முறை இடம்பெற்ற கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர்.


உக்ரைனை சரமாரியாக தாக்கிய ரஷ்யா: நள்ளிரவில் மீண்டும் தாக்குதல்!
[Tuesday 2024-08-27 18:00]

உக்ரைன் மீது, மீண்டும் ரஷ்யா நேற்று நள்ளிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. உக்ரைன் மீது நேற்று நள்ளிரவு ரஷ்யா நடத்திய தாக்குதலில் Zaporizhzhiaவில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஏற்கனவே திங்களன்று உக்ரைன் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது மீண்டும் நேற்று துவங்கி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா.


சீன வாகனங்களுக்கு 100% வரி விதிக்கும் கனடா!
[Tuesday 2024-08-27 18:00]

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100% வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அதன்படி ஒட்டாவா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25% கூடுதல் கட்டணத்தை விதிக்கும் என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் கொடூர கொலையாளி கூலாக பாட்டுபாடி மகிழ்ச்சி!
[Tuesday 2024-08-27 18:00]

அமெரிக்காவில் கொடூர கொலையாளி ஒருவரை பொலிஸார் கைது செய்து அழைத்துச்சென்றபோது சந்தேகநபர் கூலாக பாட்டுபாடிய காணொளி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் (41). இவர் தனது பெற்றோரை கொடூரமாக கொலை செய்து தலையை துண்டித்துள்ளார்.


பிரித்தானிய பாடசாலை சுவரில் சர்ச்சை வாசகம்!
[Tuesday 2024-08-27 06:00]

பிரித்தானியாவில் பர்மிங்காம் ஆரம்பப் பாடசாலை சுவரில் No Whites என எழுதப்பட்டது குறித்து பொலிஸார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சமீபத்திய வாரங்களில் பிரித்தானியாவில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து, வியாழன் அதிகாலை பர்மிங்காமில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், ஆரம்ப பாடசாலைக்கு வெளியே சுவரில் 'No Whites' என எழுதியது சிசிடிவியில் தெரிய வந்துள்ளது.


புற்றுநோயுடன் போராடிய பிரபல மல்யுத்த வீரர் மரணம்!
[Tuesday 2024-08-27 06:00]

பிரபல மல்யுத்த (WWE) வீரர் Sid Eudy தனது 63வது வயதில் காலமானார். அமெரிக்காவின் Arkansasஐச் சேர்ந்த மல்யுத்த வீரர் Sidney Raymond Eudy என்கிற Sid Eudy (63). WWFயில் 1989யில் அறிமுகமான இவர் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் 6 முறை உலக சாம்பியனாக இருந்திருக்கிறார். 2001யில் படுகாயமடைந்து அதிலிருந்து மீண்டு வந்த Sid Eudy, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி வந்தார்.


"டெலிகிராம் தலைவரின் கைது அரசியல் முடிவல்ல" - ஜனாதிபதி மேக்ரான்!
[Tuesday 2024-08-27 06:00]

டெலிகிராம் நிறுவனர் பிரான்சில் கைது செய்யப்பட்டது அரசியல் முடிவல்ல என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு வெளியே Bourget விமான நிலையத்தில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) கைது செய்யப்பட்டார். டெலிகிராம் செயலியில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகள் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.


பிரித்தானியாவில் சிறுவர்கள் தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு!
[Monday 2024-08-26 17:00]

பிரித்தானியாவில் 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குக் கையடக்கத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சங்களுடன் கூடிய தொலைபேசிகளை வழங்குவதற்கும், 13 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களில் கட்டுப்பாடுகள் மேற்கொள்வதற்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


கனடாவில் ரயில் பணியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!
[Monday 2024-08-26 17:00]

கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வந்த ரயில் பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. சரக்கு ரயில் ரயில்களில் பணியாற்றும் பணியாளர்களே இந்த போராட்டத்தில் குதித்திருந்தனர். இந்த இந்தப் போராட்டத்தில் கனடாவின் பிரதான இரண்டு ரயில் சேவை பணியாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ரஷியாவின் சரமாரி தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன்!
[Monday 2024-08-26 17:00]

ரஷ்யாவின் உக்கிர தாக்குதலாம் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட 15 நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷியா நேற்று இரவு, பல கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் (Saratov) பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.


கனடாவில் 2 பெண்களை கொன்ற நபர் பற்றிய புதிய தகவல்!
[Monday 2024-08-26 17:00]

கனடாவில் இரண்டு பெண்களின் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹமில்டன் பொலிஸார் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். தனது உறவினர்களான இரண்டு பெண்களை 33 வயதான ஜோசப் ஆயிலா என்ற நபர் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


பிரித்தானியாவில் கொண்டாட்டத்தில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்: 38 பேர் கைது!
[Monday 2024-08-26 08:00]

பிரித்தானியாவில் Notting Hill கார்னிவல் கொண்டாட்டத்தின்போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Notting Hill கார்னிவல் என்பது பிரித்தானியாவில் மிக நீண்டகாலமாக கொண்டாடப்படும் கலாச்சார நிகழ்வாகும். கரீபியன் கலாச்சாரத்தை கொண்டாடும், தெளிவான ஆடை அணிந்த கலைஞர்கள் நடனம் மற்றும் இசையுடன் இந்த கொண்டாட்டத்தின்போது வீதிகளில் அணிவகுப்பார்கள்.


பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஆயுதக்குழு: 200 பேர் மரணம்!
[Monday 2024-08-26 08:00]

புர்கினா பாசோ நாட்டில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் (Burkina Faso) உள்ள மூலோபாய நகரம் கயா. இங்கிருந்து வடக்கே சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள பார்சலோகோ பகுதியில், மக்கள் குழுக்கள் மீது ஆயுதக்குழு ஒன்று சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதன் பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதங்களையும், இராணுவ ஆம்புலன்ஸையும் எடுத்துக் கொண்டனர்.


ஆசிய நாடொன்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு: 11 பேர் உயிரிழந்த சோகம்!
[Monday 2024-08-26 08:00]

இந்தோனேஷியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 11 பேர் பலியாகினர். இந்தோனேஷியா நாட்டில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு, திடீர் வெள்ளம் ஏற்படுவதால், மக்கள் பலர் பாதிப்பிற்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் மலைப்பகுதிகள் அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளுக்கு அருகிலேயே வசிப்பதால், அங்கு இதோபோன்ற பருவகாலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.


மீண்டும் புலம்பெயர் மக்கள் தொடர்பில் துயரமான செய்தி: பலர் மரணம்!
[Sunday 2024-08-25 18:00]

ஏமன் அருகே புலம்பெயர் மக்களின் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளதாகவும், 14 பேரைக் காணவில்லை என்று ஐநா ஸ்தாபனம் ஒன்று தெரிவித்துள்ளது. மிக ஆபத்தான புலம்பெயர் பாதையில் சமீபத்திய பேரிடர் இதுவென கூறுகின்றனர். 25 எத்தியோப்பிய புலம்பெயர் மக்கள் மற்றும் இரண்டு யேமன் நாட்டவர்களுடன் தொடர்புடைய படகானது Djibouti பகுதியில் இருந்து புறப்பட்டுள்ளது.


கனடா மாகாணம் ஒன்றில் அதிகளவு மரணங்கள் பதிவாகலாம்: வெளியான எச்சரிக்கை!
[Sunday 2024-08-25 18:00]

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு மரணங்கள் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதை மருந்து பயன்படுத்தும் பாதுகாப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம் இவ்வாறு மரணங்கள் பதிவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதை மருந்து பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் கண்காணிக்கப்பட்ட பாதுகாப்பு நிலையங்களில் போதை மருந்து பயன்படுத்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலில் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு ராணுவ அவசர நிலைமை பிரகடனம்!
[Sunday 2024-08-25 18:00]

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வரும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு ராணுவ அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஸ்ரேலின் இராணுவம் தெற்கு லெபனானில் இரவு முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய நிலையில் அதற்கு பதிலடியாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களைக் குறிவைத்து 320 இற்கும் அதிகமான எறிகணைகளை ஏவியுள்ளது.


கனடாவில் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கான விசேட அறிவுறுத்தல்!
[Sunday 2024-08-25 18:00]

கனடாவில் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை காலம் முடிந்து பிள்ளைகள் பாடசாலைக்கு திரும்ப உள்ள நிலையில் நோய் தொற்றுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தட்டம்மை இருமல் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வது பொருத்தமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்? - நாசாவின் அறிவிப்பு!
[Sunday 2024-08-25 06:00]

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்து நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் என்ற விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), புட்ச் வில்மோர் ஆகிய விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.


அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள்: மக்கள்தொகை மற்றும் வாழ்க்கை நிலை!
[Sunday 2024-08-25 06:00]

அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் வாழும் வரலாறு பல தசாப்தங்களுக்கு முற்பட்டது. தமிழர்கள், குறிப்பாக இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து, கல்வி, தொழில், பொருளாதார முன்னேற்றம், மற்றும் நல்ல வாழ்க்கைமுறைக்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். குறிப்பாக இலங்கை தமிழர்கள், 1980-களில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக, பெரும்பாலும் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்கு சென்றனர். அவற்றில் அவுஸ்திரேலியாவும் ஒன்று.


பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!
[Sunday 2024-08-25 06:00]

பிரான்ஸில் உள்ள யூத சபையின் வெளியே ஒரு வெடிப்பு சம்பவம் நடந்தது, இதில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். இந்த வெடிப்பு சம்பவம் மான்ட்பெலியரின் அருகே உள்ள கடலோரப் பகுதியான லா கிராண்டே மொட்டில் உள்ள பெத் யாகோவ் சபையின் அருகே நடந்தது. வெடிப்பின் போது, கண்காணிப்பு கமெராவில் ஒரு சந்தேக நபர் பாலஸ்தீன கொடியை தூக்கிக்காட்டியிருப்பது பதிவாகியுள்ளது.

Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா