Untitled Document
September 19, 2024 [GMT]
ரகசிய உறவால் பணிநீக்கம் செய்யப்பட்ட ராயல் பேங் ஆப் கனடா CFO!
[Saturday 2024-08-24 18:00]

உலகம் முழுவதிலும் 2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய சர்வதேச வங்கியான ராயல் பேங் ஆப் கனடாவில் (Royal Bank of Canada) தொடர்பில் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ராயல் பேங் ஆப் கனடா வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இருந்து வந்த நேடைன் அன் (Nadine Ahn) கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.


தாய்லாந்தில் பொதுவெளியில் பெண் பத்திரிகையாளரை அறைந்த அரசியல்வாதி!
[Saturday 2024-08-24 18:00]

தாய்லாந்தில் பொதுவெளியில் பெண் பத்திரிகையாளரை அரசியல்வாதி அறைந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியை அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.


மனைவியை மயக்கிய சி.இ.ஓ: அமேசான் முன்னாள் துணைத் தலைவர் பரபரப்பு தகவல்!
[Saturday 2024-08-24 18:00]

மனைவியை மயக்கிய சி.இ.ஓ.. இதனாலதான் எல்லாம் போச்சு என அமேசான் முன்னாள் துணைத் தலைவர் [Ethan கூறியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏதன் ஈவென்ஸ் [Ethan தனது மண வாழ்வுக்கு வேலையிடத்தால் வந்த வினையை குறித்து மனம் திறந்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் தொடக்கத்தில் வேலை செய்து வந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ, வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு அதில் அவர் வெற்றியும் பெற்றார். எனது மனைவியும் நானும் விவாகரத்து பெற்று பிரிய நேர்ந்தது.


கனடாவில் தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் திறக்கும் பிரபல நிறுவனம்!
[Saturday 2024-08-24 18:00]

பிரபல நிறுவனம் ஒன்று, கனடாவில் தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் பலவற்றை திறக்க முடிவு செய்துள்ளது. விலைவாசியால் உணவுப்பொருட்கள் வாங்க கஷ்டப்படும் கனேடியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இச்செய்தி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. கனடாவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான Loblaw, கனடாவின் பல பகுதிகளில் தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் பலவற்றை திறக்க முடிவு செய்துள்ளது.


பூனையை தலையில் மிதித்து கொன்று சாப்பிட்ட பெண்: அதிர்ந்த அண்டைவீட்டார்!
[Saturday 2024-08-24 06:00]

அமெரிக்காவில் பெண்ணொருவர் பூனையை தலையில் மிதித்து கொன்று, பின் அண்டைவீட்டார் முன்பு அதனை சாப்பிட்டதால் கைது செய்யப்பட்டார். ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண் Allexis Telia Ferrell. இவர் Canton-யின் 13வது வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டு வளாகத்தில் பலர் முன்னிலையில் செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான தடைகளை வெளியிட்ட அமெரிக்கா!
[Saturday 2024-08-24 06:00]

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தடைகளை வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா தற்போது ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, உக்ரைனின் சுதந்திர தினத்திற்கு ஒருநாள் முன்பாக, அந்நாட்டில் போர் முயற்சியில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட 400 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.


இரக்கமுள்ள உலகினை முன்னேற்ற வேண்டும்: ஹரி-மேகன் தம்பதி அளித்த நன்கொடை!
[Saturday 2024-08-24 06:00]

கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹரி, மேகன் தம்பதி மக்களுக்கு பல பரிசுகளை வழங்கியதை வெளிப்படுத்தினர். இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லே தம்பதி தங்களது அரை - அரச சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து கொலம்பியா நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் கொலம்பிய துணை ஜனாதிபதி Francia Marquez உடன் இணைந்து பல இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.


புலம்பெயர்வோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: குழந்தை உட்பட 10 பேர் பலி!
[Friday 2024-08-23 18:00]

செர்பியா போஸ்னியா எல்லையில், புலம்பெயர்வோர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தை உட்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். நேற்று அதிகாலை, 5.00 மணியளவில், மத்திய கிழக்கு பகுதியிலிருந்து புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டுவந்த படகு ஒன்று, செர்பியாவிலிருந்து போஸ்னியாவுக்குச் செல்லும் Drina என்னும் நதியைக் கடக்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


பிரித்தானியாவை துவம்சம் செய்துவரும் புயல்: 60,000 வீடுகளுக்கு பாதிப்பு!
[Friday 2024-08-23 18:00]

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் புயல் ஒன்று தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, சுமார் 60,000 வீடுகள் மின்தடை முதலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடு ஆகிய பகுதிகள், Lilian என பெயரிடப்பட்டுள்ள புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ரயிலில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.


உணவு வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கனேடியர்கள்!
[Friday 2024-08-23 18:00]

கனேடிய மாகாணம் ஒன்றில் அமைந்துள்ள உணவு வங்கிக்குச் சென்ற கனேடியர்கள் சிலரை திருப்பி அனுப்பும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், தெற்கு ஒன்ராறியோவில், The Salvation Army என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த உணவு வங்கிக்குச் சென்ற கனேடியர்கள் சிலரை திருப்பி அனுப்பும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.


அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்: வேலை நேரம் முடிந்தபின் நிறுவனம் அழைத்தால் நிராகரிக்க உரிமை!
[Friday 2024-08-23 18:00]

வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமை சட்டம் வரும் 26ஆம் திகதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றபிறகு, சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களைக் கேட்பது உண்டு.


அமெரிக்காவில் இது ஏமாற்றம்: கலாச்சார அதிர்ச்சி விடயங்களை பகிர்ந்த ஜேர்மனி இளைஞர்!
[Friday 2024-08-23 06:00]

அமெரிக்காவின் கலாச்சார அதிர்ச்சி விடயங்களை பகிர்ந்த ஜேர்மனி இளைஞர் ஜேர்மனி சுற்றுலாப்பயணி இளைஞர் ஒருவர், அங்கு சந்தித்த ஆச்சரியமூட்டும் விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஜேர்மனியைச் சேர்ந்த ஓலே லெஹ்மான் (Ole Lehmann) என்ற இளைஞர், 6 ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு தனது முதல் வருகையின்போது லாஸ் வேகாஸ் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு சென்றார்.


இளவரசர் ஹரியை அதிலிருந்து விடுவித்து முன்னேற ஊக்குவிக்கும் மேகன்!
[Friday 2024-08-23 06:00]

பிரித்தானிய இளவரசர் ஹரியை முன்னேறிச் செல்ல மேகன் மார்க்லே (Meghan Markle) ஊக்குவிப்பதாக அரச நிபுணர் கூறுகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மன்னர் சார்லஸின் புற்றுநோயைக் கண்டறிந்த செய்திக்குப் பிறகு, ஹரி (Harry) தனது தந்தையின் பக்கத்தில் இருப்பதற்காக விரைவாக பிரித்தானியாவுக்கு திரும்பினார். ஆனாலும் அவர்களின் சந்திப்பு 45 நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடித்தது. அதனைத் தொடர்ந்து, தனது தந்தையுடன் நேரத்தை செலவிட முடிந்ததற்கு தான் நன்றியுள்ளவராக இருப்பதாக ஊடகத்திடம் ஹரி தெரிவித்தார்.


உலகின் 2-வது பாரிய வைரத்தை கண்டுபிடித்த கனேடிய நிறுவனம்!
[Friday 2024-08-23 06:00]

உலகின் இரண்டாவது பாரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த Lucara Diamond Corp நிறுவனத்தின் கெய்ரோ சுரங்கத்தில் 2492 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1905-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3106 காரட் கல்லினன் (Cullinan) வைரத்திற்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பாரிய வைரம் இதுவாகும்.


பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள புதிய அச்சம்!
[Thursday 2024-08-22 16:00]

பிரித்தானியாவில் சமீபத்தில் வெடித்த வன்முறைகளுக்குப் பிறகு, பிரித்தானியர்களுக்கு புதிதாக ஒரு அச்சம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் சமீபத்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்த வன்முறைகளைத் தொடர்ந்து, பிரித்தானியர்களில் நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு வலதுசாரியினர் குறித்த அச்சம் உருவாகியுள்ளதாக Ipsos என்னும் ஆய்வமைப்பு வெளியிட்ட சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம்!
[Thursday 2024-08-22 16:00]

மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை ஈரான் அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல் விமானம் விபத்துக்குள்ளானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த குறித்த விபத்தில் ஈரான் அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கனடாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
[Thursday 2024-08-22 16:00]

கனடாவில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஏனையவர்களை விடவும் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனைகளினால் இரண்டு மடங்கு பாதி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


காசாவில் போர்நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா தீர்மானம்!
[Thursday 2024-08-22 16:00]

காசாவில் மோதல் தீவிரமடைந்துள்ள வேளை, அங்குத் தற்காலிக போர்நிறுத்தம் கோரி ஐ.நா-வின் பாதுகாப்பு அவையில் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில், மோதல் தொடர்பான ஐ.நா-வின் வாக்கெடுப்பின்போது ‘போர் நிறுத்தம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை அமெரிக்கா தவிர்த்து வந்த வேளை, காசாவில் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது இதுவே முதல் முறை என்றும் அச்செய்திகள் கூறுகின்றன.


கனடா முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
[Thursday 2024-08-22 06:00]

கனடாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட யூத நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூத நிறுவனங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளது கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்களான ரொறன்ரோ, மாண்ட்ரீல் மற்றும் நாட்டின் தலைநகரமான ஒட்டாவாவில் உள்ள மருத்துவமனைகள், ஜெப ஆலயங்கள் மற்றும் யூத மையங்கள் ஆகியவை இலக்குகளில் அடங்கும் என்று கூறப்படுகிறது.


பல ஆண்டுகளாக எதிர்பார்க்கிறோம்: சீன பிரதமரை வரவேற்ற புடின்!
[Thursday 2024-08-22 06:00]

சீனாவுடனான ரஷ்யாவின் பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகள் பலன்களைத் தருவதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான மோதல் தொடங்கியதில் இருந்து பெய்ஜிங்கை ஒரு பொருளாதார உயிர்நாடியாக மாஸ்கோ கருதுகிறது. ரஷ்யா மேற்கில் இருந்து கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வதால், இரண்டு வர்த்தகத்தையும் சாதனை உச்சத்திற்கு உயர்த்தியது.


பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பிரச்சினை!
[Thursday 2024-08-22 06:00]

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவசாயிகள், கனடா அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளனர். கடந்த மாதம் 90 ஆண்டுகளாக இயங்கி வந்த பிரிட்டிஷ் கொலம்பியா ட்ரீ ஃப்ரூட்ஸ் கூட்டுறவு (British Columbia Tree Fruits co-operative) திடீரென மூடப்பட்டதால், அவர்களின் விளைபொருட்களை சேமிப்பதும், பொதிபொருள் செய்யவும் இடம் இழந்துவிட்டனர்.


கனடாவில் பெற்றோருக்கான அறிவித்தல்!
[Wednesday 2024-08-21 17:00]

கனடாவில் சிறுவர் நலக் கொடுப்பனவு தொடர்பில் அரசாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிறுவர் நலக் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனடிய சிறுவர் நலன்புரித் திட்டம் இது தொடர்பில் அறிவித்தல் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் சிறுவர் நலன்புரி கொடுப்பனத் தொகை அதிகரிக்கப்பட்டது.


பிரச்சாரத்தின் போது கேலி: டிரம்பின் கருத்துக்களை கடுமையாக சாடிய மிச்செல் ஓபாமா!
[Wednesday 2024-08-21 17:00]

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குணாதிசயத்தையும், அவரது இனவெறி கருத்துக்களையும் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஓபாமா கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க ஜனநாயக கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இவ்வாரு சாடினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உலதை பற்றிய டிரம்பின் வரையறுக்கப்பட்ட குறுகிய பார்வை, இரண்டு கடின உழைப்பாளிகளான கல்விகற்றவர்களான ,வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களான இருவரின் இருப்பு குறித்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ள மிச்செல் ஓபாமா, அந்த இருவரும் கறுப்பினத்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


ஆப்பிரிக்க நாடுகளுக்கு கைகொடுக்கும் பிரான்ஸ்!
[Wednesday 2024-08-21 17:00]

குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கு 100,000 வரையான தடுப்பூசிகளை பிரான்ஸ் அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யா, ருவாண்டா, உகாண்டா போன்ற மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. அதுமாத்திரமல்லாது ஐரோப்பாவுக்குள்ளும், ஆசியாவுக்குள்ளும் இந்த தொற்று பரவியுள்ளது.


தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: கியூபெக் மாகாணம் முடிவு!
[Wednesday 2024-08-21 17:00]

கனேடிய மாகாணமொன்றில்பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளார், அம்மாகாண பிரீமியர். கனடாவில் சிறு தொழில்கள், ஏற்கனவே பணியாளர் தட்டுப்பாடு, நிதி உதவி பிரச்சினை முதலான பிரச்சினைகளில் சிக்கித் தவித்துவருகின்றன என்று கூறியுள்ளது, கனடியன் ஃபெடரேஷன் ஆஃப் இன்டிபென்டன்ட் பிசினஸ் (CFIB) அமைப்பு.


சுவிஸ் பொலிஸிடம் வசமாக சிக்கிய சந்தேக நபர்: சூட்கேஸில் இருந்த பொருட்கள்!
[Wednesday 2024-08-21 06:00]

நூற்றுக்கணக்கான செல்போன்களை இத்தாலிக்கு கடத்த முயன்ற நபரை சுவிஸ் பொலிஸார் கைது செய்தனர். சுவிட்சர்லாந்தின் நபர் ஒருவர் சூரிச்சில் இருந்து மிலன் நகருக்கு ரயிலில் பயணித்தார். அவர் வைத்திருந்த சூட்கேசில் தனித்தனியாக படலத்தில் சுற்றப்பட்ட நூற்றுக்கணக்கான செல்போன்களை சுவிஸ் பொலிஸார் கண்டுபிடித்தனர்.


கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மன்னர் சார்லஸ் அஞ்சலி!
[Wednesday 2024-08-21 06:00]

சவுத்போர்ட்டில் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு பிரித்தானிய மன்னர் சார்லஸ் அஞ்சலி செலுத்தினார். பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) நகரில் 17 வயது சிறுவன் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 3 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் பாரிய கலவரத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிர்தப்பிய சில குழந்தைகளை மன்னர் சார்லஸ் நேரில் சந்திப்பார் என தகவல் வெளியானது.


அமெரிக்காவால் தேடப்பட்ட இஸ்ரேலிய-கனேடிய நபரைப் பிடித்த ரஷ்யா!
[Wednesday 2024-08-21 06:00]

அமெரிக்காவால் தேடப்பட்டுவந்த இஸ்ரேலிய-கனேடிய சாரதியை ரஷ்ய அதிகாரிகள் காவலில் வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய-கனேடிய ரேஸ் சாரதி Josh Cartu (45) சட்டவிரோத ஒன்லைன் பங்கு வர்த்தகத் திட்டத்தின் மூலம், முதலீட்டாளர்களின் மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.

Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா