Untitled Document
September 19, 2024 [GMT]
இஸ்ரேல் விரோத பதிவுகளுக்காக பிரெஞ்சு ஒலிம்பிக் வீரர் இடைநீக்கம்!
[Friday 2024-08-16 06:00]

இஸ்ரேல் விரோத பதிவுகளுக்காக பிரான்ஸ் ஒலிம்பிக் வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸை சேர்ந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் முகமது அப்துல்லா கவுன்டாவை (Muhammad Abdallah Kounta) பிரெஞ்சு தடகள கூட்டமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது. அவரது பழைய சமூக ஊடக பதிவுகள் ஆன்லைனில் மீண்டும் வெளிவந்ததை அடுத்து அவர் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ரஷ்யா-உக்ரைன் போரில் பெரும் திருப்பம்!
[Friday 2024-08-16 06:00]

ரஷ்யா - உக்ரைன் போர் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தை சந்தித்துள்ளது. ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 5,000 பேர் வசிக்கின்றனர். மேற்கு சைபீரியாவின் எண்ணெய் படிவுகளில் இருந்து பாயும் குழாய்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.


காஸாவில் மொட்டை அடித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்ட பெண்கள், சிறுமிகள்!
[Friday 2024-08-16 06:00]

காஸாவில் அடிப்படை தேவைகள் மற்றும் சீப்பு கூட கிடைக்கவில்லை என்பாதால் அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மொட்டை அடித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த 10 மாதங்களாக நடந்து வரும் போர் காஸாவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய படைகள் காசாவிற்கான போக்குவரத்து முறைகளை முடக்கியதால் காசாவில் அனைத்து பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.


ரஷ்யாவை சொந்த மண்ணில் திணறடிக்கும் உக்ரைன்!
[Thursday 2024-08-15 16:00]

ரஷ்ய மண்ணில் திடீர் தாக்குதலை முன்னெடுத்துள்ள உக்ரைன், இதுவரை 386 சதுர மைல்கள் முன்னேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா முன்னெடுத்த தாக்குதலுக்கு பின்னர், உக்ரைனின் முதல் பதிலடி தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது. ஆனால் உக்ரைனின் எதிர்பாராத தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், எல்லையோர மாவட்டங்களில் இருந்து 200,000 மக்களை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.


அவுஸ்திரேலிய சுற்றுலா பயணியான 11 வயது சிறுமிக்கு லண்டனில் 8 கத்திக்குத்து!
[Thursday 2024-08-15 16:00]

பிரித்தானியாவுக்கு சுற்றுலா வந்திருந்த அவுஸ்திரேலிய பயணியான 11 வயது சிறுமி 8 கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய சுற்றுலா பயணியான 11 வயது சிறுமி ஒருவர் லெய்செஸ்டர் சதுக்கம்(Leicester Square) பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சவுதி இளவரசர் மீது கொலை முயற்சி?
[Thursday 2024-08-15 16:00]

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானை கொல்ல திட்டம் தீட்டப்பட்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.


கனடாவில் நாயின் உயிரை காப்பாற்ற முயற்சித்தவர்க்கு நேர்ந்த கதி!
[Thursday 2024-08-15 16:00]

கனடாவின் பெய்ரே பகுதியில் நாய் ஒன்றை காப்பாற்றுவதற்கு முயற்சித்த நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். டேவிட் மெக்டொனால்ட் என்ற நபர் தனது நாயுடன் நடந்து சென்றுள்ளார். இதன் போது மூன்று இளையர்கள் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மூவரும் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்துக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கின்றார்.


குரங்கம்மையை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு!
[Thursday 2024-08-15 08:00]

உலக சுகாதார அமைப்பு (WHO) புதன்கிழமை குரங்கம்மையை (MonkeyPox/MPox) உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. இந்த நோய் சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்படுவது இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும். காங்கோவில் இந்த நோய் பரவியுள்ளது, இது அண்டை நாடுகளின் பிடியில் வந்துள்ளது.


பாண்களுக்கு நடுவில் உள்ளாடை: பிரித்தானிய பெண்ணின் அருவருக்கத்தக்க செயல்!
[Thursday 2024-08-15 08:00]

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பிரித்தானிய பெண் ஒருவர் தனது உள்ளாடையை கழற்றி பாண்களுக்கு மத்தியில் வைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் விமர்சனத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாக இந்த சவால் வீடியோவில் உள்ள பெண் சோல் லோபஸ் (), இவர் ஒரு சோசியல் மீடியா பிரபலம் (English influencer). ஒரு சமூக ஊடக சவாலின் ஒரு பகுதியாக கமேரா முன் இந்த வினோதமான செயலைச் செய்ததாகக் கூறினார்.


ஜேர்மனியில் திடீரென சீல் வைக்கப்பட்ட ராணுவ தளம்!
[Thursday 2024-08-15 08:00]

ஜேர்மனியில் கொலோன் (Cologne) விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராணுவ தளம் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாசவேலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகவத்தின் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குழாய் நீரை குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. இது 4,300 சிப்பாய்கள் மற்றும் 1,200 சிவிலியன் ஊழியர்களைக் கொண்ட தளமாகும்.


நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் வழங்கிய சாக்லேட்டில் போதைப்பொருள்!
[Wednesday 2024-08-14 18:00]

நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் வழங்கிய இனிப்பு பண்டங்களில் சக்தி மிகுந்த போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் வறுமை ஒழிப்பு தொண்டு நிறுவனம் ஒன்று பகிர்ந்தளித்த அண்ணாச்சி பழ இனிப்பு சாக்லேட்டில் பயங்கரமான மெத்தம்பேட்டமைன்(methamphetamine) என்ற போதைப்பொருள் இருப்பதாக புதன்கிழமை பொலிஸார் அறிவித்துள்ளனர்.


"கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவை அழித்து விடுவார்" - டிரம்ப் விமர்சனம்!
[Wednesday 2024-08-14 18:00]

அமெரிக்காவில் இந்தியவம்சாவழி பெண் கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால் அமெரிக்காவை அவர் அழித்து விடுவார் என்றும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளுருமான டொனால்ட் ட்ரம்பை, எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் நேர்காணல் செய்தார். ஸ்பேஸ் தளம் வழியாக நேர்காணல் நடைபெற்றபோதே டிரம்ப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


கனடிய எல்லை பகுதியில் கடுமையாக்கப்படும் சட்டம்!
[Wednesday 2024-08-14 18:00]

கனடிய எல்லைப் பகுதியில் ஏதிலிகள் குறித்த சட்டம் கடுமையாக்கப்பட என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உள்துறை திணைக்களம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஏதிலி அந்தஸ்து கோரும் நபர்கள் சட்டத்தரணியின் ஆலோசனை பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.


கோழி இறைச்சி உணவை திருடிய பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை!
[Wednesday 2024-08-14 18:00]

அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகேயுள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரிந்த 66 வயது வெரா லிடெல் எனும் பெண் மீது S$1.98 மில்லியன் மதிப்புள்ள கோழி இறைச்சி உணவுப் பொட்டலங்களை திருடியதற்காக , நீதிமன்றம் 9 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை சமகால அடிமைத்தனமென விமர்சித்த ஐ.நா.!
[Wednesday 2024-08-14 06:00]

ஐக்கிய நாடுகள் சபை (United Nations) கனடாவின் தற்காலிக தொழிலாளர் திட்டத்தை 'நவீன அடிமைத்தனத்தின் ஓர் உருவம்' என்று சாடியுள்ளது. ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா தனது ஆய்வின் இறுதி அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களை தற்காலிகமாக வேலைக்கு சேர்க்கும் திட்டம், நீண்ட காலமாக விவசாயத் துறையில் முதலிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.


டெலிகிராப் நாளிதழின் ஆசிரியராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்!
[Wednesday 2024-08-14 06:00]

டெலிகிராப் செய்தித்தாளின் ஆசிரியராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலிக்கப்பட்டுள்ளார். டெலிகிராப் (Telegraph) நாளிதழின் தலைமை ஆசிரியராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. இதை அந்நாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.


தனித்துவமான அம்சம் கொண்ட பிரித்தானிய பணத்தாள்கள்!
[Wednesday 2024-08-14 06:00]

மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள் தனித்துவமான அம்சம் காரணமாக ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையானது. பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் படத்தை கொண்டுள்ள புதிய கரன்சி நோட்டுகள் ஏலத்தில் £9,14,127-க்கு ( இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 35.18 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் கிடைத்த வருமானம் முழுவதும் நன்கொடையாக வழங்கப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய லண்டனில் கத்திக்குத்து: ஹீரோவான கடை ஊழியர்!
[Tuesday 2024-08-13 18:00]

மத்திய லண்டனில் கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 11 வயது சிறுமியும் 34 வயது பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கடையில் வேலை செய்யும் ஊழியரின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.


இஸ்ரேலை விமர்சித்ததால் பதவியிழந்த கனடிய முக்கியஸ்தர்!
[Tuesday 2024-08-13 18:00]

கனடாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதம ஆணையாளர் பிர்ஜூ டாட்டானி (Birju Dattani) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டாட்டானி (Birju Dattani) அண்மையில் பதவியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் இஸ்ரேல் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக அவர் இவ்வாறு பதவி துறக்க நேரிட்டுள்ளது.


நியூசிலாந்தை விட்டு வெளியேறும் மக்கள்: ஏன் தெரியுமா?
[Tuesday 2024-08-13 18:00]

வேலையின்மை அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் வரலாறு காணாத வகையில் மக்கள் நியூசிலாந்தை விட்டு வெளியேறுகின்றனர். நியூசிலாந்து அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் ஊடாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் காலாண்டில் சுமார் 131,200 பேர் வெளியேற்றம், அதேவேளை ஜூன் மாதம் காலாண்டில் சுமார் 131,200 பேர் நியூசிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறினர் அந்நாடு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.


கனடிய மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!
[Tuesday 2024-08-13 18:00]

எதிர்வரும் காலங்களில் கனடாவில் அடிக்கடி காட்டுத்தீ, புயல் காற்று போன்றன ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மனித நடத்தையினால் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இவ்வாறு அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியம் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ரஷ்யாவில் இரண்டாவது பகுதியை கட்டுப்பாட்டில் எடுத்த உக்ரைன்!
[Tuesday 2024-08-13 06:00]

உக்ரைனிய படைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து இரண்டாவது நகரம் ஒன்றில் இருந்தும் ரஷ்ய மக்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய முன்னேற்றமாக, உக்ரைனிய படைகள் ரஷ்ய நாட்டு பிராந்தியத்தின் உட்பகுதிக்குள் 30 கிலோமீட்டர் வரை உட்புகுந்து இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.


மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: பிரித்தானிய பிரதமர் ஈரானுடன் பேச்சுவார்த்தை!
[Tuesday 2024-08-13 06:00]

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஈரானிய ஜனாதிபதி உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மத்திய கிழக்கில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரானிய ஜனாதிபதி உடன் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் சர்வதேச பதற்றத்தை குறைப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


ஜேர்மன் தலைநகரில் பூமிக்கடியில் உருவாக்கப்படும் ராட்சத பள்ளங்கள்: எதற்காக தெரியுமா?
[Tuesday 2024-08-13 06:00]

ஜேர்மன் தலைநகர் பெர்லின், வறட்சியான ஒரு பகுதியில் அமைந்துள்ளது. ஆக, கோடை வந்துவிட்டாலே பெர்லினில் தண்ணீர் பிரச்சினை பெரிதும் பேசப்படும் பிரச்சினையாக மாறிவிடுகிறது. ஆகவே, தண்ணீர் பிரச்சினையை சமாளிப்பதற்காக, பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி, பூமிக்கடியில் தண்ணீரை சேகரிப்பதற்காக அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.


உக்ரைன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள்!
[Monday 2024-08-12 18:00]

ரஷ்யாவுடன் இணைந்து போரிட்ட 5 இலங்கை முன்னாள் ராணுவ வீரர்கள் உக்ரைன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையர்கள் ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவங்களுடன் இணைந்து போரிடுவது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, உக்ரேனுடன் அங்கீகாரம் பெற்ற துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.


தற்கொலை செய்துகொண்டாரா கிரஹாம் தோர்ப்?
[Monday 2024-08-12 18:00]

இங்கிலாந்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர் கிரஹாம் தோர்ப்பின் (Graham Thorpe) மரணம் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தோர்ப்பின் மனைவி அமண்டா, அவர் சில காலமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆண்டுகளாக கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த தோர்ப் (Graham Thorpe), கடந்த 5 ஆம் திகதி காலமானார்.


பொதுப்போக்குவரத்தில் கனடா-மெக்சிகோ வரை சென்று சாதனை!
[Monday 2024-08-12 18:00]

பொது போக்குவரத்து வசதியை பயன்படுத்தி கனடா-மெக்சிகோ வரை சென்று வான்கோவர் வில்லியம் ஹுய் சாதனை படைத்துள்ளார். கனடா வான்கோவரை சேர்ந்த 40 வயதான வில்லியம் ஹுய் (William Hui ). மென்பொருள் பொறியாளர். சாகச பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவரான இவர், 2013-ம் ஆண்டு நாடு விட்டு நாடு பயணம் செய்யும் முயற்சியை மேற்கொண்டார்.


காசாவின் 1.8 சதவீத மக்களை கொன்றொழித்த இஸ்ரேல்!
[Monday 2024-08-12 18:00]

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ,காசாவின் மக்கள் தொகையில் 1.8 சதவீத மக்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக பாலஸ்தீனிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 75 சதவீதமானோர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா