Untitled Document
September 19, 2024 [GMT]
ரொறன்ரோவில் வரலாறு காணா மழை!
[Tuesday 2024-08-20 18:00]

கனடாவின் டொரன்டோவில் என்றும் இல்லாத அளவு கோடை காலத்தில் மழை பெய்துள்ளது. கிழக்கு கனடா பகுதியில் கூடுதல் அளவில் இந்த கோடை காலத்தில் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு கனடாவின் அனேகமான பகுதிகளில் வழமைக்கு மாறாக மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை!
[Tuesday 2024-08-20 18:00]

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகள் , கடைசி வாய்ப்பாக அமையலாம் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.


கனடாவில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு!
[Tuesday 2024-08-20 18:00]

வரும் வியாழக்கிழமை முதல், கனடாவில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள். கனடா முழுவதிலும், சரக்கு ரயில்களை இயக்கும் சுமார் 9,000 ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுவருகிறார்கள். இதனால், சரக்கு ரயில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.


எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி!
[Tuesday 2024-08-20 18:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கிற்கு தனது அமைச்சரவையில் பதவி வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.


பிரித்தானியாவில் கட்டுக்கடங்காமல் போன விந்தணு தானம்!
[Tuesday 2024-08-20 06:00]

விந்தணு தானம் செய்யும் செயல்முறை பிரித்தானியாவில் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. பிரித்தானியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரித்தானியாவில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை பத்து குடும்பங்களுக்கு மேல் கொடுக்க முடியாது. ஆனால், விந்தணுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு குறிப்பிட்ட வரம்பு எதுவும் இல்லை.


புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் துணைகளுக்கு குடியுரிமை வழங்கும் அமெரிக்கா!
[Tuesday 2024-08-20 06:00]

அமெரிக்க குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கியுள்ளார். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்து நீண்ட காலமாக குடியுரிமைக்காக காத்திருப்பவர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நவம்பர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக புதிய குடிவரவு சட்டத்தை அமல்படுத்துவது ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.


300 மில்லியன் டொலரை வீணடிக்கும் கனடா: சுற்றுச்சூழல் அமைப்பு குற்றச்சாட்டு!
[Tuesday 2024-08-20 06:00]

கனேடிய சுற்றுச்சூழல் அணைப்பு ஒன்று, மத்திய அரசின் ஹைட்ரஜன் துறைக்கான புதிய நிதி செலவினத்தை முற்றிலுமாக எதிர்த்து வருகிறது. ஏனெனில், இத்திட்டம் கனேடிய மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாகவும், சூழலியல் நெருக்கடிக்கு உண்மையான தீர்வாக இல்லை என்றும் அந்த அணைப்பு குற்றம்சாட்டுகிறது.


இஸ்ரேலிய நிலைகளை குறிவைத்து தாக்கிய ஹிஸ்புல்லா!
[Monday 2024-08-19 18:00]

இஸ்ரேலிய ராணுவ துருப்புகள் மற்றும் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. லெபனான் நாட்டின் எல்லைக்கு அருகே ஊடுருவியதாக கூறப்படும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மற்றும் வடக்கு இஸ்ரேலின் ராணுவ தளம் ஆகியவற்றின் மீது திங்களன்று தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக லெபனானின் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.


இத்தாலியில் சொகுசு படகு விபத்து: இலங்கையர்கள் உட்பட 22 பேரின் நிலை என்ன?
[Monday 2024-08-19 18:00]

இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளியில் பிரித்தானியக் கொடியை ஏந்தி பயணித்த 180 அடி உயரமுடைய சொகுசு படகு ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படகில் பிரித்தானியா, நியூசிலாந்து, அமெரிக்கா , இலங்கை, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 பேர் பயணித்துள்ளனர்.


பிரித்தானியாவில் வெடிகுண்டால் அவசரநிலை பிரகடனம்!
[Monday 2024-08-19 18:00]

பிரித்தானியாவின் வடக்கு அயர்லாந்தின் Newtownards பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆபத்தான வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் 400 மீற்றர் சுற்றளவில், வசிக்கும் மக்கள் வெளியேற்றவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதனால் சுமார் 450 குடியிருப்புகளில் உள்ள மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.


ட்ரம்ப்பை விட கமலா ஹரிஸ் முன்னிலை!
[Monday 2024-08-19 18:00]

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பை விடவும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் முன்னிலை வகிப்பதாகத் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்: பூமிக்கு திரும்புவது எப்போது?
[Monday 2024-08-19 06:00]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது அவருக்கு கண் அசௌகரியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக ஜீரோ கிராவிட்டியில் வாழ்ந்ததால் அவருக்கு இந்த பிரச்சனை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வில்லியம்ஸுக்கு Spaceflight Associated Neuro-Ocular Syndrome (SANS) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


ஜேர்மனியில் ராட்சத ரங்க ராட்டினத்தில் தீ: 30 பேர் பாதிப்பு!
[Monday 2024-08-19 06:00]

ஜேர்மனியில் ராட்சத ரங்க ராட்டினத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 30 பேர் காயம் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜேர்மனியின் Leipzig நகரில் உள்ள Störmthaler ஏரிக்கரையில் நடைபெற்ற Highfield Festival கோடை விழாவின் போது இந்த விபத்து ஏற்பட்டது.


லண்டனில் ஏர் இந்தியா விமான பணிப்பெண் மீது தாக்குதல்!
[Monday 2024-08-19 06:00]

லண்டனில் ஏர் இந்தியா விமான பணிப்பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள ராடிசன் ஹோட்டலில் அந்த பெண் தங்கியிருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் அவரது அறைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். துணிகளை தொங்கவிட்டிருந்த ஹேங்கரால் விமான பணிப்பெண்ணை தாக்கினார். இதற்குப் பிறகு, அவர் அந்தப் பெண்ணை படுக்கையில் இருந்து தரையில் இழுத்தார்.


குரங்கம்மை நோய் குறித்து கனேடிய மருத்துவர்களின் அறிவுறுத்தல்!
[Sunday 2024-08-18 16:00]

ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கம்மை நோய் தொற்று கனடாவிற்கும் பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய மருத்துவ நிபுணர்கள் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபிரிக்காவின் சில நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் கனடாவில் இந்த நோய் பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


ரஷ்யாவிடம் சரணடைந்த 24 உக்ரைனிய வீரர்கள்!
[Sunday 2024-08-18 16:00]

24 உக்ரைனிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையின் போது ரஷ்ய படைகளிடம் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிய படைகள் தற்போது சர்வதேச எல்லைப் பகுதியை தாண்டி ரஷ்யாவிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் குடிமக்களை பாதுகாப்பான இடத்திற்கு ரஷ்யா வேகவேகமாக நகர்த்தி வருகிறது.


ரொறன்ரோவில் பெய்து வரும் கடும் மழை!
[Sunday 2024-08-18 16:00]

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதாகவும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதிகள் வாகன தரிப்பிடங்கள் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பன நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பிரேசில் மூடப்பட்ட எக்ஸ் நிறுவனம்!
[Sunday 2024-08-18 16:00]

பிரேசிலில் உள்ள அலுவலகத்தை மூடுவதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து பிரேசிலில் செயல்பாடுகளை நிறுத்துவதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


கனடாவில் சில்க் தயாரிப்புகளில் பரவும் பாக்டீரியா தொற்று: பொருட்களை திரும்பப்பெறும் நிறுவனம்
[Sunday 2024-08-18 07:00]

கனடாவில் தேங்காய்ப்பால், பாதாம் பால் போன்ற பால் மாற்று பொருட்களை விற்கும் Silk நிறுவனத்தின் தயாரிப்புகளை திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Silk தயாரிப்புகளில் லிஸ்டீரியா (Listeria) எனும் பாக்டீரியா பரவியிருப்பதாக கூறப்படும் நிலையில் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. பிரபலமான அமெரிக்க பால் மாற்று பிராண்டான Silk தயாரிப்புகளை திரும்பபெறுவதற்கான அறிவிப்பு ஏற்கெனவே ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இப்போது மீண்டும் அந்த அறிவிப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானியாவிற்கு மிரட்டல் விடுக்க ஹமாஸ் போட்ட மோசமான திட்டம்!
[Sunday 2024-08-18 07:00]

காஸாவில் பிரித்தானிய போர் வீரர்களின் சவங்களை தோண்டி எடுக்க ஹமாஸ் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. காஸாவில் உள்ள பிரித்தானிய மற்றும் காமன்வெல்த் போர் வீரர்களின் சவங்களை தோண்டி எடுத்து, அதனை பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்தை மிரட்டுவதற்கான திட்டத்தை ஹமாஸ் அமைப்பு மேற்கொண்டதாக, அண்மையில் கண்டறியப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


நாட்டை விட்டு வெளியேற சொந்த குடிமக்களுக்கு பணம் தரும் நாடு!
[Sunday 2024-08-18 07:00]

ஐரோப்பிய நாடொன்று தனது சொந்த குடிமக்களுக்கு நாட்டை விட்டு வெளியேற பணம் செலுத்துகிறது. தனது சொந்த குடிமக்களை நாட்டை விட்டு வெளியேற்ற ஸ்வீடன் முன்வந்துள்ளது. ஸ்வீடன் குடிவரவு அமைச்சர் மரியா மல்மர் ஸ்டான்கார்ட் (Maria Malmer Stenergard) இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார். "ஸ்வீடன் கலாச்சாரத்தை விரும்பாதவர்கள் அல்லது இங்கு கலக்க முடியாதவர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறலாம்" என்று ஸ்டான்கார்ட் கூறினார்.


திருப்பியடிக்கும் உக்ரைன்: செய்வதறியாது திகைக்கும் ரஷ்யா!
[Saturday 2024-08-17 16:00]

உக்ரைன் -ரஷ்ய போர் ஆரம்பித்து முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்கின்றது. போரின் ஆரம்பத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியிருந்த போதும், தற்போது உக்ரைனின் தாக்குதல் உக்கிரமாகியுள்ளதால் ரஷ்யா சமாளிக்க முடியாது அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிற்குச் சொந்தமான பாலமொன்றை உக்ரைன் படைகள் அழித்துள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


போர்க்களமாக மாறிய துருக்கி நாடாளுமன்றம்!
[Saturday 2024-08-17 16:00]

துருக்கி நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து நடந்த விவாதத்தின்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் பதிவான நோய்!
[Saturday 2024-08-17 16:00]

கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் முதல் போலியோ நோயுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜோர்டானில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மத்திய காசா பகுதியில் இருந்து தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கு போலியோ உறுதி செய்ததாக ரமல்லாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி!
[Saturday 2024-08-17 16:00]

கனடாவின் பிரம்டனில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சேவைகளை நிறுத்திய சர்வதேச விமான நிறுவனங்கள்!
[Saturday 2024-08-17 07:00]

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையால், சர்வதேச விமான நிறுவனங்கள் சில அந்த பகுதி செல்லும் விமான சேவைகளை நிறுத்தியுள்ளன, இன்னும் சில விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட வான்வழியை தவிர்க்கத் தீர்மானித்துள்ளன. இந்த முடிவுகள், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் விமான போக்குவரத்துக்கு ஏற்படும் சவால்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன.


7,000 பாலஸ்தீனர்களின் விசா விண்ணப்பங்களை நிராகரித்த நாடு!
[Saturday 2024-08-17 07:00]

இஸ்ரேலுக்கு ஆதரவளித்து 7,000 பாலஸ்தீனர்களின் விசா விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையே நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பலர் அகதிகளாக மீள்குடியேற பல நாடுகளுக்கு விசாவுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதில் பல பாலஸ்தீனர்களும் அவுஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அந்த விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா நிராகரித்து வருகிறது.


பிரித்தானியாவில் கலவரங்களில் ஈடுபட்டதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்ட முதல் பெரியவர்!
[Saturday 2024-08-17 07:00]

பிரித்தானியாவில் சமீபத்தில் நடந்த கலவரங்களில் தொடர்புடைய முதல் பெரியவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சமீபத்தில் நடந்த கலவரங்களில் ஈடுபட்டதாக 32 வயதான கியரன் உஷர் (Kieran Usher) என்ற நபர் குற்றம் சாட்டப்பட்ட முதல் பெரியவர் ஆவார். சண்டர்லாந்து நகரில் ஆகஸ்ட் 2-ஆம் திகதி நடந்த கலவரத்தில் கியரன் உஷர் ஈடுபட்டதற்காக குற்றம் சட்டப்பட்டுள்ளதாக நார்தும்ப்ரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா