Untitled Document
May 19, 2026 [GMT]
 
ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ன தெரியுமா?
[Thursday 2026-01-15 16:00]

ஜப்பான் நாட்டு மக்களின் நீண்ட ஆயுளுக்கு அவர்கள் மேற்கொள்ளும் சில சீக்ரெட்டான விடயத்தைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ஜப்பான் நாட்டு மக்கள் வயதானாலும் இளமையாக இருப்பதுடன், 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழவும் செய்கின்றனர். இவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் நம்மில் பலருக்கும் தெரியாமல் தான் இருக்கும். இவர்களின் வாழ்க்கை முறை, உணவு முறையில் முழு கவனத்தை செலுத்துகின்றனர்.


நாவூரும் சுவையில் முட்டை புளிக்குழம்பு!
[Wednesday 2026-01-14 07:00]

பொதுவாகவே புரதத்தின் மிகச்சிறந்த மூலமாக திகழும், முட்டை சாப்பிடுவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவருக்கும் பிடித்த விடயம் தான். அசைவ உணவுகளை தவிர்க்கும் சிலர் கூட முட்டை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள். முட்டை கூந்தல் வளர்ச்சி முதல் இதய ஆரோக்கியம் வரையில், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது.இதில் வைட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக காணப்படுகின்றது.அதோடு புரதச்சத்துக்கு முட்டை தான் சரியான உணவாக இருக்கும்.


நாவூரும் சுவையில் காரசாரமான சிக்கன் மிளகு வறுவல்!
[Tuesday 2026-01-13 15:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது.அந்தளவுக்கு சிக்கன் எல்லா உணவு வகைகளுடனும் அசத்தலாக சுவையை கொடுக்கக்கூடியது. அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவருக்கும் விரும்பும் சிக்கனை கொண்டு குளிர்காலத்துக்கு பக்காவாக பொருந்தும் வகையில் காரசாரமான சுவையில் சிக்கள் மிளகு வறுவல் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.


கொய்யாபழத்தில் சட்னி வைக்கலாமா?
[Monday 2026-01-12 19:00]

கொய்யாபழத்தில் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றுதான் கொய்யா பழம் ஆகும். ஆப்பிளுக்கு சமமான சத்துக்கள் நிறைந்த கொய்யாபழம் மலிவான விலையில் கிடைக்கின்றது. நார்ச்சத்து, வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கொய்யாபழம் எடுத்துக்கொண்டால் உடம்பில் மிகப்பெரிய வித்தியாசத்தினை காண முடியும். கொலஸ்ட்ரால் பிரச்சனை நீக்குவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை, சர்க்கரை நோயாளிகள் இவற்றிற்கு மிகவும் சிறந்ததாக காணப்படுகின்றது.


முகத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சுப்பீல்!
[Sunday 2026-01-11 17:00]

மாசுபாடு மற்றும் மோசமான உணவு முறை சருமத்தை மந்தமாக மாற்றும். கறைகளை நீக்க விலையுயர்ந்த கிரீம்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. கரும்புள்ளிகளை நீக்க ஆரஞ்சு தோலைப் பயன்படுத்தலாம். அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் முகத்தைப் பாதிக்கின்றன. மாசுபாடு சருமத்தை மந்தமாக மாற்றும். பலரும் கறைகளை மறைக்க விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நிலையில் உங்கள் முகத்தை பாதுகாக்க சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க இயற்கை பொருட்களைப் பயன்படுத்தலாம்.


சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
[Saturday 2026-01-10 07:00]

சர்க்கரை பொங்கலை கோவில் பிரசாதம் போன்று சுவையாக வைப்பது எப்படி என்ற கேள்வியை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், பலருக்கும் கோவில் பிரசாதம் போன்று சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு ஆசை அதிகமாகவே இருக்கும். அவ்வாறு கோவிலில் கொடுக்கும் சர்க்கரை பொங்களின் சுவை மாறாமல் நாம் வீட்டில் எவ்வாறு சர்க்கரை பொங்கல் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.


கல்யாண வீட்டு ஸ்டைலில் அவியல் எவ்வாறு செய்வது?
[Friday 2026-01-09 16:00]

தென்னிந்தியாவில் பிரபலமான உணவில் ஒன்றாக இருக்கும் அவியல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்:- கத்திரிக்காய் - 2, முருங்கை காய் - 1, உருளைக் கிழங்கு - 1, அவரைக்காய் - 3, பீன்ஸ் - 3, கேரட் - சிறியது 1, பூசணிக்காய் - 100கிராம், வாழைக்காய் - அரை மட்டும், சின்ன வெங்காயம் - 2, தேங்காய் - சிறிதளவு, சீரகம் - 1 ஸ்பூன், தயிர் - 3 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு


சரும பொலிவை இரட்டிப்பாக்கும் தேங்காய் பீட்ரூட் சாதம்!
[Thursday 2026-01-08 16:00]

பீட்ரூட் அதிக ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்ட ஒரு காய்கறியாக அறியப்படுகின்றது. இது ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஈமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. பீட்ரூட் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது. குறிப்பாக பீட்ரூட்டில் லைகோபீன் மற்றும் ஸ்குவாலேன் உள்ளிட்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கலவைகள் உள்ளதால், இது சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.


முகத்தை பளிச்சிட செய்யும் தக்காளி!
[Wednesday 2026-01-07 16:00]

வீட்டில் இருக்கும் தக்காளியில் இரண்டு பொருட்களை சேர்த்து பூசினால் சருமம் பளபளக்கும் எனப்படுகின்றது. குளிர்காலத்தின் தாக்கம் சருமத்தில் விரைவாகத் தெரியும். முகம் வறண்டு, கைகள் மற்றும் கால்கள் வெண்மையாகி, உதடுகள் வெடிக்கத் தொடங்குகின்றன. மக்கள் இவற்றை பொதுவானவை என்று நினைத்து பெரும்பாலும் புறக்கணித்தாலும், சிலரின் முகம் குளிர்காலத்தில் கருமையாகவும், மந்தமாகவும், கறைபடிந்ததாகவும் மாறுத் தொடங்குகிறது.


முட்டி வலிக்கு நிவாரணம் தரும் சட்னி!
[Tuesday 2026-01-06 16:00]

இன்றைய காலகட்டத்தில் பலரும் பல விதமான நோய்களால் பாடுபடுகின்றனர். அவற்றில் ஒன்றுதான் யூரிக் அமில பிரச்சினை என்பது மக்கள் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வாழ்க்கை முறை மற்றும் சீரான உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் யூரிக் அமில பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.


'வெள்ளைத் தங்கம்' எனப்படும் ஒட்டகப்பால்!
[Monday 2026-01-05 16:00]

அரிதாக கிடைக்கும் விலையில் மிகவும் அதிகமான அதுவும் வெள்ளை தங்கம் எனப்படும் ஒட்டகப்பால் பசும்பால் மற்றும் எருமை பாலை விட எவ்வகையில் நன்மை தருக்கிறது என்பதை பதிவில் பார்க்கலாம். ஒரு காலத்தில் பாலைவனச் சூழலில் வாழும் மக்களிடையே மட்டுமே பிரபலமாக இருந்த ஒட்டகப் பால் தற்போது தமிழ்நாட்டிலும் பிரபலமடைந்தது. ஆனாலும் தமிழ்நாட்டில் ஒட்டகப் பால் அருந்தும் சூழல் எல்லோருக்கும் அமையவில்லை.


நாவூரும் சுவையில் காரசாரமான ஆட்டுக்கால் குழம்பு!
[Sunday 2026-01-04 18:00]

பொதுவாக அசைவ பிரியர்களின் விருப்ப பட்டியலில் ஆட்டுக்கால் ரெசிபிக்கள் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது. அந்த வகையில் சன்டே ஸ்பெஷலாக வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவுக்கு அசத்தல் சுவையில் ஆட்டுக்கால் குழம்பை செட்டிநாடு பாணியில் எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.


பொடுகு, முடி உதிர்வை தடுக்கும் வெந்தயப்பொடி ஷாம்பூ!
[Saturday 2026-01-03 17:00]

தலைமுடிக்கு இரசாயன ஷாம்பூ பயன்படுத்தாமல் இயற்கையாக மூன்று பொருள் கொண்டு வீட்டிலேயே ஷம்பூ செய்யும் முறை பார்க்கலாம். குளிர்காலத்தில் நம் சருமம் மட்டும் வறண்டு போகாது. நமது தலைமுடியும் பல பிரச்சனைகளை உள்வாங்கும். இதனால் பொடுகு பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கும். தலையில் அmதிகமாக பொடுகு இருந்தால் அது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் நாம் பல விலை உயர்ந்த ஷாம்பூக்களை வாங்கி குளிப்போம். இந்த ஷாம்புகள் மற்றும் பல முடி பராமரிப்புப் பொருட்களில், கூந்தலுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும் கடுமையான இரசாயனங்கள் கலந்துள்ளன.


தங்கத்தை விட விலை அதிக பட்டியலில் இடம்பிடித்த இறைச்சிகள்!
[Friday 2026-01-02 16:00]

உலகிலேயே மிகவும் விலை அதிகமான இறைச்சி வகைகள் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வரகின்றது. நாம் சாப்பிடும் உணவுகள் தங்கத்தை காட்டிலும் விலை அதிகம் என்று சொன்னால் யாரால் நம்ப முடியும். ஆனால் அது தான் உண்மை. சில அசைவ உணவுகள் தங்கத்திற்கு நிகராக போட்டி போடுகின்றது. சில நேரங்களில் அவை தங்கத்தை விட விலை அதிகமாகவும் இருக்கலாம். அப்படி அசைவ உணவுகளில் டாப் 5 இடத்தில் உள்ள உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.


பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்!
[Thursday 2026-01-01 17:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகின்றது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுவதுடன் நுரையீரல் தொற்றுக்களை குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை , நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்துவது சிறந்த நிவாரணம் கொடுக்கும்.


பீட்சா விரும்பி சாப்பிடுவரா? - எச்சரிக்கை பதிவு!
[Wednesday 2025-12-31 16:00]

அதிக கலோரி, சோடியம் நிறைந்த பீட்சாவை அடிக்கடி சாப்பிட்டால் பெப்பரோனி புற்றுநோய் வரும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக மாறியுள்ளது பீட்சா. இதில் கலந்துள்ள சீஸ், சாஸ் இவற்றின் சுவை அதிகமாகவே மக்கள் ஈர்க்கின்றது. ஆனால் பீட்சா உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில் ஆகும். ஆம் அடிக்கடி பீட்சா சாப்பிடுவது உடம்பில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாம். பீட்சாவில் அதிக கலோரி, நிறைவுள்ள கொழுப்பு மற்றும் சோடியம் இவைகள் காணப்படுகின்றது.


முளைத்த வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தலாமா?
[Tuesday 2025-12-30 16:00]

முளைவிட்ட வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தலாமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்திய சமையலில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ள வெங்காயம் குளிர்காலத்தில் முளைத்துவிட ஆரம்பிக்கும். அதாவது வெங்காயத்தின் முனைப்பகுதியில் பச்சை நிறத்தில் தளிர் வெளியே வந்து முளைத்திருக்கும். ஆனால் இதனை சமையலுக்கு பயன்படுத்தலாமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.


வெங்காய சாறு பயன்படுத்தினால் வழுக்கை தலையிலும் முடி வளருமா?
[Monday 2025-12-29 16:00]

வெங்காய சாற்றில் சல்பர் நிறைந்துள்ளது இந்த வெங்காய சாற்றை தலையில் பூசுவதால் முடி வளரும் என சொல்லப்படுவதற்கு விளக்கத்தை பார்க்கலாம். பலரும் தலைமுடிக்கு வெங்காய சாறு பய்னபடத்துவார்கள் இது உண்மையில் தலைக்கு பயன்படுத்துவது நல்லதா என்பதை யாராவது சிந்தித்து பார்த்துள்ளீர்களா?. வெங்காய சாறு உங்களுக்கு ஒரு நல்ல வீட்டு மருந்தாக இருக்கலாம். இது ஒரு மாயாஜால சிகிச்சை அல்ல, ஆனால் சரியான மற்றும் வழக்கமாக பயன்படத்தினால் பலருக்கு நீண்ட, அடர்த்தியான மற்றும் வலுவான முடி கிடைக்கும் என கூறப்படுகின்றது.


குளிர்காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்!
[Sunday 2025-12-28 16:00]

குளிர் காலத்தில் நாம் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்? எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே தொற்று நோய்கள் வரிசை கட்டி வந்துவிடுகின்றது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தற்போதுள்ள பனி அளவுக்கு அதிகமாக இருப்பதால் மிக எளிதாக சளி, இருமல், வைரஸ் தொற்று என ஏற்படுகின்றது. இந்த தொற்று தீவிரமடையும் தருணத்தில் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தி, சுவாசிப்பதற்கு மிகவும் சிரமத்தினை ஏற்படுத்துகின்றது.


முடி வளர்ச்சியை தூண்டும் எண்ணெய்கள்!
[Saturday 2025-12-27 06:00]

ஆயுர்வேத எண்ணெய்கள் உங்கள் தலைமுடிக்கு வெளிப்புறத்திலிருந்து பளபளப்பை சேர்ப்பது மட்டுமல்லாமல் வேர்களை ஊடுருவி உள்ளே இருந்து ஊட்டமளிக்கும். மக்களிடையே கூந்தல் பராமரிப்பு என்பது ஒரு வழக்கமாக உள்ளது. நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தல் அழகின் சின்னம் மட்டுமல்ல, நமது தன்னம்பிக்கையும் ஆகும். சந்தையில் புதிய சீரம்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களால் நிரம்பி வழிந்தாலும், நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை, நாம் இன்னும் நம் பாட்டி பயன்படுத்திய அதே பழைய ஆயுர்வேத எண்ணெய்களையே நாடுகிறோம்.


உடல் கழிவுகளை வெளியேற்றும் பீட்ரூட் கஞ்சி!
[Friday 2025-12-26 17:00]

வயிற்றில் நல்ல பக்றீரியாக்களை வளர்த்து கழிவுகளை வெளியேற்றும் பீட்ரூட் கஞ்சி எப்படி செய்யலாம் என்பதை பதிவில் தெரிந்து கொள்ளலாம். தற்போது சமூக வலைத்தளங்களில் பீட்ரூட் கஞ்சி மிகவும் பிரபலமாக வைரலாகி வருகின்றது. பீட்ரூட் கஞ்சி நொதித்தல் முறையில் (புளிக்க வைத்து) செய்யப்படுவது. அதனால் இயற்கையாகவே அதில் ப்ரோ பயாடிக் பண்புகள் அதிகமாக இருக்கும். ​ ப்ரோ பயோட்டிக் க் பண்புகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவி செய்யும்.


உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கணுமா?
[Thursday 2025-12-25 16:00]

தற்காலத்தில் அதிகரித்துவரும் வேலைபளு, மன அழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை,போதிய உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணிகள் உடல் பருமன் அதிகரிப்பதில் ஆதிக்கம் செலுத்துகின்றது. பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக அமையும் உடல் பருமன் பிரச்சினைக்கு உடல் பயிற்சி இன்றி தீர்வு காண முடியுமா? என்ற கேள்வி தற்காலத்தில் பெரும்பாலானவர்களிம் காணப்படுகின்றது.


செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது?
[Wednesday 2025-12-24 17:00]

சாதாரண வாழைப்பழத்தைப் போல செவ்வாழைப்பழமும் அனைராலும் விரும்பி சாப்பிடப்படுகின்றது. வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. மேலும் செவ்வாழைப்பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இதனால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.


கிறிஸ்துமஸ் பிளம் கேக்: ஆல்கஹால் இல்லாமல் அதே சுவையில் எப்படி செய்வது?
[Tuesday 2025-12-23 15:00]

இன்னும் இரண்டே நாட்களில் கிறிஸ்தவ மக்களின் புனிதப் பண்டிகையான கிறிஸ்துமஸ் வரப் போகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிளம் கேக் தான். என்ன கேக்குகள் இருந்தாலும் கிருஸ்துமஸ் கேக் என்றால் எலலோரும் விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம். இதை சிலர் ஆல்கஹால் வைத்து செய்வார்கள். ஆனால் இந்த பதிவில் ஆற்ககால் இல்லாமல் அதே சுவையில் எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்க்கலாம்.


சளி இருமலை உடனே குணப்படுத்தும் நண்டு சூப்!
[Monday 2025-12-22 16:00]

பொதுவாக மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்டலே கடும் குளிரும் கூடவே வந்துவிடும். அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சளி, இருமல் பிரச்சினையால் பாதிக்கப்படுவதும் வழக்கம். குளிர் காலத்தில் சைனஸ் பிரச்சனையிலிருந்தும் நெஞ்சி சளி மற்றும் இருமளில் இருந்தும் விரைவில் விடுபட வேண்டும் என்றால் நண்டு சூப் தான் சிறந்த தெரிவு. நண்டில் பாஸ்பரஸ் அதிகம் காணப்படுகின்றது. இது மூளையின் சிறந்த செயற்பாட்டிற்கும், பற்களை வலிமையாக்கவும் உதவுவதுடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.


கீரைகளின் ராஜா யார் தெரியுமா?
[Sunday 2025-12-21 19:00]

“கீரைகளின் ராஜா” ”ஏழைகளின் தங்க பஷ்பம்” என்றழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. நீர்வளம் நிறைந்த அனைத்து பகுதிகளில் படர்ந்து காணப்படும், பொன்னாங்கண்ணி கீரை, மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. இக்கீரைக்கு கொடுப்பை, சீதை, சீதேவி என்னும் வேறு பெயர்களும் உண்டு.


நெஞ்சு சளியை இல்லாமல் செய்யும் கொத்தமல்லி சட்னி!
[Saturday 2025-12-20 15:00]

உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தோசை தான் அடிக்கடி செய்வார்கள் என்றால் அதற்கு இந்த கொத்தமல்லி தண்ணி சட்னி பெரும்பாலும் உதவும். இந்த சட்னிக்கு வழக்கமாக செய்வது போல வதககி செய்யமல் கொஞ்சம் பொருட்களை வதக்கி அரைத்து சட்னி செய்யுங்கள். இப்படி கொத்தமல்லி சட்னியை செய்யும் போது, சுவை புதுமையாகவும் அருமையாகவும் இருக்கும். இதை இட்லி தோசையுடன் சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவீர்கள். கொத்தமல்லி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள பதிவை படித்தால் போதும்.


நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? - எச்சரிக்கை பதிவு!
[Friday 2025-12-19 16:00]

நள்ளிரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக பலரும் வைத்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் ஆபத்து குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவு என்னவெனில் பிரியாணி ஆகும். பிரியாணிக்கு பொரித்த சிக்கன், தயிர் வெங்காயம் என பல வகைகளில் வைத்து சாப்பிடுவார்கள். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பிரியாணி, பல வகைகளில் செய்யப்படுகின்றது. சிக்கன், மட்டன், மீன், இரால், நாட்க்கோழி, வான்கோழி என பல வகைகள் உள்ளது.


குளிர்காலத்தில் உதவி கரம் நீட்டும் கருப்பு மிளகு!
[Thursday 2025-12-18 16:00]

பொதுவாக கோடைக்காலம் சென்று குளிர்காலம் வரும் பொழுது சிலருக்கு உடல்நல பிரச்சினைகள் வாய்ப்பு உள்ளது. ஏனெனின் காலநிலை மாற்றத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். இந்த சமயத்தில் மருந்து மாத்திரைகளை நம்புவதை விட உணவில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சமையலறையில் சாதாரணமாக நாம் பார்க்கும் பொருட்கள் கூட எமது உடலில் பாரிய மாற்றத்தை கொண்டு வரும்.


இந்த 5 பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்காதீங்க!
[Wednesday 2025-12-17 16:00]

பழங்கள் ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் சில பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிப்பது உடல் பாதிப்பு ஏற்படுமாம். அந்த வகையில் எந்தெந்த பழங்கள் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக பழங்களில் அதிகமான சத்துக்கள் இருப்பதால், நம்மில் அநேகர் ஆரோக்கியமாக இருப்பதற்கு பழங்களை முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர்.

Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா