Untitled Document
September 19, 2024 [GMT]
ஊரடங்கு பிறப்பிக்கும் நோக்கம் இல்லை!
[Monday 2024-09-16 17:00]

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும், சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமுலில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
[Monday 2024-09-16 17:00]

தெஹிவளை, பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 31 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 08.30 இற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


முடிவில் மாற்றமில்லை - தமிழரசு கட்சி அறிவிப்பு!
[Monday 2024-09-16 17:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.


வேட்பாளர்கள் மெட்டா விளம்பரங்களுக்கு செலவிட்ட தொகை!
[Monday 2024-09-16 17:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இதுவரை மெட்டா விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகளவு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.


பொதுவேட்பாளரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மாவை! Top News
[Monday 2024-09-16 06:00]

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்து தனது ஆதரவினையும் வாழ்த்தினையும் தெரிவித்தார்.


பொதுவேட்பாளரின் செல்வாக்கு அதிகரிப்பால் அரியநேத்திரனின் உயிருக்கு ஆபத்து! - பொலிஸ் எச்சரிக்கை.
[Monday 2024-09-16 06:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதி பொலிஸ்மா மா அதிபரால் சிங்களத்தில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழரசின் வட்டுக்கோட்டை கிளையும் பொதுவேட்பாளருக்கு ஆதரவு!
[Monday 2024-09-16 06:00]

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் தமிழ் பொது வேட்பாளர் அரியனேத்திரனுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானத்தை எடுத்துள்ளது.


40 நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!
[Monday 2024-09-16 06:00]

நேற்று நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வாக்காளர்களுக்கு 5 ஆயிரம் ரூபா பணம் கொடுத்தவர் கைது!
[Monday 2024-09-16 06:00]

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை விளம்பரப்படுத்தும் நோக்கில் பண விநியோகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அமெரிக்க பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை!
[Monday 2024-09-16 06:00]

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அந்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுவரை 4,215 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள்!
[Monday 2024-09-16 06:00]

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 4,215 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


150 எம்.பிக்களை வெளியேற்றுவேன்!
[Monday 2024-09-16 06:00]

தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளியேற வேண்டியவர்கள் எனவும், தான் வெற்றிபெற்று ஒன்றரை மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


மற்றவர்களுக்காக பிரசாரம் செய்யும் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை!
[Monday 2024-09-16 06:00]

எதிர்வரும் செப்டெம்பர் 21, 2024 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில வேட்பாளர்கள் பிற வேட்பாளர்களை ஆதரித்து விளம்பரப்படுத்துவது தொடர்பாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


வத்திராயனில் 95 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது!
[Monday 2024-09-16 06:00]

95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் நேற்று விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திராயன் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95.520 கிலோகிராம் கேரள கஞ்சா இதன்போது மீட்கப்பட்டுள்ளது.


குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தல்!
[Monday 2024-09-16 06:00]

ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காகக் குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் யுவதி சடலமாக மீட்பு!
[Monday 2024-09-16 06:00]

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். கொட்டடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் யதுசாயினி என்ற 22 வயது யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்! Top News
[Sunday 2024-09-15 16:00]

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.


திருகோணமலையில் பொது வேட்பாளருக்கு ஆதரவான கூட்டம்! Top News
[Sunday 2024-09-15 16:00]

தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த பொதுக் கூட்டம், திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியில் நடைபெற்றது.


இரண்டு நாட்கள் சமூக ஊடகங்களை முடக்கத் திட்டம்!
[Sunday 2024-09-15 16:00]

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ரணிலுக்கு பாதுகாப்பாக சென்ற ஹெலி - வயலுக்குள் அவசரமாக தரையிறக்கம்!
[Sunday 2024-09-15 16:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த, ஹெலிகொப்டரைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு வந்த உலங்குவானூர்தி இயந்திரக் கோளாறு காரணமாக, அனுராதபுர எப்பாவல பகுதியில் உள்ள வயலில் தரையிறங்கியது. நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நாளை வெளியாகிறது தமிழரசின் விசேட அறிக்கை!
[Sunday 2024-09-15 16:00]

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி வவுனியாவில் வைத்து வெளியிடவுள்ளது.


அவசரகால பாதுகாப்பு திட்டத்தை தயாரிக்க அனுமதி!
[Sunday 2024-09-15 16:00]

ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து 'அவசரகால திட்டம்' ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆட்சிக்கு வந்தால் அதானிக்கு ஆப்பு!
[Sunday 2024-09-15 16:00]

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் இந்தியாவின் அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்திட்டத்தினை இரத்துசெய்வேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.


13 ஐ அமுல்படுத்துவேன்!
[Sunday 2024-09-15 16:00]

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


வட்டக்கச்சி விபத்தில் இளைஞன் பலி!
[Sunday 2024-09-15 16:00]

கிளிநொச்சி- வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.


தீக்கிரையானது ஓட்டோ!
[Sunday 2024-09-15 16:00]

மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் தொழில்நுட்பக் கோளாறினால் நேற்று மாலை ஒன்று ஓட்டோ தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழர் தேசமாய்த் திரள்வோம் !- யாழ். பல்கலைக்கழக சமூகம் அழைப்பு.
[Sunday 2024-09-15 05:00]

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என யாழ் பல்கலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.


பொது வேட்பாளரை ஆதரிப்பது ஏன்? - ஸ்ரீநேசன்
[Sunday 2024-09-15 05:00]

கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும்.அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா