Untitled Document
September 19, 2024 [GMT]
நெல்லியடியில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுக்கூட்டம்! Top News
[Wednesday 2024-09-11 05:00]

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரவளிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொதுக் கூட்டம், நேற்றையதினம் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்றது.


சந்திரகுமாரின் கட்சிப் பதிவு ரத்து!
[Wednesday 2024-09-11 05:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான அரசியல் கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்!- ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு வேண்டுகோள்.
[Wednesday 2024-09-11 05:00]

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேந்திரனுக்கு வாக்களிக்குமாறு, தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.


பட்டாசு கொளுத்தியவர்கள் கைது!
[Wednesday 2024-09-11 05:00]

கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் 7 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தேர்தல் விஞ்ஞாபனங்களை இனிமேல் தான் அலசி ஆராயப் போகிறதாம் தமிழரசு!
[Tuesday 2024-09-10 19:00]

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானம் முறையாக மேற்கொள்ளப்படாத பின்னணியில், தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கான விசேட குழு சகல வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களையும் மீண்டும் நன்கு ஆராய்ந்து, யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி உரியவாறான அறிக்கையொன்றை வெளியிடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.


சஜித்துடன் காலவரையறை குறித்து பேசப் போகிறாராம் சுமந்திரன்!
[Tuesday 2024-09-10 19:00]

சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன். எனவே மத்திய செயற்குழு கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.


மாகாணசபைகளை இயங்கச் செய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்!
[Tuesday 2024-09-10 19:00]

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


மேலும் 5 இராஜாங்க அமைச்சர்களை நீக்கினார் ரணில்!
[Tuesday 2024-09-10 19:00]

கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


சுன்னாகம் விபத்தில் துண்டிக்கப்பட்டது பாதம்! Top News
[Tuesday 2024-09-10 19:00]

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் , மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரின், அதன் செயினுக்குள் அகப்பட்டு துண்டாடப்பட்டுள்ளது.


ஜெர்மனியில் இருந்து உடுப்பிட்டி வந்தவர் விபத்தில் மரணம்!
[Tuesday 2024-09-10 19:00]

ஜேர்மனியில் இருந்து சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு, விடுமுறைக்காக வந்திருந்த ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த செல்வராசா சிவஞானம் (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இரண்டு வாரங்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு!
[Tuesday 2024-09-10 19:00]

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


80 மொட்டு எம்.பிக்கள் நாட்டை விட்டு வெளியேற தயார்!
[Tuesday 2024-09-10 19:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக பொதுஜன பெரமுன எம்பிக்கள் 80 பேர் நாட்டை விட்டு வெளியேற விமான டிக்கெட் பதிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


போராட்டம் நடத்திய மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கைது! Top News
[Tuesday 2024-09-10 19:00]

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் மூத்த சட்டத்தரணி சடலமாக மீட்பு!
[Tuesday 2024-09-10 19:00]

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த மூத்த சட்டத்தரணி அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கனகசபாபதி நமநாதன் (வயது 86) எனும் சட்டத்தரணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


தமிழரசி்ன் கிளிநொச்சி கிளை பொது வேட்பாளருக்கு ஆதரவு!
[Tuesday 2024-09-10 05:00]

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்றுபிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.


கடவுச்சீட்டு வரிசைக்குப் பின்னால் மாபியாவாம்!
[Tuesday 2024-09-10 05:00]

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னால் மாஃபியாவொன்று செயற்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.


20 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை!
[Tuesday 2024-09-10 05:00]

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.


சஜித் கூட்டத்தில் பட்டாசுகள் வெடித்து 7 பேர் காயம்!
[Tuesday 2024-09-10 05:00]

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை வெடிக்கச் செய்ததில் பொலிஸார் 5 பேர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புலமைப்பரிசில் வகுப்புகளுக்கு நாளையுடன் தடை!
[Tuesday 2024-09-10 05:00]

2024 ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


மேலும் 35 இலங்கையர்கள் மியான்மாரில்!
[Tuesday 2024-09-10 05:00]

மியான்மரின் மியாவாடி பகுதியில் மேலும் 35 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை விரைவில் மீட்டு நாட்டுக்கு வரவழைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துடன் இணைந்தார்!
[Tuesday 2024-09-10 05:00]

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, கண்டியில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடையில் ஏறி, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்தார்


முடிவில் எந்தக் குழப்பமும் இல்லை!
[Tuesday 2024-09-10 05:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என்ற இலங்கை தமிழரசுகட்சியின் நிலைப்பாடு குறித்து எந்தவித குழப்பமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்


பொது விவாதத்தில் இருந்து வெளியேறினார் ரொஷான் ரணசிங்க!
[Tuesday 2024-09-10 05:00]

மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்த ஜனாதிபதி வேட்பாளர் விவாத தொடரின் மூன்றாம் கட்டம் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க உட்பட பனி விஜேசிறிவர்தன, சமபிம கட்சியின் நாமல் ராஜபக்ச, கே.ஆர்.க்ரிஷான், கீர்த்தி விக்கிரமரட்ண மற்றும் லலித் டி சில்வா கலந்து கொண்டனர்.


பூஜிதவும் 75 மில்லியன் நட்டஈட்டை செலுத்தி முடித்தார்!
[Tuesday 2024-09-10 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி குறித்த தொகையை செலுத்தி முடித்துள்ளார்.


அழித்தவர்களை அழைத்து பொன்னாடை போர்க்கும் வெட்கம் கெட்ட சமூகம்!
[Monday 2024-09-09 05:00]

ரணில் விக்ரமசிங்கவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கானது இருக்கின்ற நிலங்களை இன்னும் இழந்து செல்வதாகவே அமைவதோடு, ஒரு கட்டமைப்பாக ஒரு தேசமாக ஒரு இனத்தின் விடுதலைக்காக இருந்த எம்மை சிதைத்த பெருமையும் அவரைத் தான் சாரும் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.


சஜித்தே தமிழரசுக்கு நெருக்கமாம்! - கூறுகிறார் சுமந்திரன்.
[Monday 2024-09-09 05:00]

தமிழரசுக்கட்சி தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவை ஒரு போதும் மாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரில் சஜித் பிரேமதாஸவுடைய நிலைப்பாடுதான் தான் எங்களுக்கு அண்மித்ததாக இருந்ததாலேயே அவருக்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்க பிரதிநிதிகள் ஜெனிவா சென்றனர்!
[Monday 2024-09-09 05:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்க பிரதிநிதிகள்நேற்று ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர்.


தலதா மாளிகைக்குள் படம்பிடித்த தம்பதிக்கு சிக்கல்!
[Monday 2024-09-09 05:00]

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குள் அண்மையில் திருமணமான தம்பதியொன்று திருமணத்திற்கு முன்னரான படப்பிடிப்பு நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா