Untitled Document
September 19, 2024 [GMT]
ஜெனிவா தீர்மானத்தை காலநீடிப்பு செய்வது குறித்து 19ஆம் திகதி முடிவு!
[Sunday 2024-09-15 05:00]

பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது குறித்தும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.


வாகன இறக்குமதிக்கு வரிவிலக்கு கிடையாது!
[Sunday 2024-09-15 05:00]

அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கமாட்டேன்!
[Sunday 2024-09-15 05:00]

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!- இளைஞனுக்கும் வலை.
[Sunday 2024-09-15 05:00]

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இந்ா நிலையில் சனிக்கிழமை சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.


05 வருடங்களில் காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!
[Sunday 2024-09-15 05:00]

எதிர்வரும் 05 வருடங்களில் காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையாகத் தீர்வுகாணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


கள்ள வாக்குப் போட்டால் கதி என்னவாகும்? - தெரியுமா?
[Sunday 2024-09-15 05:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு 2023ஆம் ஆண்டு 21ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 12 மாதங்கள் வரை சிறை தண்டனையும் 2 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


21, 22இல் மதுபானக் கடைகள் பூட்டு!
[Sunday 2024-09-15 05:00]

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார். மதுபானங்களை சில்லறைக்கு விற்பனை செய்யும் அனைத்து இடங்களும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இரண்டு வாரங்களுக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!
[Sunday 2024-09-15 05:00]

இரண்டு வாரங்களுக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் என்பனவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்த முடியும் என்றார்.


கஜேந்திரனை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!
[Saturday 2024-09-14 17:00]

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த 09.09.2024 திங்கட் கிழமை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் துண்டுப்பிரசுரங்களை பறிமுதல் செய்தனர்.


தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள்! Top News
[Saturday 2024-09-14 17:00]

தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டு வரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே சென்று சங்கு சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தமிழரசின் பிரித்தானிய கிளை பொது வேட்பாளருக்கு ஆதரவு!
[Saturday 2024-09-14 17:00]

இலங்கைத்தீவில் 21 செப்டம்பர் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியாவுக்கான கிளையானது தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.


சங்கு சின்னத்துக்கு வாக்களித்து எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம்! -நெல்லியடி வாணிபர் கழகம். Top News
[Saturday 2024-09-14 17:00]

பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் என, நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.


திருமலை நீதிபதி கணேசராஜா சேவையில் இருந்து இடைநிறுத்தம்!
[Saturday 2024-09-14 17:00]

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


அனுரவின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு மலையக எம்.பிக்கள்!
[Saturday 2024-09-14 17:00]

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


18 நள்ளிரவுடன் பிரசாரங்கள் முடிவு!
[Saturday 2024-09-14 17:00]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பிறகு, எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் விபத்தில் பலி!
[Saturday 2024-09-14 17:00]

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.


வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு!
[Saturday 2024-09-14 17:00]

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி இன்றுடன் நிறைவுபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாளை புலமைப்பரிசில் பரீட்சை- வேட்பாளர்களிடம் கோரிக்கை!
[Saturday 2024-09-14 17:00]

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.இதனால், தேர்தல் பிரச்சாரங்கள் பரீட்சைகளுக்கு இடையூறை விளைவிக்கலாம். எனவே, நாளைய தினம் காலை பரீட்சை நிலையங்களுக்கு அருகில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


திலீபன் நினைவேந்தலுக்கு தடைகோரும் பொலிஸ்!
[Saturday 2024-09-14 05:00]

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பொது வேட்பாளருக்கு ஆதரவாக மன்னாரில் பொதுக்கூட்டம்! Top News
[Saturday 2024-09-14 05:00]

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை 4.30மணியளவில் மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம் பெற்றது.


தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளம்!
[Saturday 2024-09-14 05:00]

தெற்கிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள , பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடை களை அலங்கரிக்கிறார்கள் என வட கிழக்கு மாகாணங்களுக்கான நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியத்தின் சார்பாக அருட்பணி கிறிஸ்தோபர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!
[Saturday 2024-09-14 05:00]

இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.


வடக்கில் வாக்குக் கேட்கும் உரிமை அனுரவுக்கு கிடையாது!
[Saturday 2024-09-14 05:00]

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால், எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் கட்சிதான் எமது கட்சியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.


18ஆம் திகதியுடன் பிரசாரம் நிறைவு!
[Saturday 2024-09-14 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல்,21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4:30 வரையில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


உழைக்கும் போது செலுத்தும் வரி குறைப்பு!
[Saturday 2024-09-14 05:00]

PAYE வரியை (உழைக்கும் போது செலுத்தும் வரி) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அனுரவின் கூட்டத்தில் இருந்து திரும்பியவர்கள் மீது தாக்குதல்!
[Saturday 2024-09-14 05:00]

மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


தங்கத் தூளுடன் ஒருவர் கைது!
[Saturday 2024-09-14 05:00]

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்கத் தூளுடன் நபர் ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


மட்டக்களப்பு மயானத்தில் சடலம் - நரபலியா?
[Saturday 2024-09-14 05:00]

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா