Untitled Document
September 19, 2024 [GMT]
தேர்தலுக்குப் பின்னர் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!
[Thursday 2024-09-12 16:00]

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் நிலைநிறுத்தப்படவுள்ளனர்.


புதிய ஜனாதிபதிக்கு நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் உள்ளதா?
[Thursday 2024-09-12 16:00]

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் புதிய ஜனாதிபதிக்கு, அவர் நியமிக்கப்பட்டு 10 முதல் 12 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் கிடைக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்!
[Thursday 2024-09-12 05:00]

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார். அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக மக்களும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களும் அவருக்கு ஆதரவாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது தொடர்கிறது அடக்குமுறை!
[Thursday 2024-09-12 05:00]

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறியும் நோக்கில் தொடர்ச்சியாகப் போராடிவரும் உறவினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பல்வேறு வழிமுறைகளில் ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்துத் தாம் கரிசனையை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.


நாமலின் கூட்டத்தில் கல்வீச்சு!
[Thursday 2024-09-12 05:00]

ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தை ஒன்று காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


இராணுவத்தினரின் உரிமைகள் பற்றி பேச ரணில், சஜித், அனுரவுக்கு உரிமை இல்லை!
[Thursday 2024-09-12 05:00]

இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் உரிமைகளை பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ரணில், அனுர, சஜித் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 13க்கு ஒருபோதும் இடமில்லை என்று நாமல் ராஜபக்ஷ மாத்திரமே குறிப்பிடுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க விரும்புபவர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.


பிற கட்சி ஆதரவாளர்களை அச்சுறுத்திய முன்னாள் இராணுவ மேஜர் கைது!
[Thursday 2024-09-12 05:00]

அரசியல் பேரணியில் கலந்து கொண்டு மற்ற கட்சி ஆதரவாளர்களை வீடியோ செய்தி மூலம் மிரட்டிய நபர் மீது முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபர் கிரிபத்கொட பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய நபர் இலங்கை இராணுவத்தின் முன்னாள் மேஜர் என பொலிஸார் தெரிவித்தனர்.


தமிழர் வாக்குகளை சிதறடிக்க முடியாது - எங்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்!
[Thursday 2024-09-12 05:00]

தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது எனவும் எங்களுடைய மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் எனவும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மூழ்கும் படகில் ஏறி சாகத் தயாரில்லை!
[Thursday 2024-09-12 05:00]

மூழ்கும் படகில் ஏறி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கீதா சமன்மலி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.


இபோச நடத்துநர் மீது தாக்குதல்!
[Thursday 2024-09-12 05:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அரச பேருந்து நேற்று பிற்பகல் வேளையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற வேளையில் அதன் நடத்துனர் மீது வவுனியா - கொழும்பு பயணிக்கும் தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதில் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்


திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா கேட்கிறார் ஹரிணி!
[Thursday 2024-09-12 05:00]

தேர்தல் பேரணியின் போது பொய்யான மற்றும் அவதூறான அறிக்கையை வெளியிட்டதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.


80 வீத வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைப்பு!
[Thursday 2024-09-12 05:00]

80 வீத உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்புடன் அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பணிகளை இவ்வார இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.


அரியநேத்திரனின் பிரசாரத்தில் பொலிசார் குறுக்கீடு!
[Wednesday 2024-09-11 17:00]

ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்திருந்தார்.


உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிக்கு தண்டனை உறுதி!- சஜித் வாக்குறுதி.
[Wednesday 2024-09-11 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிக்கு தகுதி தராதரம் பாராது தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


லண்டனில் புலிக்கொடியுடன் போராட்டம்! - பிரித்தானியாவிடம் இலங்கை அரசு எதிர்ப்பு.
[Wednesday 2024-09-11 17:00]

லண்டனில் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், பிரித்தானியாவிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த போராட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை, இங்கிலாந்து உள்துறை அலுவலகத்துடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


லசந்த, தாஜூதீன் கொலையாளிகள் சுதந்திரமாக நடமாட்டம்!
[Wednesday 2024-09-11 17:00]

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் வாசிம் தாஜூதீனையும் கொலை செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என சி.ஐ.டி.யின் முன்னாள் தலைவர் ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.


வாக்களிப்பு வரிசை - தேர்தல் ஆணைக்குழு விளக்கம்!
[Wednesday 2024-09-11 17:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 21ஆம் திகதியன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைக்கும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.


மொட்டு எம்.பி சீதாவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி!
[Wednesday 2024-09-11 17:00]

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொலவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவர் பொதுஜன பெரமுனவின் சார்பில நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


ரம்புக்வெல்லவுக்கு பிணை!
[Wednesday 2024-09-11 17:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்ய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


19 வேட்பாளர்களைக் காணவில்லை!
[Wednesday 2024-09-11 17:00]

ஜனாதிபதி வேட்பாளர்கள் 19 பேர் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


புதன்கிழமை நாடளாவிய புறக்கணிப்பு போராட்டம்!
[Wednesday 2024-09-11 17:00]

எதிர்வரும் புதன்கிழமை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. முறைப்பாடு எதுவுமின்றி மருத்துவர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


ஆட்கள் இல்லாததால் பேரணிகள் ரத்தா?
[Wednesday 2024-09-11 17:00]

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் குழுவினர் 92 பேரணிகளை 84 ஆகக் குறைத்துள்ளதாக முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


பக்கச்சார்பற்ற, சுதந்திரமான, வெளிப்படையான, அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை வலியுறுத்துகிறது பிரித்தானியா!
[Wednesday 2024-09-11 05:00]

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


ஐ.நா அறிக்கையை வரவேற்கிறது ஐரோப்பிய ஒன்றியம்!
[Wednesday 2024-09-11 05:00]

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.


கொக்குவிலில் டிப்பர் மோதி உயர்தர வகுப்பு மாணவி பலி!
[Wednesday 2024-09-11 05:00]

யாழ்ப்பாணத்தில் டிப்பர் வாகனம் மோதியதில் உயர்தரப் பிரிவு மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தவேளை ஆடியபாதம் வீதியில் பின்பக்கமாக வந்த டிப்பர் மாணவி மீது மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டது.


ஓமந்தையில் ரயில் மோதி பெண் பலி!
[Wednesday 2024-09-11 05:00]

வவுனியா, ஓமந்தையில் ரயில் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நேற்று மாலை சென்ற ரயில் புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது ரயில் மோதியது. குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.


10 வருடங்களில் பணக்காரர் ஆகப்போகிறீர்கள்!- ரணில் கூறிய ஆரூடம்.
[Wednesday 2024-09-11 05:00]

எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ஆட்கள் வரவில்லை - உடுப்பிட்டியில் சஜித்தின் கூட்டம் ரத்து!
[Wednesday 2024-09-11 05:00]

யாழ்ப்பாணம், வடமராட்சி - உடுப்பிட்டியில் செவ்வாய்க்கிழமை முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து நடைபெறவிருந்த பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர்.

Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா