|
|
ஒருபக்கம் நிலநடுக்கம், மறுபக்கம் கிராமங்கள் மீது குண்டு வீசும் மியான்மர் இராணுவம்!
[Monday 2025-03-31 06:00]
|
மியான்மரில் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்ட நிலநடுக்கத்தால் நாடு தத்தளித்து வரும் நிலையில், கிராமங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதற்காக, மியான்மரின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. மியான்மரின் பழமையான இனப் படைகளில் ஒன்றான கரேன் தேசிய ஒன்றியம் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில், நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இராணுவ ஆட்சிக் குழு பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.
|
|
|
ஐரோப்பிய நாடொன்றிற்கு பயணப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
[Monday 2025-03-31 06:00]
|
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைதாணையை மீறி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்கிறார். தனது பயணத்தின் போது, ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் பிற மூத்த ஹங்கேரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
|
|
|
ரஷ்ய பொருளாதாரம் மொத்தமாக முடக்கப்படும்: கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்!
[Monday 2025-03-31 06:00]
|
அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்விக்காக ரஷ்யா புதிய சுற்று கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை கட்டாயப்படுத்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கட்டாயப்படுத்தி வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது தாம் கோபத்தில் இருப்பதாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
|
|
|
ரஷ்ய ஜனாதிபதி புடினின் கார் தீப்பற்றியதால் பரபரப்பு!
[Sunday 2025-03-30 17:00]
|
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் லுபியங்காவில் அமைந்துள்ள எப்எஸ்பி தலைமையகத்திற்கு அருகில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் பாதுகாப்பு தொழில்நுட்பட மிக்க கார் ஒன்று திடீரென தீப் பற்றி எரிந்தது.
|
|
|
ஒண்டாரியோ மாகாணத்திற்கு கிடைக்கும் அதிர்ஸ்டம்!
[Sunday 2025-03-30 17:00]
|
இந்த ஆண்டில் ஒண்டாரியோ மாகாணத்திற்கு நான்காவது முறையாக தொடர்ச்சியாக லாட்டோ மேக்ஸ் (Lotto Max) ஜாக்பாட் வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த முறை $65 மில்லியன் டாலர் பரிசு நியூமார்கெட்டில் (Newmarket) விற்பனை செய்யப்பட்ட ஒரு டிக்கெட்டிற்கு போயுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒண்டாரியோ லாட்டரி & கேமிங் கமிஷன் (OLG) வெள்ளிக்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற சீட்டிலுப்பில் இந்த வெற்றி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளது.
|
|
|
ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இருவர் கைது!
[Sunday 2025-03-30 17:00]
|
தென்கிழக்கு ஐரோப்பாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரை, கொசோவோ (Kosovo) பொலிசார் கைது செய்துள்ளனர். கொசோவோவின் ஜிலான் நகரின் பெர்லெப்னிச்சே (Përlepnicë) கிராமத்தில் நேற்று இந்த கைது இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
|
|
|
இந்தோனேசியாவில் இன்று நில அதிர்வு!
[Sunday 2025-03-30 17:00]
|
இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
|
|
|
ரஷ்யா தொடர்பில் கொந்தளித்த ஜெலென்ஸ்கி!
[Sunday 2025-03-30 07:00]
|
ஏறக்குறைய தினசரி ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களுக்கு உக்ரைன் இலக்காகி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளிடமிருந்து வலுவான பதிலை உக்ரைன் எதிர்பார்க்கிறது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ட்ரோன் தாக்குதல் விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை ஜெலென்ஸ்கி வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
|
|
|
உணவில் பூச்சிகள்: 2,000 உணவகங்களை மூடும் ஜப்பானின் பிரபல நிறுவனம்!
[Sunday 2025-03-30 07:00]
|
வாடிக்கையாளர்களின் புகாரை அடுத்து ஜப்பானின் மிகப்பெரிய உணவக நிறுவனம் ஒன்று சுத்தம் செய்வதற்காக அதன் விற்பனை நிலையங்களை மூடும் முடிவுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் உணவில் எலி உட்பட பூச்சிகளைக் கண்டறிந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஜப்பானின் மிகப் பிரபலமான உணவக நிறுவனம் Sukiya. இதன் வாடிக்கையாளர் ஒருவரால் உணவில் பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தங்கள் விற்பனை நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
|
|
|
ட்ரம்பின் வரி விதிப்பால் மில்லியன் கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை!
[Sunday 2025-03-30 07:00]
|
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் டாய்லெட் பேப்பர் இல்லாமல் நெருக்கடிக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கனடா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள வரி விதிப்பு அமெரிக்காவில் எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
|
|
|
தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்: கனேடிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
[Saturday 2025-03-29 18:00]
|
கனடா ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஒன்டாறியோ மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை கனேடிய உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்புக்கு அமைய ஒன்டாரியோவில் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் நினைவு கூரப்படும் என ஒன்டாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
|
|
|
1000 ஐ கடந்த மியான்மார் நில நடுக்க பலி எண்ணிக்கை!
[Saturday 2025-03-29 18:00]
|
மியன்மரில் நேற்று (28) ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. நில அதிர்வால் 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
|
|
|
எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்!
[Saturday 2025-03-29 18:00]
|
எக்ஸ் தளத்தை 45 பில்லியன் டொலருக்கு எலோன் மஸ்க் விற்பனை செய்துள்ளார். எலோன் மஸ்க் தனது எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துக்கே எக்ஸ் தள நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆண்டு ஈலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கச் செலுத்திய தொகையுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
|
|
|
கனடாவுடன் இணைய விரும்பும் அமெரிக்கர்கள்!
[Saturday 2025-03-29 18:00]
|
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதிலிருந்தே சில நாடுகளுடன் வர்த்தகப்போரில் இறங்கியுள்ளார். அத்துடன், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார். அவர் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாட்டு மக்களில் சிலரோ, தாங்கள் கனேடிய குடியுரிமை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
|
|
|
ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும்: அடுத்த நெருக்கடியை முன்வைக்கும் விளாடிமிர் புடின்!
[Saturday 2025-03-29 06:00]
|
அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, போர் களத்தில் முழுமையாக தங்கள் கை ஓங்கியுள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார். அவர்களை மொத்தமாக அழித்தொழிப்பேன் என ஏற்கனவே கூறியிருந்தேன் என்றும், தற்போது அதன் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.
|
|
|
அமெரிக்க இராணுவ தளங்கள் தாக்கப்படும்: ட்ரம்புக்கு பதிலளித்த ஈரான் தலைவர்!
[Saturday 2025-03-29 06:00]
|
ஈரான் மீது இராணுவ நடவடிக்கை என்ற எச்சரிக்கையை அமெரிக்கா பின்பற்றினால், ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும் என அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் ஒத்துழைக்க மறுத்தால் இராணுவ நடவடிக்கைகளை எதிகொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
|
|
|
ட்ரம்பால் பேரிடியை எதிர்கொண்ட பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய கார் ஜாம்பவான்கள்!
[Saturday 2025-03-29 06:00]
|
ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பால் பங்கு விலைகள் சரிவடைந்த நிலையில் ஐரோப்பிய கார் ஜாம்பவான்கள் பலரின் நிகர மதிப்பில் பல பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கார்களுக்கு மொத்தமாக 25 சதவீத வரிகளை விதித்து கார் தொழிற்சாலைகள் மீது பேரிடியை இறக்கியுள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப்.
|
|
|
டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய அனைத்து சலுகைகளும் நிறுத்தம்!
[Friday 2025-03-28 18:00]
|
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா அரசாங்கம் வழங்கிய அனைத்து சலுகைகளையும் நிறுத்தி உள்ளது. அதன்படி டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய 43 மில்லியன் டாலர் தள்ளுபடி தொகையை கனடா நிறுத்தி வைத்துள்ளது. அதோடு மின்சார வாகனங்களுக்கான தள்ளுபடித் திட்டங்களில் இருந்து டெஸ்லா நிறுவனத்தை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கனடா போக்குவரத்து துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) செவ்வாயன்று (25) தெரிவித்துள்ளார்.
|
|
|
மியன்மார் தாய்லாந்தை உலுக்கிய பூகம்பம்!
[Friday 2025-03-28 18:00]
|
தாய்லாந்தின் பாங்கொங்கில் பூகம்பத்தினால் இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்கள் அலறும் சத்தம் கேட்பதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாங்கொக்கின் பாங் சூமாவட்டத்தின் பொலிஸ் அதிகாரியொருவர் ஏஏவ்பிக்கு இதனை தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் தலைநகரம் முன்னர் ஒருபோதும் இவ்வாறான பூகம்பத்தை எதிர்கொண்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
அமெரிக்காவுடனான உறவுகள் முடிவிற்கு வந்துவிட்டது: பிரதமர் மார்க் கார்னி!
[Friday 2025-03-28 18:00]
|
அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம்முடிவிற்கு வந்துவிட்டது என கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். கனடாவுடனான உறவுகளை டிரம்ப் முழுமையாக மாற்றிவிட்டார் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் (Mark Carney) , எதிர்காலத்தில் எவ்வாறான வர்த்தக உடன்பாடுகள் ஏற்பட்டாலும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
மக்கள் விரக்தி: ஆஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி பொதுத் தேர்தல்!
[Friday 2025-03-28 18:00]
|
ஆஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) அறிவித்தார். பிரதமர் அல்பானீஸ் (Anthony Albanese) பொதுத் தேர்தலுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், அதிக பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் வாடகை போன்ற காரணங்களில் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
|
|
|
கனடா மற்றும் அமெரிக்கா இடையே விமான முன்பதிவுகள் கடும் வீழ்ச்சி!
[Friday 2025-03-28 06:00]
|
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு போருக்கு மத்தியில் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான புதிய தரவுகளின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான முன்பதிவுகள் 70 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
|
|
|
பக்க விளைவுளால் கடும் அவதி: மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சார்லஸ் மன்னர்!
[Friday 2025-03-28 06:00]
|
புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட சார்லஸ் மன்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. 76 வயதான சார்லஸ் மன்னர் வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் மருத்துவமனையில் இருந்து கிளாரன்ஸ் மாளிகைக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
|
|
|
ட்ரம்பின் கனவுத் திட்டத்திற்கு எதிர்பாராத மிரட்டல் விடுத்த விளாடிமிர் புடின்!
[Friday 2025-03-28 06:00]
|
கிரீன்லாந்தை கைப்பற்றும் முடிவில் டொனால்டு ட்ரம்ப் தீவிரமாக இருப்பார் என்றால் ஆர்க்டிக் பகுதியில் போர் வெடிக்கும் என்பது உறுதியென ரஷ்ய ஜனாதிபதி புடின் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ட்ரம்பின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை ரஷ்யா மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நகரமான மர்மன்ஸ்கில் நடந்த சர்வதேச ஆர்க்டிக் மன்றத்தில் உரையாற்றிய விளாடிமிர் புடின், கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்க தரப்பில் முன்னெடுக்கப்படும் தீவிரமான திட்டங்களைப் பற்றி நாம் பேசுகிறோம் என குறிப்பிட்டுள்ள புடின், அவை நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டவை என்றார்.
|
|
|
பாலியல் ஊக்க மருந்துகள் குறித்து கனடா சுகாதாரத்துறை எச்சரிக்கை!
[Thursday 2025-03-27 19:00]
|
கனடா முழுவதும் விற்கப்படும் பல அங்கீகரிக்கப்படாத பாலியல் மேம்பாட்டு பொருட்கள் தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என கனடா சுகாதாரத்துறை (Health Canada) எச்சரித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்டா, ஒன்டாரியோ, குய்பெக், மனிட்டோபா, நியூ பிரன்சுவிக் ஆகிய மாகாணங்களில் உள்ள கடைகளில் இப்பொருட்கள் விற்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|
|
|
அமெரிக்கா செல்லும் கனேடியர்கள் குறைந்ததால் சுற்றுலா துறைக்கு பாதிப்பு!
[Thursday 2025-03-27 19:00]
|
வர்த்தக மோதல்கள், மதிப்பிழந்த கனேடிய டாலர் மற்றும் அரசியல் விவாதங்கள் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு அமெரிக்கா செல்லும் கனேடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இரு நாடுகளின் சுற்றுலா துறைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அமெரிக்கா செல்ல மக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
சஸ்காடூனில் போதை மருந்து பயன்பாட்டு மரணங்கள் அதிகரிப்பு!
[Thursday 2025-03-27 19:00]
|
சஸ்காடூனில், பேன்டனில் போதைப்பொருள் அதிகளவு பயன்படுத்தியதனால் இதுவரை 9 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சஸ்காடூன் நகர மன்றம், சுகாதாரத்துறை, காவல் துறை, தீயணைப்பு சேவை, மற்றும் பராமெடிக் குழுக்கள் இந்த பேரழிவை கட்டுப்படுத்த ஒன்றுகூடி உரையாடினர்.
|
|
|
25 சதவீத புதிய வரியை அறிவித்தார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!
[Thursday 2025-03-27 19:00]
|
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி இந்த புதிய வரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் அமுலுக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
|