Untitled Document
April 6, 2025 [GMT]
 
விவகாரம் கலந்த ஒரு புதிய அனுபவத்தை தரவுள்ள "மாலை நேரத்து மயக்கம்" திரைப்படம்!
[Tuesday 2015-12-29 09:00]

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் செல்வராகவன். இவரது 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்கள் என்றென்றும் இளைஞர்களின் பேவரைட் படங்கள்.இவரது படங்களில் பெண்களுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருக்கும். அதேபோல் நிஜவாழ்க்கையிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்.அந்த வகையில் செல்வராகவன் தனது கதை, திரைக்கதையில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள படம் தான் "மாலை நேரத்து மயக்கம்". இப்படம் ஒரு இளம் தம்பதிகளின் நுணுக்கமான வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் தம்பதிக்களுக்கு இடையிலான உறவு தொடர்பான பல விஷயங்களை கையாண்டு உள்ளனர். இது பற்றி இயக்குனரும் சரி, செல்வராகவன் சரி புது முயற்சிகளை தோளில் தட்டி வரவேற்க வேண்டும், அதை வேறு நோக்கத்தில் பார்க்க கூடாது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்கள். எது என்னவோ மாலை நேரத்து மயக்கம் அடுத்த ஆண்டின் தொடக்கமே விவகாரம் கலந்த ஒரு புதிய அனுபவத்தை தரப்போவது உறுதி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புஷ்பா 2!
[Sunday 2025-04-06 16:00]

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.


10 நாட்களில் வீர தீர சூரன் படம் செய்த வசூல்!
[Sunday 2025-04-06 16:00]

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். பல பிரச்சனைகளை கடந்து திரையில் வெளிவந்த இப்படம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்தா படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த இயக்குநர் அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் வளர்ந்து வரும் இளம் நடிகையான துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


ஒரு பாடலுக்கு 3 கோடி சம்பளம் வாங்கும் பாடகர்!
[Sunday 2025-04-06 16:00]

இந்திய சினிமாவில் தலைசிறந்த பல பின்னணி பாடகர்கள் உள்ளனர். இதில் பல முன்னணி பாடகர்கள் பலரும் ஒரு பாடலை பாடுவதற்காக ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஆனால், ஒரு பாடலை பாடுவதற்காக ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் பாடகரை பற்றி உங்களுக்கு தெரியுமா.


24 மணி நேரத்தில் குட் பேட் அக்லீ ட்ரெய்லர் செய்த சாதனை!
[Sunday 2025-04-06 08:00]

அஜித்தின் குட் பேட் அக்லீ படம் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகைகளின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் கொண்டாடும் பல முக்கிய படங்களின் reference இதில் இருந்தது. அதனால் படம் அஜித் ரசிகர்களுக்கு தியேட்டர்களில் கொண்டாட்டமாக இருக்கும் என தெரிகிறது.


சீரியல் நடிகர் ஸ்ரீதர் திடீர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி!
[Sunday 2025-04-06 08:00]

சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர் தற்போது திடீரென மரணம் அடைந்திருப்பதாக வந்திருக்கும் செய்தி தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. விஜய் டிவியின் செல்லம்மா தொடரிலும் அவர் நடித்து இருந்தார். இப்படி ஏராளமான சின்னத்திரை தொடர்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வந்த ஸ்ரீதருக்கு வயது 62 ஆகும் நிலையில் இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.


பிரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ்!
[Saturday 2025-04-05 16:00]

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான எம்புரான் படம் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இப்படத்தில் சில காட்சிகள் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை சித்தரிப்பதாக சொல்லி வலதுசாரி அமைப்புகள், முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ச்சியாக பிரித்விராஜ் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக தமிழக விவசாயிகள் கூறினர்.


"17 வயதில் அந்த படம்" - நடிகை அமலாபால் உடைத்த ரகசியம்!
[Saturday 2025-04-05 16:00]

தமிழில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால். அப்பட வெற்றியால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார். தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குநர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார். அதற்கு பின், ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு இலை என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.


வசூல் வேட்டையாடும் எம்புரான்!
[Saturday 2025-04-05 16:00]

மலையாள திரையுலகில் புதிய வசூல் சாதனைகளை மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் படைத்து வருகிறது. பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சென்ற வாரம் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும், வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றுள்ளது.


நடிகர் பிரசாந்த்தின் அடுத்த படம்!
[Saturday 2025-04-05 06:00]

நடிகர் பிரசாந்த் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் இருந்து விலகியே இருந்த நிலையில் சமீபத்தில் GOAT மற்றும் அந்தகன் படம் ரிலீஸ் ஆகி அவருக்கு கம்பேக் கொடுத்தது. அடுத்து பிரசாந்த் ஹீரோவாக தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு எதுவும் பல மாதங்களாக வராமல் இருந்தது.


அஜித் மிரட்டி இருக்கும் குட் பேட் அக்லீ படத்தின் ட்ரெய்லர்! Top News
[Saturday 2025-04-05 06:00]

அஜித்தின் குட் பேட் அக்லீ பட ட்ரெய்லர் தற்போது பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. தீனா படத்தில் வரும் மாஸ் வசனத்தினை மீண்டும் அஜித் பேசி இருக்கிறார். ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லர் இதோ.


மகனை ரேஸ் செய்ய வைத்த அஜித்!
[Friday 2025-04-04 06:00]

நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த ரேஸில் அவர் மூன்றாம் இடம் பிடித்த நிலையில் அதனைத் தொடர்ந்து இத்தாலியின் முகல்லோ டிராக்கில் நடந்த போட்டியிலும் அஜித்தின் அணி மூன்றாம் இடம் பிடித்து சாதித்தது. இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார்.


ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீயா இப்படி! Top News
[Friday 2025-04-04 06:00]

நடிகர் ஜி.வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்து இருந்தவர். அவர் தற்போது ரெட் ஹாட் உடையில் மிக மிக கவர்ச்சியான போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இணையத்தில் வைரல் ஆகும் ஸ்டில்கள் இதோ...


ரேஸ் முடிந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்!
[Thursday 2025-04-03 19:00]

நடிகர் அஜித் நடிப்பில் அடுத்து ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் எல்லாம் ரிலீஸ் ஆக டிரைலர் வருமா என்ற எதிர்ப்பார்ப்பில் தான் ரசிகர்கள் உள்ளார்கள்.


புஷ்பா 2 மாதிரியான படத்தில் விஜய், அஜித்!
[Thursday 2025-04-03 19:00]

கடந்த ஆண்டு இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் புஷ்பா 2. உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழுவினரால் சொல்லப்படுகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த இப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். உலகளவில் மாஸ் வசூலை அள்ளிய இப்படத்தின் மூன்றாம் பாகம் 2027ம் ஆண்டு வெளிவரும் என கூறப்படுகிறது.


முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா நடிகை ஷிவானி?
[Thursday 2025-04-03 19:00]

சின்னத்திரையின் மூலம் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஷிவானி நாராயணன். சீரியலில் நடித்து வந்த இவர் தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்ளை கவணர்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். இதன்பின் வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.


பிக் பாஸ் ரவீனா சீரியல்களில் நடிக்க தடையா?
[Thursday 2025-04-03 06:00]

விஜய் டிவியின் மௌன ராகம் 2ம் பாகத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரவீனா தாஹா. அவர் ஜில்லா, ராட்சசன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். சீரியல்களில் பிரபலம் ஆன பிறகு ரவீனா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.


இறக்கும் முன் தன் வீட்டை பிரபல நடிகருக்கு எழுதி வைத்த ஹுசைனி!
[Thursday 2025-04-03 06:00]

நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார். பத்ரி படத்தில் விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக நடித்தது அவர் தான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது ஹுசைனி அளித்த பேட்டியில் 'நான் இன்னும் சில தினங்களில் இறந்துவிடுவேன், நடிகர் விஜய் என்னை வந்து பார்க்க வேண்டும், அவரிடம் பேச வேண்டும்' எனவும் கூறி இருந்தார்.


சமந்தாவுக்கு கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வரும் இளைஞர்!
[Wednesday 2025-04-02 18:00]

குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ள நிலையில் நடிகை சமந்தாவுக்கும் ரசிகர் ஒருவர் கோவில் கட்டி வழிபட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பல்வேறு திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர்.


மது விற்பனை மூலமும் பல கோடி சம்பாதிக்கும் ஷாருக்கான்!
[Wednesday 2025-04-02 18:00]

பாலிவுட் பாட்ஷாவாக படத்துக்கு படம் வெற்றிக்கண்டு பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான், பதான் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை நடத்தியது. அடுத்து ஷாருக்கான் என்ன படம் நடிக்கிறார், பட தகவல் வருமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொது தகவல் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


ஹிப் ஹாப் ஆதி அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா?
[Wednesday 2025-04-02 18:00]

தமிழ் சினிமாவில் இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்து இசையமைப்பாளராக மாறியவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன்பின், மீசையா முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார். ஹீரோவாகவும், இசையமைப்பாளராகவும் கலக்கிக்கொண்டிருந்த ஹிப் ஹாப் ஆதி சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி படிப்பில் கவனம் செலுத்தினார்.


சல்மான் கானின் சிக்கந்தர் பட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
[Wednesday 2025-04-02 06:00]

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹிந்தியில் தயாரான படம் சிக்கந்தர். சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் கடந்த மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.


அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம்!
[Wednesday 2025-04-02 06:00]

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இதில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் இசை ஜி.வி.பிரகாஷ் தான்.


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டிமாண்டி காலனி 3!
[Tuesday 2025-04-01 19:00]

கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் மிரள வைத்த திரைப்படம் டிமாண்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருள்நிதி நடித்திருந்தார். முதல் பாகத்தை தொடர்ந்து கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பின் டிமாண்டி காலனி 2 வெளிவந்தது. ஆம், கடந்த ஆண்டு டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளிவந்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.


ஏப்ரலில் மட்டும் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா?
[Tuesday 2025-04-01 19:00]

பொதுவாக சினிமாவை ரசிக்க ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எப்போது புது படங்கள் வெளிவரும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருப்பர். அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.


குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு தெரியுமா?
[Tuesday 2025-04-01 19:00]

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.


பெயரை மாற்றும் அல்லு அர்ஜுன்!
[Tuesday 2025-04-01 06:00]

அல்லு அர்ஜுன் என்றாலே தற்போது எல்லோருக்கும் புஷ்பா படம் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது புஷ்பா 2 படம் கடந்த வருடம் டிசம்பரில் ரிலீஸ் ஆகி வெறும் 6 நாட்களில் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.


தனக்கு ஹிட் படம் கொடுத்த இயக்குனருடனேயே மீண்டும் இணையும் கார்த்தி!
[Tuesday 2025-04-01 06:00]

அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்துவரும் நடிகர்களில் ஒருவர் தான் கார்த்தி. இவர் அண்மையில் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைவதாகவும் கைதி 2 தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். அப்படி கார்த்தி நடித்த படங்களின் 2ம் பாகத்தின் டீஸர் வெளியானது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் சர்தார்.


"விஜய்யை எதிர்த்து நிற்பேன்" - பவர் ஸ்டார் சீனிவாசன்!
[Monday 2025-03-31 18:00]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த இவர் அரசியலில் ஈடுபட்டார்.


குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
[Monday 2025-03-31 18:00]

விடாமுயற்சி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடித்து முடித்த திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க தெலுங்கில் புஷ்பா படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார். இதில் அஜித்துடன் த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் ராகுல் தேல், யோகி பாபு, டாம் சாக்கோ, அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


சூர்யா வீட்டில் குவிந்த நடிகைகள்!
[Monday 2025-03-31 18:00]

நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தங்கள் வீட்டில் சினிமா ஹீரோயின்களுக்கு தடபுடல் விருந்து வைத்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை கடந்த 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இன்றளவும் இருவரும் குறையாத காதலுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஜோடி பலருக்கு ரோல்மாடலாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து கோலிவுட் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்துள்ளனர்.

Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா