Untitled Document
September 18, 2024 [GMT]
 
அவசரமாக சீரியலை முடிக்கும் விஜய் டிவி!
[Wednesday 2024-09-11 06:00]

விஜய் டிவியில் அடுத்த மாதம் பிக் பாஸ் 8வது சீசன் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் செய்து வருகிறது. வழக்கம் போல போட்டியாளர்களாக விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பேர் வர இருக்கின்றனர். போட்டியாளர்களை உறுதி செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறதாம்.


அந்நியன் 2: நடிகர் விக்ரம் சொன்ன சுவாரஸ்யமான தகவல்!
[Tuesday 2024-09-10 18:00]

ஷங்கர் இயக்கத்தில் 2005 -ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி அடைந்த படம் அந்நியன். இந்த படத்தில் விக்ரம் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை சம்பாதித்தார். மேலும், இப்படத்தில் சதா, பிரகாஷ் ராஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் அந்நியன் படத்தை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டார்.


"நான் மாற நினைச்சாலும் மாற விட மாட்டாங்க" - கதறும் டிக் டாக் இலக்கியா!
[Tuesday 2024-09-10 18:00]

டிக் டாக் ஆப் மூலம் மிகவும் பிரபலமான இலக்கியா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இளம் ரசிகர்கள் அதிகளவு இவரை ஃபாலோ செய்து வருகிறார்கள். டிக் டாக் செயலியை தடை செய்ததை அடுத்து இன்ஸ்டாகிராம் Facebook பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறாக ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கக் கூடிய இவர் அண்மையில் கதறி அழுது இருக்க கூடிய விஷயம் வெளிவந்துள்ளது.


பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்!
[Tuesday 2024-09-10 18:00]

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்ததற்காக மிகவும் அறியப்பட்டவர்.


வேட்டையனுக்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கும் பிரம்மாண்ட படம்!
[Tuesday 2024-09-10 06:00]

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்த வேட்டையன் அக்டோபர் 10 ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டைத் தொடர்ந்து, புகழ்பெற்ற இயக்குனர் டி.ஜே.ஞானவேல் மீண்டும் ஜங்கிலி பிக்சர்ஸின் Dosa King-குடன் மற்றொரு சிறந்த சினிமா படத்தை வழங்க உள்ளார். Badhaai ho மற்றும் Raazi போன்ற படங்களை தயாரித்த ஜங்கிலி பிக்சர்ஸ் இந்த காவியக் கதையை பெரிய திரைக்கு கொண்டு வர ஞானவேல் உடன் இணைந்துள்ளது. டி.ஜே.ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் ஆகியோரால் எழுதப்பட்ட, இந்த பான்-இந்தியன் திரைப்படம் ஜீவஜோதி மற்றும் பி. ராஜகோபாலின் மோதலால் ஈர்க்கப்பட்டு, லட்சியம், அதிகாரம் மற்றும் நீதிக்கான போருக்கு களம் அமைக்கிறது. ஜீவஜோதி சாந்தகுமாரின் (Life Rights) உரிமையை ஜங்கிலி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.


பிக் பாஸ் 8ல் யாரும் எதிர்பார்காத ஒரு விஷயம்!
[Tuesday 2024-09-10 06:00]

பிக் பாஸ் ஷோவின் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங். குறிப்பாக அந்த ஷோ தொடங்கிவிட்டால் சின்னத்திரை ரசிகர்களுக்கு என்டர்டைன்மெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது. அடுத்த மாதம் பிக் பாஸ் 8 தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக இறங்கி இருக்கிறது.


விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா?
[Monday 2024-09-09 17:00]

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம். ஆனால், அவர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்தார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், சோகத்தையும் கொடுத்தது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்னதாக போட்டோ உடன் அறிவிப்பு வெளியானது.


"எஜமான் படத்தில் நான் நடித்தது ரஜினிக்கு பிடிக்கவில்லை" - வெளிப்படையாக பேசிய நெப்போலியன்!
[Monday 2024-09-09 17:00]

சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக்கொண்டார். பிறகு, தனது மகன் தனுஷிற்காக சினிமாவை விட்டு விலகி இருந்தார் நெப்போலியன்.


ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இதுதானா?
[Monday 2024-09-09 17:00]

தற்போது இணையம் எங்கும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் முதன்மையான இடத்தை ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து விஷயம் பிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது. கடந்த சில மாதங்களாகவே இருவர் இடையே பிரச்சனைகள் இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து பெற்று விடுவார்கள் என்ற செய்திகள் இணையம் முழுவதும் ஆக்கிரமித்து வந்ததோடு அது குறித்து ரசிகர்களும் பேசி வந்த சூழ்நிலைகள் இருந்தது.


பிக் பாஸ் அடுத்த சீசன் தொடங்கும் திகதி இதுதான்!
[Monday 2024-09-09 06:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரே வீட்டில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் தங்கி இருக்கும் பிரபலங்கள் இடையே நடக்கும் சண்டை, சச்சரவு, காதல், மோதல், நட்பு என பல விஷயங்கள் ஷோவை பரபரப்பாக கொண்டு செல்லும்.


பப்லு பேச்சால் நிகழ்ச்சியில் இருந்தே எழுந்து சென்ற நடிகர்!
[Monday 2024-09-09 06:00]

ஜோதிடம், ஜாதகம் மீது ஒருசிலருக்கு நம்பிக்கை இருக்கும், ஒரு சிலருக்கு நம்பிக்கை இருக்காது. அது பற்றி இரண்டு தரப்பினரையும் அமர வைத்து சமீபத்தில் ஜீ தமிழின் தமிழா தமிழா ஷோவில் பேச வைத்து இருக்கிறார்கள். ஜோதிடத்திற்கு ஆதரவாக நடிகர் அனு மோகன், காதல் சந்தியா உள்ளிட்ட பலர் பேசி இருக்கின்றனர்.


நடிகர் சங்கத்திற்கு ரூ. 1 கோடி கொடுத்த விஜய்!
[Sunday 2024-09-08 17:00]

சென்னையில் இன்று நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர் விஷால் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட சைக்கிளில் சென்ற வீடியோ கூட வைரலானது. நடிகர் சங்க கட்டட பணிகளை மீண்டும் தொடர அமைச்சர் உதயநிதி, தன் சொந்த நிதியிலிருந்து ரூ. 1 கோடி ரூபாயும், மேலும் 5 கோடி ரூபாய் பரிந்துரை செய்து ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அட்லீயை பாராட்டி தள்ளிய ஷாருக் கான்!
[Sunday 2024-09-08 17:00]

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் வெற்றி இயக்குனராக மாறி இருக்கிறார். ஹிந்தியில் அவரது முதல் படமே ஷாருக் கான் உடன் தான். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜவான் படம் நல்ல வரவேற்ப்பை பெற்று 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.


வெளிநாட்டில் வசூல் வேட்டையாடும் கோட்!
[Sunday 2024-09-08 17:00]

GOAT திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் கூட வசூல் பட்டையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாளே உலகளவில் ரூ. 126 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் முதல் நாள் ரூ. 30 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளிவந்தது.


ஹிப் ஹாப் தமிழாவின் 'கடைசி உலகப்போர்' முதல் விமர்சனம்!
[Sunday 2024-09-08 07:00]

ஹிப்ஹாப் தமிழா இயக்கி நடித்து இருக்கும் படம் 'கடைசி உலகப்போர்'. போர் அடிப்படையிலான கதையை பிரம்மாண்டமாக அவர் தயாரித்தும் இருக்கிறார். வரும் செப்டம்பர் 20ம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.


ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் கைது!
[Sunday 2024-09-08 07:00]

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வில்லனாக நடித்து இருந்தவர் விநாயகன். மலையாளத்தில் பிரபல நடிகரான அவர் ஏராளமான படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். ஜெயிலர் படத்தில் அவரது நடிப்பும், அவர் பேசிய விதமும் நல்ல வரவேற்பை பெற்றது.


இலங்கையில் பட்டையை கிளப்பும் கோட்!
[Saturday 2024-09-07 16:00]

பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் GOAT. தளபதி விஜய், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என பலரும் இப்படத்தில் நடிக்க வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.


விடாமுயற்சி ரிலீஸ் எப்போது?
[Saturday 2024-09-07 16:00]

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார். இவர் மட்டுமின்றி அர்ஜுன், ஆராவ், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் இன்னும் எடுக்கவேண்டியது உள்ளதாம். இதற்கான ஸ்பெயின் நாட்டிற்கு படக்குழு செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


கணவரின் தயாரிப்பில் நடிக்கும் நடிகை சிம்ரன்!
[Saturday 2024-09-07 16:00]

90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த மகான், கேப்டன், ராக்கெட்ரி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.


தமிழகத்தை தாண்டி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகாவில் கோட் பட முதல்நாள் வசூல்!
[Saturday 2024-09-07 07:00]

தமிழ் சினிமா ரசிகர்கள் வெறித்தனமாக ஒரு படத்தை கொண்டாடி வருகிறார்கள், வேறு என்ன படம் நம்ம விஜய் அவர்களின் கோட் படம் தான். ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க யுவன் இசையமைத்துள்ளார். விஜய்யை தொடர்ந்து மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன்,. அஜ்மல் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.


கோட் படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடிய நடிகை சினேகா!
[Saturday 2024-09-07 07:00]

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் GOAT. இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களான பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் தற்போது வரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


திருமணம் குறித்து தமன்னா அளித்த பதிலால் ஏற்பட்ட பரபரப்பு!
[Friday 2024-09-06 18:00]

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.


ஹீரோவாக அறிமுகமாகும் பாலகிருஷ்ணாவின் மகன்!
[Friday 2024-09-06 18:00]

தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. 1974ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி ஹீரோவானார். இவருடைய படங்களில் வரும் காட்சிகள் லாஜிக் மீறல்களாக இருந்தாலும் கூட அதனை ரசிகர்கள் கொண்டாட துவங்கிவிட்டனர். இவர் கையசைத்தால் ரயில் பின்னே செல்லும், காலால் எட்டி உதைத்தால் வேகமாக முன் நோக்கி வரும் கார் கூட பின் நோக்கி சென்று விடும்.


முதல் நாள் வசூலிலேயே செம மாஸ் காட்டியுள்ள "கோட்"!
[Friday 2024-09-06 18:00]

விஜய்யின் கோட் படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ரசிகர்கள் எதிர்ப்பார்த்த செப்டம்பர் 5 வர ரசிகர்கள் படத்தை கண்டு செம கொண்டாட்டத்தில் உள்ளனர். வெங்கட் பிரபு இயக்கம், யுவன் இசை, விஜய் நடிப்பு, த்ரிஷா மஞ்சள் புடவை நடனம் என படத்தில் இடம்பெற்ற அனைத்து விஷயங்களும் ஹைலைட்டாக இருக்க ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் உள்ளது.


நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் திடீர் திருப்பம்!
[Friday 2024-09-06 06:00]

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்குத் தொடர்ந்து நடந்து வருவதாகச் சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியிருந்தார். வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தினார் என நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நிவின் பாலி மீதான வழக்கு விசாரணை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.


முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்!
[Friday 2024-09-06 06:00]

விஜய் டிவியின் தொடர்கள் மற்றும் சன் டிவியின் தொடர்கள் இடையே தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகம் போட்டி இருந்து வருகிறது. இரண்டு சேனல்களும் போட்டிபோட்டுகொண்டு பழைய சீரியல்களை முடித்து புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களை கவர முயற்சித்து வருகின்றன.


நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள்!
[Thursday 2024-09-05 18:00]

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியான படம் GOAT. இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய் சினிமாவில் தனது ஆரம்ப காலத்தில் பெரும் கேலி, கிண்டலுக்கு உள்ளானார். அந்த வகையில், நடிகர் விஜய் நடித்து வெளிவந்த ஹிட் படங்கள் குறித்து கீழே காணலாம்.


இளம் இயக்குனரான எச்.வினோத் சொத்து மதிப்பு!
[Thursday 2024-09-05 18:00]

இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைக்கதை எழுத்தாளர் எச்.வினோத். பல வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் கோலி சோடா படத்தில் ஆர்.பார்த்தீபன் மற்றும் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மனோபாலா தயாரிப்பில் 2014- ல் சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.


தொகுப்பாளினியாக களமிறங்கும் நடிகை ஆயிஷா!
[Thursday 2024-09-05 18:00]

பிக்பாஸ் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி. 100 நாட்கள், காமெடி, கலகலப்பு, சர்ச்சை, காதல், நட்பு, எமோஷன் என எல்லாம் கலந்த கலவையாக இந்த ஷோ இருந்து வருகிறது. 7வது சீசன் முடிந்ததை தொடர்ந்து விரைவில் 8வது சீசன் தொடங்கவுள்ளது. இந்த 8வது சீசனில் ஒரு ஸ்பெஷல், அதாவது தொகுப்பாளர் தான். நடிகர் விஜய் சேதுபதி தான் பிக்பாஸ் 8வது சீசனை தொகுத்து வழங்கி இருக்கிறார், நேற்று தான் அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.


கோட் படம் எப்படி இருக்கு? வெளிவந்த விமர்சனம்!
[Thursday 2024-09-05 06:00]

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி. ஆனால், மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் GOAT படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகாலை 4 மணி காட்சியில் படம் பார்த்த ரசிகர்கள் முதல் பாதி படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.

NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா