Untitled Document
April 1, 2025 [GMT]
 
டிராகன் படத்தின் லாபம் மட்டுமே இத்தனை கோடியா?
[Tuesday 2025-03-04 20:00]

பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ. 37 கோடி பட்ஜெட்டில் உருவானது. இதனை இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ப்ரோமோஷன் பேட்டியில் கூறியிருந்தார். இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 110 கோடிக்கும் மேல் மேல் வசூல் செய்துள்ளது.


காதலரை பிரேக்கப் செய்த நடிகை தமன்னா!
[Tuesday 2025-03-04 20:00]

நடிகை தமன்னா கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தற்போது அவர் ஹீரோயினாக நடிப்பதை விட கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடினால் அது மிகப்பெரிய ஹிட் ஆகிவிடுகிறது. அதனால் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கே தமன்னாவுக்கு பல கோடிகள் சம்பளமாக தர தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.


"விஜய் மொதல்ல அதை செய்யட்டும்" - ஆவேசமாக பேசிய நடிகர் விஷால்!
[Tuesday 2025-03-04 06:00]

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி ஒரு வருடம் முடிந்துவிட்டது. அவர் மத்திய அரசை விமர்சிப்பது மட்டுமின்றி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவையும் தாக்கி பேசி வருகிறார். அதனால் திமுகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தொடர்ந்து விஜய்யை தாக்கி பேசி வருகிறார்கள்.


"சூர்யா 45" படப்பிடிப்பில் நடிகைக்கு காயம்!
[Tuesday 2025-03-04 06:00]

லப்பர் பந்து படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை ஸ்வாசிகா. அவருக்கு சமீபத்தில் சீரியல் நடிகர் பிரேம் ஜக்கோப் உடன் திருமணம் நடைபெற்றது. தற்போது ஸ்வாசிகா நடிகர் சூர்யாவின் 45வது படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.


நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய உத்தரவு!
[Monday 2025-03-03 18:00]

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஷன் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி உள்ளனர். இந்த நிறுவனத்தின் சார்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் கடன் பெற அணுகியுள்ளனர்.


அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்!
[Monday 2025-03-03 18:00]

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அமரன். கமல் ஹாசன் தயாரிப்பில் உருவான இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.


2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் சமந்தா?
[Monday 2025-03-03 18:00]

பல்லாவரத்து பெண் என தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி இப்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாகவும் பலருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக உயர்ந்துள்ளார் நடிகை சமந்தா.


மீண்டும் சீரியல் நடிக்கும் குஷ்பு!
[Monday 2025-03-03 06:00]

நடிகை குஷ்பு படங்கள், சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றி வந்த நிலையில் அதை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.


100 கோடியை கடந்த டிராகன்!
[Monday 2025-03-03 06:00]

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்த டிராகன் படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வசூலையும் குவித்து வந்தது.


நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் சாய் பல்லவி!
[Sunday 2025-03-02 16:00]

நடிகை சாய் பல்லவி கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியான நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு அமரன் படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் தண்டேல் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் பிரம்மண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம்தான் ராமாயணா. நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகிறார். மேலும் யாஷ் இப்படத்தில் ராவணனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.


சூப்பர்ஸ்டார் படத்தில் வில்லனாக நடிக்கவிருந்த நடிகர் ஜீவா?
[Sunday 2025-03-02 16:00]

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக இருக்கும் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அகத்தியா. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து பல பேட்டிகளில் கலந்துகொண்டு பேசினார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். அப்படி அவர் பகிர்ந்துகொண்ட விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தும் அதை நிராகரித்ததாக அவர் கூறியுள்ளார்.


விடாமுயற்சி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த டிராகன்!
[Sunday 2025-03-02 16:00]

சமீபத்தில் வெளிவந்து வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிற டிராகன் திரைப்படம் விடாமுயற்சி படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வந்த நிலையில், மக்கள் அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர்.


"திருமணமே செய்ய மாட்டேன்" - சன் டிவி சீரியல் நடிகை அதிர்ச்சி முடிவு!
[Sunday 2025-03-02 07:00]

பொதுவாக சின்னத்திரை நடிகைகள் பலரும் காதல் திருமணம் செய்வதை தான் நாம் அதிகம் பார்த்து வருகிறோம். அதுவும் சின்னத்திரை சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் ஜோடி நிஜத்திலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டதும் நடந்திருக்கிறது. ஆல்யா மானசா - சஞ்சீவ், மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா, சித்து - ஷ்ரேயா, ரேஷ்மா - மதன் பாண்டியன் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.


குட் பேட் அக்லீ டீஸர் 24 மணி நேரத்தில் பிரம்மாண்ட சாதனை!
[Sunday 2025-03-02 07:00]

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் டீஸர் நேற்று இரவு 7 மணிக்கு வெளியாகி இருந்தது. அஜித்தை மீண்டும் மாஸ் ஆன ரோலில் பார்க்க காத்திருந்த அஜித் ரசிகர்கள் டீசரை வெறித்தனமாக கொண்டாடினார்கள். மேலும் தியேட்டரிலும் திரையிடப்பட்ட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.


"தமிழ் சினிமாவில் இது மிகவும் கடினம்" - இயக்குநர் பா.இரஞ்சித்!
[Saturday 2025-03-01 16:00]

சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து அவரின் இயக்குநர் அந்தஸ்தை உயர்த்தியது.


இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம் பரிசு!
[Saturday 2025-03-01 16:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


சினிமாவை விட்டு அமிதாப் பச்சன் விலகுகிறாரா?
[Saturday 2025-03-01 16:00]

பாலிவுட் சினிமாவின் ஜாம்பவான் நடிகர் அமிதாப் பச்சன் தனது திரை வாழ்க்கையை 1969ல் துவங்கினார். இன்று வரை சினிமாவில் தொடர்ந்து 55 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழில் இவர் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். 82 வயதாகும் அமிதாப் பச்சன் தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.


ரூ.1000 கோடி ஹிட் கொடுத்த இயக்குனர் உடன் சிவகார்த்திகேயன் அடுத்த படம்!
[Saturday 2025-03-01 06:00]

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் படுபிஸியான ஹீரோவாக மாறி வருகிறார். அமரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் வாங்கிய சம்பளம் இவ்வளவு தான்: பாலாஜி முருகதாஸ்!
[Saturday 2025-03-01 06:00]

மக்கள் மிகவும் ஆர்வமாக பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். 4வது சீசனில் கலந்துகொண்டு ரன்னராக தேர்வான பாலாஜி முருகதாஸ் நடிப்பில் சமீபத்தில் ஃபயர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் வெளியாகி மக்களிடம் மாஸ் வரவேற்பு பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது.


அஜித் மிரட்டி இருக்கும் குட் பேட் அக்லீ படத்தின் டீஸர்! Top News
[Friday 2025-02-28 18:00]

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து இருக்கும் குட் பேட் அக்லீ படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது. மிரட்டலான டீஸர் இதோ...


பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது: நடிகர் மாதவன் ஆதங்கம்!
[Friday 2025-02-28 18:00]

இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது என்று நடிகர் மாதவன் ஆதங்கத்துடன் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் மாதவனைப் பங்குதாரராகக் கொண்டு வந்துள்ள 'பேரண்ட் Army (Parent Geenee )என்கிற செயலியின் அறிமுக விழா சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடந்தது. இந்தச் செயலி பெற்றோருக்கு அடங்காமல் தறி கெட்டு தாராள சுதந்திரங்களுடன் இயங்கும் குழந்தைகளின் சமூக ஊடகம் மற்றும் இணைய உலகின் ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் கண்காணிக்கிறது. உடனிருந்து பெற்றோர்கள் கவனிக்க முடியாத சூழலில் இந்தச் செயலி கண்காணித்து அவர்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் குழந்தைகளைக் கண்காணிக்கவும் நல்வழிப்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது.


வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது?
[Friday 2025-02-28 18:00]

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நிலையிலும், படப்பிடிப்பு துவங்க சற்று தாமதமாகிவிட்டது. விடுதலை 1 மற்றும் 2 திரைப்படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் இப்படத்தை இயக்கவிருந்தார். இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. ஆனால் சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வாடிவாசல் விரைவில் துவங்கவுள்ளது என அறிவித்துஇருந்தார்.


"திருமணம் செய்து கடுமையாக பாதிக்கப்பட்டேன்" - பிரியாமணி உருக்கம்!
[Friday 2025-02-28 06:00]

தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவர் தான் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் முதல் படம் கைகொடுக்கவில்லை. பின் பாலு மகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அவருக்கு புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் என்றால் அது அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தான்.


இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள்!
[Friday 2025-02-28 06:00]

புதிய திரைப்படங்கள் திரையரங்கில் எப்படி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறதோ, அதே போல் அப்படத்தை OTT தளத்தில் பார்த்து ரசிக்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.


சாதனை படைத்த துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம்!
[Thursday 2025-02-27 18:00]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர்.


முதல் முறையாக லோகேஷிடம் ஏற்பட்ட மாற்றம்!
[Thursday 2025-02-27 18:00]

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, ஷோபின் ஷபீர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா பாடகர் கே ஜே யேசுதாஸ்?
[Thursday 2025-02-27 18:00]

பின்னணி பாடகர் கே ஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இன்று காலை தகவல் வெளிவந்தது. உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை குறித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருதாகவும் தகவல் கூறப்பட்டது.


காதலில் விழுந்தாரா சிம்பு?
[Thursday 2025-02-27 06:00]

நடிகர் சிம்பு கெரியரில் மிக முக்கிய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கௌதம் மேனன் இயக்கிய அந்த படத்தில் சிம்பு திரிஷா ஆகியோர் நடித்து இருந்தனர். தற்போதும் எல்லோரும் கொண்டாடும் படமாக இருந்து இருந்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது சிம்பு மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷ் ஆகியோர் வெளியிட்டு இருக்கின்றனர்.


அஜித் ரசிகர்களுக்கு வந்த முக்கிய தகவல்!
[Thursday 2025-02-27 06:00]

அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் பிப்ரவரி 28ம் தேதி இந்த படத்தின் டீஸர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் அஜித் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அஜித் இந்த படத்தில் மூன்று விதமான ரோல்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் வில்லத்தனமான ரோல் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


விஜய் சேதுபதி அடுத்து யார் தயாரிப்பில் நடிக்க உள்ளார் தெரியுமா?
[Wednesday 2025-02-26 18:00]

மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் தீபா, சரவணன், ரோஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா