Untitled Document
September 18, 2024 [GMT]
 
வணங்கான் படத்திற்கு புது இசையமைப்பாளர்!
[Saturday 2024-08-17 07:00]

இயக்குனர் பாலாவின் அடுத்த படமான வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். ஆனால் முதல் செடியூல் ஷூட்டிங்கில் இருவருக்கும் சண்டை வந்ததால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சூர்யா அதன் பிறகும் படத்தில் இருந்தே விலகிக்கொண்டார்.


சேரன் வாக்குவாதம் செய்த பேருந்து: போலீசார் விதித்த பெரிய அபராதம்!
[Friday 2024-08-16 06:00]

இயக்குனர் சேரன் சமீபத்தில் தனது காரில் கடலூர் சென்றபோது அவர் பின்னால் வந்த தனியார் பேருந்து ஹார்ன் அடித்துக்கொண்டே வந்ததால் கடும்கோபம் ஆன சேரன் கீழே இறங்கி அந்த பேருந்து ஓட்டுநர் உடன் சண்டை போட்டிருக்கிறார். அந்த வீடியோ வெளியாகி சர்ச்சை ஆனது.


கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி, நேரம் அறிவிப்பு!
[Friday 2024-08-16 06:00]

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் GOAT படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வரும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் கூறி இருந்தார். அதன்படி தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


6 நாட்களில் அந்தகன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Thursday 2024-08-15 16:00]

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் பிரஷாந்த். இவர் நடிப்பில் 5 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் தான் அந்தகன். இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இதுவரை பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.


அந்த இயக்குனரை காதலிக்கிறாரா சமந்தா?
[Thursday 2024-08-15 16:00]

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், விவாகரத்து செய்ததும் அனைவரும் அறிந்ததே. அதின் பின்னர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நிலையில், இருவரும் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


முதல் நாள் தங்கலான் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?
[Thursday 2024-08-15 16:00]

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி நடிகர் விக்ரம் - இயக்குநர் பா. ரஞ்சித். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


தங்கலான் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Thursday 2024-08-15 08:00]

இன்று படு பிரம்மாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படங்களுக்குமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கும். கடைசியாக சார்பட்டா பரம்பரை படம் வெளியானது, அப்பட வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கியுள்ள படம் தங்கலான்.


என் அம்மாவுக்கு பிடிக்காத விஷயத்தை ஒருநாளும் செய்ய மாட்டேன்: ஜான்வி கபூர்!
[Thursday 2024-08-15 08:00]

தமிழ் சினிமா ரசிகர்களால் மயில் என கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீதேவி இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவரது படங்கள் மூலம் எப்போதும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார். நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018ம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தனது மகளுக்காக தேர்வு செய்ததே நடிகை ஸ்ரீதேவி தான்.


தங்கலான் பட புரொமோஷனுக்கு மாளவிகா மோகன்ன சிவப்பு நிற உடை மட்டுமே அணிந்தது ஏன்?
[Wednesday 2024-08-14 18:00]

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகியுள்ள ஒரு படம் தங்கலான். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அதாவது நாளை தங்கலான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் தங்கலான்!
[Wednesday 2024-08-14 18:00]

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி நடிகர் விக்ரம் - இயக்குநர் பா. ரஞ்சித். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழக உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதுவே இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டுகிறது. < /p>


நடிகர் சிவகார்திகேயன் சர்ச்சையாக பேசியது தனுஷை குத்திக்காட்டியதா?
[Wednesday 2024-08-14 18:00]

நடிகர் சிவகார்திகேயன் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஒரு நடிகர். அந்த வகையில் இவர் தற்போது ஒரு பேட்டியில் கூறிய விஷயம் வைரலாகி வருகின்றது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை தொடர்ந்து அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.


நாக சைதன்யா குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு!
[Wednesday 2024-08-14 06:00]

நடிகர் நாக சைதன்யா சமந்தாவை சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். அவர் நடிகை சோபிதா உடன் காதலில் இருக்கிறார் என்றும் அது தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அவர்கள் அந்த கிசுகிசு பற்றி வாய்திறக்காமல் இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா ஆகியோரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.


த்ரிஷாவுக்கு தினமும் சாப்பாடு அனுப்பும் பிரபல ஹீரோ!
[Wednesday 2024-08-14 06:00]

நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். மீண்டும் படு பிஸியாக படங்களில் நடித்து வரும் த்ரிஷா கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார்.


2.50 கோடி ரூபாயில் தளபதி விஜய் புதிதாக வாங்கிய பிரமாண்ட கார்!
[Tuesday 2024-08-13 18:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தளபதி 69 உருவாகவுள்ளது. அரசியலுக்கு செல்லவிருக்கும் காரணத்தினால் இதுவே அவருடைய கடைசி படம் என்கின்றனர். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளாராம். மேலும் சமந்தா மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது - பாராட்டிய ஷாருக்கான்!
[Tuesday 2024-08-13 18:00]

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வளம் வருபவர் ஷாருக்கான். மேலும் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பதான் மற்றும் ஜவான் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


தங்கலான் படத்தின் தமிழக உரிமை இத்தனை கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா?
[Tuesday 2024-08-13 18:00]

சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகர் Daniel Caltagirone என்பவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அவதார் 3 படத்தின் தலைப்பு அறிவிப்பு!
[Tuesday 2024-08-13 06:00]

ஹாலிவுட் பிரபல இயக்குனர் ஆன ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு மாபெரும் பொருட் செலவில் உருவான திரைப்படம் அவதார். வெளியான சமயத்திலேயே அதிகபட்ச வரவேற்பை அவதார் திரைப்படம் பெற்றது. தொடர்ந்து அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2.9 பில்லியன் யு எஸ் டாலர்களை வசூல் செய்தது. அந்த வசூலை இப்பொழுது வரை எந்த ஒரு திரைப்படத்தாலும் முறியடிக்க முடியவில்லை. இந்த படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டபோது இதை ஐந்து பாகங்களாக எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன்.


மகாராஜா இயக்குனரின் அடுத்த படைப்பு!
[Tuesday 2024-08-13 06:00]

விஜய் சேதுபதி நடித்து சில மாதங்கள் முன்பு முன்பு வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த படத்தை குரங்கு பொம்மை புகழ் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.


கடைசி நேரத்தில் தங்கலானுக்கு வந்த சிக்கல்!
[Monday 2024-08-12 18:00]

விக்ரம் - மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் படம் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15, 2024) ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. இந்த நேரத்தில் தங்கலான் ரிலீசுக்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது. அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் வாங்கிய கடனில் இன்னும் ₹10.35 கோடி ரூபாய் திரும்ப செலுத்தாதது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.


வெளியானது கங்குவா படத்தின் ட்ரைலர்! Top News
[Monday 2024-08-12 18:00]

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி இருக்கிறது. தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.


விஜய்யுடன் நட்பு ரீதியில் அரசியலில் ஈடுபடுவீர்களா? - கீர்த்தி சுரேஷ் பதில்!
[Monday 2024-08-12 18:00]

கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’. ஹோம்பாலே நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை சுமன் குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


மருமகளை பற்றி அப்படி பேசினாரா நாகார்ஜூனா? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
[Monday 2024-08-12 06:00]

சமந்தாவை விவாகரத்து செய்த நடிகர் நாக சைதன்யா சமீபத்தில் அவரது புது காதலி நடிகை சோபிதா துளிபாலா என்பவரை நிச்சயத்தார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்தம் முடிந்தபின் அவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.


இயக்குனர் அவதாரம் எடுக்கவிருந்த இளையராஜா!
[Monday 2024-08-12 06:00]

இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். இளையராஜா எவ்வளவு பெரிய புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு பல சர்ச்சைகளையும் சந்தித்தவர். இவர் இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் வரவிருக்கின்றது.


வயநாடு நிலச்சரிவுக்கு பாரிய தொகையை வழங்கிய நடிகர் தனுஷ்!
[Sunday 2024-08-11 18:00]

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷ் நிதியுதவி வழங்கியுளள்ளார். வயநாடு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த 30ஆம் திகதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாலும் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.


தொடங்கியது நடிகர் சங்க செயற்குழு கூட்டம்!
[Sunday 2024-08-11 18:00]

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடையே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இது குறித்து விவாதிப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று தற்போது கூட்டம் தொடங்கியது.


இந்தியன் 2 படத்தை நிராகரித்த முன்னணி நடிகர்!
[Sunday 2024-08-11 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் கமல் ஹாசன். இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானதை தொடர்ந்து இந்தியன்- 2 படத்தில் நடித்தார்.


இந்தியன் 2 பற்றி மோசமான விமர்சனங்கள்: ஷங்கர் எடுத்த முடிவு!
[Sunday 2024-08-11 07:00]

இந்தியன் 2 படம் கடந்த மாதம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்நிலையில் தற்போது ஓடிடியில் இந்தியன் 2 வெளியாகி இருக்கிறது. படத்தை ஓடிடியில் பார்த்து தற்போது நெட்டிசன்கள் மேலும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்தியன் 2 மீம்கள் தான் இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்.


பிக் பாஸ் அமீர் நடிக்கப்போகும் முதல் படம்!
[Sunday 2024-08-11 07:00]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அமீர். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அமீர் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதை இயக்குனர் முத்தையா அவர்களின் உதவியாளரான தினேஷ் படத்தை இயக்குகிறார்.


பாடகர் எஸ்.பி.பி-க்கு திருவுருவ சிலை திறப்பு!
[Saturday 2024-08-10 18:00]

இசையுலகில் தனது இனிமையான குரல் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் இருப்பவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் ஆறுமுறை தேசிய விருது, கணக்கில் அடங்கா பல்வேறு மாநில விருதுகள் என இசைத்துறையில் வரலாறு படைத்துள்ளார்.


பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு!
[Saturday 2024-08-10 18:00]

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், கொலை வழக்கில் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. முதலில் 11 பேரை கைது செய்தனர் போலீஸார். பின்பு சில நாட்கள் கழித்து போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிய ஓடியதாக கூறி திருவேங்கடம் என்பவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர் காவல் துறையினர்.

Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா