Untitled Document
May 17, 2025 [GMT]
 
விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புஷ்பா 2!
[Thursday 2025-03-27 06:00]

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. படம் மகத்தான வெற்றி பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து 2ம் பாகம் வெளியானது. புஷ்பா 2 படம் வெளியாகும் முன்பே முன்பதிவு, சாட்டிலைட் உட்பட எல்லா உரிமைகள் விற்பனையிலும் புதிய சாதனையை படைத்திருந்தது. ஏன் முன்பதிவில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வசூலை தொட்டதாக சொல்லப்பட்டது.


வசூல் வேட்டையை முன்பதிவிலேயே ஆரம்பித்த குட் பேட் அக்லி!
[Wednesday 2025-03-26 18:00]

வருகிற ஏப்ரல் 10ம் தேதி அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரவுள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நடித்துள்ளனர். இதில் அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது.


சுவாரஸ்யமான கதையில் நடிக்கும் சசிகுமார்!
[Wednesday 2025-03-26 18:00]

திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின் சினிமாவில் இயக்குநராக களமிறங்கினார். 'சுப்ரமணியபுரம்' என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததால் பிரபல நடிகராக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.


மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா இல்லையா?
[Wednesday 2025-03-26 18:00]

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் இப்படத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நேரடியாக OTT -யில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டது.


ரஜினிக்கு டூப் ஆக நடித்தவர்: மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா பற்றி தெரியுமா?
[Wednesday 2025-03-26 06:00]

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் இன்று மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கண்ணீரில் இருக்கும் பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்ல பிரபலம் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மரணம்!
[Wednesday 2025-03-26 06:00]

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து தற்போது குணச்சித்திர நடிகராக படங்களில் நடித்து வருபவர் பாரதிராஜா. அவரது மகன் மனோஜ் பாரதிராஜா சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.


பயங்கர கார் விபத்தில் சிக்கிய நடிகர் சோனு சூட் மனைவி, குடும்பம்!
[Tuesday 2025-03-25 19:00]

நடிகர் சோனு சூட் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன மதகஜராஜா படத்திலும் அவர் தான் வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் Fateh என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் சமீபத்தில் அறிமுகம் ஆகி இருந்தார்.


ரஜினியின் வசூலை பார்த்து பயந்த எம்ஜிஆர்!
[Tuesday 2025-03-25 19:00]

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று உச்ச நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படம் வெளிவரவுள்ளது. மேலும் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். பாக்ஸ் ஆபிஸ் கிங் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் இதுவரை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவருடைய வசூல் பலரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


புற்றுநோயுடன் போராடிய நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்!
[Tuesday 2025-03-25 19:00]

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அவஸ்தைப்பட்டு வந்த நடிகர் ஷிஹான் ஹூசைனி காலமானார். கே. பாலசந்தரின் இயக்கத்தில் கடந்த 1986ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்டவர் தான் நடிகர் ஷிஹான் ஹூசைனி. இவர், விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்திலும் நடித்து இருந்தார். அதன் பின்னர், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்.


குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது தொடக்கம்?
[Tuesday 2025-03-25 06:00]

அன்றாட பிஸியான வாழ்க்கையில் மக்கள் அனைவருமே ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். அது என்னது சிரிப்பது தான், மகிழ்ச்சி, சிரிப்பது எல்லாம் என்ன என்று கேட்கும் அளவிற்கு வேலை வேலை என ஓடுகிறார்கள். அப்படி பிஸியாக இருந்தவர்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு ஷோவாக இருந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி.


விஜய்யுடன் சந்திப்பு: டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க!
[Tuesday 2025-03-25 06:00]

நடிகர் விஜய்க்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சினிமா துறையில் பல முக்கிய பிரபலங்களும் கூட விஜய்யின் ரசிகர்களாக இருக்கின்றனர். அப்படி விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் தான் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. சமீபத்தில் அவர் இயக்கத்தில் ரிலீஸ் ஆன டிராகன் படம் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.


விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸ் எப்போது?
[Monday 2025-03-24 18:00]

எச்.வினோத், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு என மிகவும் தரமான படங்கள் கொடுத்து அசத்தியவர். நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நேரத்தில் தனது கதை மூலம் விஜய்யை அசத்தி அவரது 69வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.


ஒரே காரில் ஜோடியாக வந்து விவாகரத்து கேட்ட ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
[Monday 2025-03-24 18:00]

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் விவாகரத்தை அறிவித்தனர். அவர்கள் பிரிவதாக அறிவித்தாலும் concertகளில் ஒன்றாக பாடி வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அது பற்றி கேட்டபோது "நாங்கள் ரொம்ப professional. ஒருவருக்கொருவர் மீது மரியாதையும் இருக்கிறது. அந்த மரியாதைக்காக நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம்" என தெரிவித்தார் ஜி.வி. பிரகாஷ்.


நடிகை சோனா திடீர் தர்ணா!
[Monday 2025-03-24 18:00]

நடிகை சோனா தற்போது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான FEFSI அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார். தான் ஒரு படம் எடுத்ததாகவும், அதற்காக வைத்திருந்த மேனேஜர் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார் என பெப்சி அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தாராம் சோனா.


அட்லீ படத்திற்கு அல்லு அர்ஜுன் வாங்கும் மிகப்பெரிய சம்பளம்!
[Sunday 2025-03-23 07:00]

இயக்குனர் அட்லீ ஹிந்தியில் ஜவான் படத்திற்கு பிறகு சல்மான் கான் உடன் கூட்டணி சேர இருந்தார். அந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போக அவர் தற்போது அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அந்த படத்திற்காக அட்லீ தற்போது முதற்கட்ட பணிகளை செய்து வருகிறாராம். சன் பிக்சர்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.


கமல்ஹாசனின் தக் லைஃப் படம் எப்போது ரிலீஸ்?
[Sunday 2025-03-23 07:00]

தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் மீண்டும் மீண்டும் அமையுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பார்கள், அப்படி ஒரு விஷயம் தான் நடந்துள்ளது. நாயகன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் பல வருடங்களுக்கு பிறகு தன் லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். கமல்ஹாசனுடன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


டிராகன் இயக்குனரின் அடுத்த பட ஹீரோ!
[Saturday 2025-03-22 06:00]

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. படத்தின் ட்ரெய்லர் பார்க்கும்போது சிவகார்த்திகேயனின் டான் பட சாயல் இருப்பதாக பலரும் விமர்சித்தனர். ஆனால் படம் பார்த்த பிறகு தான் டிராகன் முற்றிலும் மாறுபட்ட படம் என்பது புரிந்தது. அதனால் பாசிட்டிவ் விமர்சனமும் அதிகம் வந்து படத்தின் வசூலுக்கு உதவியது.


சென்னை ஐபிஎல்-ல் அனிருத் நடத்தும் கச்சேரி!
[Saturday 2025-03-22 06:00]

விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த சீசனின் தொடக்க விழா கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிறது. சென்னையில் முதல் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடக்க இருக்கிறது.


"மன்னித்துவிடுங்கள்" - வருந்திய நடிகர் பிரகாஷ் ராஜ்!
[Friday 2025-03-21 18:00]

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்து மக்கள தவறாக வழி நடத்தியதற்காக நடிகர்களுக்கு எதிராக தொழிலதிபர் புனித்ரா சர்மா குற்றம் சாட்டினார். நடிகர்கள் கொடுத்த விளம்பரத்தை நம்பி மக்கள் பலர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இதில் இழந்துவிடுகிறார்கள், வேறு வழி தெரியாமல் தற்கொலை செய்யும் நிலைக்கும் சென்று விடுகிறார்கள்.


நடிகர் விஷால் தங்கையின் கணவர் மீது மோசடி புகார்!
[Friday 2025-03-21 18:00]

நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. அதன் பின் இவர் நடிப்பில் ரத்னம் திரைப்படம் வெளியானது ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடைசியாக விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இப்படம் ரிலீஸுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.


சூர்யாவே கேட்டு அஜித்தின் பட காட்சியை வைத்த படம் எது தெரியுமா?
[Friday 2025-03-21 18:00]

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கங்குவா படம் வெளியாகி இருந்தது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்ப்பார்த்தால் படு நஷ்டத்தை தான் சந்தித்தது, அதில் இருந்து படக்குழு வெளியே வர ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். தற்போது சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களின் இயக்கத்தில் அடுத்தடுத்து பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.


இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
[Thursday 2025-03-20 19:00]

தெலுங்கு சினிமாவில் நான் தசாப்தங்களாக நடித்து வருபவர் சிரஞ்சீவி. முன்னணி நடிகரான இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்திய நாட்டின் உயரிய விருதுகளாக பத்ம விபூஷன், பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்திய திரைப்படத் துறையில் 537 பாடல்களுக்கு 24 ஆயிரம் வித்தியாசமான நடன அசைவுகளை ஆடியிருப்பதாக இவருக்கு கின்னஸ் சாதனை கொடுக்கப்பட்டது. சினிமாவை தவிர்த்து அரசியலில் ஈடுபட்டு வந்தார்.


கணவருடன் இணைந்து புகைப்படங்கள் வெளியிடாதது ஏன்? - பாவனா விளக்கம்!
[Thursday 2025-03-20 06:00]

மலையாள சினிமா நடிகைகள் பலர் தமிழ் சினிமாவிற்கு வந்து ராஜ்ஜியம் செய்துள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை பாவனா. மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்தவர் வெயில், கூடல் நகர், தீபாவளி, ராமேஸ்வரம், ஆர்யா, கிழக்கு கடற்கரை சாலை என தொடர்ந்து நடித்து வந்தார்.


இளம் இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் விஷால்!
[Thursday 2025-03-20 06:00]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் விஷால். இவர் கடைசியாக மதகஜராஜா பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அதிக ஜுரத்துடன் கலந்துகொள்ள கையெல்லாம் நடுங்கியபடி காணப்பட்டார். அதனால் நிறைய விமர்சனம் வந்தது, பிறகு அதுகுறித்தும் விஷால் பேசியிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் மங்களூருவில் ஒரு கோவிலுக்கு சென்று வழிபட்ட வீடியோவும் வெளியாகி வைரலாகி இருந்தது.


நடிகை கீர்த்தி சுரேஷ் பாதுகாத்து வந்த ரகசியம்!
[Wednesday 2025-03-19 18:00]

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் அவரது முதல் படமான பேபி ஜான் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை.


வடிவேலுவை நடிக்க வேண்டாம் என்று கூறி விரட்டிவிட்ட பாரதிராஜா!
[Wednesday 2025-03-19 18:00]

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் பிரச்சனையில் சிரிக்கவே பலர் மறந்துவிட்டார்கள். நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைப்பது ஒரு கலை. அந்தக் கலையை சரியாக செய்து மக்களை சிரிக்க வைத்து வருபவர் தான் நடிகர் வடிவேலு. மற்றவர்களை கேலி செய்வது, டபுள் மீனிங் பேசி சிரிக்க வைப்பது, இதுபோன்று செய்யாமல் தன்னுடைய காமெடி காட்சிகளில் தன்னையே கலாய்த்துக்கொண்டு நடிப்பார். அசுர வளர்ச்சியை கண்ட வடிவேலு கைவசம் தற்போது கேங்கர்ஸ், மாரீசன் போன்ற படங்கள் உள்ளன.


சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிக்க காரணம்?
[Wednesday 2025-03-19 18:00]

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார். தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 - வது படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார்.


புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஆல்யா மானசா!
[Wednesday 2025-03-19 06:00]

ஆல்யா மானசா, தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம்வருபவர். நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் விஜய் டிவி பக்கம் வர சினிமாவை தாண்டி வாழ்க்கை துணையையும் தேர்வு செய்து செட்டில் ஆனார். ராஜா ராணி சீரியல் நடித்தவர் அதன் 2ம் பாகத்திலும் நடித்து வந்தார், அப்போது 2வது முறை கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து விலகினார்.


இதயம் சீரியலில் இருந்து விலகிய ஜனனி அசோக்!
[Wednesday 2025-03-19 06:00]

ஜனனி அசோக், ரிச்சர்ட் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த தொடர் இதயம். கடந்த ஆகஸ்ட் 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 650 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் தொடர் முடிவை எட்டவுள்ள நிலையில் தொடரில் இருந்து நடிகை ஜனனி அசோக்குமார் விலகுவதாக கூறியிருந்தார்.


மீண்டும் அந்த நடிகருடன் இணையும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்!
[Tuesday 2025-03-18 19:00]

மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து, சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து இருந்தார்.

Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா