Untitled Document
April 1, 2025 [GMT]
 
விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி!
[Tuesday 2025-01-28 06:00]

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக காமெடியான பேச்சால் எல்லோரையும் கவர்ந்து அதன் பிறகு படங்களில் காமெடியனாக நடித்து அங்கும் ரசிகர்களை சிரிக்கவைத்து வருபவர் இமான் அண்ணாச்சி. அவர் அதன் பிக் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது அவர் குடும்பத்துடன் பயணித்த கார் விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியாகி இருக்கிறது.


சரித்திர சாதனை படைத்த ஜீ தமிழின் கோட் டெலிவிஷன் ப்ரீமியர்!
[Monday 2025-01-27 18:00]

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் டபுள் ஆக்சன் திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது கோட் திரைப்படம். ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஒன்றாக வெளியாகி உலக அளவில் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றிய நிலையில் கோட் படத்தின் டெலிவிஷன் பிரீமியர் கடந்த ஜனவரி 12ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.


நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி இத்தனை சீரியல்களை இயக்கியுள்ளாரா?

[Monday 2025-01-27 18:00]

பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் உன்னை சரணடைந்தேன் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் சமுத்திரக்கனி. அப்படத்திற்கு பிறகு சசிகுமாரை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. அப்பட வெற்றியை தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில் படங்கள் இயக்கினார், ஆனால் சரியாக போகவில்லை.


படு மோசமான நஷ்டத்தை நோக்கி ராம் சரணின் கேம் சேஞ்சர் படம்!
[Monday 2025-01-27 18:00]

பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் இயக்குனர் ஷங்கர். இந்தியன் 2 படம் ரிலீஸ் முடித்த கையோடு தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கினார். கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில், யாஷிகா ஆனந்த், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல ஹீரோ!
[Monday 2025-01-27 06:00]

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் பிரபலமான ஒருவர். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பலரது கனவாக கூட இருக்கும். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு தன்னை தேடி வந்தபோது நிராகரித்து இருக்கிறார் ஒருவர். மலையாள நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் தான் அது.


பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குநர் மிஷ்கின்!
[Monday 2025-01-27 06:00]

கடந்த வாரம் பாட்டில் ராதா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஸ்கின் கெட்ட வார்த்தைகள் பேசியது, பெரும் சர்ச்சையாக மாறியது. பலரும் இதனை கண்டித்து பேசினார். இதனால் இன்று நடைபெற்ற பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் மிஸ்கின், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதுமட்டுமின்றி மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தையும் அங்கு அவர் பகிர்ந்துகொண்டார்.


வெளியானது விஜய் படத்தின் இரண்டாவது போஸ்டர்! Top News
[Sunday 2025-01-26 16:00]

இயக்குநர் அ.வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் படத்திற்கு பெயர் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக தற்காலிகமாக ‘தளபதி 69’ என அழைக்கப்பட்ட இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?
[Sunday 2025-01-26 16:00]

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. 22 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள இவர், இன்றும் மார்க்கெட்டில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக முன்னணியில் இருக்கிறார். அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளமாக கேட்கின்றார் என கூறப்படுகிறது.


மலையாள இயக்குனர் ஷஃபி மரணம்!
[Sunday 2025-01-26 16:00]

மலையாள திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஷஃபி. 2001ம் ஆண்டு ஒன் மேன் ஷோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மஜா படத்தை இயக்கியதும் இவர் தான்.


நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது!
[Sunday 2025-01-26 06:00]

நடிகர் அஜித் குமாருக்கு இன்று மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்துள்ளது. இந்தியா, தனது குடியரசு தினத்தின் முன்னோட்டமாக, 2025 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. இந்தியா நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய தனது சிறந்த குடிமக்களை கொண்டாடும் விதமாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 139 பேருக்கு இந்த மதிப்புமிக்க விருதுகளை அறிவித்துள்ளது.


இறப்பதற்கு முன் மனோபாலா சொன்ன அந்த வார்த்தை: சுந்தர் சி வருத்தம்!
[Sunday 2025-01-26 06:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. கடந்த ஆண்டு அரண்மனை 4 திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இவர், மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மிகவும் பிஸியாக வலம் வரும் சுந்தர் சி கைவசம் தற்போது சில படங்கள் உள்ளன. இந்நிலையில், முன்பு அரண்மனை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மனோபாலா குறித்து சுந்தர் சி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


"விஜய் சார் அப்போவே அப்படி" - டிடி சொன்ன விஷயம்!
[Saturday 2025-01-25 05:00]

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆனால் சமீப காலமாக அவர் விருது விழாக்கள், பட விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இன்ஸ்டாவில் அவருக்கு 2.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு நல்ல வரவேற்பும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.


மறைந்த இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரணியின் கடைசி ஆசை என்ன தெரியுமா?
[Saturday 2025-01-25 05:00]

கடந்த 1995ம் ஆண்டு வெளியான பிரபுதேவாவின் ராசையா படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற தனித்துவமான பாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பவதாரணி. அதன்பின் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரது இசையில் பாடி வந்தவர் இசையமைப்பாளராகவும் களமிறங்கினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இசையமைத்துள்ளார்.


தளபதி 69 அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
[Friday 2025-01-24 19:00]

விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்ற வருகிறது. தற்போது தயாரிப்பாளர் ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். படத்தின் 69 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்.


புஷ்பா 3ல் ஒரு பாடலுக்கு ஆடப்போகும் நடிகை!
[Friday 2025-01-24 19:00]

புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஆடி பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தார். படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அடுத்து புஷ்பா 2ல் ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். அதுவும் ஹிட் ஆகிவிட்டது. மேலும் படமும் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கிவிட்டது.


தனது உடல் எடையை குறைக்க பிக்பாஸ் புகழ் லாஸ்லியா எடுத்துக்கொண்ட டயட்!
[Friday 2025-01-24 19:00]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் லாஸ்லியா, இலங்கை தமிழரான இவர் அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்து வந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் பெறுகியது. அந்நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது, உடல் எடையை குறைப்பது என ஆளே மாறிவிட்டார்.


பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் ரயான் எடுத்த முடிவு!
[Friday 2025-01-24 06:00]

தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக ஓடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் 8. கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பொங்கல் ஸ்பெஷலாக முடிவுக்கு வந்துவிட்டது. இந்த 8வது சீசனில் முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வாகிவிட்டார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கான சம்பளம், பரிசுத்தொகை என வென்றுள்ளார்.


மணிரத்னம் அடுத்து இயக்கப்போகும் நடிகர் யார் தெரியுமா?
[Friday 2025-01-24 06:00]

பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி சாதனை படைத்திருந்தார் மணிரத்னம். கல்கி எழுதிய இந்த நாவலை படமாக இயக்க பலரும் முயற்சி செய்ய கடைசியில் மணிரத்னத்தினால் தான் அது முடிந்தது. அந்த பிரம்மாண்ட படத்திற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து தக் லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.


ராம் கோபால் வர்மாவுக்கு சிறை தண்டனை!
[Thursday 2025-01-23 19:00]

2018ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா மீது மகேஷ் சந்திர மிஷ்ரா என்பவர் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரூ. 5000 பிணைத் தொகை செலுத்தி 2022ல் வெளிவந்தார். இந்த வழக்கு 7 வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. கடைசியாக கடந்த 21ஆம் தேதி நடந்த விசாரணையில் ராம் கோபால் வர்மா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.


கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்!
[Thursday 2025-01-23 19:00]

இயக்குநர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இயக்குநராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் பிசியாகிவிட்டார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துவங்கிய இவருடைய நடிப்பு பயணம் தற்போது தளபதி 69 படம் வரை வந்துள்ளது. பல படங்களில் நடித்து வந்தாலும், தன்னை ஒரு நடிகராக என்றுமே கருதவில்லை என அவரே கூறியுள்ளார்.


பறிபோகும் சைஃப் அலிகானின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள்!
[Thursday 2025-01-23 19:00]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் தான் சைஃப் அலிகான். இவர் நடிகர் என்பதை தாண்டி பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், போபாலை சேர்ந்த நவாப் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான். அதாவது, சைஃப் அலிகானின் தந்தை. இந்த பட்டோடி அரச குடும்பத்துக்கு சொந்தமாக போபாலில் அரண்மனை மற்றும் 15 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.


'வீர தீர சூரன் இரண்டாம் பாகம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
[Thursday 2025-01-23 06:00]

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


"மிஷ்கின் போலி அறிவாளி" - மேடையில் விளாசிய நடிகர் அருள்தாஸ்!
[Thursday 2025-01-23 06:00]

இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் ஒரு பட விழாவில் மேடையில் பேசும்போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேடை நாகரிகம் இல்லாமல் பேசிய அவரை பிரபலங்கள் பலரும் கண்டித்து இருந்தனர். தற்போது பிரபல நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான அருள்தாஸ் மிஷ்கின் பற்றி கோபமாக பேசி இருக்கிறார்.


நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் டைட்டில் இதுதானா?
[Wednesday 2025-01-22 18:00]

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகப்போகும் திரைப்படம் தளபதி 69. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர். அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் தனது கடைசி படமாக 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


பிக் பாஸ் அர்ச்சனா - அருண் திருமணம்?
[Wednesday 2025-01-22 18:00]

கடந்த பிக் பாஸ் 7ம் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் அர்ச்சனா. அவர் பிக் பாஸ் செல்லும் முன் சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தார். ஆனால் பிக் பாஸ் சென்று வந்த பிறகு அவர் படங்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத்தை தான் அர்ச்சனா காதலித்து வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் 8ல் அருண் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்த நிலையில் அவர்கள் காதலை உலகத்திற்கே அறிவித்துவிட்டனர்.


கேஜிஎப் யாஷ், நயன்தாரா நடிக்கும் படத்திற்கு வந்த சிக்கல்!
[Wednesday 2025-01-22 18:00]

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்த யாஷ், கேஜிஎப் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். இதற்குமுன் ஏராளாமான படங்களில் இவர் நடித்திருந்தாலும், கேஜிஎப் படம்தான் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


உயிருக்கு போராடிய சைப் அலி கான்: ஆட்டோ டிரைவருக்கு தரப்பட்ட வெகுமதி!
[Wednesday 2025-01-22 06:00]

ஹிந்தி நடிகர் சைப் அலி கான் கடந்த வாரம் அவரது வீட்டில் புகுந்த திருடனால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரே ஆட்டோவில் ஏறி தனது குழந்தை உடன் ஹாஸ்பிடலுக்கு சென்று அட்மிட் ஆனார். அவருக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்கள் அவரது முத்துத்தண்டு அருகில் குத்தப்பட்ட கத்தியின் உடைந்த பாகத்தை எடுத்தனர். தற்போது சைப் அலி கான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்.


பிக் பாஸ் முடிந்ததும் புது ஷோவை தொடங்கிய விஜய் டிவி!
[Wednesday 2025-01-22 06:00]

விஜய் டிவியில் கடந்த வாரம் தான் பிக் பாஸ் 8ம் சீசன் நிறைவு பெற்றது. அடுத்து புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை களமிறக்க சேனல் தற்போது திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புது ஷோவை கொண்டு வந்திருக்கிறது. உலகம் முழுக்கவும் பிரபலமான Shark Tank நிகழ்ச்சி ஏற்கனவே ஹிந்தியில் நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்ற ஒரு நிகழ்ச்சியை தான் தற்போது விஜய் டிவி தொடங்கி இருக்கிறது.


மதகஜராஜா வெற்றிக்கு பின் சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள்!
[Tuesday 2025-01-21 19:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. கடந்த ஆண்டு அரண்மனை 4 திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இவர், மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மிகவும் பிஸியாக வலம் வரும் சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.


வணங்கான், காதலிக்க நேரமில்லை படங்களின் வசூல் விவரம்!
[Tuesday 2025-01-21 19:00]

பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த திரைப்படங்கள் வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை. இதில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில் 11 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா