Untitled Document
April 17, 2025 [GMT]
 
நடிகை ஜனனி ஐயர் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது!
[Wednesday 2025-04-16 18:00]

நடிகை ஜனனி ஐயர் தெகிடி படத்தின் மூலமாக பாப்புலர் ஆனவர். அதன் பிறகு அவர் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். மேலும் பிக் பாஸ் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் மூன்றாம் இடம் பிடித்தார்.


பிரபல நடிகர் படத்தில் பாடிய சிம்பு!
[Wednesday 2025-04-16 18:00]

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார். தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. நடிப்பை தாண்டி சில படங்களில் பாடியும் வருகிறார். சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த டிராகன் படத்திலும் ஒரு பாடல் பாடியது குறிப்பிடத்தக்கது.


இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது!
[Wednesday 2025-04-16 18:00]

இந்த பெயரை கேட்டதுமே முதலில் நமக்கு நியாபகம் வருவது இவர் விஜய் டிவி Product என்பது தான். ஒரு தொகுப்பாளினியாக தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி வந்தவரிடம் இப்போது என்ன நிகழ்ச்சி கொடுத்தாலும் அசால்டாக செய்து முடிக்கும் திறமை கொண்டுள்ளார்.


குட் பேட் அக்லீயில் அஜித் மகனாக நடிக்க மறுத்த இளம் நடிகர்!
[Wednesday 2025-04-16 06:00]

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. இந்த படத்தில் நடித்த பல நடிகர்களுக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக பிரியா வாரியர் அதிகம் பேசப்படும் நடிகையாக மீண்டும் மாறி இருக்கிறார்.


இந்த வேலைக்கு செல்ல தான் விரும்பினாராம் அனிகா சுரேந்திரன்!
[Wednesday 2025-04-16 06:00]

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அவர் மகளாக நடித்து இருக்கிறார். தற்போது அவர் வளர்ந்துவிட்ட நிலையில் ஹீரோயினாகவும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வந்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய ரோலில் நடத்து இருந்தார்.


பூஜையுடன் தொடங்கிய நடிகர் யோகி பாபுவின் அடுத்த படம்!
[Tuesday 2025-04-15 19:00]

நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக 'போட்' படத்தில் நடித்துள்ளார். இவர் கைவசம் தற்போது Medical Miracle, ராஜா சாப் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.


சிம்பு படத்தில் இணைந்த மக்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்!
[Tuesday 2025-04-15 19:00]

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார். தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 - வது படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார்.


சூரியுடன் மோதும் சந்தானம்!
[Tuesday 2025-04-15 19:00]

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்ததோ, அது போன்று விடுதலை திரைப்படம் அவரை ஹீரோவாக மாற்றியுள்ளது.


AI பற்றி காட்டமாக பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்!
[Tuesday 2025-04-15 06:00]

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தற்போது AI பற்றி அளித்த பேட்டி வைரல் ஆகி இருக்கிறது.


பாரட்டுக்களைக் குவித்த “அம் ஆ” மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ரிலீஸ் தேதி!
[Tuesday 2025-04-15 06:00]

Kaapi Productions தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், மனதை இலகுவாக்கும், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் “அம் ஆ”. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதிபதி தனது சமூக வலைத்த்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் படம் வெற்றி பெற , படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


ஹிந்தி படத்தில் டாப் நடிகருடன் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்!
[Monday 2025-04-14 18:00]

நடிகை கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் அவரது நடிப்பிற்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதையெல்லாம் அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் கடின உழைப்பு போட்டு படங்கள் நடித்து வந்தார். அப்படி அவர் தொடர்ந்து நடித்து படங்கள் நடித்து ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தது மகாநதி என்ற படத்தின் மூலம் தான்.


நடிகர் சல்மான் கானுக்கு வந்த புது கொலை மிரட்டல்!
[Monday 2025-04-14 18:00]

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கடந்த வருடத்தில் இருந்தே அவருக்கு அரசு Y+ பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர் வீட்டின் மீது கடந்த வருடம் ஏப்ரலில் சில மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். லாரன்ஸ் பிஷ்நோய் என்ற கேங்ஸ்டர் தான் தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது. அதனால் அவருக்கு 11 காவலர்கள் மற்றும் கமாண்டோக்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.


குட் பேட் அக்லி பட வெற்றிக் குறித்து அஜித் சொன்ன ஒரே விஷயம்!
[Monday 2025-04-14 18:00]

தமிழ் சினிமாவில் செம மாஸாக கெத்தாக ரசிகர்களின் அலைமோதும் கூட்டத்திற்கு நடுவில் ஒளிபரப்பாகி வருகிறது குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் தயாராக இதில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் என பலர் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் சிம்ரன், பிரியா வாரியர் என ஸ்பெஷலாக பார்க்க வேண்டிய விஷயங்கள் இதில் உள்ளது.


ஜனநாயகன் லுக்கில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்!
[Monday 2025-04-14 06:00]

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துவிட்டார். அதனால் அவர் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் அவரது கடைசி படம் என தெரிவித்து இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்த படம் 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.


நகைக்கடை திறப்பு விழாவுக்கு அப்படி ஒரு உடையில் வந்த ஸ்ருஷ்டி டாங்கே!
[Monday 2025-04-14 06:00]

நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. படங்களில் நடித்து புகழ்பெற்றதை விட அவர் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாப்புலர் ஆனது தான் அதிகம். ஸ்ருஷ்டி படங்களில் எப்போதும் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார்.


3 படங்களை பார்க்க ஆவலுடன் இருக்கும் இயக்குநர் ராஜமவுலி!
[Sunday 2025-04-13 18:00]

தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என அடுத்தடுத்து தான் இயக்கும் படங்களில் பிரம்மாண்டத்தை காட்டி வெற்றி இயக்குநராக வலம் வருகிறார்.


அடுத்து பயோபிக் படத்தை இயக்கப்போகும் பா.இரஞ்சித்!
[Sunday 2025-04-13 18:00]

சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார், அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து இவரின் இயக்குநர் அந்தஸ்தை உயர்த்தியது.


குடும்பஸ்தன் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர்!
[Sunday 2025-04-13 18:00]

மணிகண்டன் நடிப்பில் தரமான கதைக்களத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குடும்பஸ்தன். இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் இயக்கத்திருந்தார். இப்படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யதார்த்தமான கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தின் கதையை முதலில் கேட்டது நடிகர் அசோக் செல்வன் தான், ஆனால் அவருக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தினால், இப்படத்தில் மணிகண்டனை நடிக்க சிபாரிசு செய்தார்.


கணவர் இறந்த பிறகும் மாங்கல்யம் அணிந்து பூ, பொட்டு வைத்திருப்பது ஏன்?
[Sunday 2025-04-13 06:00]

பாப் பாடகியாக அறிமுகமாகி இந்திய சினிமாவில் தன் கர்ஜிக்கும் குரல் மூலம் தனி ராஜ்ஜியம் உருவாக்கியவர் பாடகி உஷா உதூப். ஹிந்தி சினிமாவில் பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கி பின் தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். சமீபத்தில் பத்மபூஷன் விருது பெற்ற உஷா உதூப் இந்திய சினிமாவின் பாப் குயின் என கொண்டாடப்படுகிறார்.


தனது மகனுடன் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால்!
[Sunday 2025-04-13 06:00]

ஹிந்தி சினிமாவில் க்யூன் ஹோ கயானா எனும் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கில் 2007ம் ஆண்டு வெளியான லக்ஷ்மி கல்யாணம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமா பக்கம் பரத் நடிக்க பழநி படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் அடுத்தடுத்து விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், அஜித்திடன் விவேகம், கார்த்தி, சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்களின் பேராதரவை பெற்று வந்தார்.


72 வயதில் 210 கோடி ரூபாய் சம்பளம் சம்பளம் வாங்கிய தென்னிந்திய நடிகர்!
[Saturday 2025-04-12 19:00]
>[? ஷாரூக்கான், சல்மான் கான், பிரபாஸ் ஆகியோரைவிட அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்னும் பெயரை சம்பாதித்துள்ளார் 72 வயது தென்னிந்திய நடிகர் ஒருவர். அப்படி ஒரு படத்துக்கு அதிக சம்பளம் வாங்கிய அந்த நடிகர், ரஜினிகாந்த்தான்...


ஜன நாயகன் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமை யாருக்கு தெரியுமா?
[Saturday 2025-04-12 19:00]

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


வெளிநாட்டில் வசூல் சாதனை படைக்கும் குட் பேட் அக்லி!
[Saturday 2025-04-12 19:00]

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது. அஜித்தின் திரை வாழ்க்கையில், முதல் நாள் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படமாக குட் பேட் அக்லி தற்போது உள்ளது.


"ஜெயிக்கவே கூடாதுனு விளையாடுறீங்களா" - தோனியை தாக்கி பதிவிட்ட நடிகர் விஷ்ணு விஷால்!
[Saturday 2025-04-12 06:00]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்று இருக்கிறது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு இது வரலாற்று தோல்வி என்பதால் கடும்மையாக அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தோனியை தான் அதிகம் பேர் தாக்கி பேசி வருகின்றனர். கடைசியாக களமிறங்கி சில ஓவர்கள் மட்டுமே அவர் ஆட வருவதாகவும் பலரும் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


டாப் 5 தமிழ்நாடு வசூல் படங்கள்!
[Saturday 2025-04-12 06:00]

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 30.9 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது குட் பேட் அக்லீ படம். இதை தயாரிப்பு நிறுவனமே தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. அஜித் கெரியரில் இது தான் மிகவும் அதிகமான வசூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் விஜய்யின் லியோ, பீஸ்ட் ஆகிய படங்கள் தான் முன்னணியில் இருக்கின்றன.


"கோட்" வசூலை முந்திய அஜித்!
[Friday 2025-04-11 18:00]

குட் பேட் அக்லீ படம் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்று அஜித் கெரியரிலேயே அதிகபட்ச வசூலை முதல் நாளில் பெற்று இருக்கிறது. அஜித் ரசிகர்கள் படத்தை வெறித்தனமாக கொண்டாடி வரும் நிலையில், தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது படம்.


சூர்யா 45 படத்தில் இணைந்த ஹிட் பட நாயகி!
[Friday 2025-04-11 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார்.


குட் பேட் அக்லீக்கு இலங்கையில் குவியும் வசூல்!
[Friday 2025-04-11 18:00]

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் முதல் நாளில் உலகம் முழுக்க சுமார் 65 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருப்பதாககூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி தமிழர்கள் அதிகம் இருக்கும் இலங்கையிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது.


குட் பேட் அக்லீ முதல் நாளில் பிரம்மாண்ட வசூல்!
[Friday 2025-04-11 06:00]

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அஜித்தின் குட் பேட் அக்லீ படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்தை எப்படி எல்லாம் திரையில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்களோ அதை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் பலவிதமான கெட்டப்புகளில் அஜித் திரையில் தோன்றுவது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.


சிறகடிக்க ஆசை ஸ்ருதி நாராயணன் அந்தரங்க வீடியோ பற்றி பேசிய நடிகை ஷகீலா!
[Friday 2025-04-11 06:00]

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற ஒரு சின்ன ரோலில் நடந்து வருபவர் ஸ்ருதி நாராயணன். சில வாரங்களுக்கு முன்பு ஸ்ருதி நாராயணன் ஆடை இல்லாமல் வீடியோ காலில் ஒரு ஆண் உடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அது தான் இல்லை AI வீடியோ என இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் விளக்கம் கொடுத்தார் நடிகை ஸ்ருதி நாராயணன்.

 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா