Untitled Document
May 4, 2025 [GMT]
 
சூர்யா படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய முன்னணி நிறுவனம்!
[Saturday 2025-05-03 16:00]

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் இந்த எதிர்மறையான விமர்சனங்களால் கூட வசூலை யாராலும் அணைப்போட்டு தடுக்கவில்லை.

சிம்புவின் STR49 திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!
[Sunday 2025-05-04 07:00]

Dawn Pictures சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில், பார்க்கிங் படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாக நடைபெற்றது. விண்டேஜ் சிலம்பரசனை திரையில் மீண்டும் காணும் வகையில், கல்லூரி பின்னணியில் கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் சிலம்பரசன் TR கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.


ஜனநாயகன் படப்பிடிப்பில் விபத்து: ஒருவருக்கு காயம்!
[Sunday 2025-05-04 07:00]

நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் இதன் ஷூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது. அங்கு செல்வதற்காக விஜய் சமீபத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவரை பார்ப்பதற்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது. அட்வைசை மீறி அவர்கள் விஜய் சென்ற வண்டியை பின்தொடர்ந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.


கூலி படத்தின் முதல் விமர்சனம்!
[Saturday 2025-05-03 16:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷபீர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அனிருத் இசையமைத்து வருகிறார்.


மறைந்த தனது தந்தை குறித்து பேசிய நடிகர் அஜித்!
[Saturday 2025-05-03 16:00]

இன்றைய தேதியில் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். உச்ச நட்சத்திரமாக வலம் வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.


ஜெயிலர் 2 தான் ரஜினியின் கடைசி படமா?
[Saturday 2025-05-03 06:00]

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், ஏன் இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய பிரபலமாக உள்ளார். கடைசியாக ரஜினி நடிப்பில் வேட்டையன் என்ற படம் வெளியானது, ஆனால் அது பாக்ஸ் ஆபிஸிலும் சரி, விமர்சனத்திலும் சரி நல்ல வரவேற்பை பெறவில்லை.


என்னது கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் சிம்பு இணைகிறாரா?
[Saturday 2025-05-03 06:00]

ஐபிஎல் போட்டி படு வெற்றிகரமாக விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி, STR நடித்த பத்து தல படத்தில் நீ சிங்கம் தான் பாடலை இப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார்.


சீரியல் நடிகை அமுதா தற்கொலை முயற்சி!
[Friday 2025-05-02 06:00]

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை என்பது தொடர்கதையான ஒன்றாக இருக்கிறது. சாய் பிரஷாந்த் தொடங்கி VJ சித்ரா வரை இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு எடுத்த நடிகர்கள் லிஸ்ட் மிக பெரிதாக இருக்கிறது. தற்போது சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்த சீரியல் நடிகை அமுதா என்பவர் பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு இருக்கிறார். அவரை அருகில் இருப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர்.


நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை: லோகேஷ் கனகராஜ் பேட்டி!
[Friday 2025-05-02 06:00]

லோகேஷ் கனகராஜ், இவரைப் பற்றி எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. காரணம் இவரது படைப்புகளே இவரை பெரிய அளவில் பிரபலம் அடைய வைத்துவிட்டது. தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார், இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் செம பிஸியாக நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் லோகேஷ் சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுப்பதாக கூறியிருந்தார்.


ரெட்ரோ முதல் நாள் வசூல் கணிப்பு!
[Thursday 2025-05-01 17:00]

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இணைந்துள்ளதால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்!
[Thursday 2025-05-01 17:00]

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


ஜெயிலர் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்!
[Thursday 2025-05-01 17:00]

நெல்ஸன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். மாஸ் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் உலகளவில் மாபெரும் வசூலை குவித்து, தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது. ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 - ம் பாகம் உருவாகி வருகிறது.


திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா!
[Thursday 2025-05-01 08:00]

தொகுப்பாளினி பிரியங்கா, யார் என்ன கலாய்த்தாலும் ஜாலியாக எடுத்துக்கொள்வது, வித்தியாசமான சிரிப்பு, ரைமிங், டைமிங் பஞ்ச் என ஒரு மாதிரி நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்லக் கூடியவர். அதிலும் சூப்பர் சிங்கர் என்றாலே மாகாபா-பிரியங்கா தான் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. இந்நிகழ்ச்சியில் பாடல்கள் பாடுபவர்களை தாண்டி இவர்கள் அட்ராசிட்டி அதிகமாக இருக்கும்.


ஒரு வாரம் சிறையில் இருந்த பிக்பாஸ் தர்ஷன்!
[Thursday 2025-05-01 08:00]

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடல் என்ற அடையாளத்துடன் வந்த இவருக்கு பிக் பாஸ் பெரிய புகழை கொடுத்தது. தற்போது சென்னையில் தங்கி அவர் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு தர்ஷனுக்கு அவர் வீட்டின் எதிரில் காரை நிறுத்திய நீதிபதியின் மகன் ஒருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.


வெளிவந்தது வாடிவாசல் பட அப்டேட்!
[Tuesday 2025-04-29 17:00]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நிலையிலும், படப்பிடிப்பு துவங்க சற்று தாமதமாகி கொண்டு இருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் முதல் முறையாக உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.


சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகர்!
[Tuesday 2025-04-29 17:00]

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் 3 வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ரோஹத். இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் ஏப்ரல் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அசாமில் உள்ள கர்பாங்கா காட்டில் ஒரு நீர்வீழ்ச்சி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.


"இதை சொன்னால் என்னை கொன்று விடுவார்கள்" - பிரபல நடிகர் குறித்து நடிகை சமந்தா!
[Tuesday 2025-04-29 17:00]

நடிகை சமந்தா ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவர். கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார். பின் தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த சமந்தா, இன்று ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக பார்க்கப்படுகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியிருந்தார்.


டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் விமர்சனம்!
[Tuesday 2025-04-29 06:00]

சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் இந்த படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி முழு படத்தையும் பார்த்த லைகா நிறுவனத்தின் ஜிகேஎம் தமிழ்குமரன் படத்தை பற்றி ட்விட்டரில் விமர்சனம் கூறி இருக்கிறார்.


பாகிஸ்தான் ஆதரவாக பேசினேனா? - விஜய் ஆண்டனி வெளியிட்ட புது அறிக்கை!
[Tuesday 2025-04-29 06:00]

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்கு பிறகு இந்திய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிந்து நதியில் தண்ணீர் நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நேற்று வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் மக்களும் அமைதியை விரும்புகிறார்கள், அவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிக்கை விட்டு இருந்தார்.


பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்!
[Monday 2025-04-28 18:00]

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது கார் ரேஸில் ஈடுபட்டு உலக அளவில் பல ரேஸ்களில் ஜெயித்து வருகிறார். அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதை ரசிகர்களும் கொண்டாடினார்கள்.


மீண்டும் ஒரு குழந்தையை தத்தெடுத்த நடிகை ஸ்ரீலீலா!
[Monday 2025-04-28 18:00]

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.


சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்படும் சூப்பர் ஹிட் படங்கள்!
[Monday 2025-04-28 18:00]

கோலிவுட்டில், ஏற்கனவே வெளியாகி ஹிட் கொடுத்த படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது தற்போது வழக்கமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றான சச்சின் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.


விருது வாங்க குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பிய அஜித்!
[Monday 2025-04-28 06:00]

நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு திரும்பிய நிலையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியை பார்க்க சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் வந்து இருந்தார். அங்கு அவர் சிவகார்த்திகேயன் மற்றும் அவர் குடும்பத்தை சந்தித்த ஸ்டில்கள் வைரல் ஆனது.


"எஸ்.டி.ஆர் 49" படப்பிடிப்பு குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்!
[Monday 2025-04-28 06:00]

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல் ஹாசன், த்ரிஷா மற்றும் சிம்பு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அடுத்து பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது.


நடிகை சில்க் ஸ்மிதா இவரைத்தான் திருமணம் செய்ய இருந்தாரா?
[Sunday 2025-04-27 18:00]

காந்த கண்ணழகி, திராவிட பேரழகி, கனவுக்கன்னி என பல பெயர்களை கொண்டு ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. வினு சக்கரவர்த்தியின் கண்ணில் பட சினிமாவில் மளமளவென படங்கள் பெற்று டாப் நாயகியாக வலம் வந்தார். ஒருகாலத்தில் இவரது கால்ஷீட் கிடைத்தால் போதும் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போது உள்ள தயாரிப்பாளர்களின் நம்பிக்கையாக இருந்தது.


வசூல் வேட்டை செய்துவரும் விஜய்யின் சச்சின்!
[Sunday 2025-04-27 18:00]

நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் கடந்த ஏப்ரல் 18ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆனது. ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான சச்சின் படத்தில் விஜய்யுடன் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் என பலர் நடிக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.


காஷ்மீர் தாக்குதல் பற்றி பேசிய நடிகர் விஜய் ஆண்டனி!
[Sunday 2025-04-27 18:00]

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, எல்லைகள் மூடல் என பல நடவடிக்கைகள் அரசு எடுத்து இருக்கிறது. சிந்து நதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் வெளிப்படையாகவே போர் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.


புற்றுநோயுடன் போராடும் நடிகருக்கு பெரிய தொகையை கொடுத்த KPY பாலா!
[Sunday 2025-04-27 07:00]

விஜய் டிவி காமெடி ஷோக்கள் மூலமாக பிரபலம் ஆனவர் பாலா. அவர் தான் சம்பாதித்த பணத்தை கொண்டு கஷ்டத்தில் இருக்கும் பலருக்கும் உதவி செய்து வருகிறார். மேலும் தற்போது ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பிரபல காமெடி நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடக்க கூட முடியாத நிலையில், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.


அடுத்த படத்தை அறிவித்த சூர்யா!
[Sunday 2025-04-27 07:00]

நடிகர் சூர்யா அடுத்து ரெட்ரோ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மே 1ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில் தற்போது படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணிகளில் தீவிரமாக படக்குழு இறங்கி இருக்கிறது. இன்று ஹைதராபாத்தில் ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கலந்துகொண்டார்.


2 நாள் முடிவில் வடிவேலுவின் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்!
[Saturday 2025-04-26 16:00]

நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக இருப்பவர். காமெடி நடிகராக தன்னை நிரூபித்த வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் தனது சீரியஸான பக்கத்தையும் காட்டி இருந்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முழுமையான காமெடி ரோலில் மீண்டும் வடிவேலு நடித்துள்ள படம் தான் கேங்கர்ஸ். மதகஜராஜா வெற்றிக்கு பிறகு சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களின் பேராதரவையும் பெற்றுள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா