Untitled Document
May 29, 2025 [GMT]
 
பிரபாஸ் உடன் நடிக்க தீபிகா படுகோன் வாங்கும் சம்பளம்!
[Tuesday 2025-05-13 18:00]

நடிகை தீபிகா படுகோன் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமான நடிகை. அவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் பிரபாஸ் உடன் கல்கி 2898 AD படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஸ்பிரிட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

பிரபல பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்!
[Thursday 2025-05-29 18:00]

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ராஜேஷ் இன்று திடீரென காலாமானார். திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ் சினிமாவில் 70களில் புகழ்பெற்று விளங்கியவர் தான் நடிகர் ராஜேஷ். அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். பின்பு கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், தனிகாட்டு ராஜா, பயணங்கள் முடிவதில்லை, தாய் வீடு, சிறை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததுடன், ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.


கமல் உடனான முத்தக்காட்சி சர்ச்சை: நடிகை அபிராமி கொடுத்த பதில்!
[Thursday 2025-05-29 18:00]

தமிழ் சினிமாவில் 37 வருடத்திற்கு பின் கமல் - மணிரத்னம் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமலுடன், த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். தமிழை தாண்டி இப்படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் வரும் ஜுன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.


ஜனநாயகன் படம் குறித்து விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு!
[Thursday 2025-05-29 18:00]

நடிகர் விஜய் தற்போது அரசியலில் முழுமையாக இறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்துவிட்டார். இதன்பின் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே என விஜய் எடுத்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்தது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்னும் பேட்ச் ஒர்க் மட்டுமே மீதமுள்ளது என கூறப்படுகிறது.


ஆர்த்திக்கு அந்த நடிகருடன் தொடர்பு என சர்ச்சையாக பேசிய சுசித்ரா!
[Thursday 2025-05-29 06:00]

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இரண்டு தரப்பும் மாறி மாறி குறைசொல்லி அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர். இனி அறிக்கை வெளியிட கூடாது என இரண்டு தரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இதுஒருபுறம் இருக்க பாடகி சுசித்ரா இன்ஸ்டாவில் ஆர்த்தி பற்றி பல சர்ச்சையான பதிவுகளை போட்டு வருகிறார்.


ஒரு லைக் மூலம் வந்த சர்ச்சை!
[Thursday 2025-05-29 06:00]

நடிகை தமன்னா தற்போது படுபிசியாக படங்கள், வெப் சீரிஸ் என நடித்து வருகிறார். அவர் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக டான்ஸ் ஆடுவதன் மூலமும் பெரிய அளவில் சம்பளம் வாங்கி வருகிறார். தற்போது தமன்னா இன்ஸ்டாவில் போட்ட லைக் காரணமாக அவர் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.


ரீ-ரிலீஸ் ஆகப்போகும் விஜய்யின் ஹிட் படங்கள்!
[Wednesday 2025-05-28 18:00]

நடிகர் விஜய் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருக்கும் பேவரெட். ஆனால் அவர் நடித்த சச்சின் திரைப்படம் அனைவருக்குமே பேவரெட், காரணம் அந்த அளவிற்கு படத்தின் கதைக்களம், விஜய் நடிப்பு, பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருந்தன. இப்போது பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் டிரெண்ட் இருக்க சமீபத்தில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் சச்சின் படத்தை மீண்டும் திரையரங்குகளில் கண்டு ரசித்தார்கள்.


ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் டாப் நடிகர்!
[Wednesday 2025-05-28 18:00]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. முதல் பாகத்தை போலவே நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்கின்றனர்.


கமல் பேச்சால் வந்த சர்ச்சை!
[Wednesday 2025-05-28 18:00]

நடிகர் கமல்ஹாசன் தற்போது தக் லைப் பட ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் விழாவில் பேசிய கமல் "தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது" என கூறினார். நடிகர் சிவராஜ்குமாரும் அதை ஏற்றுக்கொள்வதுபோல தலையசைத்தார்.


கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்!
[Wednesday 2025-05-28 06:00]

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது அரிதாகிவிட்ட நிலையிலும் அவரது பழைய காமெடிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிக்கவைத்து வருகிறது. ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தனுஷின் குபேரா முதல் விமர்சனம்!
[Wednesday 2025-05-28 06:00]

நடிகர் தனுஷ் அடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து இருக்கும் படம் குபேரா. அதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோரும் நடித்து இருக்கின்றனர். வரும் ஜூன் 20ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


ஜாக்கி சானுடன் இணையும் சிம்பு!
[Tuesday 2025-05-27 18:00]

சிம்பு கைவசம் தற்போது மூன்று திரைப்படங்கள் உள்ளன. பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் STR 50 உருவாகவுள்ளது. மேலும் டிராகன் பட இயக்குநரின் இயக்கத்தில் STR 51 படத்தையும் கமிட் செய்துள்ளார். இந்த நிலையில், சிம்புவின் மற்றொரு புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.


ரஜினியுடன் இணைகிறாரா மணிரத்னம்?
[Tuesday 2025-05-27 18:00]

இந்திய சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது. இப்படத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்த கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுதானா?
[Tuesday 2025-05-27 18:00]

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக ரெட்ரோ படம் வெளிவந்தது. கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்தாலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள். இப்படம் உலகளவில் ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தனர். மேலும் வருகிற 31ம் தேதி முதல் ஓடிடியில் இப்படம் ரிலீஸாகிறது. ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.


ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் ராஷ்மிகா?
[Tuesday 2025-05-27 06:00]

நடிகை ராஷ்மிகா தற்போது டாப் ஹீரோயினாக இந்திய அளவில் கொடிகட்டி பறந்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் பெரிய வசூலை குவிக்கின்றன. இந்நிலையில் அவர் ஒருபாடலுக்கு கிளாமராக ஆட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


தீபிகா படுகோன் மீது கடும் கோபத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டி!
[Tuesday 2025-05-27 06:00]

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் என்ற படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் முதலில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்க இருந்தார். ஆனால் அவர் சமீபத்தில் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி பரவியது. கடந்த வருடம் குழந்தை பெற்ற நிலையில் தீபிகா படுகோன் ஷூட்டிங் வர சில கண்டிஷன்கள் போட்டதாக கூறப்படுகிறது. ஒரு நாளுக்கு 6 மணி நேரம் தான் ஷூட்டிங் வருவேன் என தீபிகா கூறியதால் இயக்குனர் சந்தீப் அவரை நீக்கிவிட்டார் என செய்தி பரவியது. அவருக்கு பதில் அனிமல் நடிகை திருப்தி டிம்ரி நடிப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வந்தது.


நஸ்ரினுக்கு மேடையிலேயே சர்ப்ரைஸ் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!
[Monday 2025-05-26 06:00]

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ம் சீசன் நேற்று நடைபெற்றது. அதில் காயத்ரி டைட்டில் ஜெயித்தார். இரண்டாவது இடத்தை நஸ்ரின் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நஸ்ரினுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது. காயத்ரிக்கு டைட்டில் என கமல் கையை பிடித்து அறிவித்ததில் இருந்தே நஸ்ரின் கண்ணீருடன் தான் இருந்தார். அவரை டி.இமான் தான் ஆறுதல் படுத்தி கொண்டிருந்தார்.


கமல்ஹாசனே பார்த்து பொறாமைப்படும் நடிகர்!
[Monday 2025-05-26 06:00]

நடிப்புத்திறமைக்காக இந்திய அளவில் பேசப்படும் நடிகர்களை பட்டியலிட்டால் அதில் நிச்சயம் கமலஹாசன் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும். அவ்வளவு படங்கள், வித்தியாசமான ரோல்கள், பல விதமான நடிப்புகள் என அவர் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ஆனால் அவரே பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகர் இருக்கிறார். அதுவும் மலையாள நடிகர்.


வசூல் வேட்டையில் Mission Impossible The Final Reckoning!
[Sunday 2025-05-25 17:00]

உலகளவில் ரசிகர்களை கொண்ட Franchise திரைப்படங்களில் ஒன்று Mission Impossible. இப்படத்தில் உலக புகழ்பெற்ற நடிகர் டாம் க்ரூஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி பாகமாக Mission Impossible The Final Reckoning. இப்படத்தை இயக்குனர் Christopher McQuarrie இப்படத்தை இயக்கியிருந்தார். Hayley Atwell, Ving Rhames, Esai Morales உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


9 நாட்களில் மாமன் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
[Sunday 2025-05-25 17:00]

தமிழ் சினிமாவில் தற்போது மிரட்டலான ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் சூரி. விடுதலை, கருடன், கொட்டுக்காளி என தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வரும் சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மாமன். எமோஷனல் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார்.


3400 கோடி ரூபாய் சொத்தை தானமாக வழங்கிய நடிகர் ஜாக்கி சான்!
[Sunday 2025-05-25 17:00]

உலக புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜாக்கி சான். ஆக்ஷன் ஸ்டண்ட்ஸ் என்கிற பேச்சை எடுத்தாலே அதில் நம்பர் 1 இடத்தில் இவர் இருப்பார். சினிமாவிற்கு தனது உயிரையே பணயம் வைத்து நடித்துள்ளார். Karate Kid, Rush Hour, Drunken Master, Police Story 1985 என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக ஜாக்கி சான் நடிப்பில் Karate Kid 2 வெளிவரவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.


இலங்கையை மையப்படுத்தி நடிகர் சசிகுமாரின் அடுத்த அதிரடி!
[Sunday 2025-05-25 07:00]

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. 3வது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் ப்ரீடம் என்ற படம் தயாராகியுள்ளது, வரும் ஜுலை 10ம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாம்.


வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் வலம் வரும் நடிகைகள்!
[Sunday 2025-05-25 07:00]

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நடிகர்களுக்கு இணையாக வலம் வரும் நடிகைகள் இங்கு பலர் உள்ளனர். இதில், சில நடிகைகள் 30 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் வாழும் நடிகைகள் குறித்து கீழே காணலாம்.


நடிகை மீனாட்சி சவுத்ரி அடுத்து நடிக்கப்போகும் தமிழ் படம்!
[Saturday 2025-05-24 16:00]

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.


பிரபல பாலிவுட் நடிகர் மரணம்!
[Saturday 2025-05-24 16:00]

இந்தி, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகர் முகுல் தேவ். இவருக்கு வயது 54. இவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். முகுல் தேவ் மரணத்தை அவருடன் இணைந்து நடித்த நடிகர் விந்து தாரா சிங் என்பவர் உறுதி செய்துள்ளார். இவருடைய மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடுராத்திரி 3 மணிக்கு சொகுசு கப்பலில் த்ரிஷா செய்த வேலை!
[Saturday 2025-05-24 16:00]

42 வயதை எட்டியும் தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் த்ரிஷா நடிப்பில் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கும் காஜல் அகர்வால், ஹன்சிகா!
[Saturday 2025-05-24 09:00]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த காஜல் அகர்வால் மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவரும் தற்போது பெரிதளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட, தங்களது சமூக வலைத்தளம் மூலம் பல லட்சங்களை இவர்கள் சம்பாதித்து வருவதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பெரிய நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் செய்ய விருப்பம் காட்டுகின்றனர்.


விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்!
[Saturday 2025-05-24 09:00]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் ஏஸ். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி தயாரித்திருந்து இருந்தார். இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். கன்னடத்தில் வெளிவந்த Sapta Saagaradaache Ello என்கிற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ருக்மிணி, ஏஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.


மூக்குத்தி அம்மன்-2வில் நயன்தாரா இப்படியொரு ரோலில் நடிக்கிறாரா?
[Friday 2025-05-23 18:00]

நயன்தாரா நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று தான் மூக்குத்தி அம்மன். சாமி கதையை வைத்து நிறைய விஷயங்களை கூறியிருப்பார் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி. மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படத்தின் 2ம் பாகம் வரப்போவதாக எப்போதோ தகவல் வந்துவிட்டது. படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் பிஸியாக நடந்து வருகிறது.


ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை: கெனிஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
[Friday 2025-05-23 18:00]

கடந்த வருடம் நடிகர் ரவி மோகன் தனது சொந்த வாழ்க்கையில் நிறைய அதிரடி முடிவுகளை எடுத்தார். ஒன்று அவரது பெயரை ஜெயம் ரவியில் இருந்து ரவி மோகன் என மாற்றினார், இது எல்லோரும் செய்வது தான். ஆனால் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிர்ச்சி முடிவு எடுத்தார். அவர்களின் இந்த விவாகரத்து பிரச்சனை இன்னும் நடக்கிறது.


தமிழில் இந்த ஆண்டு ஒரு படம் கூட நடிக்காத டாப் நடிகைகள்!
[Friday 2025-05-23 18:00]

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த வகையில், டாப் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த சில முன்னணி நடிகைகள் இந்த ஆண்டு ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நடிகைகள் யார் யார் என்பது குறித்து கீழே காணலாம்.

Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா